"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 24, 2022

கந்த சஷ்டி திருவிழா அழைப்பிதழ் - 25.10.2022 முதல் 30.10.2022 வரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
   கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்!

என்று கந்தப் பெருமானிடம் வேண்டி இன்றைய பதிவில் கந்த சஷ்டி திருவிழா அழைப்பிதழ் காண 
உள்ளோம்.

இம்முறை நமக்கு இரண்டு அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றது. முதலில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் கந்த சஷ்டி திருவிழா அழைப்பிதழ் கண் குளிர காண உள்ளோம்.







முதல் 








கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். அடடா! பதிவின் தலைப்பின் விளக்கம் இப்பொழுது கிடைத்திருக்கும் என்று நினைக்கின்றோம்.

முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் இந்த விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது?

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள்.
பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.

காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும்.

ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம்.

மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும்.

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள்.

அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.

பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள்.

 பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள்.

ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

 மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள்.

ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர். முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.

நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான்.

ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம். அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம்.

அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்) பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.

வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் ! ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன. சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும்.

ஆறின் மகத்துவம் கண்டு தெளிகின்றோம் முருகா!

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் , பிறவான், இறவான்
சும்மா இரு, சொல் அற என்றதுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே!

அடுத்து திருச்செந்தூர் அழகனின் அழைப்பிதழ் காண உள்ளோம்.











கந்த சஷ்டி விரதமிருந்து நம்முள் உள்ள சூரன்களான பேராசை, சினம், கடும்பற்று , முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம்  என ஆறு தீய குணத்தை அழித்து எண்ணம்.சொல், செயலால் குருவாய் வருகின்ற குகனிடம் வேண்டி பணிவோம்.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/10/2019.html

 சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_24.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_73.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

Wednesday, October 19, 2022

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

2019 ஆம் ஆண்டில் நாம் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பில் கோடகநல்லூர் யாத்திரை சென்றோம். ஏற்கனவே நாம் சென்ற ஆண்டில் ஒரு பதிவில் பேசினோம். இன்றைய பதிவில் மீண்டும் 2019 ஆண்டில் நமக்கு கிடைத்த கோடகநல்லூர் தரிசனத்தை இங்கே தொடர இருக்கின்றோம். நாம் ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் இணைந்த பிறகு, சித்தன் அருள் வாசிக்க தொடங்கினோம். இந்த வாசிப்பு நம்மை அகத்தியத்தை நோக்கி நம்மை நேசிக்க செய்தது. சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம்  தொகுப்பில் சில கோயில்களுக்கு சென்று வர தொடங்கினோம்.சித்தன் அருள் வழங்கி வரும் அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பு நம்மை பொறுத்த வரை ஜீவ நாடி அற்புதங்களே ஆகும்.

இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, கோடகநல்லூர் தரிசனம்  என தொடர்ந்து வருகின்றோம். இந்த வகையில் சென்ற ஆண்டில் நம் குழு சார்பில் கோடகநல்லூர் இரண்டாம் பூஜை ஏற்பாடு செய்வதற்கு பணிக்கப்பட்டோம்.

இதோ. இந்த ஆண்டும் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கோடகநல்லூர் வழிபாடு பற்றிய அறிவிப்பை இன்றைய பதிவில் குருவருளால் தருகின்றோம்.

 


அதற்கு முன்பாக சென்ற ஆண்டின் வழிபாட்டு துளிகளை இன்றைய ஐப்பசி ஆயில்ய நன்னாளில் இங்கே முதலில் காண்போம்.

அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை சிறப்பாக நடைபெற பொருளுதவி செய்த அணைவருக்கும், அருளுதவியாக பூஜை சாமான்கள் ஏற்பாடு, அபிஷேகத்தில் உதவுதல், பிரசாதம் வழங்குதல் போன்ற அனைத்து நிகழ்விலும் உடலுழைப்பை நல்கிய அனைவருக்கும் நம் தளம்( தேடல் உள்ள தேனீக்கள் - TUT குழு) சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகு வழிபாட்டை நமக்கு அருளி, வழிகாட்டிய சித்தன் அருள் வலைத்தளத்திற்கு, திரு. அக்னிலிங்கம் ஐயா அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம். அனைத்து அகத்தியர் அடியார்களின் பாதம் பணிந்து நன்றி கூறுகின்றோம்.


நேற்று 12.12.2021 (ஞாயிற்று கிழமை), உத்திரட்டாதி நட்சத்திரம், நவமி திதி அன்று நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, லோகஷேமத்துக்காக, அகத்தியப்பெருமான் ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதாவப் பெருமாளுக்கு, அபிஷேக ஆராதனைகளை செய்கிற நாள்.

இன்றைய பூசையை மூன்றாக பிரித்து அகத்தியர் அடியவர்கள் குழு நடத்துகிறது.

1. உழவாரப்பணி 
2. தாமிரபரணி தாய்க்கு மரியாதை செய்வித்தல் 
3. பெருமாளுக்கும் தாயாருக்கும் அகத்தியப்பெருமான் செய்கிற அபிஷேக பூஜை.

இதில் அகத்தியரை பொறுத்தவரை, உழவாரப்பணி மிக முக்கியமானஒன்று. சுத்தம் கோவிலை அடைந்தால், சித்தம் அங்கே கொள்வான் என்று ஒரு சித்தர் மொழி உண்டு. அதற்கேற்ப, அங்கே வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள், மிக சிறப்பாக உழவாரப்பணியை செய்துள்ளனர். அனைவருக்கும், அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றியும் உரித்தாகுக.




தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பித்தல்.




அனைத்து அன்பர்களுக்கும் பிரசாதம் குருவருளால் வழங்கப்பட்டது



அபிஷேக பூஜையை பெருமாள் ஏற்றுக்கொண்டதற்கு சாட்சியாக நல்ல மழை பெய்தது. எல்லாம் அகத்தியர் அருள்.



அபிஷேக பூஜைக்குப்பின் உழவாரப்பணி செய்து சுத்தமாக்கப்பட்ட கோவிலின் உட்புறமும், வெளிப்பிரகாரமும்!








வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நமக்கு தெரிவித்த மிகச்சிறந்த/முக்கியமான முகூர்த்த நேரங்களில் ஒன்றான "கோடகநல்லூர் நீளா பூமி சமேத ஸ்ரீ ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு" அபிஷேக ஆராதனைகள் செய்து அருள் பெறும் நாள் வருகிற நவம்பர் மாதம் 6ம் தேதி (ஞாயிற்று கிழமை) அன்று வருகிறது.

அதை பற்றி நாடியில் அகத்தியப்பெருமானிடம் வினவியபோது, "பெருமாள் இப்பொழுதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார்."  என உரைத்தார். இது நம் குருநாதருக்கு மிகப்பெருமையான விஷயம், ஏன் என்றால் அன்று கோடகநல்லூரில் இருந்து பெருமாளுக்கான சேவைகளை செய்யப்போவதே அவர்தான்.

ப்ரஹன்மாதவ பெருமாளின் அருளாலும், நம் குருநாதரின் அருளாலும், அன்றைய அபிஷேக பூஜைக்கான விஷயங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் கோடகநல்லூர் வந்திருந்து அகத்தியப்பெருமான் நடத்தும் அபிஷேக பூஜையில் கலந்து கொள்ளும்படி "சித்தன் அருள்" சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    அபிஷேக பூஜை காலை 9.30/10 மணிக்கு தொடங்கும். அகத்தியர் அடியவர்கள் முன்னரே வந்து, தாமிரபரணியில் நீராடி பூஜையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

    எல்லா வருடமும் போல் உழவாரப்பணிக்கான வாய்ப்பு கிடைத்தால், அகத்தியரின் அடியவர்கள், இயன்றவரை ஏற்று செய்து, அகத்தியர்/பெருமாள் அருள் பெற்றுக் கொள்ளவும்.

    அந்த புண்ணிய தினம் ஞாயிற்று கிழமையில் வருவதால், அனைவருக்கும், வந்து பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், முன்னரே அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இப்பொழுதே தெரிவிக்கப்படுகிறது.

அகத்தியப்பெருமானின் கூற்றின் படி அந்த முகூர்த்த நாள் என்பது

   எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள்.

    தாமிரபரணியின் பெருமையை (இந்த நதி தீர்த்தத்தில் அன்று நீராடினால், அவர்களின் 1/3 பாபத்தை தாமிரபரணி தாய் அழித்து சுத்தம் செய்துவிடுவாள்) அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.

    அன்றைய தினம், அனைத்து நதிகளும், தாமிர பரணியில் நீராடி தங்களை சுத்தி செய்து கொள்கிற நாள். ஆகையால், அன்று அங்கு நீராடி, அடியவர்களும், தங்களை சுத்தி செய்து கொள்ளலாம்.

    அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.

    சித்தன் அருளை வாசிக்கும், எத்தனையோ அடியவர்களின் வேண்டுதலை/பிரார்த்தனையை நிறைவேற்றிய முகூர்த்த நாள்.

    06/11/2022 - ஞாயிற்றுக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.

    பூக்கள், துளசி உதிரியாகவோ, மாலையாகவோ, சிறிது பச்சை கற்பூரம், பெருமாளுக்கு பூஜைக்கு வாங்கி கொடுத்து, பிரார்த்தனையை கொடுத்து, அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.

    அன்றுகோயிலுக்கு வருகிற அகத்தியர் அடியவர்கள், முடிந்தவரை முகக்கவசம் அணிந்து வரவும். நம்மால் பிறருக்கு ஒரு ஊறு விளைந்து விடக்கூடாது,என்பதில் கவனமாக இருங்கள்.

    நெல்லை சந்திப்பை அடைந்தவர்கள், தீவுத்திடலில் உள்ள தற்காலிக பேரூந்து நிலையத்தில், சேரன்மாதேவி செல்லும் பஸ்சில் நடுக்கல்லூரில் இறங்கி அங்கிருந்து 1 1/2 கி.மீ நடந்தோ, ஆட்டோவிலோ பயணித்து கோடகநல்லூரை அடையலாம்.

பெருமாள் இப்பொழுதே தயாராகிறார் என்கிற வாக்கு மிக சிறப்பான குருநாதர் செய்தி, என்பதிலிருந்து அனைவருக்கும் அருள் கிடைக்க வழி வகுக்கிறார் என்பது உண்மை. ஆகவே, அனைவரும் வந்திருந்து அவர் அருள் பெற்று செல்க, என சிரம் தாழ்ந்து வேண்டிக்கொள்கிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

 சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

Friday, October 14, 2022

அண்ணாமலை எம் அண்ணா போற்றி!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளம் சார்பில் நடைபெறும் ஆலய தரிசனம், அன்னசேவை போன்ற அனைத்தும் குருவின் அருளாலே தான் நடைபெற்று வருகின்றது. இங்கு தான் செல்ல இருக்கின்றோம் என்று நாம் எதுவும் தீர்மானிப்பதும் இல்லை. இப்படி தான் சென்ற ஆண்டில் தீபாவளி ஆடை தானம் தொடங்கப்பட்டு இந்த ஆண்டிலும் சேவை தொடர்கின்றது. அடுத்து நம் தளத்தின் யாத்திரை பதிவின் தலைப்பை பார்த்தாலே புரிந்து இருக்கும். ஆம். திருஅண்ணாமலை யாத்திரை நாளை முதல் இரண்டு நாட்கள் தீபாவளி சேவையாக நடைபெற உள்ளது.

இணையவெளியில் தேடிய பொழுது கிரிவலம் எப்படி செல்ல வேண்டும் என்று திரு.இளையராஜா அவர்களின் குரலில் ஒரு ஒலிக்கீற்றை கேட்டோம். கேட்பதற்கு முன்பு நாம தான் மாதந்தோறும் பௌர்ணமி கிரிவலம் போறோம்ல என்று நினைத்தோம். ஒலிக்கீற்றை கேட்ட பின்பு அட..ஒரு தடவ கூட இன்னும் முறையாக கிரிவலம் போகலனு தான் தோணுது. எப்போ இந்த அருள்நிலை நமக்கு கிடைக்கும் என்று அருணா..கருணா..என்று அண்ணாமலையாரிடம் விண்ணப்பிக்கின்றோம்.

அண்ணாமலை - நினைத்தாலே முக்தி தரும் மலை. ஆனால் நாம் நினைக்கின்றோமா என்பது தான் கேள்விக்குறி? நினைத்தாலும் எப்படி நினைக்க வேண்டும்? மனம்,மொழி,மெய்களால் அல்லவா நினைக்க வேண்டும். இந்த நினைப்பில் இருந்து தான் நாம் தொழ முடியும். இப்படி நாம் நினைத்து நினைக்க நமக்கு தொழ வாய்ப்பு கிடைக்கும். அப்படி தொழ ஆரம்பித்து விட்டால் 

அண்ணாமலை தொழுவார் வினை வலுவா வண்ணம் அறுமே 

என்று திருஞானசம்பந்தர் கூறுவது திண்ணம்.






அதுவும் எப்படி தொழ வேண்டும் என்றால் ஆடிப்பாடி தொழ வேண்டும் என்கின்றார் திருநாவுக்கரசர்.

தேடிச் சென்று திருந்தடி யேத்துமின்

நாடி வந்தவர் நம்மையு மாட்கொள்வர்

ஆடிப் பாடியண் ணாமலை கைதொழ

ஓடிப் போம்நம துள்ள வினைகளே. 

தேடிச்சென்று அப்பெருமான் திருவடிகளை ஏத்துவீராக ; அங்ஙனம் தேடிச்செல்லும் நம்மை அவரும் நாடிவந்து ஆட் கொள்வர் ; ஆடியும் பாடியும் திருவண்ணாமலையைக் கைதொழுதால் நமது நிகழ்வினைகள் ஓடிப்போகும்.



அண்ணாமலை அங்கு அமரர்பிரான் 

வடிவு போன்று தோன்றுதலும்   

 கண்ணால் பருகிக் கை தொழுது 

கலந்து போற்றும் காதலினால்    

உண்ணா முலையாள் எனும் பதிகம் 

பாடி தொண்டருடன் போந்து 

தெண்ணீர் முடியார் திருவண்ணா

மலைச் சென்று சேர்வுற்றார்     

என்று சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர் புராணத்தில் கூறியுள்ளார்.

திருஅண்ணாமலை, திருவண்ணாமலை என்று கேட்டாலோ, படித்தாலோ நம்முள் ஒரு வித உணர்வு ஏற்படுகின்றது. இது நம்மை அன்பே சிவம் என்ற நிலை நோக்கி நகர செய்கின்றது அல்லவா? இது தான் அண்ணாமலையாரின், நம் அன்பில் கலந்தோன் உணர்த்தும் நிலை. நாம் பல முறை திருஅண்ணாமலை சென்றாலும் மீண்டும் மீண்டும் ஒரு காந்தமாக இருந்து இரும்பாகிய நம்மை ஈர்க்கும் மலை திருஅண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் மலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருக்கும் மலை. மேலும் திருஅண்ணாமலை என்று சொன்னாலே கிரிவலமும் பிரசித்தம். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.

கிரிவலப் பாதையில் இருபுறமும் பலவிதமான மடங்களும், ஆலயங்களும், அன்னதான அருட்கூடங்களும்,சித்தர்களின் மகான்களின் ஆசிரமங்களும் உள்ளன. உதாரணமாக ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம் என்று குறிப்பாக சொல்லலாம். இன்றைய காலகட்டத்தில் மழைக்கு முன் தோன்றும் காளான்களாக புதுப்புது ஆலயங்கள், மடங்கள் உருவாக்கி வருகின்றது. இது போன்ற புது மடங்கள்,ஆலயங்களின் சேவை கண்டு உங்கள் ஆன்மிகப்பணியை அவர்களோடு இயைந்து செய்யவும்.

இங்கு நம்பிக்கையுடன் கிரிவலம் வந்தால் நம் பிறவிகடன்கள் தீரும் என்பது உறுதி. கிரிவலத்துடன் அஷ்ட லிங்க தரிசனம், நாம் ஏற்கனவே சொல்வது போல் ரமணாஸ்ரமம், சேஷாத்திரி ஆலயம், விசிறி சுவாமிகள்  ஆசிரமம், வள்ளலார், ஸ்ரீ ராகவேந்திரர் நேர் அண்ணாமலை, ஆதி அண்ணாமலை, மாணிக்கவாசகர் கோயில், இடுக்குப் பிள்ளையார், பஞ்சமுக தரிசனம் என ஒரு நாளில் அடங்கா தித்திக்கும் தரிசனம் நமக்கு கிடைக்கும்.

இதற்கு முன்னர் நம் தளம் சார்பில் நடைபெற்ற திருஅண்ணாமலை துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.


வழக்கம் போல் குருவருளால் நடைபெற்ற அன்னசேவை 


இதோ கிரிவலம் ஆரம்பிக்க உள்ளோம் 



இந்திரலிங்கம் தரிசனம் பெற உள்ளோம்.


கோயிலினுள்ளே தீபமேற்றி வழிபாடு செய்ய தயாரானோம்.




அப்படியே அடுத்து எமலிங்கம் தரிசனம் 



இங்கும் தீபமேற்றி வழிபாடு செய்த காட்சிகள் 







அடுத்து நிருதி லிங்கத்தில் தீபமேற்றி வழிபாடு செய்த போது 





சில துதிகள் மற்றும் காயத்ரி மந்திரங்களை அங்கே ஒரு தரிசனத்தில் பெற்றது. இங்கே அவற்றை பகிர்கின்றோம்.










அடுத்து வருண லிங்கம் தரிசனம் பெற்று, அங்கும் தீபமேற்றி வழிபாடு செய்தோம்.




அடுத்து அருள்மிகு ஆதி அருணாச்சலேஸ்வரர் தரிசனம் பெற்றோம்.








அடுத்து வாயுலிங்கம் தரிசனம் பெற்றோம்.





இப்படியே சென்று கொண்டு இருந்த போது , அடுத்து குபேர லிங்கம் தரிசனம் பெற்றோம். திருஅண்ணாமலை தரிசனம்  முழுதும் பெற ஒரு வாரம் குறைந்தது வேண்டும். அடிக்கொரு லிங்கம் காணும் திருஅண்ணாமலை என்று கூறுவார்கள். ஆம். ஒவ்வொரு அடியிலும் ஒரு வித உணர்வை இங்கே பெற முடியும். அடுத்து திருஅண்ணமலை வாழ் மகான்கள் என்றும் தொடரலாம். 

குகை நமச்சிவாய தேவர்,  குகை நமச்சிவாய சுவாமிகள், அருணகிரிநாதர்,திருஅண்ணாமலை தின நுமுதல் குருமூர்த்தி, தேசிக பரமாச்சாரிய சுவாமி, பாணி பத்திர சுவாமி, அன்னை மங்கையர்க்கரசியார், சோணாசல தேவர், ஞானப்பிரகாசர் என பட்டியல் நீண்டு செல்கின்றது.

 திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!

-  மீண்டும் சிந்திப்போம்

மீள்பதிவாக:-

 திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_29.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html

தெய்வத்தின் குரல் வழியே கார்த்திகை தீபம் (4) - https://tut-temples.blogspot.com/2019/12/4.html

தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html

மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

 தீப மங்கள ஜோதி நமோ நம... - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_0.html