அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
கந்த ஷஷ்டி விரதம் பற்றிய பதிவுகள் நம் தளத்தில் கண்டு வருவீர்கள் என்று நாம் விரும்புகின்றோம்.கந்த ஷஷ்டி ஆறாம் நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் காண இருக்கின்றோம். இந்த ஆண்டில் நாம் ஷஷ்டி விரதம் 4 ம் ஆண்டாக இருக்கின்றோம். கடந்த மூன்றாண்டுகளாக கந்த ஷஷ்டி விரத காலத்தில் தினமும் ஒரு படை வீடு பற்றி நம் தளத்தில் பகிர விரும்பினோம். ஆனால் இந்த ஆண்டில் நம் விருப்பம் நிறைவேறியுள்ளது. அனைத்தும் முருகப் பெருமான் அருளால் தான் என்று உணர்ந்து வருகின்றோம்.
ஏற்கனவே கூறியது போல் இதற்கு முந்தைய பதிவுகளில் முருகப் பெருமானின் ஐந்து படைவீடுகள் பற்றி சிறிது கண்டோம். மேலும் அந்த ஐந்து படை வீடுகளின் கந்த சஷ்டி கவசமும் படித்தோம். இன்றைய பதிவில் முருகப் பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை பற்றி அறிய இருக்கின்றோம்.முருகப்பெருமானை பற்றி ஒரு பதிவில் உணர்த்த முடியுமா? என்றால் அது முடியாது. அது போலவே பழமுதிர்ச்சோலை தலத்தை பற்றியும் நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.
அமைவிடம் :
மதுரை மாவட்டத்திலிருந்து வடக்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது பழமுதிர்ச்சோலை. திருமாலின் திருக்கோயிலான, சுந்தராஜப் பெருமாள் என்றழைக்கப்படும் அழகராக அவர் நின்று அருள்புரியும் அழகர்கோயில் திருத்தலத்தில் அமைந்திருப்பது பழமுதிர்ச்சோலை.
பழமுதிர்ச்சோலை :
மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.
மாலும்-முருகனும் :
பெருமாளும் அழகியவர், முருகன் என்றாலும் அழகுடையவன் என்று பொருள்படும். சுந்தரராஜன் என்றாலும் அழகுடைய பெருமாளைக் குறிக்கிறது. மிகப்பழமையான திருத்தலங்களில் அழகர் கோயிலும் ஒன்று.
திருமுருகாற்றுப் படையைத் தவிர, இதர சங்க இலக்கியங்களில், அழகர் கோயில் சிறந்த விஷ்ணுத் தலமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மலையடிவாரத்தில் புகழ்மிக்க விஷ்ணு ஆலயம் உள்ளது.
திருமலையைப் போன்ற இனிய தோற்றமுடையதாக இருப்பதால் திருப்பதி திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இம்மலையை வணங்கி வழிபடலாம்.
முருகன் அடியார்கள் :
திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றார்.
புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற “நூபுர கங்கை” என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.
சைவ-வைணவ ஒற்றுமை :
அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். மலையலங்காரன் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு உகந்த வெள்ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது.
இக்கோயிலில் உற்சவம் ரதோச்வ காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கும் அர்ச்சனை செய்பவர்களுக்கும் விபூதிதான் கொடுத்து வருகிறார்கள். துளசி எப்போதும் கொடுப்பதில்லை.
கோயில் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்குமரன் எனும் வெள்ளி விக்ரகம் இருந்து வருவதுடன் பஞ்சலோகத்தில் சக்கரத்தாழ்வார் மூலவரைப் போன்று உற்சவ விக்ரகமும் இருந்து வருகிறது.
இத்திருத்தலம் வைணவத் தலமாகவும், குமார தலமாகவும் விளங்கி சிவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
முருகனின் திருவிளையாடல் :
அறுபடை வீடு ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகுத் திருமுருகன், இத்திருத்தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒளவையாரை நாவற்பழத்தை உதிர்த்து தந்து, சில வினாக்களைக் கேட்டு, “சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?” என்று கேட்டு ஓளவையைத் திகைக்கச் செய்து திருவிளையாடல் புரிந்ததாக புராணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பக்தர்கள் எழுப்பிய ஆலயம் :
முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும் இடைப்பட்ட காலத்தில் பக்தர்களால் மலைக்கு இடையே கோயில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கோயில் கட்டப்பட்டுள்ள இடமே பழமுதிர்ச்சோலையாகும். இங்கே கோயில் கொண்டுள்ள முருகன் வெற்றிவேல் முருகன் என அழைக்கப்படுகிறார். இக்கோயில் அழகர் கோயில் மலையில் நூபுரகங்கை என்னும் சிலம்பாற்றுக்குச் செல்லும் வழியில் மலை மீது சுமார் மூன்றரை கி.மீ. தூரத்தில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுப்பப் பட்டுள்ளது.
அழகர் கோயிலை அடைந்ததும் உயர்ந்த பசுமையான மலையும், குளிர்ச்சியான காற்றும் நம்மை கவர்ந்திழுக்கின்றன. ஒரு புதுமையான, அமைதி தவழும் சூழ்நிலை நிலவுவது பழமுதிர்ச்சோலையின் சிறப்பம்சமாகும்.
இத்திருக்கோயில் அமைக்கப் பெற்றுள்ள இடத்தில் படிக்கட்டுகள் சீராக இல்லாததால் நடந்து மட்டுமே செல்லத்தக்க கரடு முரடான மலைப்பாதையில் மட்டுமே சென்று அடைய முடியும்.
தீர்த்தச் சிறப்பு
அழகர் மலை மீதுள்ள நூபுர கங்கைக்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. திருமுருகன் திருக்கோயிலிலிருந்து மேலும் அரை கி.மீ. பாறைப்பாங்கான வழியே சென்றால் இத்தீர்த்தத்தை அடையலாம்.
சோலைமலையில் உள்ள சிலம்பாறு (நூபரகங்கை) திருமுருகன் பாதத்திலிருந்து தோன்றியதாக கர்ணபரம்பரை உண்டு. இடப கிரியில் முருகக் கடவுளின் பாதத்திலிருந்து ஒரு நதியுண்டாகி இருக்கிறது. அதற்கு நூபுர (சிலம்பு) கங்கை என்னும் பெயர் வழங்கப்படுகிறது.
இந்த தீர்த்தத்தில் இரும்புச் சத்தும், தாமிரச் சத்தும் மிகுந்திருப்பதால் இது பல நோய்களையும் குணப்படுத்த வல்லதாய் இருக்கிறது. இத்தீர்த்தத்தின் உற்பத்தியிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
விழாக்கள் :
கந்த சஷ்டி விழா இங்கு முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது. திருமாலிருஞ்சோலையில் ஆரம்பித்த நம் யாத்திரை தற்போது சோலைமலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.பழம் உதிர்கின்ற சோலை என்பதால் பழமுதிர்ச்சோலை ஆயிற்று. இதனை உணர்த்தும் பதாகை கண்டோம்.
நம்மை வரவேற்கும் ராஜ கோபுர தரிசனம் எப்படி உள்ளது?
மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம்.
இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன.
கோயில் முழுதும் வண்ண வண்ண நிறங்களாக நம் மனதையும், கருத்தையும் கவர்ந்தார்கள்.
திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றார்.
புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.
கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத்
திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த
தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். எனவே ஆறாவது படை வீடாகிய
பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார்
தெரிவிக்கின்றனர்.
ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும்
தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும்
காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத்
திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அடுத்து அப்படியே நூபுர கங்கை நோக்கி நடந்தோம்.
நூபுர கங்கையில் தீர்த்தமாடி விட்டு, மீண்டும் மலை இறங்கினோம்.
பேருந்திற்காக காத்திருந்தோம். இருப்பினும் மீண்டும் நடந்து மலை இறங்க மனம்
சொன்னது. கால்கள் தானாக பெருமாளைத் தேடி நடக்க ஆரம்பித்தது.
இதோ..முழுதும் மலை இறங்கி விட்டோம். கீழே அந்த எம் பெருமாளின் கோபுர
தரிசனம் கண்டோம். அப்பாடா என்று மனம் கொஞ்சம் அமைதியானது. நண்பகல்
நேரத்தில் சரியாக மீண்டும் அடிவாரம் வந்தோம்.
தரிசனம் எப்படி இருந்தது? வார்த்தைகளில் அடக்க முடியவில்லை அல்லவா? அடுத்து பழமுதிர்ச்சோலை பரமகுருவை சஷ்டி கவசம் பாடி அழைப்போமா?
அமரர்இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி,
துப்போருக்கு வல்வினை போம்துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போருக்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிஷ்டையுங் கூகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை
சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கண்மால் மருகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே ... ... 4
பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவணபவனே சட்கோணத் துள்ளுறை
அரனருள் சுதனே அய்யனே சரணம் ... ... 8
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்
திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம் ... ... 12
திகழொளி பவனே சேவல்கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே ... ... 16
சவ்வும் ரவ்வுமாய்த் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவணபவனே ... ... 20
குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்ச மென்றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங் (கு)
அஞ்சலி செய்தவள் அமுதமும் உண்டு ... ... 24
கார்த்திகை மாதர் கனமார் (பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீரவாகுவோ (டு) ஒன்பான் ... ... 28
தம்பிமா ராகத் தானையைக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப் ... ... 32
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்க
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை ... ... 36
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேக மதாக
உமையுடன் வந்தினி துவந்து பரிந்து ... ... 40
அயனைச் சிறைவிடென் (று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே ...
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கெளரி லட்சுமி கலைம களுடனே ... ... 44
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித் தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும் ... ... 48
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்தவ் வமரர்கள் தமக்குச் ... ... 52
சேனா பதியாய்த் தெய்வீக பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெரும ...
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவேரக முதல் ... ... 56
எண்ணிலாத் தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென் (று) ஓதினார் சமயம் அறிந்தங் (கு) ... ... 60
இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழனி தேவ குமாரா
கண்பார்த் (து) எனையாள் கார்த்திகே யாஎன் ... ... 64
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலட் சுமிவாழ் அருளெனக் குதவி
இட்டமாய் என்முன் இருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே ... ... 68
அருணகிரி தனக் (கு) அருளிய தமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்
தேவ ராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட ... ... 72
சஷ்டி கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த் திறம் தந்தருள் வோனே ... ... 76
சரணம் சரணம் சரஹண பவஓம்
சரணம் சரணம் தமிழ் தரும் அரசே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம். ... ... 80
இன்றைய சஷ்டி விரத ஆறாம் நாளில் பழமுதிர்ச்சோலை கவசம் ஓதி முருகப் பெருமான் அருளை அனைவரும் பெறுவோம். இன்னும் கந்தனைப் பற்றுவோம் ...போற்றுவோம். இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள் வாழ்வில் குருவருளும் திருவருளும் பெற அறுபடை வீடு கந்தக் கடவுளிடம் வேண்டுகின்றோம்.
எப்படி செல்வது?
மீண்டும் ஒருமுறை முருகனை பாடி பரவசப்படுவோம். வேறென்னே கேட்க முடியும்?
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
இந்தப் பாடலையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சிறப்பம்சம் ஒன்று இப்பாடலில் உண்டு.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே! - சோலைமலை தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_88.html
சோலைமலை வந்து கந்த பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_20.html
திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html
No comments:
Post a Comment