"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, November 30, 2022

பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் 104 வது ஜெயந்தி விழா - 01.12.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

2022 ஆம் ஆண்டில் கடைசி மாதத்தில் இருக்கின்றோம். தற்போது தான் 2022 ஆம் ஆண்டு பிறந்தது போன்று இருந்தது. அதற்குள் 2022 ஆம் வருடத்தின் இறுதியில் நகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நாள் நாட்காட்டி தேதி பார்க்கும் போது நாம் இன்னும் செய்ய வேண்டிய சேவைகள் அதிகமாக உள்ளது. நம் குழுவை மருத்துவ சேவையில் ஈடுபடும்படி நம் குருநாதர் 2019 ஆண்டில் கூறினார்கள். சென்ற ஆண்டில் மருத்துவ சேவையாக மூலிகை கசாயம் கொடுக்கும் சேவை கூடுவாஞ்சேரியில் தொடர்ந்து வருகின்றது. அன்னசேவை, தீப வழிபாடு , ஆயில்ய ஆராதனை, ஆலயங்களுக்கு தீப எண்ணெய் வழங்குதல்,மருத்துவ உதவி, தினசரி கூட்டுப் பிரார்த்தனை என அனைத்தும்  உங்கள் அனைவரின் பொருளுதவியால் நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டில் 4 தல யாத்திரை குருவருளால் நடைபெற்றது. நவ கைலாயம், நவ திருப்பதி, மதுரை & திருஅண்ணாமலை என ஒவ்வொரு யாத்திரையும் சிறப்பாக அமைந்தது. இது இந்த ஆண்டில் நம் குழுவின் புதிய மைல்கல் என்று கூறலாம். அதே போன்று தினசரி கூட்டுப்பிரார்தனை குருவருளால்  சில நாட்களுக்கு முன்னர் 300 ஆவது நாளை தாண்டி, திருப்புகழ் படித்து சிரமேற்கொண்டு நடைபெற்று வருகின்றது.

அதே போல் சென்ற ஆண்டு நம் தளத்தின் தரிசனப் பதிவுகள் என பல பதிவுகள் இன்னும் நம் கையில் உள்ளது. நம் கையில் உள்ள பதிவுகளை உங்கள் இதயத்தில் இடம்பெற விரைவில் முயற்சி செய்கின்றோம்.

இன்றைய சிறப்பு நாளில் பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்சுவாமிகளின் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று குருவைப் போற்றுவோம். திரு அண்ணாமலையார் என்று அன்புடன் ஸ்ரீ மகா பெரியவா அவர்களால் அழைக்கப்பட்டவர் யோகி ராம் சுரத்குமார்

யோகி ராம் சுரத்குமார் யோகி ராம்சுரத் குமார் யோகி ராம்சுரத் குமார் ஜெய குரு ராயா!


"சுவாமி உண்மையில் நீங்கள் யார்? நீங்கள் துறவி இல்லை. சந்நியாசி இல்லை. சொல்லில் விளையாடும் இறை போதகர் இல்லை. உங்களிடம் சம்பிரதாயங்கள் இல்லை. சடங்குகளோ, நியமங்களோ இல்லை. மத நாற்றம் இல்லை. எந்த விதமான தர்மசேவைகளும் நீங்கள் புரிவதில்லை. தியானமோ, யோகமோ எதுவும் செய்யவும் இல்லை, செய்யச் சொல்லவும் இல்லை. அனுஷ்டானங்கள் செய்வதில்லை. ஏன் ஸ்நானம் கூடச் செய்வதில்லை. யாருக்கும் எதையும் போதிக்கவில்லை. நீங்கள் உண்மையில் யார் சுவாமி? ஏனோ என் ஆழ்மனதில் உங்களைக் காணவேண்டும், உங்களுடனேயே சர்வ காலமும் இருக்க வேண்டும் என்று வெறித்தனமான வேகம் மட்டும் பிறக்கிறது. உங்கள் நாமம் நான் இதுவரை உச்சாடனம் செய்துவந்த மற்ற நாமத்தை விடச் சொல்வதற்குச் சுகமாக இருக்கிறது. எப்பொழுதும் சொல்ல மனமும் விழைகிறது. என்னுள் நீங்கள் எதுவும் செய்யாமலே மாற்றங்கள் புரிகிறீர்கள். தங்களைத் தரிசிக்கும்போது நான் காணாமல் போய்விடுகிறேன். என் எண்ண ஓட்டங்களும் ஓய்ந்து விடுகிறது. நீங்கள் யார் சுவாமி?"




"இந்த பிச்சைக்காரனை யார் எனக் கேட்டாய். உன் கண்கள் என்னையே பார்க்கட்டும். உன் எண்ணங்கள் என்னையே சுற்றிவரட்டும். எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு ஒரு முறையே இந்த பிச்சைக்காரன் போன்றோர் இவ்வுலகிற்கு வருவார்கள். எனவே நன்கு பார்த்துக்கொள். இந்த பிச்சைக்காரன் பேசும் தோற்றத்தையோ, நடக்கும் தோற்றத்தையோ, அமரும் தோற்றத்தையோ, சிரிக்கும் தோற்றத்தையோ, அழுகின்ற தோற்றத்தையோ, உக்கிரமாக இருக்கும் தோற்றத்தையோ, அன்பர்களோடு அளவளாவும் தோற்றத்தையோ, இந்த பிச்சைக்காரனின் ஏதோவொரு தோற்றத்தையோ உன்னுள் இருத்திக் கொள். அதுவே தவமாகும். அதுவே தெய்வ தரிசனமாகும். அதுவே மனித வாழ்வின் குறிக்கோளும் ஆகும். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே நண்பா. இந்த பிச்சைக்காரனை ஸுவீகரித்துவிடு. உன்மயமாக்கிக்கொள். இந்த பிச்சைக்காரனை விழுங்கிவிடு நண்பா."

திருவண்ணாமலை, அற்புதமான புண்ணிய பூமி. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்... என மகான்களின் திருப்பாதம்பட்ட மண். காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். 

 ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும், சுவாமி ராமதாஸரிடமிருந்து பக்திநெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு ராமதாஸரிடமிருந்து, 'ஓம் ஶ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்' எனும் மந்திர தீட்சை பெற்றார்.யோகி ராம்சுரத்குமார் சித்தியடையும் வரை இந்த மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே இருந்தார். தமிழ் மண்ணில் பிறக்க நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். ஒரு மகான் வடக்கில் பிறந்து, தெற்கில் நம் மண்ணில் வந்து சித்தி அடைவதென்றால் ஏன்?  நமக்காக தானே. நாம் உண்மை நிலை உணர தானே. யோகியின் வழியில் நாமும் மந்திர ஜெபத்தை பிடிப்போம்.







இங்கு பதிவேற்றம் செய்து  உள்ள காட்சிகள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாம் கண்டது. நம்  அன்பர் திரு.ஹரிஹரன் அவர்கள் இரண்டு ஆண்டுகளாக நம்மை கூடுவாஞ்சேரியில் யோகியாரின் ஆசிரமம் உள்ளது,சென்று தரிசியுங்கள் என்றார். நாமும் எங்கெங்கோ தேடி கடைசியில் கண்டோம், அருள் பெற்றோம்.

 

திருவண்ணாமலை செங்கம் ரோடில் சுவாமிகளின் ஆஸ்ரமம் உள்ளது. அங்கே அவருடைய சமாதியும், உருவச் சிலையும் அழகாகத் திகழ்கின்றன. தினசரி வழிபாடும்  அற்புதமாக நடைபெற்று வருகின்றது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அவருடைய பக்தர்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

“ யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்!

யோகி ராம்சுரத்குமார்! ”

என்று மூன்று முறை அழைத்தால் போதும். இந்தப் பிச்சைக்காரன் நீங்கள் யாராக இருந்தாலும், எங்கிருந்தாலும், எந்தப் பிரச்சனை இருந்தாலும் நிச்சயமாக வந்து உதவி செய்வான்” என்று அந்த மகான் சத்தியம் செய்திருக்கிறார். அது இன்றளவும் அவருடைய பக்தர்களின் வாழ்க்கையில் நடந்து வருகிறது.

நீங்களும் மனம் ஒருமித்து அவர் பெயரைக் கூப்பிடுங்கள்; உங்களுக்கும் நல்லது நடக்கும்.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 கோஅருணை சலத்தில் நின்ற "குகை நவசிவாயலிங்கம்" - ஸ்ரீலஸ்ரீ குகைநமசிவாயர் 522 ஆம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2022/11/522.html

பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி விழா - 01.12.2021 - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

 யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 116 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2021/09/116.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html


கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Friday, November 25, 2022

கோஅருணை சலத்தில் நின்ற "குகை நவசிவாயலிங்கம்" - ஸ்ரீலஸ்ரீ குகைநமசிவாயர் 522 ஆம் ஆண்டு குரு பூஜை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தில் அவ்வப்போது சித்தர்கள் பற்றியும், சித்தர்களின் குரு பூஜை பற்றியும் பேசி வருகின்றோம்.சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. இன்றைய பதிவில் நாளை (27.11.2022) நடைபெற உள்ள  ஸ்ரீலஸ்ரீ குகைநமசிவாயர் 522 ஆம் ஆண்டு குரு பூஜை பற்றி அறிய உள்ளோம்.


பதிவின் உள்ளே செல்லும் முன்னர் சென்ற முறை நாம் தீபாவளி சேவைக்காக திருஅண்ணாமலை சென்றிருந்தோம். அப்போது இரண்டாம் நாள் காலை நாம் சித்தர் இடைக்காடர் அருள் பெற வேண்டி, அண்ணாமலை மேலே ஏறி சென்றோம். அன்று ஆலமரத்து குகை ஆசிரமம், குகை நச்சிவாயர் உயிர்நிலை கோயில், சிவ சக்தி ஆசிரமம், மாமரக்குகை, விருட்பாட்சி குகை, முலைப்பால் தீர்த்தம் என தரிசனம் பெற்றோம். அன்று குகை நச்சிவாயர் உயிர்நிலை கோயில் உள்ளே சென்று தரிசனம் பெற இயலவில்லை. காலை 7 மணி என்பதால் அப்படியே அங்கு அமர்ந்து அகத்தில் வழிபாடு செய்து பின்னர் அப்படியே மேலே ஏறினோம். திரு அண்ணாமலை செல்லும் அன்பர்கள் வாய்ப்பிருந்தால் இது போன்ற ஆலய தரிசனம் பெற முயற்சி செய்யுங்கள்.




சித்தர்கள்  வாழும் திருவண்ணாமலையில் குகை நமசிவாயர் சித்தர் தரிசனம் நாம் பெறலாம்.

தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் குகை நமசிவாயர் கூறுவது; அண்ணாமலையாரின் பாதத்தை சரண் அடைந்து விடு. எத்தகைய பாவம் இருந்தாலும் சரி... கர்மா உன்னைத் துரத்தினாலும் சரி... நீ புனிதம் அடைந்து விடுவாய்.

தமிழ்நாட்டில் எத்தனையோ மலைகளில் சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த மலைகளில் மிகுந்த தனித்துவமும், சிறப்பிடமும் கொண்டது திருவண்ணாமலை. சிவபெருமானே, மலையாக வீற்றிருப்பதால், சித்தப் புருஷர்களை அதிக அளவில் ஈர்க்கும் மலையாக திருவண்ணாமலை திகழ்கிறது. இதனால் தான் அண்ணாமலையை, ‘‘ஞானத் தபோவனரை வா என்று அழைக்கும் மலை’’ என்று குரு நமச்சிவாயர் குறிப்பிட்டுள்ளார்.

சித்தர்களின் தவ பூமியாகத் திகழும் இந்த மலையில் கண்ணுக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சித்தர்கள் உள்ளனர். அவர்கள் ஈசனிடம் அருள்பெற்று, பக்தர்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்கள். சில சமயங்களில் அந்த சித்தர்கள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதும் உண்டு. திருவண்ணாமலை மலை மட்டுமின்றி ஆலயமும் சித்தர்கள் ஆசி நிறைந்த இடமாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே திருமஞ்சன கோபுரம் அருகே பதினெண் சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் சித்தர் ஒளிதேகம் பெற்ற இடம் உள்ளது

அதுபோல மூன்றாம் பிரகாரத்தில் உள்ள முக்தி மண்டபத்தில் அருணாசலேஸ்வரர், யோகியாக சூட்சும வடிவில் இன்றைக்கும் சித்தர்களுக்கு தரிசனம் தருவதாக சொல்கிறார்கள். அந்த முக்தி மண்டபம் அருகே அமர்ந்து தியானம் செய்தால் சித்தர்களின் அருளைப் பெற முடியும்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் சிலர் மட்டுமே ஜீவ சமாதி பெற்றுள்ளனர். மற்றவர்கள் அரூப நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவருமே ‘கிரிவலம் செல்ல வேண்டும்’’ என்பதையே பிரதானமாக வலியுறுத்தினார்கள். அவர்களில் இன்றும் புகழப்படும் குகை நமசிவாயர் பற்றி காணலாம்.
கர்நாடகாவில் மல்லிகார்ச்சுனம் என்ற ஊரில் குகை நமசிவாயர் பிறந்தார். ஒருநாள் இவர் கனவில் தோன்றிய அண்ணாமலையார், ‘‘திருவண்ணாமலைக்கு வா’’ என்று அழைத்தார். அதை ஏற்று நமசிவாயர் புறப்பட்டு வந்தார்.

தன் சீடர்கள் 300 பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் நமசிவாயர் ஒரு வீட்டில் திருமணம் நடப்பதைக் கண்டார். அவ்வீட்டினர் நமசிவாயரை ஆசி வழங்கும்படி வேண்டினர். அவ்வீட்டாருக்கு திருநீறு கொடுத்தார். அவர்கள் திருநீறைப் பூசிய போது, அவ்வீட்டில் தீப்பிடித்தது. தீப்பிடிப்பதற்கு நமசிவாயரின் வருகையே காரணம் என அவர்கள் நினைத்தனர்.

ஆனால், நமசிவாயர், தன் அருட் சக்தியால் எரிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்தார். பின், அவர்கள் பூந்தமல்லியை வந்தடைந்தனர். அங்குள்ள கோவில் நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்து வரும்படி குகை நமசிவாயர் தமது சீடர்களை அனுப்பினார். அந்த பூக்களை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்தார். உரியவரைக் கேட்காமல், பூப்பறித்தது குற்றம் என கோவில் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

பறித்த பூக்கள் எல்லாம் சிவனுக்காகவே அணிவிக்கப்பட்டன. ஒரு பூ கூட வீணாகவில்லை, என்று நமசிவாயர் விளக்கம் தந்தார். அதற்கு கோவில் நிர்வாகிகள் உம் வார்த்தை உண்மையானால், சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உங்கள் கழுத்தில் வந்து விழுமா, என சவால் விட்டனர். நமசிவாயரும் பக்தியுடன், நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பக்தியுடன் வணங்கினார். அனைவரும் அதிசயிக்கும்படி மலர் மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது.

அப்பகுதியை ஆட்சி செய்து வந்த வேற்று சமய மன்னனுக்கு இச்செய்தி எட்டியது, நமசிவாயரை அழைத்து, எல்லா சமயத்தையும் விட சைவமே உயர்ந்தது என்பது உண்மையானால், நான் சொல்வதைச் செய்ய வேண்டும்! என்று கட்டளையிட்டான். சைவமே சிறந்த சமயம், சிவபெருமானே உயர்ந்த தெய்வம்! என்று சொல்லிக் கொண்டு நன்கு காய்ச்சிய இரும்பை பிடித்து காட்டுங்கள்! என்றான்.
அதற்கு நமசிவாயர், இதற்கு நான் எதற்கு, என் சீடனே இதைச் செய்வானே என்று விரூபாட்சித் தேவரை நோக்கி கண்களால் கட்டளையிட்டார். செந்தழல் மேனிச் சிவனே போற்றி என்று சிவபிரானை வணங்கிய விரூப்பாட்சிய தேவர் பழுக்கக் இரும்பினைக் கையில் எடுத்து, இதுவும் ஈசன் அருளால் பழுத்த கனியே என்று சொல்லி விழுங்கிவிட்டார். இதனைக் கண்ட மன்னன் மனம் திருந்தி, சிவபக்தன் ஆனான்.

சிலகாலம் கழித்து, நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கினார்.
அதன்பின், அவருக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது. சீடர்களும் தானும் நீராடுவதற்காக நான்கு குளங்களை அவர் வெட்டினார். அவை திருமுல்லைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று பெயர் பெற்றன.

குகை நமசிவாயர் தினமும் குகையை விட்டு அதிகாலையில் வெளியே வருவார். மலையைச் சுற்றி கண்ணோட்டம் விடுவார். ‘‘அருணாசலா நீ சுகம் தானே’’ என உரக்கக் கேட்பார். “சுகம், சுகம்’’ என மலை எதிரொலிக்கும். ஆனால் ஈசன் தரிசனம் அவருக்கு ஒருநாளும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த குகை நமசிவாயர் ஒரு நாள் இரக்கமற்ற அருணாசலா நீ மட்டும் சுகமாயிரு என்று குமுறலுடன் கூறினார்.

அண்ணாமலையார் மீது குகை நமசிவாயர் பல பாடல்களைப் பாடினார். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் அவருக்கு அண்ணாமலையார் வழங்கினார். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.

அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகளாக இருந்தன. இவருடைய சீடர்களுள் விரூபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.

ஒருநாள், அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, குகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழுதபடியே அவரை நோக்கி ஓடி வந்தாள். சுவாமி! அபலையான என்னைக் காப்பாற்றுங்கள். என் கணவர் திடீரென்று இறந்துவிட்டார். வாழும் வழி தெரியாமல் நிர்கதியாய் இருக்கும் எனக்கு, உங்களை விட்டால் வேறு துணையில்லை, என்று பாதங்களில் விழுந்தாள்.

இரக்கப்பட்ட குகை நமசிவாயர், கலங்காதே! அண்ணாமலையார் துணையிருப்பார். உன் கணவர் சிவனருளால் உயிர் பெறுவார். வீட்டுக்கு நிம்மதியாகச் செல். எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என்று ஆறுதல் கூறி வழி அனுப்பினார். அதன்படியே, அவளது கணவரும் உயிர் பெற்று எழுந்தார். குகை நமசிவாயர் வாழ்ந்த காலத்தில், நகித் என்ற கொடியவன் திருவண்ணாமலையில் வசித்து வந்தான். கோவிலுக்கு வரும் பெண்களிடம் அட்டகாசம் செய்தான்.

இதைக்கண்டு கோபமுற்ற குகை நமசிவாயர், ஈசனே! உம் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்து விட்டீரோ?, என்னும் பொருளில் பாடினார். இதன்பின் நகித்தின் முதுகில் ராஜபிளவை என்னும் நோய் உண்டானது. நோயின் வேதனையைத் தாங்க முடியாமல் உயிர் விட்டான். இவ்வாறு பலவித அற்புதங்களைச் குகை நமசிவாயர் செய்தார்.

ஏராளமானவர்களின் நோய்களை தீர்த்துள்ள குகை நமசிவாயர் நடத்திய சித்தாடல்கள் ஏராளம். ஒருதடவை இறந்து போன ஆட்டுக்கு உயிர் கொடுத்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தினார். உடனே சிலர் ஒருவனை செத்தவன் போல நடிக்க செய்து, பாடையில் கட்டி குகை நமசிவாயரிடம் தூக்கிச் சென்றனர். ‘‘சாமீ இவன் செத்துப் போயிட்டான். ஆட்டுக்கு உயிர் கொடுத்தது போல இவனுக்கும் உயிர் கொடுங்கள்’’ என்று கிண்டலாகக் கேட்டனர்.

உடனே குகை நமசிவாயர், ‘‘ஆமா... .... இவன் செத்து போயிட்டான். கொண்டு போய் புதைத்து விடுங்கள்’’ என்றார். இதைக் கேட்டதும் அவர்கள் சிரித்தனர்.

‘‘டேய் எழுந்திருடா... சாமீ பொய் சொல்றாருடா...’’ என்றனர். ஆனால் பாடையில் படுத்து வந்தவன் எழுந்திருக்கவில்லை. உண்மையிலேயே செத்து போய் விட்டான். இந்த சம்பவத்துக்குப் பிறகு திருவண்ணாமலையில் குகை நமசிவாயரை, அனைவரும் பயபக்தியுடன் நடத்தினார்கள்.
குகை நமசிவாயர் மூலம் அண்ணாமலையாரின் புகழ் நாட்டின் நாலாபுறமும் பரவியது. இதனால் அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் இன்றும் உற்சவ காலங்களில் அண்ணாமலையார் வீதி வலம் வரும்போது அவரது தேருக்கு பின்னே குகை நமசிவாயரும், விரூபாட்சித் தேவரும் தனி தனி பல்லக்குகளில் வலம் வருகிறார்கள். ஒருதடவை அண்ணாமலையார், ‘‘குகை நமசிவாயர் வருகிறாரா என்று திரும்பி திரும்பிப் பார்த்து கழுத்து வலிக்கிறது.

எனவே குகை நமசிவாயர் முதலில் செல்லட்டும்’’ என்றாராம். அன்று முதல் உற்சவ வீதி உலாக்களில் குகை நமசிவாயர் தேர் முதலில் செல்வது குறிப்பிடத்தக்கது. குகை நமசிவாயர் மீது அண்ணாமலையார் காட்டிய அன்புக்கு இவையெல்லாம் உதாரணமாக உள்ளன. ஒருதடவை குகை நமசிவாயர் ஜீவசமாதி ஆக நினைத்த போது மேலும் 100 ஆண்டுகள் வா-ழ அண்ணாமலையார் அவருக்கு ஆயுளை நீட்டித்தாராம்.

ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று குகை நமசிவாயர் தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார்.

அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா... எல்லாம் சரிதான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு குகை நமசிவாயருக்கு முதல் வாரிசு பிறந்தது.
ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். அவர் எழுதிய பாடல்களில் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்று மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமச்சிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும்.

மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமச்சிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்கனத்தில் குருபூஜை நடந்து வருகிறது. 500 ஆண்டுகளை கடந்து குகை நமசிவாயருக்கு குருபூஜை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அன்றைய தினத்தில் குகை நமச்சிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். குகை நமசிவாயரின் 18-வது வாரிசுதாரர் தற்போது இந்த ஜீவசமாதியை பராமரித்து வருகிறார்.



அனைவருக்கும் குருவருளும் திருவருளும் கிடைக்க பிரார்த்திக்கின்றோம்.


ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 52 ஆம் ஆண்டு குருபூஜை - 19.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/11/52-19112022.html

 ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022.html

இன்றைய ஆனி மாத மக நட்சத்திரம் - மாணிக்கவாசகர் குரு பூசை பகிர்வு  - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_25.html

வான் கலந்த மாணிக்க வாசக! - மாணிக்கவாசகர் குரு பூசை - 06/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/06072019.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

 எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html

ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் - திருப்பாடகம் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_13.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 51 ஆம் ஆண்டு குருபூஜை - 29.11.2021 - https://tut-temples.blogspot.com/2021/11/51-29112021.html

பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.htm


Friday, November 18, 2022

கும்பமுனியே! தஞ்சம் தாயே!! அகத்தீசா! அபயம் தாயே!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் நம் தளம் சார்பில் அனைத்து அறப்பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கு அருளுதவி, பொருளுதவி செய்து வரும் அனைத்து அன்பர்களுக்கும் முதலில் நன்றி கூறி மகிழ்கின்றோம். ஐப்பசி மாத ஆயில்ய பூஜை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. வழக்கம் போல் பதிவின் முழுமையில் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் தரிசன அருள் நிலையை இணைத்துள்ளோம். நேற்றைய குருநாள் அன்னசேவையாக 22 அன்பர்களுக்கு காலை உணவாக பருப்பு சாதமும், வடையும் குருவருளால் கொடுக்க பணிக்கப்பட்டோம். இன்றைய பதிவில் மீண்டும் அகத்தியம் பற்றி சில துளிகளை பேச உள்ளோம். அகத்தியம் என்றாலே அன்பு..அன்பு என்றாலே சிவம் ..சிவமும் அகத்தியமும் ஒன்று தான் என்று நாம் உணர வேண்டும். இந்த நிலை அடைய நாம் குருவின் பதம் போற்ற வேண்டும். குருவின் பாதம் பற்ற வேண்டும். இதனைத் தான் கீழ்கண்ட பாடலின் மூலம் நாம் உணர்ந்து வருகின்றோம்.


  நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!

 மகான் ரோமரிஷி - 8 

என்று மகான் ரோமரிஷி தனிப்பாடலாக நமக்கு உபதேசம் அளித்துள்ளார். உலகிலேயே ஒப்பற்ற மகானை நாம் குருவாக பெற்றுள்ளோம். ஓராண்டுக்கு மேலாக நம் குருநாதரை ஆயில்ய வழிபாட்டில் பூசித்து வருகின்றோம். புற வழிபாடு நாம் செய்வதன் நோக்கமே நாம் இன்னும் அக வழிபாடு நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்கு தான்.

நெஞ்சார நினைப்பவர்களுக்கு நிழல் போன்று தொடர்ந்து வருபவர் நம் அகத்தியர். குலம் தழைக்க உதவுபவர். இதற்கு தேவையான அருட்செல்வத்தை அள்ளித்தருபவர் இவர்.

நெஞ்சார மனதில் நினைப்பவருக்கு நிழல் போன்று இருப்பவர்.அதாவது நிழல் என்றால் பகலில் மட்டும் தெரியும்.இங்கே இரவு பகல் பாராது, நம்முடனே இருந்து வழி காட்டும் அருட்குரு அகத்தியர்.நம் குலம் தழைக்க, செல்வம் மட்டும் தராமல், அதனோடு சேர்த்து மிக மிக முக்கியமான செல்வமான ஆரோக்கியமும் தருகின்ற அக குரு ஆவார்.இதனை  நாம் தற்போது கண்கூடாக உணர்ந்து அனுபவித்து வருகின்றோம்.அகத்தியரின் நாமம் சொல்ல,சொல்ல நம் அகம் ஒளி பெறுகின்றது.அகம் ஒளிர,ஒளிர புற செயல்கள் மிளிரும் என்பதே ஆன்றோர் வாக்கு. அகத்தில் உள்ள ஈசனை உயிர்ப்பிக்க செய்தால் அகத்தியம் மிளிரும்.அகத்தியம் மிளிர அகத்தியர் அருள் காட்டுவார்.இன்னும் சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்கலாமா?

உள்ளன்போடு அதாவது உண்மை அன்பு கொண்டு ஓம் அகத்தீசாய நம என்று யார் ஒருவர் குருநாதர் ஸ்ரீ அகத்தீசரை நினைத்து நாமஜெபமாகிய பூஜை செய்கிறார்களோ அவர்கள்

            முன் ஜென்மத்தில் செய்த கொடும் பாவங்களாலும்,
            தகுதியில்லா குடும்பத்தில் பிறந்ததாலும்,
            தீராத நோயாலும்,
            தீராத கடன் சுமையாலும்,
            புலால் உண்ணுதல்,
            மது அருந்துதல்,
            சூதாடுதல் போன்ற தீய பழக்கத்தாலும் மற்றும்
            தீராத பகையாலும்,
            குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமையாலும்,
            சொற்கேளா பிள்ளைகளாலும்,
            தகுதி இல்லா நட்பாலும்,
            தீராத கவலையுமாகிய கொடிய வெப்பங்கள்

நம்மை தாக்காது இருக்க குளிர்ச்சி பொருந்திய நிழல் போல் ஆசான் அகத்தீசர் இருந்து நம்மை காப்பாற்றுவார்.தடைபடாமல் தொடர்ந்து  ஆசான் அகத்தீசரை பூஜை செய்து வந்தால் தனக்கும், தன் சந்ததியினருக்கும், வறுமையில்லா வாழ்வும், செல்வமும் தந்து, காத்து அருள்வார். வளப்பம் பொருந்தியதும், செந்நெல் விளையக் கூடியதுமாகிய மிகத் தொன்மை வாய்ந்த சிதம்பரத்தில் எழுந்தருளிய தில்லைவாழ் அம்பலவாணரின் கால் சிலம்பொலிபோல் இனிமை உடையதாக ஆசான் அகத்தீசரின் பாடல்கள் அத்தனையும் இருக்கும். மேலும் ஆசான் அகத்தீசரின் பாடல்கள் அத்தனையும் பிறவிப்பிணிக்கு மருந்தாக அமையும்.ஆசான் அகத்தீசரை தொடர்ந்து பூஜித்தால் முன் ஜென்மத்தில் அறியாமை காரணமாக செய்த பல பாவங்களும், சாபங்களும் நீங்கி நல்வினை பெருகும். தொடர்ந்து ஆசான் அகத்தீசரை பூஜித்தால் அவரின் ஆசானாகிய சுப்ரமணியரின் வேல்படை நமக்கு உற்ற துணையாக இருக்கும்.ஒரு ஜென்மத்தில் ஆசான் அகத்தீசரை பூஜித்து வந்தால் நாம் எடுக்கும் பிறவிகள் தோறும் உற்ற துணையாக இருந்து ஆசான் அகத்தீசர் நம்மைக் காத்து  இரட்சிப்பார். எனவே ஆசான் அகத்தீசரை பூஜித்து வருகின்றவர்களுக்கு துன்பங்கள் வரும்பொழுதெல்லாம் அஞ்சேல்! அஞ்சேல்!! என்று அருள் செய்யும் ஆற்றல் ஆசான் அகத்தீசருக்கு உண்டு.


மகான் கொங்கணவர் பாடலில் இருந்து 

 தான் என்ற கொடும்பாவம் தீர்க்கும் ஆசான்
தர்மத்தின் வழி சொல்லிக் கருணை வைப்பான்
ஊன் என்ற மந்திரமே உபதேசித்து
உண்மையுடன் சுழி முனையிலே இருக்கும் என்று
கோன் என்று சிவ ரூபம் கண்ணில் காட்டி
கோபமென்ற முனை போக்கி ஆசை போக்கி
தான் என்ற ஆணவங்கள் தன்னைப் போக்கி
நாடுவார் குருநாதன் மோட்சம் தானே

அகத்தியர் பற்றி திருமூலர் கூறியது....

காலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு
கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து
ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று
ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே...

தேவே நின் திருவடிகள் மூலன் இப்போ
தெரிவிப்பேன் குருமுனியின் ஆசியோடு
கூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி
குருமுனியே திருமுனியே அறிந்தவர்க்கு...

அறிந்தவர்க்கு அறக்கடலாய் விளங்குவாரே
அருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு
குறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன்
குந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்...

கும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை
குகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார்
எம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம்
ஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி...

கட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம்
கடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம்
சட்டிசுட வேண்டுமென்றால் கும்பனைக்கேள்
சாகாவரம் வேண்டுமென்றால் கும்பனைக்கேள்...

கும்பனைக்கேள் குடும்பமுடன் ஞானம் சொல்வார்
கோடிலக்கம் வேண்டுமா கும்பனைக்கேள்
எம்மானும் கும்பனே எல்லோர்க்கும் தான்
எங்களுக்கு வாசி தந்த வாசி கும்பன்...

கும்பன் தான் ஔடதமும் நவக்கோளும் தான்
கும்பன் தான் குவலயமே வேறு ஏது
கும்பன் என்றால் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம்
குறுகி நின்று நடு நடுங்கும் பராக்கிரமங்கள்...

பராக்கிரமம் இகபரமும் சொல்வார் கும்பன்
பாடிட்டால் மாற்றம் சொல்ல எவனும் இல்லை
பராக்கிரமும் வாளையைப் போல் அளிப்பார் கும்பன்
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்...

கும்பன் சொன்னால் குளவிகூட குதிரையாகும்
குருமுனிக்கு கிரியாவும் கடுகாய் நிற்கும்
கும்பனையே வணங்கியோர்க்கு குறைகளண்டா
குறையில்லா காப்பாக இருப்பார் என்றும்!

புலிப்பாணி சித்தர் பாடலாக 

ஆசியதும் கூறுகின்ற என் குருநாதா
அடிபணிந்து புலிப்பாணி உரைப்பேனிப்போ

பாசமுடன் அகத்தியனின் அருளை வேண்டி
பகலிரவாய் நாமத்தை செபித்துக் கொண்டு
செபித்து திரிகின்ற மக்கள் நீங்கள்
சிறப்புடன் இப்புவியில் வாழ்வீரப்பா
தப்பில்லா கலியுகத்தில் உயர்ந்து வாழ்வீர்
தவமுனி அகத்தியனை நினைத்துவிட்டால்
நினைத்தாலே ஈரேழு சென்ம பாவம்
நீங்கிடுமே என்றுமே போகர் சொன்னார்

மகான் திருவள்ளுவர் பாடலில் 

நினைவுகொண்ட முனிவரெல்லாம் தவமிருந்து
நானிலத்தில் தவம் செய்து அகத்தியம் கண்டார்
அகத்தியத்தை கண்டதொரு முனிவரெல்லாம்
அகிலத்தில் ரிஷிகளாய் வாழ்வார் இன்று
ஜெகத்திலே மாந்தர்கள் அகத்தியத்தை
சிறப்புடன் பூசித்தால் தேவராவார்
தேவராவார் என்றுமே வள்ளுவர் சொன்னார்

அடுத்து சிவ வாக்கியர் 

 தெரிந்திட்ட மாந்தர்கள் பூசை செய்து
பலவினைகள் நீங்கியே பல்லாண்டு வாழ்ந்தார்
பாருலகில் பலசிறப்பு அகத்திய நாமம்
அகத்திய நாமமதும் செபித்து நின்றால்
அகிலத்தில் வினையில்லா சேய் பிறக்கும்
புகழுடன் சிவவாக்கியர் கூறி நின்றார்

 பல்லாயிரம் ஆண்டு காலம் வாழ்வதற்கு
வாழ்வதற்கு அகத்திய நாமம் பெருமருந்தாகும்
விளக்கமுடன் கூறினார் ஔவையார் தானும்

பாம்பாட்டி சித்தர் 

தாழ்வில்லா அகத்தியரை வணங்கி நின்றால்
தரணியிலே மரணமில்லா வாழ்வார் என்று
என்றுமே கூறி நின்றார் பாம்பாட்டி சித்தர்

புலிப்பாணி சித்தர் 

இப்படியே சித்தர்கள் முனிவர்களெல்லாம்
நான்கு யுகங்களாய் அகத்தியர் மகிமை
நல்லதை கூறியே யுகம் போற்ற வாழ்ந்தார்

மச்சமுனி சித்தர் 

போற்றிடவே  மும்மூர்த்தி தேவர்களும்
புனிதமுள்ள சித்தர்களும் ரிஷிகளெல்லாம்
குற்றமில்லா கணபதியும் முருகனோடு
கண்டதொரு தேவதைகள் கணங்களோடு

கணங்களுடன் பூதங்கள் நவக்கோள்கள்
குவலயத்தில் காண்பதொரு நிறங்களெல்லாம்
மணம் வீசும் நறுமணங்கள் திசைகள் பத்தும்
முழுமையும் இவ்வுலகம் அகத்தியம் என்று
என்றுமே கூறிட்டார் மச்சமுனி நூலும்

மீண்டும் புலிப்பாணி சித்தர் வாயிலாக 

இவ்வளவு அற்புதங்கள் ஒன்றென்றால் அகத்திய நாமம்
என்றென்றும் நாமத்தை செபித்து விட்டால்
செபித்தோர் முதல் இலட்ச மக்கள் பலனடைவார்

அடைந்திடும் நாமத்தை உலகோர்கெழுதி
அறிய செய்வோர் அகத்தியருக்கும் சேயுமாவார்
எடுத்துரைக்க இதுகாலம் போராதப்பா
இதுக்கொரு விதியுண்டு சித்தர் கேட்க

சித்தர்கட்கு எடுத்துரைப்போம் அறிவீர்கள் நீங்கள்
சிவபெருமான் பார்வதியும் மகிழ்ந்துமிப்போ
ஒதிடவே புலிபாணி ஓடிவந்தேன்
உலகில் நீங்கள் உயர் செல்வ நிதிகளோடு

நிதிகளுடன் அதிர்ஷ்டங்கள் பெற்று வாழ
நிதி தெய்வம் இலக்குமியை வணங்கியாசி
ஒதிடவே உயர் ஞானம் கல்வி காண
உலகிலே சரஸ்வதியை வணங்கி ஆசி

ஆசியதுவுடன் பார்வதியை போற்றுகிறேன்
அருள் பொருள் இன்பமதும் நிறைவு காண
பாசமுடன் தினங்காத்து நல்வழி காட்ட
பரமசிவன் அருள் முனிவர் அகத்தியர் போற்றி

போற்றியே வணங்குகின்றேன் புலிப்பாணியிப்போ
புவிதனிலே அகத்தியத்தை வணங்கிவிட்டால்
நிறைவுபெற்ற மரணமில்லா வாழ்வடைவீர்
நினைத்தவண்ணம் நிதி செல்வம் குன்றா வாழ்வு

வாழ்வதனில் உலகமுள்ள காலம்மட்டும்
வாழ்ந்திடும் உங்கள் குடி செழித்து நன்றாய்
அழகுபட ஆனந்தமாய் வாழ்வீர் என்றும்


இந்த பாடல்களையெல்லாம் பார்க்கும் போது எப்பிறவியில் நாம் செய்த புண்ணியம் நம்மை நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் நோக்கி கொண்டு வந்து உள்ளது. இதற்கே நாம் நாம் நம் குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானுக்கு கோடான கோடி நன்றிகளை இங்கே சமர்பிப்போம். 
என்னை நம்பியவர்களை அகத்தியன் கைவிட்டதாக சரித்திரம் இல்லை!!!!! இந்த ஒரு வாசகம் அகத்தியர் அடியவர்களுக்கு திரு வாசகம் தான்!!!!

கர்ம வினைகளின் படியோ கோள்களின் சாராம்சத்தின் படியோ மலை போல வரும் துன்பங்கள் கூட அகத்தியன் பெயரைச் சொன்னால் பனி போல விலகி ஓடும் இது நிதர்சனமான உண்மை!!!!

ஸ்ரீராமன், ஸ்ரீ கிருஷ்ணன், சபரிநாதன் ஐயப்பன், முருகன் முதலான இறை மனித வடிவம் எடுத்து வரும் பொழுது உபதேசங்கள் செய்து ஒவ்வொரு சூழ்நிலையிலும் உடன் இருந்து வழிநடத்தியவர் நம் குருநாதர் அகத்திய பெருமான்!!!! 

சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தனாய் இருந்து கொண்டு வழிகாட்டியும் சப்தரிஷிகளுக்கும் சர்வ நாயகனாய் இருந்து சகலமும் செய்து கொடுத்தும்!!!

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முதல்வனாக இருந்து முனைப்பாக இருந்து வழிநடத்தி சென்றும்
கரிகால் சோழன்!!! ராஜராஜ சோழன்!!! ராஜேந்திர சோழன்!!! பாண்டியன் நெடுஞ்செழியன்!! மகேந்திர வர்ம பல்லவன்!! விக்ரமாதித்தன்!! சிவாஜி!! போன்ற மன்னாதி மன்னர்களுக்கும் நல் வழிகாட்டியாக இருந்தும். .... இந்த பிரபஞ்சத்தில் நவ கோள்களையும் அண்ட சராசரங்களையும் யுக  யுகங்களாக!!! தன் கண்ணசைவில் காத்து ரக்ஷித்து வரும் நம் குருநாதர் அகத்திய பெருமான்... 

தன்னை வணங்கிக் கொண்டு தன்னையே நம்பி வரும் மனிதர்கள் நம் மீதும் பெருங்கருணை இருக்கின்றது!!!! அப்பனே!!! அம்மையே!!! என்று அன்பாக அழைத்துக் கொண்டு கருணை கடலாக வாழும் வழிமுறைகளை காட்டிக் கொண்டு நமக்கு ஒரு துன்பம் என்றால் உடனே வந்து உடனிருந்து காத்தருள்வார் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான்.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? நம் அகத்தை தூய்மை செய்து தினமும் குருநாதரின் உபதேசத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதனைத்தான் தான் திருமூல தெய்வம் முதல் படியாக தெளிவு குருவின் திருமேனி காண்டல் என்று உபதேசம் செய்கின்றார். நாம் அனைவரும் குருவின் திருமேனியை முதலில் புறத்தில் பார்த்து பார்த்து பழக வேண்டும். இது புறப் பூசையாகவும் அமையும். பின்னர் இந்த நிலையில் இருந்து அகப்பூசையாக குருவின் திருமேனி காண வேண்டும். இதற்கும் நாம ஜெபமாக ஓம் அகத்தீசா! ஓம் அகத்தீசா!! கும்பமுனியே! தஞ்சம் தாயே!! அகத்தீசா! அபயம் தாயே!! என்று மனதில் இருத்த வேண்டும்.

இந்த நிலையே சரணாகதி நோக்கி நாம் செல்வதற்கான வழி ஆகும். முதலில் நம் மனதை அன்பால் நிரப்பி, குருநாதரின் திருமேனி கண்டு கண்டு தெளிவு பெற முயற்சிப்போமாக! இதனைத் தான் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகஸ்தியர் ஆயில்ய பூசையில் நாம் கண்டு வருகின்றோம். இன்னும் நாமும் புறப்பூசையில் தான் நிற்கின்றோம். இம்மாத குருநாதர் தரிசனத்தில் மீண்டும் மீண்டும் பரிபூரண சரணாகதி அடைய நாம் பிரார்த்தனை செய்வோமாக!



குரு பக்தி செய்வோம். குறைவின்றி வாழ குருவருள் நம்மை வழிநடத்திட வேண்டி பிரார்த்திக்கின்றோம்.எண்ணும் எண்ணம் யாவிலும் அன்பை நிறைப்போம். இது ஒன்றே நம்மை அடுத்த நிலைக்கு இட்டு செல்லும். அன்பே அகத்துள் கொண்டால் சத்தியம் பிறக்கும். சத்தியம் பிறந்து விட்டால் அகத்தியம் மிளிரும். அகத்தியம் மிளிர்ந்தால் ஜெயம் தானே!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

சத்தியமே அகத்தியம்! அகத்தியமே ஜெயம்!!  - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_25.html

ஜெய ஜெய அகஸ்தீஸ்வரா! நமோ நம!  - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post.html

அகரம் ஸ்ரீ உலோபமுத்ரா உடனுறை ஞான அகஸ்தீஷ்வர மூர்த்தி திருக்கோயில் - மஹா கும்பாபிஷேகம் - 11,12,13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/111213072022.html

குரு பூர்ணிமா (16/7/2018) சிறப்புப் பதிவு (2) - https://tut-temples.blogspot.com/2019/07/1572018-2.html

ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - 24.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/24062021.html

அருணகிரிநாதர் குரு பூஜை - பௌர்ணமி திதியோடு கூடிய ஆனி மூலம் - 04.07 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/0407-2020.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_4.html

ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்... - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_4.html

பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_7.html

 ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/09/38.html

ஒருவருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? - குரு பூர்ணிமா சிறப்பு பதிவு  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_54.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

அந்தநாள் >> இந்த வருடம் - சுபகிருது வருஷம் - 2022-23 - https://tut-temples.blogspot.com/2022/04/2022-23_30.html

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html