அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சார்வரி வருட பங்குனி மாத ஆயில்ய ஆராதனை நாளை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் நடைபெற உள்ளது. அதன் பொருட்டு இன்றைய பதிவில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பற்றி மீண்டும் தொட்டுக்காட்ட விரும்புகின்றோம். ஸ்ரீ அகத்தியர். தமிழின் மூலத்தை கொடுத்தவர்.முருக பெருமானின் அன்பிற்கு பாத்திரமானவர்.அகத்தியர் என்ற பெயரில் ஒவ்வொரு யுகங்களிலும் பலர் வாழ்ந்துள்ளனர் என்பது நமக்கு புதிய செய்தி. தமிழ் உள்ளவரை அகத்தியம் இருக்கும். அகத்தியம் ஒன்றே இந்த கலிகாலத்தில் கடைத்தேற உதவும். அகத்தியம் சத்தியம். சத்தியமே அகத்தியம். என்று சொல்லவேண்டும் என்றால் அகத்தியரை அருட்குருவை மனதில் வைக்க வேண்டும். அன்பே சிவம் என்றால் அன்பே சக்தியும் ஆகும். சிவமும் சக்தியும் இணையும் போது அகத்தியமும் நம்முள் தொட்டு காட்டி அன்பின், அருளின், அகத்தியத்தின் ஊற்றாக பிறக்கும்.
பங்குனி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.03.2021
மெய் அன்பர்களே.
நட்சத்திரங்களுக்கு அப்பாட்பட்டவர் அகத்தியப் பெருமான். இந்த மானுடங்களை கடைத்தேற்ற அவரால் வகுக்கப்பட்டது ஆயில்ய பூசை. இந்த பூசையால் பயன்பெற்றோர் ஏராளம்.இது மிக மிக உண்மை..சித்தர்களுக்கு நாளென்பது கிடையாது. நட்சத்திரம் என்பதும் கிடையாது. இவை எல்லம்மா நம் வழிபாட்டிற்காக/ மன மகிழ்ச்சிக்காகவே உள்ளது.அன்றைய தினம் குருவினை சரணடைய ஒரு வாய்ப்பு என்றும் கூட சொல்லலாம். இன்னும் ஆழமாக மனதை உழுதால்,சித்தன் அருள் இவ்வாறு பேசுகின்றது.
உங்கள் எண்ணப்படி, அகத்தியருக்கும், நட்சத்திரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறீர்கள். சிவன் அருளினால் அவர் தோன்றினாலும், காலத்துக்குள், ஒரு திதி நடக்கும் பொழுது, ஒரு நட்சத்திரம் ஆளுமையில் உள்ள பொழுது தான் ஒரு ஆத்மா உருவாக்கப்பட்டிருக்கும், அல்லது இறைவனிடமிருந்து பிரித்து விடப்பட்டிருக்கும். ஒரு புல்லை கூட முளைக்க வைக்கும் தகுதி இல்லாத மனிதனுக்கு, நாள், தேதி, கிழமை, ஊர், காலம் என வரிசையாக அனைத்தும் இருக்கும் பொழுது, மிக உயர்ந்த நிலையில், குரு ஸ்தானத்தில் இருக்கும் ஒருவருக்கு, நட்சத்திரம் கூடவா இருக்காது? இன்னொரு விஷயம் தெரியுமா? பூமியில், இறைவனே அவதாரம் எடுத்தாலும், பூமியின் சட்ட திட்டங்களுக்கு, அவனும் அடிமையாக இருந்துதான் ஆகவேண்டும். உதாரணமாக, கிருஷ்ணர், ராமர் அவதாரங்களை கூறலாம்.
உண்மையாக புரிந்து கொள்பவர்கள், அமைதியாக இருப்பார்கள். வார்த்தைகள் சிதறாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில், நாளில், சேய்கள் நல்லதை செய்திட, அது உலகத்தின் நன்மைக்கு பலம் கூட்டும். அப்படியாக ஒன்று நடந்து விட்டு போகட்டுமே என்கிற எண்ணத்தில் தான் இதனை பூஜைகள், த்யானம் எல்லாம் ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
No comments:
Post a Comment