"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, March 30, 2021

அம்மையே...- காரைக்கால் அம்மையார் குருபூஜை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்று மாலை 3 மணி முதல் இன்று மதியம் 2 மணி வரை பங்குனி  சுவாதி நட்சத்திரம் ஆகும். இன்றைய பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தில் காரைக்கால் அம்மையார் குருபூஜை கொண்டாடப்பட்டு வருகின்றது.சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்டவர். இவருக்கு தனிக்கோயில் காரைக்காலில் உள்ளது.இறைவனின் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தினை கொண்டவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியே பிரகாரத்தில் இருப்பர்.அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.திருவாலங்காட்டில் இவர்  தங்கியமையால், ஞானசம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார்.அம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சிறப்பிக்கப்படுகிறது என்பது போன்ற பல சிறப்புகளை கொண்ட அம்மையின் குருபூசை இன்று. பங்குனி சுவாதி நட்சத்திரமான இன்று  "பேயார்க்கும் அடியேன்"  என போற்றப்படும்  காரைக்கால் அம்மையாரை இன்று நாம் தொழ காத்திருக்கின்றோம்.




காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார்.கயிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய இரு மாம்பழங்களில் ஒன்றினைச் சிவனடியாருக்குப் படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினைக் கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனைச் சரணடைந்தார்.

இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாகப் பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார்.இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.

இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது.

வரலாற்றில் காரைவனம் என்றழைக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்தில், வணிகர்களின் தலைவராக இருந்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு காரைக்கால் அம்மையார் என்கிற புனிதவதியார் மகளாகப் பிறந்தார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்ட அம்மையார், சிறுவயதில்  இருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இவரை, காரைக் காலை அடுத்த நாகைப்பட்டினத்தில் உள்ள நீதிபதி ஒருவரின் மகனான பரமதத்தர் என்ற வணிகருக்கு மணமுடித்து கொடுத்தனர். ஒரே மகள் என்பதால், காரைக்காலிலேயே வணிகம் செய்து, வசிக்க வழிவகை செய்தனர்.

 ஒருசமயம் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது, மாங்கனி வியாபாரி ஒருவர், தனது வீட்டுத்தோட்டத்தில் காய்த்த இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து பரமத்தத்தரிடம் கொடுத்தார். அக்கனிகளை பெற்ற பரமதத்தர், அதனை தன் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து, அம்மையாரின் சிவபக்தியை சோதிக்கும் பொருட்டு, அம்மையாரின் வீட்டிற்கு சிவபெருமான் சிவனடியார் வேடத்தில் உணவுவேண்டி வந்தார்.

அவரை வரவேற்று தயிர்கலந்த அன்னம் படைத்து, அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். அதனை உண்ட சிவனடியார் அம்மையாரை வாழ்த்திச் சென்றார். பின்னர், மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தருக்கு பல வகை பதார்த்தங்களுடன் அன்னம் பரிமாறிய அம்மையார், மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.

மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, தன் கொடுத்தனுப்பிய மற்றொரு மாங்கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தர். அம்மையார் செய்வதறியாது திகைத்து மற்றொரு அறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அப்போது, மேலிருந்து அம்மையார் கையில் ஒரு மாங்கனி வந்து தங்கியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனை கணவருக்கு அதனை படைத்தார்.

முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே சந்தேகமடைந்த பரமதத்தர், இது ஏது? என்றார். அம்மையார் நடந்ததை கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தர் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி மேலிருந்து அம்மையார் கையில் வந்து தங்கி, பிறகு மறைந்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தர், நீ மனிதப்பிறவி இல்லை. தெய்வப்பெண், உன்னுடன் நான் இனி வாழ்தல் சரியாகாது என்று கூறி, அம்மையாரை விட்டு பிரிந்து, வாணிபம் செய்ய பாண்டிய நாடு சென்றார்.

பின்னர் பரமதத்தர் பாண்டிய நாடான மதுரை மாநகர் சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்து வந்தார். சிலகாலம் கழித்து அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அம்மையாரின் திருப்பெயரான புனிதவதியார் என்ற பெயரையே வைத்தார். பரமதத்தர் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாடு சென்றனர். அம்மையாரை கண்ட பரமதத்தர், அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்தார். கணவர் தன் காலில் விழுந்ததை ஏற்க முடியாத அம்மையார், தனது அழகுமேனி அழிந்து, பேய் வடிவத்தை வழங்குமாறு இறைவனிடம் வேண்டி பெற்றார்.

திருப்பதிகம்

தொடர்ந்து, அம்மையார் இறைவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் நடந்துச் சென்றார். இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார் “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு அருளிய இறைவன் தன் திருவடிக் கீழ் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருக்கலானார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் 4 நாட்களும், தொடர்ந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் 26 நாட்களும் என ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.


அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் அம்மையார்

அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக் கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். காரணம், பிரிந்து சென்ற கணவரை பாண்டிய நாட்டுக்கு அம்மையார் தேடிச்செல்லும்போது, கணவர் குடும்பத்தோடு அம்மையார் காலில் விழுந்ததும், மனம் வெதும்பிய அம்மையார், தனக்கு இந்த அழகுமேனி வேண்டாம், பேய் உருவம் வேண்டும் என்று இறைவனிடம் வேண்டியதும், இறைவன் அம்மையார் வேண்டியபடி செய்தார்.

பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடிய படி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். இறைவன் இருக்கும் இடம் என்பதால், கால் வைக்க மனம் ஒப்பாமல், தலையாலேயே அம்மையார் நடந்து மலை உச்சிக்கு சென்று இறைவனை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், அம்மையே அமர்க! என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.

மாங்கனியின் மகிமை

முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சாமிக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாத்தி வழிபடும் பக்தர்கள், சாமி வீதிஉலாவை தொடர்ந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர். முக்கியமாக இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



அமுது படையலில் தயிர் சாதம்

உலகிலேயே சிவபெருமான் அமுது உண்ட ஒரே இடம் காரைக்கால் அம்மையார் எனும் புனிதவதியார் இல்லத்தில் மட்டுமே. சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி செல்வார். சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன், சிவபெருமானுக்கு பறிமாறுவார். எனவேதான் மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதிஉலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு, மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர் கள் பலர் சாமி ஊர்வலத்தின் போது, மோர், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்கி வருகின்றனர்.         

எழுதியுள்ள நூல்கள்

காரைக்கால் அம்மையார் பதினொராம் திருமுறையுள் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பனுவல்களை பாடியுள்ளார். பதினொராம் திருமுறையுள் நான்கு பனுவல்கள் உள்ளன.


  • திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 1 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
  • திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2 – 11 படல்கள் (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
  • திருவிரட்டை மணிமாலை – 20 பாடல்கள்
  • அற்புதத் திருவந்தாதி – 101 பாடல்கள்


தேவார காலத்திற்கு முன்பே இசைத்தமிழால் சிவபெருமானை பாடியவர் என்பதால் இசைத்தமிழின் அன்னை என்று அறியப்படுகிறார். இவருடையப் பதிக முறையைப் பின்பற்றியே தேவார திருப்பதிகங்கள் பாடப்பட்டன.





காரைக்கால் அம்மையார் பாடிய இந்த பதிக முறையே முதன் முதலாகப் பாடப்பெற்றதாகும்.அதனால் இவை மூத்த பதிகங்கள் என்றும், இறைவனை பதிக முறையில் பாடியமையால் திருப்பதிகம் என்றும் அழைக்கப்படுகிறது. திருவாலங்காட்டில் இறைவன் ஆடியதை பாடியமையால், இவை அனைத்தும் சேர்த்து திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.

அற்புதத் திருவந்தாதி

அற்புதத் திருவந்தாதி என்பது சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும்.இந்நூலே அந்தாதி முறையில் பாடப்பெற்ற முதல் நூலாகும். இந்நூலுக்கு ஆதி அந்தாதி என்றப் பெயரும், திருவந்ததாதி என்றும் அழைக்கப்பெற்றுள்ளது.
திருவிரட்டைமணிமாலை

திருவிரட்டைமணிமாலை என்பது இரட்டை மணிமாலையைச் சேர்ந்த நூலாகும்.இந்நூலினை காரைக்கால் அம்மையார் அற்புதத் திருவந்ததாதி நூலுக்குப் பிறகு படைத்துள்ளார்.இந்நூலில் சிவபெருமானின் சிறப்புகளை புகழ்ந்து காரைக்கால் அம்மையார் எழுதியுள்ளார்.


புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில் அமைந்துள்ளது. இதனை காரைக்கால் அம்மையார் கோயில் என அழைக்கின்றனர்.அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சன்னதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய திருநாளில் நாம் அம்மையாரின் மூத்த திருப்பதிகம் படிக்க உள்ளோம்.
                               




பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

அம்மையே.....

மீண்டும் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

அம்மையே.... - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_37.html

கண்களுக்கு விருந்தாக! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_39.html

பங்குனி உத்திரம் - கந்த குரு கவசம் சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_41.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_23.html

பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறுங்கள் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_5.html

நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html

பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_3.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_15.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html

குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.htm

Friday, March 26, 2021

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே - பங்குனி உத்திரம் சிறப்பு பதிவு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

சார்வரி ஆண்டில் பங்குனி மாதத்தில் இன்று இரவு 7 மணி முதல் உத்திரம் நட்சத்திரம் வருகின்றது. பங்குனி உத்திரம் என்றாலே முருகனருள் முன்னின்று நம்மை வழிநடத்தும். கடந்த மூன்று ஆண்டுகளாக பங்குனி உத்திரம் கொண்டாடி வருகின்றோம்.நம் தளத்தின்  பதிவை தொடர்ந்து படித்து வரும் அன்பர்களுக்கு முருகன் அருள் நம்மை வழிநடத்தி வருவதை உணர முடியும். 2018 ஆம் ஆண்டில் கூடுவாஞ்சேரி வேலி அம்மன் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு செய்தோம். கொஞ்சம் பூக்கள் வாங்கி கொடுத்தோம். அன்று மாலை ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் திருக்கல்யாண தரிசனம் கண்டோம்.

2019 ஆம் ஆண்டில் நதி வழிபாடும், நந்தி வழிபாடும் நமக்கு கிடைத்தது. ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் திருக்கல்யாண தரிசனம் சென்ற ஆண்டில் ஆத்மார்த்தமாக கண்டோம். பின்னர் பாபநாசத்தில் நதி வழிபாடு செய்து, கல்யாண தீர்த்தத்தில் ஸ்ரீ லோபாமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெற்றோம். இவையெல்லாம் வார்த்தைகளில் அடக்க இயலாத அருள் வெளிப்பாடு என்றே சொல்ல வேண்டும்.

சென்ற 2020 ஆம் ஆண்டு முதல்  கொரானா கட்டுப்பாட்டில் நாம் அனைவரும் இருந்து வருகின்றோம். காலையில் வழக்கம் போல் வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்தோம். காலன் அணுகாமல் இருக்க வேலனை பிடிப்போம். எப்படி பிடிப்பது? இதற்குத் தான் நமக்கு கவசங்கள் உள்ளது. ஆம். கந்த ஷஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் மந்திரங்கள் , குமார ஸ்தவம் என பல உண்டு. இவற்றில் கந்த குரு கவசத்தை  நம் தலத்தில் பகிர்ந்தோம்.

உத்திரம் நட்சத்திரம் சித்திரை மாதம் முதல் வந்தாலும் பங்குனி மாத உத்திர நட்சத்திரம் மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்று ஆகும். பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் அனைத்து கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாப்பட்டு வருகின்றது. ஒரே ஒரு இறையின் திருக்கல்யாணம் என்றாலே நமக்கு கொண்டாட்டம் தான். ஆனால் பங்குனி உத்திரம் அன்று முருகன் - தெய்வானை திருமணம், ஸ்ரீராமர் - சீதை திருமணம், சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருமணம், ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் என நாம் காண முடிகின்றது.



பங்குனி உத்திர திருக்கல்யாண தரிசனம் கண்டு அன்றைய தினம் கோயிலில் சேவை செய்வது மிக சிறந்த பரிகாரம் என்று கூட சொல்லலாம். சென்ற ஆண்டு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஆத்மார்த்தமாக கலந்து கொண்டோம். குருவருளால் சென்ற ஆண்டு எமக்கு திருமணம்  குருவருளால் திருச்செந்தூரில் நடைபெற்றது.முருகன் அருள் முன்னின்று நடத்திக் கொண்டு வருவதை கண்கூடாக கண்டு வருகின்றோம். சரி.  பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பற்றிய செய்திகளை இந்தப்பதிவில் காண உள்ளோம்.

தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் நாளை காலை 10 மணி முதல் 06.04.2020 காலை 8 மணி உத்திர நட்சத்திர நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி  இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.

தமிழ் மொழியில் தோய்ந்த பின்பு தான் தமிழ் மாதங்களின் முக்கியத்துவம் நாம் அறிந்து வருகின்றோம். முதலில் ஆங்கிலத்தில் பிறந்த நாள் கொண்டாடி வந்தோம். இரு வருடங்களுக்கு முன்பாக நட்சத்திர பிறந்த நாள் பற்றி அறிந்து, அதனைக் கடைப் பிடித்தோம். அகத்தியர் ஆயில்ய பூசை செய்ய ஆரம்பித்த பின்பு, தமிழ் மாதங்களை பற்றி தெரிந்தோம். ஏதோ பள்ளிக்காலத்தில் சித்திரை,வைகாசி, ஆனி, ஆடி என்று படித்தது. ஆனால் இவை தான் வாழ்வியலுக்கு தேவை என்பது இப்போது தான் நமக்கு தெரிகின்றது. தற்போது நாட்காட்டி என்று பார்க்க ஆரம்பித்தால், தமிழ் நாட்காட்டி தான் பார்த்து வருகின்றோம். மாசி மக சிறப்பாக அறிந்து, பௌர்ணமி ஹோமத் திருவிழாவில் நம் தளம் சார்பாக நம்மால் இயன்ற கைங்கரியம் செய்தோம்.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வழிபாடு, கொண்டாட்டம் என்று தான் உள்ளது. இப்போது தான் நாம் உணரத் தொடங்கி உள்ளோம். 12 மாதங்கள், 12 விதமாக வழிபாடுகள், 12 வித பலகாரங்களை உணவில் சேர்த்து ஆன்மிகத்தோடு ஆரோக்கியமும் வளர்த்தவர்கள் நம் முப்பாட்டன்கள்.சித்தர் பெருமக்கள். இதோ  பங்குனி உத்திரம் சார்ந்து சில கருத்துக்களை இங்கே உங்களோடு பகிர விரும்புகின்றோம்.

 தமிழ்மாதத்தில் நிறைவான மாதமாக வருவது பங்குனி மாதம். பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். இது குடும்ப ஒற்றுமையை உருவாக்கும் புனித மாதமாக அமைகிறது. பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பௌர்ணமியும் சேரும் நாள் என்பதால் பௌர்ணமியின் பலன்களும் கூடுதலாக அமையும் நாளாக அமைகின்றது.

ஒவ்வொரு மாதத்திலும் பௌர்ணமி பல்வேறு சிறப்புகளை அளிக்கிறது. அதில் பங்குனி மாத பௌர்ணமி குடும்ப ஒற்றுமையை உணர்த்தும் நாளாக அமைவதுடன், தமிழ்கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் 'பங்குனி உத்திரம்" தனிச்சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.

பங்குனி உத்திரம் நன்னாளில் இறைவனின் திருமணத்தை கண்டு வணங்குவது அனைத்து நலன்களையும் தரும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு வெகுவிரைவில் திருமண வரம் கிடைப்பதாக நம்பிக்கை. திருமணமானவர்கள் வாழ்வில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் மகிழ்ச்சியான நிலை பெற பங்குனி உத்திரநாளில் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.


இந்த நாளில் மஹாபாரத அர்ஜூனன் பிறந்த தினம் என்பதுடன், அர்ஜூனனுக்காக அவன் மூலம் உலகுக்கு கீதை கிடைத்ததை போற்றும் நாளாகவும் பங்குனி உத்திரம் சிறப்பு பெறுகின்றது.

 கலைமகள் பிரம்மாவை அடைந்த நாள் பங்குனி உத்திரம் என்பதால் இந்நாளில் குழந்தைகள் ஆலயம் சென்று வணங்குவதன் மூலம் கல்வியின் சிறப்பை பெறுவார்கள்.

பங்குனி உத்திரம் அன்று நாம் நம் குலதெய்வங்களை வழிபடுவதன் மூலம் நம்முடைய மூதாதையரின் ஆசியும் நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் நம்முடைய குலம் சிறக்கவும், வாழ்வு சிறப்பாக அமையும்.

இந்நாளில் குறிப்பிடத்தக்க சில நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. அவை


முருகன் - தெய்வானை திருமணம்

 ஸ்ரீராமர் - சீதை திருமணம்

சுந்தரேஸ்வரர் - மீனாட்சி திருமணம்

ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம்

அர்ஜுனன் அவதார நாள்

சபரிமலை ஸ்ரீஐயப்பன் பிறந்தநாள்

ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பித் தந்த திருநாள்


தெய்வீக அற்புதங்கள் பல பெற்ற பங்குனி உத்திர திருநாள் பாவத்தை போக்கும் அற்புத நாளாகவும், பகையை அகற்றும் திருநாளாகவும் திகழ்கிறது.அனைவரும் இந்த நாளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.


 பங்குனி உத்திரம் நாளன்று காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, நீராடி, வீட்டில் விளக்கேற்றி முருகப் பெருமானை வேண்டி பிரார்த்திக்கவும். பின்னர் அருகில் உள்ள வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலுக்கு சென்று தங்கள் பெயரில்,குடும்பத்தார் பெயரில் அர்ச்சனை செய்து விட்டு வழக்கமான பணிகளில் ஈடுபடவும். முடிந்தவர்கள் அன்றைய நாள் விரதம் இருக்கவும். முடியாதவர்கள் ஒரு பொழுது உண்டு மாலை கோயிலுக்கு சென்று முருகனை தரிசிக்கவும்.
எப்படியாவது காலை/மாலை இரு பொழுதும், இல்லையேல் ஒரு பொழுதேனும் கோயில் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்யவும். அன்றைய நாள் அன்ன தானம் போன்ற தானம் செய்வது இன்னும் சிறப்பு.செவ்வாய் தோஷம் காரணமாக திருமணத் தடை உள்ளவர்கள் பங்குனி உத்திரம் அன்று விரதம் இருந்து, விளக்கேற்றி, அன்று நடைபெறும் திருக்கல்யாண காட்சி கண்டு வந்தால் அனைத்து தடைகளும் நீங்கி சுப வாழ்வு அமையும். முருகன் வள்ளி,தெய்வானை என இரு துணை என்று விதண்டாவாதம் பேசாதீர்கள், அந்த நிலை இச்சா சக்தி,கிரியா சக்தி என காட்டவே.
இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம்.


பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு :
  • இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; 
  • காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது;
  •   மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது;
  •   ராமர் சீதையை மணந்தது; 
  • லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; 
  • இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; 
  • திருப்பரங்குன்றத்தில் முருகன் – தெய்வானை திருமணம் நடந்தது; 
  • ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம் நடந்தது; 
  • அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான்.
  •  சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு.
  •  இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.
  •  சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான்.






மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த 
பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம். நாம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் பெற்ற தரிசனக் காட்சிகளை அப்படியே தருகின்றோம்.

ஓம் தாயே போற்றி...





ஓம் ஈசனே போற்றி...





வேலும் மயிலும் சேவலும் துணை. ராஜ அலங்காரத்தில் நம் முருகப் பெருமான் தரிசனம்.







ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 










இதோ..மூத்தோனின் தரிசனம்.



திருமணத் தடை , தாமதம் போன்ற நிலையில் உள்ளோர் பங்குனி உத்திர திருக்கல்யாண தரிசனம் காணுங்கள். உங்களால் முடிந்த கைங்கர்யம் இன்று செய்யுங்கள். விரைவில் அடுத்த ஆண்டுக்குள் நீங்கள் மண வாழ்க்கை பெறுவீர்கள் என்பது குருநாதர் அருள் வாக்கு ஆகும்.

இனி நாளை நடைபெற சில வழிபாட்டு அழைப்பிதழ்களை இங்கே பகிர்கின்றோம்.






ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து  ஈஸ்வரருக்கு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நாள் 28/03/21 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 00 மணிக்கு மேல் 8-30 வரை நடைபெறும்.

அனைத்து சுமங்கலிகளுக்கு திருமாங்கல்ய சரடு வழங்கப்படும்

அனைவரும் வருக உமையொருபாகனின் அருள் பெறுக! அருள் பெறுக!!
தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!


மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம். முருகன் அருள் முன்னின்று நம்மை வழிநடத்திட வேண்டுகின்றோம்.

மீள்பதிவாக:-

பங்குனி உத்திரம் - கந்த குரு கவசம் சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_41.html

 முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_23.html

பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் தரிசனம் பெறுங்கள் - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_5.html

நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html

பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_3.html

Tuesday, March 23, 2021

அன்பே சிவம் ; அன்பே சக்தி; அன்பே அகத்தியம் - பங்குனி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 25.03.2021

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

சார்வரி வருட பங்குனி மாத ஆயில்ய ஆராதனை நாளை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற உள்ளது. அதன் பொருட்டு இன்றைய பதிவில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பற்றி மீண்டும் தொட்டுக்காட்ட விரும்புகின்றோம். ஸ்ரீ அகத்தியர். தமிழின் மூலத்தை கொடுத்தவர்.முருக பெருமானின் அன்பிற்கு பாத்திரமானவர்.அகத்தியர் என்ற பெயரில் ஒவ்வொரு யுகங்களிலும் பலர் வாழ்ந்துள்ளனர் என்பது நமக்கு புதிய செய்தி. தமிழ் உள்ளவரை அகத்தியம் இருக்கும். அகத்தியம் ஒன்றே இந்த கலிகாலத்தில் கடைத்தேற உதவும். அகத்தியம் சத்தியம். சத்தியமே அகத்தியம். என்று சொல்லவேண்டும் என்றால் அகத்தியரை அருட்குருவை மனதில் வைக்க வேண்டும். அன்பே சிவம் என்றால் அன்பே சக்தியும் ஆகும். சிவமும் சக்தியும் இணையும் போது அகத்தியமும் நம்முள் தொட்டு காட்டி அன்பின், அருளின், அகத்தியத்தின் ஊற்றாக பிறக்கும்.

பங்குனி  மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.03.2021

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான சார்வரி  வருடம் பங்குனி  மாதம் 12 ஆம் நாள் 25.03.2021  வியாழக்கிழமை   அன்று ஆயில்ய நட்சத்திரமும், சித்த  யோகமும் கூடிய சுப தினத்தில் காலை  9  மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில்  அருள்பாலிக்கும்  ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு  அபிஷேகம், அலங்காரம் செய்து  ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

நம் குருநாதர் பற்றி பேச வேண்டும் என்றால் நாளெல்லாம் பேசிக் கொண்டே இருக்கலாம். நேற்று ஒரு அன்பர் மீண்டும் ஆயில்ய நட்சத்திர ஆராதனை பற்றி நம்மிடம் கேட்டார். நமக்கு உணர்த்தப்பட்ட செய்திகளை  தருகின்றோம்.

இந்தக்கேள்விக்கு நம் குழுவின் சிலர் இவ்வாறு  பதில் கூறி இருந்தனர்.




நட்சத்திரங்களுக்கு அப்பாட்பட்டவர் அகத்தியப் பெருமான். இந்த மானுடங்களை கடைத்தேற்ற அவரால் வகுக்கப்பட்டது ஆயில்ய பூசை. இந்த பூசையால் பயன்பெற்றோர் ஏராளம்.இது மிக மிக உண்மை..சித்தர்களுக்கு நாளென்பது கிடையாது. நட்சத்திரம் என்பதும் கிடையாது. இவை எல்லம்மா நம் வழிபாட்டிற்காக/ மன மகிழ்ச்சிக்காகவே உள்ளது.அன்றைய தினம் குருவினை சரணடைய ஒரு வாய்ப்பு என்றும் கூட சொல்லலாம். இன்னும் ஆழமாக மனதை உழுதால்,சித்தன் அருள் இவ்வாறு பேசுகின்றது.




உங்கள் எண்ணப்படி, அகத்தியருக்கும், நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். சிவன் அருளினால் அவர் தோன்றினாலும், காலத்துக்குள், ஒரு திதி நடக்கும் பொழுது, ஒரு நட்சத்திரம் ஆளுமையில் உள்ள பொழுது தான் ஒரு ஆத்மா உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது இறைவனிடமிருந்து பிரித்து விடப்பட்டிருக்கும். ஒரு புல்லை கூட முளைக்க வைக்கும் தகுதி இல்லாத மனிதனுக்கு, நாள், தேதி, கிழமை, ஊர், காலம் என வரிசையாக அனைத்தும் இருக்கும் பொழுது, மிக உயர்ந்த நிலையில், குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருக்கு, நட்சத்திரம் கூடவா இருக்காது? இன்னொரு விஷயம் தெரியுமா? பூமியில், இறைவனே அவதாரம் எடுத்தாலும், பூமியின் சட்ட திட்டங்களுக்கு, அவனும் அடிமையாக இருந்துதான் ஆகவேண்டும். உதாரணமாக, கிருஷ்ணர், ராமர் அவதாரங்களை கூறலாம்.



உண்மையாக புரிந்து கொள்பவர்கள், அமைதியாக இருப்பார்கள். வார்த்தைகள் சிதறாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நாளில், சேய்கள் நல்லதை செய்திட, அது உலகத்தின் நன்மைக்கு பலம் கூட்டும். அப்படியாக ஒன்று நடந்து விட்டு போகட்டுமே என்கிற எண்ணத்தில் தான் இதனை பூஜைகள், த்யானம் எல்லாம் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.

 சரி..நாம் இது நாள் வரை அகத்தியரை எப்படி எல்லாம் வழிபட்டு வருகின்றோம். பக்தி மார்க்கம் , தான தர்ம மார்க்கம், கர்மயோக மார்க்கம், ஞானயோக மார்க்கம்  என்று வழிபடலாம். ஆனால் நாம் செய்து வரும் ஆயில்ய பூசையின் என்ன செய்து வருகின்றோம்.  அகத்தியரை உருவமாக பாவித்து மலர்கள் மூலிகைகள் படைத்து அர்ச்சனை செய்து வழிபடுவதுநமக்கு  மிகவும் பிடித்தமானது. இது அகத்தியரை விரும்பும் யாவருக்கும் எளிதில் சாத்தியமானது. பாசமுள்ள அகத்தியமாஹாமுனி இந்த மார்க்ககத்தில் யாவரும் வழிபடுவதை அவர் மிகவும் விரும்புவதை நாம்  உணரலாம்.  நாம் கடந்த பள்ளிப்பருவத்தில் இருக்கும் போது பக்தி மார்க்கத்தை அடிக்கடி ஏளனம் செய்ததுண்டு. அதற்கு  நாம்  கடும் தண்டனை வாங்கியதுண்டு. இந்த கலியுகத்தில் பக்திமார்க்கம் மிகவும் எளிதானது. ஆற்றல் வாய்ந்தது. முதலில் ஆரம்பித்த போது பக்தி மார்க்கத்தில் மட்டும் தான் இருந்தோம்.பின்னர் அப்படியே அது தான/தர்ம மார்க்கம், கர்மயோக  மார்க்கம் நோக்கி நம்மை செம்மைப்படுத்தும்.


நாளைய வழிபாட்டில் கூடுவாஞ்சேரி அருகில் உள்ளவர்கள் நேரில் வந்து கலந்து கொள்ளவும். இயலாத அன்பர்கள் தத்தம் வீட்டில் நெய் தீபமிட்டு, ஓம் அகத்தீஸ்வராய நமஹ என்று ஓதி, 108 முறை ஓம் நமசிவாய என்று தியானித்து, கோளறு பதிகம் படித்து வழிபாட்டு செய்ய வேண்டுகின்றோம். குருவிடம் சரணடையுங்கள். அதுவும் பரிபூரணமாக சரணடையுங்கள். பின்னர் நீங்கள் வேண்டுவது அனைத்தும் குரு உங்களுக்கு தருவார்.

வேறென்ன குருவிடம் கேட்க போகின்றோம்..வேண்டத்தக்கது அறிவோய் நீவீர் !

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை சில அருள்நிலைகளை  கீழே பகிர்கின்றோம்.








நம் தளம் சார்பில் கொண்டாடிய மஹா ஆயில்யம் மற்றும் பல பதிவுகளை ஒவ்வொன்றாக தர குருவிடம் வேண்டுகின்றோம். 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

 எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

Sunday, March 21, 2021

நந்தி கல்யாணம்...முந்தி கல்யாணம்... - 23.03.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளம் சார்பில் அமாவாசை லோக ஷேம தீப வழிபாடு குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. இன்னும் இன்னும் தீபமேற்றி வழிபட நம் குருநாதர் நம்மை பணித்து வருகின்றார். அதனால் தான் நாம் மீண்டும் மீண்டும் தீப வழிபாட்டை வலியுறுத்தி வருகின்றோம். தினமும் காலை தீபமேற்றி மனதை செம்மைப்படுத்தி தியான நிலையில் 108 முறை ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி வரவும். மேலும் தினமும் கோளறு பதிகம் படித்து வரவும். வாய்ப்பு கிடைக்கும் போது சதுரகிரி / திருஅண்ணாமலை கிரிவலம் சென்று வரவும். திருஅண்ணாமலை கிரிவலம் மாத சிவராத்திரி அன்று சென்று வருவது இன்னும்சிறப்பு ஆகும். இந்த கொரானா தொற்று முழுவதும் நீங்கும் வரை மாலையில் கூடுதலாக ஒரு தீபம் ஏற்றி வழிபாடு செய்து வரவும். இவற்றை எல்லாம் நாம் கடைபிடிக்க ஆரம்பிக்கும் போது சைவ உணவை மேற்கொள்ள வேண்டுகின்றோம்.


அடுத்து நம் தளம் சார்பில் பல்வேறு அறப்பணிகள் மாதந்தோறும் செய்து வருகின்றோம். உங்கள் பார்வைக்கு சிலவற்றை சொல்கின்றோம். இவை அனைத்தும் குருநாதர் அருளினால் மட்டுமே சாத்தியம்.நீங்கள் அனைவரும் நம் தளம் சார்பில் நடைபெறும் வழிபாடு/ சேவைகளை  அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த செய்தியை அறிய தருகின்றோம். 

1. கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய பூஜை 

2. கூடுவாஞ்சேரி விநாயகர் கோயில் - அமாவாசை லோக ஷேம தீப வழிபாடு - அன்னதானத்துடன் 

3. மாதந்தோறும் தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் - சிறு தொகை 

4. மாதந்தோறும் ஒரு நாள் - ERS டிரஸ்ட் சார்பில் நடைபெறும் அன்னதானம் 

5. தென்காசி ஸ்ரீ ஷீரடி சாய்பாபா கோயிலில் தினமும் மதியம் ஒரு அன்பருக்கு அன்னசேவை 

6.மாதந்தோறும் திருஅண்ணாமலை சாதுக்கள் அன்னதானம் - சிறு தொகை உபயம் 

7. மாதந்தோறும் தர்ம சிறகுகள் அறக்கட்டளை - சிறு தொகை உபயம் 

8.கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மாதந்தோறும் குடிநீர் உபயம் 

9.கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மாதந்தோறும் கிருத்திகை,சதுர்த்தி பூஜைக்கு மாலை உபயம் 

10. வருடமொருமுறை திருஅண்ணாமலையில் மகேஸ்வர பூஜை 

11. தமிழ் மாத விழாக்கள் ஒட்டி கோயில்களில் நம் தளம் சார்பில் சேவை - உதாரணமாக இந்த சிவராத்திரியில் சுமார் 9 கோயில்களுக்கு இலுப்பெண்ணெய், குங்கிலிய பத்தி, சுத்தமான கற்பூரம் என கொடுத்துள்ளோம்.

இது தவிர மாதந்தோறும் நமக்கு கிடைக்கும் பொருளுதவி கொண்டு மேலும் பல கோயில்களுக்கு நம்மால் இயன்ற சேவைகள், மருத்துவ உதவி, ஞான தானமாக திருவருள் பயணம் இதழ் சந்தா, TUT தளத்தின் பதிவுகள்  என இன்னும் பல... அனைத்தும் நீங்கள் தருகின்ற பொருளுதவியாலும், அருளுதவியாலும் தொடர்ந்து செய்து வருகின்றோம். இன்னும் பற்பல சேவைகளை நாம் குருவருளால் செய்ய வேண்டியுள்ளது. நமக்கு உற்ற துணையாகவும் உறுதுணையாகவும் உள்ள தங்கள் அனைவருக்கும் நன்றி கூறி இங்கே மகிழ்ச்சி அடைகின்றோம்.

இந்த வரிசையில் அடுத்து  பங்குனி ஆயில்ய பூசைக்கு நாம் தயாராகி வருகின்றோம்.என்னப்பா? நந்தி கல்யாணம்...முந்தி திருமணம்...  என்று தலைப்பில் ஏதேதோ பேசி வருகின்றோம் என்று நீங்கள் நினைப்பது நமக்கு புரிகின்றது. பதிவின் இறுதியில் அழைப்பிதழை பகிர்ந்துள்ளோம்.

நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் என்பது சான்றோர் வாக்கு. நந்திக் கல்யாணம் பார்த்தவருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள்.அதன்படி நந்திக் கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்த வருடம் நந்திக் கல்யாணம் நடைபெறுவதற்கு முன் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.



ஆம், இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நந்திகேஸ்வரரின் தெய்வீக திருமணம் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வரக்கூடிய புனர்பூச நட்சத்திரத்தன்று இந்த சிறப்பு வாய்ந்த திருமணம் நடைபெறுகிறது.






அரியலூர் மாவட்டம் திருமழபாடி திரு சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் இந்த தெய்வீக திருமணம் வருடாவருடம் நடைபெறுகிறது



மணமகன்: பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான்

மணமகள்: வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை

இந்த ஸ்தலமானது திருமால் இந்திரன் ஆகியோரால் வழிபாடு செய்யப்பட்டது மேலும்திருஞானசம்பந்தர் அப்பர் சுந்தரர் ஆகியோரால் திருப்பதிகங்கள் பாடியும் வழிபாடு செய்யப்பட்ட தலமாகும்.

தஞ்சாவூர் மற்றும் லால்குடியில் இருந்து 28 KM தூரத்திலும் மற்றும் திருவையாறில் இருந்து 16கிலோமீட்டர் தொலைவிலும், புள்ளம்பாடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

கிழக்கு திசை நோக்கி 7 நிலை ராஜ கோபுரத்துடன் கம்பீரமாக காட்சி தரும் இக்கோயிலில் மூன்று திருச்சுற்றுகள் உள்ளன தலவிருட்சமாக பனை மரம் உள்ளது நடராஜர் மண்டபம்அருகில் திரு நந்திகேஸ்வரர் தனது மனைவி சுயசாம்பிகை யுடன் காட்சி தருகிறார்.

திருமணத்திற்கு முதல் நாள் நந்தியம்பெருமான் பிறப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விழாவின்போது பலவகை அபிஷேகங்கள் நந்தியம் பெருமானுக்கு செய்விக்கப்படுகிறது 

அன்று மாலை திருவையாறு கோயிலில் அவருக்கு பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.திருமணம் நடைபெறும் நாளன்று காலை ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும் நந்தியம்பெருமான் பட்டுச் சட்டை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி வெள்ளியில் ஆன தலைப்பாகை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வானவேடிக்கை இன்னிசை கச்சேரி உடன் புறப்படுகின்றனர்.

அன்று மாலை கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வந்தடைகின்றனர். அங்கு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை எதிர்கொண்டு அழைத்து அவர்களை வரவேற்று கோயில் முன் உள்ள திருமண மேடைக்கு அழைத்துச் செல்கின்றனர்.

திருமண மேடையில் சுயசாம்பிகை தேவிக்கும் நந்தியம் பெருமானுக்கும் அனைத்து விதமான அபிஷேகங்கள் நடைபெறுகின்றது.

தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாரப்பர் முன்னிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையிலும் மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுகிறார்.

திருமணம் முடிந்ததும் மணமக்களுக்கு தீபாராதனை காட்டப்படுகிறது தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.

இறைவனே முன்நின்று திருமணத்தை நடத்தி வைப்பதால் நந்தியம்பெருமான் திருமணத்தை காணும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடைகள் நீங்கி காலத்தே திருமணம் கைகூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்



இத்திருமணத்தில் கலந்து கொள்ளமுயற்சி செய்யுங்கள் .திருமண நாளன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர் என அறிகிறோம் தகுந்த முன்னேற்பாடுகளுடன் சென்று கலந்துகொண்டு திருமண பாக்கியம் பெறுவோம்

இந்த ஆண்டு நந்தி கல்யாணம் நாளை 23.03.2021 அன்று நடைபெற உள்ளது.வாய்ப்புள்ள திருமணத்தடை உள்ள அன்பர்கள் நேரில் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெற வேண்டுகின்றோம்.



மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீசத்ருசம்ஹார வேலாயுதசுவாமி ஆலய கலசவிழா - 07.04.2021 - https://tut-temples.blogspot.com/2021/03/07042021.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 22.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/22022021.html

 மகான் பைரவ சித்தர் 133 ஆவது குரு பூசை விழா அழைப்பிதழ் - 20.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/02/133-20022021.html

ஒட்டன்சத்திரம் பகவான் ராமசாமி சித்தர் 34 ஆவது மஹா குருபூஜை விழா - 05.02.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/34-05022021.html

ஓம் - பரமஹம்ச ஓம்கார சுவாமிகள் 54-ஆம் ஆண்டு குருபூஜை விழா - 11.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/54-11012021.html

ஸ்ரீல ஸ்ரீ சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள் 120 ஆவது குரு பூஜை - 10.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/120-10012021.html

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html