"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, May 27, 2019

அற்றார் அழி பசி தீர்த்தல் - அன்னம்பாலிப்பு சிறப்புப் பதிவு

 அன்பின் அடியார்களே..

வணக்கம்.

இன்றைய பதிவில் அன்னம்பாலிப்பு பற்றிய செய்திகளை அறிய இருக்கின்றோம். ஒரே பதிவில் அன்னம்பாலிப்பு மட்டும் இல்லை. பலவித நிகழ்வுகள் நடந்தேறியது. காரணமின்றி காரியமில்லை என்பதும் மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்தது.

அகத்தியர் வனம் மலேஷியா குழுவின் சகோதரர்  திரு. பாலச்சந்திரன் அவர்கள்  சென்ற ஜூலை மாதம் 05/07/2018 அன்று சென்னை வந்தார்கள். அவர்கள் வரும் போதே, அன்னம்பாலிப்பு ஒன்றை செய்திட வேண்டும் என்று நம்மிடம் வேண்டுகோள் விடுத்தார். நாட்கள் வெகு குறைவாக இருந்தமையால் நாம் உடனே, கூடுவாஞ்சேரி வள்ளலார் சத்திய ஞான திருச்சபையில் அன்னம்பாலிப்பு செய்திட முடிவெடுத்து நாம் முன்னே சொல்லிவிட்டோம்.

அன்று மதியம் விமான நிலையத்தில் இருந்து நேராக அவர்கள் வாடகை கார் பிடித்து, சரியாக கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். நாம் அன்று மதியம் கோயிலுக்கு சென்றோம். கோயிலுக்கு செல்லும் போதே, தீபமேற்ற எண்ணெய் வாங்கிக் கொண்டு சென்றோம். வழக்கம் போல் கொஞ்சம் தாமதமாகத் தான் சென்றோம்.



கோயிலை அடைந்ததும் பரஸ்பரம் அறிமுகம் செய்து விட்டு, வழிபாட்டிற்கு அமர்ந்தோம். எண்ணெய் வாங்கிக் கொடுத்தது கீழே.





இதனை நாம் விளம்பரமாக கருதவில்லை. நாம் நம் தளத்தில் சொல்லாமல் செய்துவரும் சேவைகள் பற்றி குறிப்பிடவே அன்றி இதில் வேறொன்றும் இல்லை.















அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி என அந்த பரம்பொருளை தொழுதோம்.


அடுத்து அன்னம்பாலிப்பு செய்ய சென்றோம். ஒவ்வொருவராக திருப்தி படும் அளவிற்கு உணவளித்தோம். பாலச்சந்திரன் ஒவ்வொரு முறையும் "ஓம் சிவாய அகத்தீசாய நம" என்று ஓதியே அன்னம் இட்டார். நமக்கு உள்ளொளி கிடைத்தது போல் இருந்தது.
















அன்னம்பாலிப்போடு முழுமை பெறவில்லை. அவர் வரும் போதே ஒரு பெட்டி நிறைய பயன்படுத்தாத, உபயோகிக்க கூடிய துணிகளை கொண்டு வந்தார், அவற்றை திறந்து சில சேலைகளை அப்படியே வழங்கினார். அன்னம்பாலிப்பு செய்ய வந்தோம். ஆனால் குருவருள் நம்மை நடத்துவது வேறு; இது தான் அவனின் அன்பு;கருணை என்பது.






ஒரு பை நிறைய துணிகள் கொடுத்தோம்.










தானத்தில் எத்தனையோ வகை உண்டு.பொருள் தானம், வஸ்த்ர தானம் (உடை)
அன்ன தானம் (சாப்பாடு), பூதானம் (நிலம்),கன்னிகா தானம் (கல்யாணம்), வித்யா தானம் (படிப்பு),
கோ தானம் (பசு). இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
இதில் எது உயர்ந்தது?எல்லா தானங்களிலும் மிகச் சிறந்த தானம் அன்ன தானம்தான். ஏன்?
மற்ற எல்லா வித தானங்களிலும் தானம் பெறுபவருக்கு ‘போதும்’ என்ற திருப்தி ஏற்படுவதில்லை. 10 ரூபாய் கொடுத்தால், 20 ரூபாய் கொடுத்திருக்கக் கூடாதா என்ற நினைப்பு வரும். ஆடைகள் கொடுத்தால், இதைவிட நல்ல ஆடைகள் தரக் கூடாதா என்று நினைப்பார்கள். இதே மாதிரி மற்ற தானங்களிலும் ஏற்படும்.
ஆனால் ஒருவருக்குச் சாப்பாடு போட்டால், அவர் வயிறு நிறைந்துவிட்ட பிறகு மேலே ஒரு கரண்டி அன்னம் அளித்தாலும் கையை வைத்துத் தடுத்து “போதும், போதும்” என்று கூறுவார்கள். மேலும் வாயார வாழ்த்தவும் செய்வார்கள். இதனை இங்கு கண்கூடாக கண்டோம்.
அடுத்து நாம் நம் தளம் சார்பில் நடைபெறும் அன்னதானத்திற்கும், கொண்டையம்பட்டி பெருமாள் கோயிலுக்கும் அவர்களால் இயன்ற பொருளுதவி செய்தார்கள். இதோ கீழே இணைப்புப் படங்கள்.







உரியவரிடம் நாம் சேர்ப்பித்து விட்டோம்.  இது மட்டுமில்லை. அகத்தியர் வனம் மலேசியா குழுவின் சேவை அளப்பரியது. நாம் அவற்றை கூறினால் சுயபுராணம் பாடுவதாக நினைப்பதுண்டு. தற்போது கேரளா மாநிலத்தில் வெள்ள நிவாரண நிதி கேட்டிருக்கின்றோம். அவர்களும் தருவதாக கூறி உள்ளார்கள். இதனை இவன் கண் விடல் என்பது அகத்தியர் வனம் மலேஷியா குழுவிற்கு சாலப் பொருந்தும்.
வெளிநாட்டில் இருந்து வந்தோமா ..நாலு இடத்திற்கு சென்று சுற்றிப் பார்த்தோமா? பொழுதைக் கழித்தோமா என்றில்லாமல் விமான நிலையத்தில் இருந்து நேராக  ஓய்வின்றி வந்து, அன்னம்பாலிப்பு செய்கின்றார்கள் என்றால் பதிவின் தலைப்பு  அற்றார் அழி பசி தீர்த்தல் தானே ?
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி

(அதிகாரம்:ஈகை குறள் எண்:226)
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
- மீண்டும் அடுத்த பதிவில் இணைவோம்.


மீள்பதிவாக:-

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_58.html

No comments:

Post a Comment