"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 28, 2022

செய்வன திருந்தச் செய்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

செயல் ஒன்றே இன்றைய தேவை. நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றும் அறம் நோக்கியதாக இருக்க வேண்டும். இதைத்தான் நம் தாத்தா/பாட்டி, பாட்டன்மார்கள், புலவர் பெருமக்கள், மகான்கள், ஞானிகள் நமக்கு சொல்லி உள்ளார்கள். நாம் இதனை விடுத்து மேற்கத்திய மோகத்தில் திளைத்து வருகின்றோம். அதற்கேற்ப நாம் தற்போது செயலுக்கு ஏற்ற விளைவை தினமும் அனுபவித்து வருகின்றோம். இன்றைய தலைமுறை ஏன்? எதற்கு? எப்படி என்று கேட்பது நன்றே. ஆனால் வினாவோடு நின்றுவிட்டோம். பழமை, பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனைத்தும் மறந்து விட்டோம். இவற்றையெல்லாம் நாம் கடைபிடிக்க வேண்டும். இன்றைய பதிவில் சில வாழ்வியல் செயல்களை எப்படி திருந்த செய்வது என்று அறிய உள்ளோம்.

 இவற்றையெல்லாம் நம் தலைமுறைக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது நாமே.பள்ளிகள் மதிப்பெண்களுக்காகவே.எனவே அதை மறந்து விடுங்கள்.ஊழியின் பிடியில் வாழும் நாம் இப்போதே இது போன்ற அறம் சார்ந்த செயல்களை செய்யுங்கள்.அப்படி செய்பவர்களை ஊக்கப்படுத்துங்கள்.


முதலில் உணவு விஷயத்தை எடுத்துக் கொள்வோம். கூழானாலும் குளித்துக் குடி என்று ஒளவைப் பாட்டி கூறியதை இங்கே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் நாடு வெப்ப நாடு. வெப்ப நாட்டிற்கு ஏற்ற உணவு கூழ், கஞ்சி போன்ற திரவ உணவுகளே. ஆனால் இவற்றை இன்று மறந்து பீட்சா, பர்கர் , துரித உணவுகள் பக்கம் சென்று விட்டோம். இவற்றை வேண்டாம் என்று சொல்லவில்லை. இவற்றையே எப்போதும் உணவாக கொள்ள வேண்டாம். வாரம் இருமுறையாவது நம் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். உணவு சார்ந்து மேலும் சில தகவல்களை கீழே உள்ள இணைப்பு படத்தில் கண்டு, செயல்படுத்துங்கள்.


அடுத்து நாம் குளித்தல், உடை அணிதல் போன்ற வழிகளை எப்படி பின்பற்றுவது என்று கீழே உள்ள இணைப்பு கண்டு தெரிந்து கொள்ளலாம். குளிப்பதற்கு மூலிகை பொடிகளை பயன்படுத்தலாம். உடைகள் அணிவதன் நோக்கம் இன்று தடம் மாறி, பொருளாதார சிக்கலோடு சேர்த்து தடுமாறிக்கொண்டு இருக்கின்றோம். நெற்றியில் திருமண் அணிய வேண்டும், பெண்கள் நெற்றியில் கட்டாயமாக குங்குமம் வைக்க வேண்டும். இதெல்லாம் என்ன என்று கேட்கும் அளவில் நாம் ஓடிக் கொண்டிருக்கின்றோம். 


நம் தேச தலைவர்கள், தமிழக விடுதலை போராட்ட வீரர்கள் இன்னும் பலரின் வாழக்கை வரலாறு படிக்க வேண்டும். இதனை பார்க்கும் போது நாமும் வெட்கி தலை குனிகின்றோம். இன்னும் விவேகானந்தர் பற்றி முழுமையாக நாம் அறியவில்லையே. இத்துடன் நமது இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம், தமிழ் திருமறைகளான திருக்குறள், ஆத்திச்சூடி, நல்வழி, கொன்றை வேந்தன், திருவாசகம், பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சித்தர் பாடல்கள், திருமந்திரம் என படிக்க வேண்டும். 


அடுத்து இறை வழிபாட்டில் பஞ்சோபசார பூஜை பற்றிய செய்தியை பகிர்கின்றோம். இவை அனைத்தும் பார்க்க எளிமையாய் தோன்றும். எளிமையாய் இருக்கின்றது என்று விட்டு விட வேண்டாம். தினசரி இறை வழிபாட்டில் இதனை தவறாது கடைபிடிக்க வேண்டுகின்றோம். சந்தனம்,பூக்கள்,தூபம்,தீபம், நைவேத்தியம் கொண்டு தினமும் பூஜை செய்வோம்.


அடுத்து நாம் காண இருப்பது மிக மிக முக்கிய செய்தி ஆகும். பிறந்த நாள் ஆங்கில மாதத்தில்  கொண்டாடுவதா? இல்லை பிறந்த நட்சத்திரமா? என்றால் நாம்  கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நட்சத்திரம் அன்று தான் கொண்டாடி வருகின்றோம். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.



அடுத்து பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்ற செய்தியை மேலே கூறி  உள்ளோம்.இங்கே நாம் பகிர்த்துள்ள செய்திகளை திருந்த செய்தோமானால் நாம் இன்பமாக வாழலாம் என்று கூற விரும்புகின்றோம்.

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

நல்வினையாற்ற 19 வழிகள் - எதையாவது புதிதாய்ப் படை - https://tut-temples.blogspot.com/2022/01/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - உளம் ஆற உழவாரப் பணி செய்திடுவோம் - https://tut-temples.blogspot.com/2021/01/19.html


நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு - https://tut-temples.blogspot.com/2020/09/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

No comments:

Post a Comment