"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 21, 2022

நல்வினையாற்ற 19 வழிகள் - எதையாவது புதிதாய்ப் படை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

பொதுவாக நாம் பார்க்கும் போது, இன்று கர்மா என்ற சொல் மிக சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருந்து வருகின்றது. நம்மில் அன்றாடம் உறவாடும் நபர்களிடம் இது பற்றி பேசினால், கர்மாவா? என்று கேலி பேசுவது உண்டு. தலைவலியும் திருகு வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும். அது போல் தான் இந்த கர்மா. கர்மா என்ற ஒன்று உண்டு என்றால் எப்படி நாம் அதிலிருந்து எப்படி வெளிவருவது..என்பது போன்றெல்லாம் நாம் சிந்திப்பதுண்டு. பொதுவாக கர்மா என்பது வினை..நாம் செய்யும் செயல். அவ்வளவே..

நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. அது நல் விளைவாக இருந்தால் நம் கர்மா நல்ல கர்மா என்றும் தீய செயலாயின் தீய கர்மா என்றும் பொருள் கொள்ளலாம். அடுத்தவன் எக்கேடு கேட்டால் நமக்கென்ன என்று நினைப்பது கூட தீய கர்மா என்றே கொள்ளப்படும். நாம் சேமித்து வைத்திருந்த காட்சிப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, சட்டென்று நம் கண்ணில் நல்வினையாற்ற 19 வழிகள்  என்ற தொகுப்பு கிடைத்தது. அதனை அப்படியே இங்கே பகிர்கின்றோம். இதில் ஏதேனும் ஒரு கருத்தையாவது கைக்கொள்ள ஆசைப்படுங்கள். ஆசையே நம்மை நல்வினையாற்ற வைக்கும்.பதிவின் இறுதியில் மீள்பதிவாக கொடுத்துள்ளோம். அதில் உள்ள 19 வழிகளில் இன்றைய பதிவில்  நம்மினும் இளையவர்களுடன் இணைந்து எதையாவது படை  என்ற நிலையில் பதிவைத் தொடர விரும்புகின்றோம்.


 சரி. பதிவின் உள் செல்வோமா?


முதல் முத்தே..அருமையான ஒன்று. வாழ்தல் என்றால் என்ன ? கொடுப்பது தான் வாழ்க்கை. ஆனால் நாம் தினமும் பெறுவதற்கு தானே துடியாய்த் துடித்துக் கொண்டு இருக்கின்றோம். கொடுத்துப் பார். வாழ்வியல் புரியும் .கொடுக்க வேண்டும் என்ற உடன் பொருளாதார ரீதியில் நம்மிடம் ஒன்றும் இல்லையே என்று நினைக்க வேண்டாம். உங்கள் எண்ணத்தால் கூட கொடுக்கலாம்.


வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் நம் எதிர்பார்ப்பை தவிர்க்கலாம். அன்றைய தினம் நீங்கள் விரதம் இருப்பது கூட இன்னும் உங்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கும்.


என்னப்பா? இதெல்லாம் ஒரு குறிப்பா? என்று ஏளனமாக நினைக்காதீர். இன்றைய சூழலில் நாம் ஒவ்வொருவரும் தேவையைத் தாண்டி தான் பொருட்கள் வைத்திருக்கின்றோம். அலைபேசி வந்த புதிதில் அனைவரிடமும் ஒன்றே ஒன்று இருந்தது. "ஜியோ" வந்த பின்பு அனைவரிடமும் இரண்டு,மூன்று அலைபேசிகள் ( நம்மையும் சேர்த்து தான் )..ஆனால் ஒரு அலைபேசியை நாம் உபயோகித்தால் போதுமானது. இது போல் தான் ஆடைகள். அனைத்து உபயோகமற்ற ஆடைகளை எடுத்து மூட்டையாக கட்டி வைத்திருப்போம்.  அவற்றை தானமாக கொடுக்க ஒரு நல்ல நாள் பார்த்துக்  கொண்டே இருப்போம். எல்லா நாளும் நல்ல நாளே.


நம் சுற்றுப்புற குப்பையகற்று. இது புறத்தில் நிகழ, நாம் முதலில் அகக் குப்பையகற்ற வேண்டும். அகமும்,புறமும் வேறு வேறு அல்ல என்று நாம் உணர வேண்டும்.



எதற்கெடுத்தாலும் அலைபேசி எடுத்துக் கொண்டு பிணம் போல் திரிவதை விடுத்து, நம் இளையோர்களிடம் இணைந்து புதிதாக படைக்கலாம். குறிப்பாக தமிழ் நூல் படிக்கலாம் இது நம்மை இன்னும் இளமையாக்கும். 

இங்கே நாம் நம் தளம் சார்பில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து புதிதாக படைத்து / உருவாக்கி வரும் செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம்.

1. நித்திய கூட்டுப் பிரார்த்தனை 

குருவருளால் தினமும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை சுமார் 7 மணி. முதல் 07:45 மணி வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தமிழ் திருமுறைகள், குரு மந்திரங்கள் படித்து உலக மக்கள் அனைவருக்கும் கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம். இதில் நாம் 100 நாட்களை கடந்து உள்ளோம் என்பது நம்மை வழிநடத்தும் குருவருளால் அன்றி வேறில்லை. நம் தளம் சார்பில் 100 ஆவது நாள் கூட்டுப் பிரார்த்தனை குருவருளால் நடைபெற்றது. 5 அன்பர்களாக நேற்றைய கூட்டுப் பிரார்த்தனையில் சரவணன் ஐயா அவர்கள் மந்த்ராலயத்தில் இருந்து கலந்து கொண்டு, நமக்கும் மந்த்ராலய தரிசனத்தை பகிர்ந்தார். (இது நாம் திட்டமிட்டு செய்யவில்லை. இயல்பாக குருவருளால் நடைபெற்றது).குருவின் அருள் கண்டு இன்புற்றோம். போளூர் உமா அம்மா அவர்கள் கற்பூரநாயகியே கனகவல்லி பாடல் பாடினார். சிவபுராணம், போற்றித் திருஅகவல், சில பதிகங்களுடன் அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம். ஏன் இந்த கூட்டுப் பிரார்த்தனை பற்றி பேசுகின்றோம் என்றால் வள்ளலார் வழியில் காண இருக்கின்றோம்.

2.  தமிழ் திருமுறைகளுக்கென்று புதிய வலைத்தளம் - https://tutthamizhthirumurai.blogspot.com

நித்திய கூட்டுப் பிரார்த்தனையின் போது நாம் தமிழ் திருமுறைகளை தேடி படிக்கும் போது நமக்கு அது சிறப்பாக அமையவில்லை. இதன் பொருட்டு தமிழ் திருமுறைகளுக்கென்று புதிதாக ஒரு வலைப்பதிவு உருவாக்கி பகிர்ந்து உள்ளோம். இவையும் நம் தளம் சார்பில் புதிதாக படைத்தது ஆகும். 


3. அறுபத்து மூவர் குரு பூஜை 

நம் தலத்தில் குருமார்களின் குருபூஜை அவ்வப்போது பகிர்ந்து வருகின்றோம். இருப்பினும் அறுபத்து மூவர் குருபூஜை தகவலை இடைவிடாது தர பல முறை முயற்சித்தும் நம்மால் தொடர இயலவில்லை. ஆனால் 2022 ஆண்டு ஜனவரி மாதம் முழுதும் தொடர்ந்து அறுபத்து மூவர் குருபூஜை பற்றி பகிர்ந்து வருகின்றோம். இதில் மற்றொரு சிறப்பும் உண்டு. அந்த சிறப்பு அருள்நிலையை மூன்று மாதம் கழித்து தெரிவிக்கின்றோம். இறைவன் மீது கல்லெறிந்து முக்தி அடைந்தவர் சாக்கிய நாயனார்.  மனத்துள் சிவத்தை இருத்தி முக்தி கண்டவர் வாயிலார் நாயனார். கறியை படைத்து , தம் கண்ணைக் கொடுத்து முக்தி கண்டவர் கண்ணப்பர், இறைவனுக்கு அமுது செய்து கொடுத்து தம் கழுத்தை அறுக்க முற்பட்டு முக்தி அடைந்தவர் அரிவாட்டாய நாயனார், சண்டேஸ்வர நாயனார் குருபூஜை பற்றி நம் தலத்தில் குருவருள் துணை கொண்டு பேசி வருகின்றோம்.


சண்டேஸ்வர நாயனார்



அரிவாட்டாய நாயனார்

கண்ணப்பர்





4. அருட்பெருஞ்சோதி அகவல் (1 - 50 ) 

வள்ளலார் பெருமானின் ஆசியினால் அருட்பெருஞ்சோதி அகவல் உரை தினமும் ஒவ்வொன்றாக பகிர்ந்து வருகின்றோம். 50 நாட்கள் நாம் பகிர்ந்த தொகுப்பை இங்கே ஒரே பதிவில் வெளியிட உள்ளோம். இவை எளிதில் பாராயணம் செய்ய உதவியாக இருக்கும். இங்கே சின்னாளபட்டி வந்த பிறகு வள்ளலார் அருட்கருணையில் திளைத்து வருகின்றோம். வள்ளலார் வருவிக்க உற்ற தினத்தன்று கூட்டுப் பிரார்த்தனையில் அகவல் பாராயணம் நம் குழு நண்பர்களோடு முழுதும் செய்தோம். இவை அனைத்தும் நம் உள்ளத்தில் இருந்த ஆசைகளே. இவை ஒவ்வொன்றாக நடைபெற்று வருவதை பார்க்கும் போது இறைவா...அனைத்தும் உன் செயலே! என்று சரணாகதி அடைவதை தவிர வேறொன்றும் நமக்கு தோன்றவில்லை.

பதிவின்இறுதியில் முழு தொகுப்பும் PDF வடிவில் தரமிறக்கி கொள்ள இணைப்பும் கொடுத்துள்ளோம்.





PDF வடிவில் தரவிறக்க :-  https://drive.google.com/file/d/1SjWY8jW2kVZUdLBC3d2t5130Nr04As3K/view?usp=sharing

நித்தமும் இதனை வடிவமைத்து, பகிர்ந்து வரும் எம் இல்லத்தரசி ஸ்ரீ வித்யா அவர்களுக்கும், வழக்கம் போல் இவற்றை படித்து, பகிர்ந்து நமக்கு கருத்து பரிமாற்றம் செய்து வரும் அன்பர்களுக்கும், திரு. மங்களா பிரபு ஐயா அவர்களுக்கும் இங்கே எம் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

நம் தளம் சார்பில் நித்திய கூட்டுப் பிரார்த்தனை, தமிழ் திருமுறைகளுக்கென்று புதிய வலைத்தளம் - (https://tutthamizhthirumurai.blogspot.com) , அறுபத்து மூவர் குரு பூஜை பதிவுகள்,அருட்பெருஞ்சோதி அகவல் (1 - 50 ) பதிவு என புதிதாய் படைத்து , அவற்றை அனைவருக்கும் பகிர்ந்து  இறைவா...அனைத்தும் உன் செயலே! என்று ஒவ்வொரு நாளில் இறையன்பில், அகத்தியத்தில் உணர்ந்து, உணர்த்தப்பட்டு வருகின்றோம். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 நல்வினையாற்ற 19 வழிகள் - உளம் ஆற உழவாரப் பணி செய்திடுவோம் - https://tut-temples.blogspot.com/2021/01/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு - https://tut-temples.blogspot.com/2020/09/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html


No comments:

Post a Comment