"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 12, 2021

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய கார்த்திகை மாத உத்திரட்டாதி வழிபாடான கோடகநல்லூர் இரண்டாம் வழிபாடு நேற்று 12.12.2021 அன்று மிக மிக சிறப்பாக நடைபெற்றது. இன்னும் நம் மனம் கோடகநல்லூர் திருத்தலத்தில் தான் இருக்கின்றது. நேற்றைய தரிசனத்தில் ஸ்ரீ பெரியபிரான் தரிசனம் கண்டு மனம்,மொழி, மெய்யால் உருகினோம். இவற்றை தனிப்பதிவில் விரைவில் காண குருவிடம் வேண்டி, இன்றைய பதிவில் கோடகநல்லூர் இரண்டாம் அபிஷேக பூசை! நடைபெற்ற நிகழ்வுகளை இங்கே அறிய தருகின்றோம்.

அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை சிறப்பாக நடைபெற பொருளுதவி செய்த அணைவருக்கும், அருளுதவியாக பூஜை சாமான்கள் ஏற்பாடு, அபிஷேகத்தில் உதவுதல், பிரசாதம் வழங்குதல் போன்ற அனைத்து நிகழ்விலும் உடலுழைப்பை நல்கிய அனைவருக்கும் , நம் தளம்( தேடல் உள்ள தேனீக்கள் - TUT குழு) சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இத்தகு வழிபாட்டை நமக்கு அருளி, வழிகாட்டிய சித்தன் அருள் வலைத்தளத்திற்கு, திரு. அக்னிலிங்கம் ஐயா அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்து இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம். அனைத்து அகத்தியர் அடியார்களின் பாதம் பணிந்து நன்றி கூறுகின்றோம்.


நேற்று 12.12.2021 (ஞாயிற்று கிழமை), உத்திரட்டாதி நட்சத்திரம், நவமி திதி அன்று நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் உத்தரவின் பேரில், அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, லோகஷேமத்துக்காக, அகத்தியப்பெருமான் ஸ்ரீ நீளா பூமி சமேத ப்ரஹன்மாதாவப் பெருமாளுக்கு, அபிஷேக ஆராதனைகளை செய்கிற நாள்.


இன்றைய பூசையை மூன்றாக பிரித்து அகத்தியர் அடியவர்கள் குழு நடத்துகிறது.

1. உழவாரப்பணி 
2. தாமிரபரணி தாய்க்கு மரியாதை செய்வித்தல் 
3. பெருமாளுக்கும் தாயாருக்கும் அகத்தியப்பெருமான் செய்கிற அபிஷேக பூஜை.

இதில் அகத்தியரை பொறுத்தவரை, உழவாரப்பணி மிக முக்கியமானஒன்று. சுத்தம் கோவிலை அடைந்தால், சித்தம் அங்கே கொள்வான் என்று ஒரு சித்தர் மொழி உண்டு. அதற்கேற்ப, அங்கே வந்திருக்கும் அகத்தியர் அடியவர்கள், மிக சிறப்பாக உழவாரப்பணியை செய்துள்ளனர். அனைவருக்கும், அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கமும், நன்றியும் உரித்தாகுக.




தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பித்தல்.




அனைத்து அன்பர்களுக்கும் பிரசாதம் குருவருளால் வழங்கப்பட்டது



அபிஷேக பூஜையை பெருமாள் ஏற்றுக்கொண்டதற்கு சாட்சியாக நல்ல மழை பெய்தது. எல்லாம் அகத்தியர் அருள்.



அபிஷேக பூஜைக்குப்பின் உழவாரப்பணி செய்து சுத்தமாக்கப்பட்ட கோவிலின் உட்புறமும், வெளிப்பிரகாரமும்!






ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment