"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, November 15, 2020

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கந்த ஷஷ்டி விரதம் பற்றிய பதிவுகள் நம் தளத்தில் கண்டு வருவீர்கள் என்று நாம் விரும்புகின்றோம். இதற்கு முந்தைய பதிவில் கந்த  ஷஷ்டி விரதம் பற்றி சில தகவல்கள் பகிர்ந்து கொண்டோம். இந்தப்பதிவில் மீண்டும் கந்தக் கடவுளை பற்ற விரும்புகின்றோம். 

முருகன் என்று சொன்னனாலே போதும். அழகன், குமரன், குகன் என்று சொல்லாடல் விரிந்து செல்லும். இந்த சொல்லாடலில் முருகா என்று கூப்பிடாலே போதும். அறுபடை வீட்டிலும் இருந்து முருகன் அருள் பெற முடியும். ஆம்..இன்றைய முதல் நாள் ஷஷ்டி விரதத்தில் முதலாம் படை வீடு பற்றி காண உள்ளோம்.மேலும் தற்போது கந்த ஷஷ்டி கவசம் என்று சொன்னாலே திருச்செந்தூர் கவசம் தான் அனைவரும் பாடுகின்றோம். ஆனால் திருச்செந்தூர் கவசம் போன்று மற்ற ஐந்து படை வீடுகளுக்கும் ஷஷ்டி கவசம் உண்டு. அவற்றை பற்றியும் ஒவ்வொன்றாக தினமும் காண இருக்கின்றோம்.

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... முருகா! திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்... முதல் படை வீடாகிய திருப்பரங்குன்றம் தரிசனம் பெற இருக்கின்றோம்.

சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது. இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.


கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ஓம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார். புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.

முருகப்பெருமான், பிரணவ மந்திரத்தினையும், அதன் உட்பொருளையும், பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார்.

இந்நிலையில், சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்கு காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

முருகப்பெருமானுக்கு, சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சி தந்தார். எனவே தைப்பூசத்தன்று, சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா, பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே, சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள், துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில், இந்திரன் தன் மகளாகிய தெய்வயானை யை, திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன்-தெய்வயானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது.

திருமண விழாவில் பிரம்மா, விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது.

.


திருப்பரங்குன்றுறை திருமகன்

தேவராய சுவாமிகள்

காப்பு

அமரர் இடர் தீர அமரம் புரிந்த

குமரன் அடி நெஞ்சே குறி.


துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம், நெஞ்சில்

பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்துஓங்கும்

நிஷ்டையுங் கைகூடும், நிமலர் அருள்கந்தர்

சஷ்டிக் கவசந் தனை.

நூல்


திருப்பருங்குன்றுரை தீரனே குகனே

மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா

குறுக்குத்துறையுறை குமரனே அரனே

இருக்கும் குருபரா ஏரகப்பொருளே        ... ... 4


வையாபுரியில் மகிழ்ந்து வாழ்பவனே

ஒய்யார மயில் மீது உகந்தாய் நமோ நமோ

ஐயா குமரா அருளே நமோ நமோ

மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ        ... ... 8


பழநியங்கிரிவாழ் பகவா நமோ நமோ

மழுவுடை முதல்வன் மதலாய் நமோ நமோ

விராலிமலையுறை விமலா நமோ நமோ

      மராமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ        ... ... 12


சூரசங் காரா துரையே நமோ நமோ

வீரவேலேந்தும் வேளே நமோ நமோ

பன்னிரு கரமுடைப் பரமா நமோ நமோ

கண்களீராறுடை கந்தா நமோ நமோ        ... ... 16


கோழிக்கொடியுடைக் கோவே நமோ நமோ

ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ

சசச சசச ஓம் ரீம்

ரரர ரரர ரீம்ரீம்        ... ... 20


வவவ வவவ ஆம் ஹோம்

ணணண ணணண வாம்ஹோம்

பபப பபப சாம் சூம்

வவவ வவவ கெளம் ஓம்        ... ... 24


லல லிலி லுலு நாட்டிய அட்சரம்

கக கக கக கந்தனே வருக

இக இக இக ஈசனே வருக

தக தக தக சற்குரு வருக        ... ... 28


பக பக பக பரந்தாமா வருக

வருக வருகவென் வள்ளலே வருக

வருக வருக நிஷ்களங்கனே வருக

தாயென நின்னிருதாள் பணிந்தேன் எனைச்        ... ... 32


சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே

அல்லும் பகலும் அனுதினமும் என்னை

எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை

வல்லவிடங்கள் வாராமல் தடுத்து        ... ... 36


நல்ல மனத்துடன் ஞானகுரு உனை

வணங்கித் துதிக்க மகிழ்ந்துநீ வரங்கள்

இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்

கந்தா கடம்பா கார்த்தி கேயா        ... ... 40


நந்தன் மருகா நாரணி சேயே

என்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தனை

தண்ணளி அளிக்கும் சாமிநாதா

சிவகிரி கயிலை திருப்பதி வேளூர்        ... ... 44


தவக்கதிர்காமம் சார்திரு வேரகம்

கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்

விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்

தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு        ... ... 48


சன்னதி யாய்வளர் சரவண பவனே

அகத்திய முனிவனுக் (கு) அன்புடன் தமிழைச்

செகத்தொர் அறியச் செப்பிய கோவே

சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்        ... ... 52


நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்

வித்தாய் நின்ற மெய்ப்பொருளோனே ...

உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே

வெற்றிக் கொடியுடை வேளே போற்றி        ... ... 56


பக்திசெய் தேவர் பயனே போற்றி

சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி

அத்தன் அரி அயன் அம்பிகை லட்சுமி

வாணி யுடனே வரைமாக் கலைகளும்        ... ... 60


தானே நானென்று சண்முகமாகத்

தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்

பூரண கிருபை புரிபவா போற்றி

பூதலத்துள்ள புண்ய தீர்த்தங்கள்        ... ... 64


ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்

எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்

பண்ணும் நிஷ்டைகள் பலபல வெல்லாம்

கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்        ... ... 68


எள்ளினுள் எண்ணெய் போலெழிலுடை உன்னை

அல்லும் பகலும் ஆசாரத்துடன்

சல்லாப மாய் உனைத் தானுறச் செய்தால்

எல்லா வல்லமை இமைப்பினில் அருளி        ... ... 72


பல்லா யிரநூல் பகர்ந்தருள்வாயே

செந்தில்நகர் உறை தெய்வானை வள்ளி

சந்ததம் மகிழும் தயாபர குகனே ...

சரணம் சரணம் சரஹணபவ ஓம்        ... ... 76


அரன்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்

சரணம் சரணம் சரஹணபவ ஓம்

     சரணம் சரணம் சண்முகா சரணம் ...        ... ... 79

இன்றைய சஷ்டி விரத முதல் நாளில் திருப்பரங்குன்றம் கவசம் ஓதி முருகப் பெருமான் அருளை அனைவரும் பெறுவோம். இன்றைய நன்னாளில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் இருந்த்து கிடைக்கப்பெற்ற முதல் நாள் தரிசனக் காட்சிகளை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.






மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html

முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_12.html

2 comments:

  1. ஒவ்வொரு படை வீட்டிற்கும் ஒரு சஷ்டி கவசம் உண்டு என்பதை தெரியப்படுத்தியமைக்கு நன்றி அண்ணா 🙏🙏

    எம்பெருமான் முருகன் அருள் தளத்தின் அனைத்து அன்பர்களுக்கும் துணை நிர்க்கட்டும் 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. நன்றி மா
      வழக்கம் போல் நம் தளத்தை கண்டு வருவதற்கு நன்றி.
      அன்பர்கள் அனைவரின் வாழ்வில் குருவருளும் திருவருளும் பெற அறுபடை வீடு கந்தக் கடவுளிடம் வேண்டுகின்றோம்.

      ஓம் அகத்தீஸ்வராய நமஹ

      Delete