அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவருளால் நம் தளத்தில் ஜீவ
நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் 51 பதிவுகள் பார்த்து வருகின்றோம். இன்றைய பதிவில் நம் குருநாதர் 14.12.2021 அன்று ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு பகிர உள்ளோம். இதில் தீப வழிபாடு எப்படி செய்ய வேண்டும் கூறியுள்ளார். நம் தளத்திற்கும் , தீப வழிபாட்டிற்கும் பல வழிகளில் தொடர்பு உண்டு. நம் குருநாதர் குருபூஜை அன்று 2017 ஆம் ஆண்டில் 108 தீபமேற்றி வழிபாடு செய்தோம். அதன் தொடர்ச்சியாக சுமார் 3 ஆண்டுகளாக மோட்ச தீப வழிபாடு செய்தோம். இந்த தீப வழிபாட்டில் ஆண்டுதோறும் 108 தீப வழிபாடு செய்து வருகின்றோம். தற்போதைய தொற்றுக்கிருமி கட்டுப்பாட்டால் தற்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக தீப எண்ணெய் ஆலயங்களுக்கு கொடுத்து வருகின்றோம். இந்த ஆண்டில் 108 தீப வழிபாடு செய்வதற்கு குருவிடம் வேண்டுகின்றோம்.
14.12.2021 அன்று ஏகாதசி திதியில் குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.
ஆதி ஈசனின் பொற்பாதம் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.
உலகம் இருளில் போய்க்கொண்டு இருக்கும் வரும் காலங்களில்.
இதனையும் மீட்க பின்பு இறை வழிபாடு மிக மிகச் சிறந்தது என்பேன்.
என்பேன்.
இதனையும் உணர்ந்து வள்ளல் ராமலிங்கஅடிகளின் பின் அவந்தன் பாதையை (சுத்த
சன்மார்க்க ஜீவ காருண்ய வழி) பின்பற்றினால் அனைவரும் பிழைத் துக் கொள்வது
உறுதி.
உறுதியாக இவைதன் உண்டு என்பேன்.
உண்டு என்பதற்கிணங்க வருத்தங்கள் இனிமேலும் குடிகொள்ளும்.
இதனையும் உணர்ந்து சொல்கின்றேன்.
சொல்கின்றேன் தீபங்கள் தீபங்கள் ஏற்ற ஏற்ற தெளிவுகள் பெருகும் என்பேன்.
ஆனாலும் மனிதனுக்கு தீபங்கள் எவ்வாறு ஏற்றுவது என்பதை கூட தெரியாமல் போய்விடுகின்றது.
பின் நவதானியங்கள் இட்டு அதன் மேலேயே தீபத்தை இடுதல் வேண்டும்.
அல்லது
இவை என்று கூற பின் இதற்கு மேலும் பின் இவை என்று கூற பச்சரிசி இவை இவை
என்று கூறு இருக்கும் பொழுது அதனை மாவாக இட்டு அதன் மேலே தான் தீபம் ஏற்ற
வேண்டும்.
இவ்வாறு ஏற்றினால் தான் பின் இவை தன் உணர சில சில உயிரினங்கள் அதை உண்டு வர சில கர்மாக்கள் தொலையும் என்பேன்.
அவைதன் மகிழ்ச்சியும் இருக்குதப்பா அதனுள்ளே.
அவை மகிழ்ச்சியுற இவந்தனும்(தீபமேற்றும் பக்தன்) மகிழ்ச்சியாக இருப்பான்.
அதை தெரியாமல் தீபங்கள் ஏற்றிவிட்டால் மனக் குழப்பங்கள் மாறும் மாறும் என்பதெயெல்லாம் எல்லாம் பொய்யே அப்பா.
அப்பனே இதனையும் தெரிந்துகொண்டு இனிமேலும் இவ்வாறு இடுங்கள்.
இடுங்கள் என்பது மெய்யே.
அவை
மட்டும் இல்லாமல் தீபங்கள் ஏற்றும் பொழுது எத்தனை தீபங்கள்
ஏற்றுகின்றீர்களோ அத்தனை உயிருள்ள ஜீவராசிகளுக்கும் உணவு கொடுப்பது
முக்கியம் என்பேன்.
இவ்வாறு கொடுத்தால்தான் சில நல் பல செய்திகள் இல்லம் தேடி வரும் நல்லவையும் நடக்கும் என்பேன்.
ஆனாலும் சில மனிதர்களுக்கு இவை தெரிவதே இல்லை என்பேன்.
பின்
ஏதோ இதனை என்றும் தீபம் ஏற்றி விட்டால் அனைத்தும் நடக்கும் என்பது
உறுதியாக பின் ஆனாலும் இவை தன் நடந்து விட்டாலும் பிற்பகுதியில்
குறைவாகிவிடும்.
அதனால்தான் இவைதன் உணர்ந்து செய்ய வேண்டும் செய்ய வேண்டும் என்பேன்.
ஈசனும் கட்டளையிட்டபடி நவ கிரகங்களுக்கும் பின் வேலைகள் பலம் அதிகமாக உள்ளது.
இதனால் ஒவ்வொருவரையும் தண்டிப்பதற்குரியவனாகவே வலம் வருகின்றனர்.
ராகுவும் இனிமேலும் கேதுவும் சனியும் இவ்வாறு என்பதை கூட இவர்கள் ஆட்சியில்தான் உலகம் கடந்து வருகின்றது.
இதனால் பின். இவைதன் மனம் குளிரச் செய்யவேண்டும்.
இதனை மனம் குளிரச் செய்ய பல திருத்தலங்களை நாட வேண்டும் என்பேன்.
பஞ்ச
ஸ்தலத்திற்கு (பஞ்சபூத ஸ்தலங்கள்) பின்பு பின் அடிக்கடி சென்று அங்கே
சிலசில ஜீவராசிகளுக்கும் இயலாதவர்களுக்கும் தானம் அளிக்க வேண்டும்.
அறுபடை வீடுகளுக்கும் செல்ல வேண்டும்.
இவ்வாறு
பின் இதனையும் அறிந்து அறிந்து பின் இவை என்று கூற அனுதினமும் பின்
திருவாசகத்தை இல்லம் அதில் பின் அனைத்து சிவனடியார்களையும் அழைத்து வந்து
ஓதுதல் வேண்டும்.
இவ்வாறு ஓதுதல் வேண்டும் என்பதே உறுதியானது.
இவ்வாறு பின் ஓதி வந்தால் கலிபுருஷனும் ஈசனுக்கு பயப்பட்டு பின் ஒதுங்கி விடுவான் என்பது மெய்யே.
இதனையும் அறிந்து நிச்சயமாய் தீபங்கள் யான் சொல்லியவாறே கடைப்பிடியுங்கள் போதுமானது. போதுமானது என்பேன்.
இதனையும் அறிந்து ஒவ்வொரு இல்லத்திலும் இனிமேலும் குழப்பங்கள் வரும்.
குழப்பங்கள் இல்லாமல் வாழ்வதற்கு இனியும் சொல்லிவிட்டேன்.
ஜீவராசிகள் பின் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளையும் பின் முன்பே பின் சூரியன் வருவதற்கு முன்பே எழுந்திருக்க வேண்டும்.
எழுந்திருக்க வேண்டும் .பிற உயிரினங்களுக்கு தானம் செய்ய வேண்டும்.
பின்பு
பின் பலபல புலவர்கள் இயற்றிய திருநாமங்களையும் பின் சிவபுராணம் இவையன்று
ராமாயணம் இவையன்றி கூற பலப்பல இதிகாசங்கள் உண்டு இவ்வுலகத்தில் என்பதைக்கூட
புறநானூறு இவை தன் அகநானூறு இவை என்று உணர இன்னும் பல பல பல பல பதிகங்கள்
ஓதி வருதல் என்பது கூட சிறப்பு.
பின்பு
பின் இவை தன் உணர சூரியன் வரும் அப்பொழுது சூரியனை வழிபட்டால் இவ்வுலகம்
எப்படி பின் சிறிது சிறிதாக வெளிச்சத்திற்கு வருகின்றதோ அப் போலவே மனிதன்
வாழ்க்கையும் சிறிதுசிறிதாக வரும் பின் வெளிச்சத்திற்கு.
இவ்வாறு நடந்து கொள்ளாமல் இருந்தால் இன்னும் இருளிலேயே மூழ்கி விடுவான் மனிதன் என்பது மெய்யே.
இதனால் யான் சொல்லிவிட்டேன் இதனையும் அறிந்து கூட
நமச்சிவாயனும்(ஈசன்) எவ்வாறு எவ்வாறு இருந்து வலம்வந்து இனிமேலும் தண்டனைக்குள்ளவனாகவே வருகின்றார்கள் மனிதர்கள்.
இதனால் திருந்தி யான் சொல்லியதையே சரி முறையாக பின்பற்ற ஒரு குறையும் வராது என்பது உறுதி.
இன்னும் பல வாக்குகள் உண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள்.
திருமூலனும். வாக்குரைப்பான் இதனையும் என்று கூட அறிந்து.
திருமூலரின் உரையாடல்களை பின் ஓதி வருதல் அதிசிறப்பு.
இவையன்றி
கூட அனுதினமும் இல்லத்தில் பின் கந்தசஷ்டி கவசத்தையும் பின் அதற்குப்
பின்பு விஷ்ணு சகஸ்ர நாமத்தையும் லலிதாம்பிகை தேவி(லலிதா சகஸ்கரநாமம்)
சரணத்தையும் ஓதி ஓதி வருவது பின் மனிதன் வெளிச்சத்திற்கு வருவான் என்பதே
மெய்.
சொல்லிவிட்டேன் இதை சரி முறையாக பயன்படுத்தி வர பின் நல்லொழுக்கமாக வாழ்வீர்கள் என்பது மெய்யே.
அதனையும் விட்டு விட்டு பின் இப்படித்தான் செல்வீர்கள் என்றால் பின் இயற்கையும் இப்படித்தான் செல்லும் என்பது உறுதியானது.
பழைய காலத்திற்கு வாருங்கள் இயற்கையும் பழைய காலத்திற்கே வந்து விடும்.
அவை விட்டுவிட்டு புதிய காலத்தில் இறங்கினால் பின் இயற்கையும் புதுமையான விளையாடல் விளையாடும் என்பேன்.
இயற்கையும் ஓர் இறைவனே என்பேன்.
பின் வாக்குகள் உரைக்கின்றேன் பலமாகவே.
குருநாதர் வாக்கின்படி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் நாள் நாம் நம் தளம் சார்பில் சுமார் 15 அன்பர்களுக்கு வெஜ் பிரியாணி காலை உணவாக கொடுத்தோம். பசுக்களுக்கு வாழைப்பழம் கொடுத்தோம். அன்று காலை பெய்த மழை மதியம் வரை நீடித்தது. பின்னர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலுக்கு சென்று முதலில் வழிபாடு செய்தோம். சதுர்முக முருகப் பெருமானிடம் வேண்டினோம். சற்று மழை ஓய்ந்தது கண்டு அங்கே உள்ள அரசமரத்தடி விநாயகரிடம் வந்து நவதானியம், பச்சரிசி மாவு கொண்டு விளக்கேற்றி லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்தோம். இது போன்று இனி தீப வழிபாடு தொடர வேண்டி குருவிடம் வேண்டி நிற்கின்றோம்.
இனி நம் தளம் சார்பில் நடைபெற்ற தீப வழிபாடு தரிசனங்களை இங்கே தருகின்றோம்.
2021 ஜனவரி முதல் நாள் 108 தீபமேற்றி வழிபாடு செய்த காட்சிகளை பகிர்கின்றோம்.
தீபங்கள் பேசும் என்பது நிதர்சனமான உண்மை. அன்றைய தினம் அருள் வெள்ளத்தில் இருந்தோம். அடுத்து 2020, 2021 ஆண்டுகளில் தீபமேற்றிய வழிபாடு இங்கே தருகின்றோம்.
மேலே நீங்கள் காண்பது திருஅண்ணாமலையில் தீப வழிபாடுசெய்த காட்சிகள்
கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில்..தீபமேற்றி அருள் வேண்டிய போது
அடுத்து கூடுவாஞ்சேரி வேலி அம்மன் ஆலய வழிபாட்டில் தரிசனம் பெறலாமா?
2019 ஆம் ஆண்டில் அகத்தியர்
ஜெயந்தி விழாவில் 108 தீபமேற்றி வழிபாடு செய்ய 10 லி கொண்ட இலுப்பெண்ணை
டின் வாங்கி உபயோகம் செய்தோம். இதோ..நீங்களே அந்த 108 தீப தரிசனத்தை
பாருங்கள்.
108 தீபமேற்றி அகத்தியர் தரிசனம் பெற்றது இன்னும் மனசுக்குள் மத்தாப்பாக மிளிர்கின்றது.
அடுத்து சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற வழிபாடு
இலைக்கு 10 தீபமாக வைத்தோம்.
எம் பெற்றோரோடு சேர்ந்து நால்வரோடு தான் ஆரம்பித்தோம். ஆனால் வழிபாடு
ஆரம்பம் செய்யும் முன்னர் ஆசிரமத்தில் இருந்தவர்களை அழைத்தோம். அவர்கள்
வந்து மிக மகிழ்வோடு கலந்து கொண்டாரகள்.
ஒருவாறாக தீபங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன. நாம் தான் தாயாராகவில்லை என்று தோன்றியது.
மகானின் சந்நிதியில் இது போன்ற வழிபாடு..நாம் செய்ய புண்ணியம் செய்து
இருக்க வேண்டும். அதிலும் எம் பெற்றோரோடு நாம் இந்த வழிபாட்டில் ஈடுபட்டது
இன்னும் மனதில் நிறைந்து உள்ளது. இதோ அனைவரும் தயார்.
நமக்கு கொடுக்கப்பட்ட மந்திரங்களை உச்சரித்து பின்னர் தீபமேற்றினோம். எம் தந்தையார் முதல் தீபம் ஏற்றினார்.
அடுத்து ஒவ்வொருவராக , தத்தம் இலையில் உள்ள 10 தீபங்களை ஏற்றுக் கொண்டே
இருந்தார்கள். அங்கிருந்த ஒருவருக்கு சரியாக 8 தீபம் கொண்ட இலை கிடைத்தது.
அது அவருக்கு மிக மிக ஆனந்தம் தந்ததாக கூறினார். அதெப்படி? சரியாக 8
விளக்கு கொண்ட இலை அவருக்கு கிடைக்க வேண்டும்? வேண்டத்தக்கது அறிந்த எம்
பிரானுக்கு இது தெரியாத என்ன?
இவர் தான் 8 விளக்கேற்றிய மகிழ்ச்சியில் ...
நம் குழுவிற்கும் தீபத்திற்கு ஏகப் பொருத்தம். சென்ற ஆண்டு அகத்தியர் குரு
பூசையில் 108 தீப வழிபாடு, ஆடி மாதம் முதல் மோட்ச தீப வழிபாடு,
இதோ..இந்தப்பதிவில் 108 நெய் தீப வழிபாடு. அனைத்தும் நமக்கு உணர்த்துவது
பஞ்சபூத வழிபாடு ஆகும்.
ஆனால் மனதுள் பூ வாங்காது வந்து விட்டோமே என்று ஒரு குறை
இருந்தது. ஆசிரமம் இருக்கும் இடத்தில் பூக்கடை இல்லை, சற்று வருத்தம் தான்.
ஆனால் இந்த வருத்தமும் நம்மை விட்டு நீங்கியது
நம் நெருங்கிய அன்பர் திரு.பிரேம்சந்த் அவர்கள் அன்று கடைசியாக வந்தார்.
சும்மா ஒன்றும் வரவில்லை. நம் ஏக்கம் தீர்க்க பூக்களோடு வந்தார். அவரே
பூக்கள் தூவி மீண்டும் வழிபாட்டை முழுமை செய்தார்.
பூக்கள் தூவிய பிறகு, இன்னும் ஒரு படி ஆனந்தம் கண்டோம்.
அடுத்து 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற தீப வழிபாடு - மார்கழி ஆயில்யத்தை குரு பூசை என்று கொண்டாட பணித்த போது, 108 தீபம் உலக மக்கள் நன்மைக்காக முடிவு செய்தோம்.
மேலே நீங்கள் பார்ப்பது ஒரு அகலில் 108 திரி அடங்கிய ஒற்றை திரி ஆகும்.
இதோ.108 தீபம் ஏற்ற தயாரான போது.
கோயில் குருக்கள் முதல் தீபம் ஏற்றிய காட்சி. இந்த தீபம் தான் நம்மை மோட்ச தீபம் ஏற்ற வழிகாட்டியுள்ளது என்று நாம் நினைக்கின்றோம்.
இந்த 108 தீபங்களை பார்க்கும் போது நம்மை அகத்தியர் வழிநடத்துவது
கண்கூடாய் தெரிகின்றது. படியே மோட்ச தீபத்திற்கு வாருங்கள்.இந்த 108
தீபமேற்றிய இடத்தில தான் கருணைக்கடலின் கந்தனின் ஆசியோடு, அகத்தியரின்
அன்பில் நாம் மாதந்தோறும் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்துள்ளோம்.
வழிநடத்தும்
குருமார்களின் பதம் பணிவோம்.
இவற்றையெல்லாம் பார்க்கும் அனைவரும் அப்படியே பிராத்தனை செய்வோம்.
நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர சொரூபா நமோ நம
ஞான பண்டித சுவாமி நமோ நம - வெகுகோடி
நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூர நமோ நம - பரசூரர்
சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம - கிரிராஜ
தீப மங்கள சோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம - அருள்தாராய்
ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்
ஜோதி ஜோதி ஜோதி பரஞ்
ஜோதி ஜோதி ஜோதி யருட்
ஜோதி ஜோதி ஜோதி சிவம்.
வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி
மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி
ஏமஜோதி வியோமஜோதி ஏறுஜோதி வீறுஜோதி
ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி ஏகஜோதி.
ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே
வாதிஞான போதனே வாழ்கவாழ்க நாதனே.
இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
விளக்கு ஏற்றுங்கள். அறியாமை நீங்கட்டும். ஞானம் என்ற ஒளி பெருகட்டும்
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment