"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 21, 2021

செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை - மார்கழி ஆயில்ய வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அகத்தியமே சத்தியம். சத்தியமே அகத்தியம். ஆம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற ஈசனை விழிக்க செய்வதே ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டின் நோக்கம் ஆகும். இது சொல்வதற்கு மிக எளிதாக தோன்றும். ஆனால் நாம் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல, ஸ்ரீ அகத்தியர் காட்டும் வழி ஞானம் ஒன்றே ஆகும். ஆனால் இந்த ஞானம் எளிதாக வந்து விடுமா என்ன? நாம் என்ன அவ்வளவு புண்ணியவான்களா? எத்தனை பிறவி? எவ்வளவு பாவ வினைகள்? இதனைத்தான் இந்தப் பிறவியில் கடைபிடித்து வருகின்றோம். இங்கே மீண்டும் மீண்டும் பாவம் அல்லவா சேர்த்து வருகின்றோம். இந்த பாவ வினைகளை உடனே அறுந்து விடுமா என்ன? இதற்கு தான் எடுத்த உடன் ஞானம் என்று கூறாமல் பக்தி,கோயில்,வழிபாடு, அன்னதானம் என்றெல்லாம் நம்மை வழிநடத்தி வருகின்றார்கள். இந்த வழியில் நாம் அகத்தியர் வழிபாட்டில் இருந்து வரும் போது சுமார் 1 ஆண்டுக்கு முன்னர் செங்கல்பட்டில் ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெறலாம் என்று நமக்கு கூறினார்கள். ஆனால் அந்த தரிசனம், அனுபவம் இந்த ஆண்டில் நமக்கு கிட்டியது. நம்மை இன்னும் தான தர்மம் நோக்கி செங்கல்பட்டு அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை வழிநடத்தி வருகின்றார்கள்.

அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபையில் நாளை மார்கழி மாத ஆயில்ய வழிபாடு கொண்டாட இருக்கின்றார்கள். அழைப்பிதழை கீழே பகிர்ந்துள்ளோம்.


முதன்முதலாக நானும், நம் நண்பர் சத்யராஜும் சென்றோம். அங்கு சென்று பார்த்த பின்னர் நமக்கு வெகுவாக அகத்தியர் சன்மார்க்க ஞான சபை பிடித்து விட்டது. இங்கு முழுதும் அகத்தியருக்கு வழிபாடும், அன்னதானமும் செய்து வருகின்றார்கள். இது தானே நம் குருநாதர் காட்டும் வழி . இதற்கு தான் நாம் விழி மேல் வைத்து காத்திருந்தோம் என்று புரிந்தது.

இங்கும் விநாயகர் பிரதானமாக அருள்பாலிக்கின்றார். மேலும் இங்கே அகத்திய பெருமான் இருக்கின்றார். அன்றைய தினம் யாம் பெற்ற அருள்நிலைகளை இவ்விடத்து தருகின்றோம்.

                                       

முதலில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் தரிசனம் பெற்றோம்.




இது தான் விநாயகிப் பெருமான் சன்னிதி . அதற்கு வலப்புறமாக நம் குருநாதர் தரிசனம் பெற முடியும். இது போல் தான் கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தரிசனமும் உள்ளது. மேலும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலய தரிசனத்தில் காணலாம். திரு.பூங்காவனம் ஐயா அவர்களும் அகத்திய அடியார்களும் இணைந்து அகத்தியர் சன்மார்க்க ஞான சபை நிறுவி தொண்டுகளை செய்து வருகின்றார்கள். இந்த தொற்றுக்காலத்தில் இவர்களின் சேவை அளப்பரிய ஒன்றாகும்.

தங்களின் பார்வைக்கு செங்கற்பட்டு அகத்தீசர் ஞான சபையில் அன்பர்களுக்கு உணவு வழங்கப்பட்டது தானம் செய்த அனைத்து உள்ளங்களும் வாழ்க வாழ்க.






மேலும் சில காட்சிகள் தங்கள் பார்வைக்கு வழங்குகின்றோம்.







மேலே நீங்கள் காணும் சிவப்பு நிற உடை அணிந்து உள்ள அடியார் தான் திரு.பூங்காவனம் ஆவார். பூங்காவனம் ஐயா அவர்கள் ஸ்ரீ அகத்திய பெருமான் வழிபாட்டிற்கு வந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். கேட்கவே ஆனந்தமாக இருந்தது. அதன் பின்னர் இரண்டு முறை அங்கு சென்று வந்தோம். மேலும் இவர்கள் செங்கல்பட்டு அருகில் இருங்குன்றம்பள்ளியில்  சத்தியஞானசபை நிறுவி அங்கும் சேவை செய்து வருகின்றார்கள். இங்கே ஜோதி வழிபாடும், அன்னசேவையும் நடைபெற்று வருகின்றது. முதல் முறை நாங்கள் சென்ற போது இருங்குன்றம்பள்ளி சத்தியஞானசபை சென்றும் தரிசனம் செய்யும் வாய்ப்பும் கிடைத்தது. ஓரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல் அன்றைய தினம் எங்களுக்கு அகத்தியம் பற்றி உணர்த்தப்பட்டது.









செங்கற்பட்டு இருங்குன்றம் பள்ளியில் ஜோதிவழிபாடு செய்து சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும்.உணவு வழங்கப்பட்டது.







இவர்களின் தொண்டிலும் நம் தேடல் உள்ள தேனீக்களாய் -TUT குழு சார்பில் அவ்வப்போது இணைந்து வருகின்றோம். இனி விசயத்திற்கு வருவோம்.அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை என்று பேசும்போது ஞானம் பற்றி பேசாது இருந்தால் இந்தப் பதிவு எங்கோ தொக்கி நிற்பது போல் தோன்றுகின்றது. இதனை சரி செய்யும் பொருட்டு அகத்தியர் வாக்கு ஒன்றைத் தருகின்றோம்.




ஒரு முறை படித்தால் லேசாக தான் புரியும். மீண்டும் மீண்டும் படித்தால் தான் குருநாதர் சொல்கின்ற மெய், நம் மெய்யில் உணரப்படும். பொதிகைவாசன் தரிசனமும் இங்கே நமக்கு கிடைத்துள்ளது. குருநாதர் அருளால் சென்றா ஆண்டில் டிசம்பர் 25,26,27 ல் பொதிகை சென்று தரிசித்தது இங்கே நினைவுகூரத்தக்கது. இந்த ஆண்டில் அதே தேதியில் திருஅண்ணாமலை நம் குழு அன்பர்களோடு  சென்று  வந்தோம். குருநாதர் காட்டுகின்ற வழியில் பொதிகாசலம், அருணாச்சலம் சென்று வந்தது இன்னும் நம் மனதில் கலந்து உள்ளது. விரைவில் பொதிகாசலம் தரிசனம் பெறுவோம் என்று சென்ற ஆண்டில் கூறி இருந்தோம். குருவருளால் பொதிகை யாத்திரை 2021 ஆம் ஆண்டில் ஏப்ரல் 2,3,4 தேதியில் நடைபெற்றது.




ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அத்தாளநல்லூர் ஸ்ரீ அகத்தியர் மகா ஆயில்ய இரண்டாம் ஆண்டு திருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/blog-post.html

 குருவடி சரணம் - தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_21.html

 தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_19.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html


பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

 வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

No comments:

Post a Comment