அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று தைப்பூசம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துக்களை இங்கே கூறி மகிழ்கின்றோம். வழக்கம் போல் குருவருளால் இன்று 15 அன்பர்களுக்கு காலை உணவாக ( பொங்கல், வடை ) கொடுத்துள்ளோம். மேலும் தென்காசி கடையம் அருகில் உள்ள வள்ளலார் சபைக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளோம். இவை அனைத்தும் உங்களின் அன்பாலே சாத்தியம் ஆகின்றது. அனைவரும் 4A என்ற வாழ்வியல் நடைமுறையை பின்பற்ற வேண்டும். அதென்ன 4A ? என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. அடுத்து வரும் பதிவுகளில் இது பற்றி பேசுவோம்.
இன்றைய நன்னாளில் அனைத்து முருகப் பெருமான் தலங்களிலும், வள்ளலார் சபைகளிலும் சிறப்பான வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.முருகன், தமிழ்க்கடவுள் என்று தமிழர்கள் சொந்தம் கொண்டாடி மகிழும் தெய்வம். அப்படிப்பட்ட முருகனைக் கொண்டாடும் திருவிழாக்களில் முக்கியமானவை வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, கந்த சஷ்டி விரதம், பங்குனி உத்திரம், தைப்பூசம் முதலியன. இவற்றில் தைமாதம் வரும் பூச நட்சத்திரம் மிகவும் சிறப்புடையது. தைப்பூச நாளில்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நீரும் பின் அவற்றிலிருந்து பிறவும் தோன்றின என்கின்றன புராணங்கள். அப்படிப் பட்ட தைப்பூசத்தின் சிறப்புகள் அநேகம் அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
முருகப்பெருமான் வள்ளியை மணந்துகொண்ட நாள் தைப்பூசம் என்பது நம்பிக்கை. எனவே அந்த நாளில் முருகப்பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டால் திருமண வரம் கிடைக்கும் என்பார்கள் பக்தர்கள்.
முருகப்பெருமானுக்கு சூரனை அழிக்க தேவியானவள் தன் சக்தி முழுவதையும் கொண்டு ஒரு வேலை உருவாக்கி வழங்கி அருளி நாள் தைப்பூசம். முருகன் தேவியிடமிருந்து பெற்ற அந்த வேல் 'பிரம்ம வித்யா' சொரூபமானது. இன்றைய திருநாளில் ஓதிமலை ஆண்டவரையும், வள்ளிமலை வள்ளலையும் ஒரு சேர போற்றுவோம்.
திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/2019.html
No comments:
Post a Comment