"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, March 6, 2021

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய 11ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி அழைப்பிதழ் - 11.03.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி விழா வரும் வியாழக்கிழமை அன்று அனைவரும் கொண்டாட உள்ளோம்.  அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும். முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது கோயிலுக்கு சென்று விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் தீப வழிபாட்டை நமக்கு அருளிக்கொண்டே இருக்கின்றார்.

இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை  நாம் மேற்கொள்ள உள்ள சிவ ராத்திரி வழிபாட்டில் தயவு செய்து இணைக்கவும். திருக்கோயில் பற்றிய செய்திகள் அறியும் முன்னர் மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 11.03.2021 இங்கே பகிர்கின்றோம். மேலும் இந்த ஆண்டில் சிவராத்திரி வழிபாட்டில் புது வழிமுறை ஒன்றை செய்துள்ளார்கள். வழக்கம் போல் பதிவின் இறுதியில் அதனை காண்போம்.




ஸ்ரீ துளஸீஸ்வரர் கோவிலானாது சிங்கப்பெருமாள் கோவில் ஊருக்கு அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது.இந்த தலம் 1200 ஆண்டுகள் பழமையை உடையது.ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த சபா என்ற ஆன்மிக சபா மூலம் கோவில் புணரைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இங்கே தினசரி பூஜை மற்றும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இங்குள்ள சிவனார் கிழக்கு நோக்கியும்,சற்று ஈசான்ய மூலை நோக்கியும் பார்க்கின்றார்.இந்த கொளத்தூர் கிராமம் இவரின் அருளால் மேம்பட்டு வருகின்றது என்பது கண்கூடு.

தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலையங்கிரிக்குச் சென்றார்கள். அதனால்  பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது.  அதை சமன் செய்ய ஈசன் குருமுனி அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார். தென் திசைக்குக் சென்ற  அகத்தியர் அங்கு 108 சிவ லிங்கங்களை நிறுவி பூஜித்தார். அந்த 108 சிவலிங்கங்களுள் ஸ்ரீ துளஷீஸ்வரர் லிங்கமும் ஒன்றாகும். கோவிலுக்குத் தெற்கே அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கி கொன்றை மாலை சார்த்தி துளசியால் அர்ச்சித்து புரட்டாசி பவுர்ணமி நாளில் வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீ துளஷீஸ்வரர்,


அகத்தியருக்கு அர்த்தனாரீஷ்வரராய் காட்சி கொடுத்தார். இவை அனைத்தும் இக் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

கணவன்-மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்கவும், இரண்டு பேரும்  சேர்ந்து வாழ வேண்டுமென்றும்,  அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள். ஆனால்  ஏதோ ஒரு ஈகோவினாலும்,  வைராக்கியத்தாலும் விட்டுக் கொடுக்காமல் இருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்களுக்கு  இந்த   ஸ்ரீ துளஷீஸ்வரர் ஒரு வாரத்தில் பலன் கொடுக்கிறார்.  (ஒரு முறை முயற்சி செய்து  பாருங்கள்.) ஜாதகத்தில் சந்திரன் நீசமாயிருப்போரும், சந்திர பலம் குறைந்திருப்போரும், திங்கட்கிழமைகளில்,  சந்திரஹோரையில் அர்ச்சனை செய்து ஆராதிப்பது மிகச் சிறப்பாகும்.


ஸ்ரீ திருநாராயணன் பெருமாள்  கோவிலும் அருகே உள்ளது.ஸ்ரீ துளஸீஸ்வரர் தரிசனத்தோடு இவரையும் தரிசனம் செய்யுங்களேன்.



ஸ்ரீ துளஸீஸ்வரர்



அன்னாபிஷேகத்தில் ஸ்ரீ துளஸீஸ்வரர்



ஸ்ரீ வில்வநாயகி 











பிரதோஷம் மற்றும் சிவராத்திரி பூஜையின் போது ஸ்ரீ வில்வநாயகி சமேத  ஸ்ரீ துளஸீஸ்வரர் தரிசனம் மேலே கண்டீர்களா? கண்டிப்பாக ஒரு முறை சென்று வாருங்கள். இந்த தலத்தில் உள்ள அகத்தியர் தரிசனம் பெறாமல் விட்டால் எப்படி? இந்த தரிசனம் நிறைவு பெறும் ? ஸ்ரீ அகத்தியர் தரிசனம் கீழே 




இரண்டாண்டுக்கு பின்னர் நாம் சென்றதால் இங்கே தனியே அகத்தியர் பெருமானுக்கு இருந்த சன்னிதி நம்மை அன்பில் கட்டியதை கண்டோம். அகத்தியரை மனமுருகி பிரார்த்தித்தோம். இங்கே நம் குருநாதர் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி தருகின்றார். ஏற்கனவே இங்கு நின்ற கோலத்திலும் அகத்தியர் தரிசனம் பெறலாம்.



அன்னையை வழிபட்டோம். 
















அடுத்து ஒவ்வொரு சன்னிதியாக சென்று விநாயகர், கல்யாண துர்க்கை, முருகப்பெருமான், பைரவர், நவ கிரக நாயகர்கள், பைரவர் என போற்றினோம்.








நாம் ஏற்கனவே சொன்னது போல் இந்த தலம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியரால் வழிபாடு செய்த தலம் என்பது போன்ற செய்திகள் மேலே காணலாம்.











அடடா..என்ன அழகு..எத்தனை அழகு..ஓம் நமச்சிவாய என்று ஓதிக் கொண்டே இருந்தோம். இந்த சிவராத்திரி தரிசனத்திற்கு , மீண்டும் இங்கே வர விண்ணப்பம் இந்தப் பதிவின் மூலம் வைக்கின்றோம்.

வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு, இறையருள் பெற நம் தளம் சார்பில் வேண்டுகின்றோம்.

பதிவில் ஆரம்பத்தில் சொன்னது போல், இந்த ஆண்டில் சிவராத்திரி வழிபாட்டிற்கு புது முயற்சியாக, இணைய வழி அர்ச்சனை செய்ய உள்ளார்கள்.

தாங்கள் குடும்பத்திற்கு அர்ச்சனை செய்ய விரும்புவோர் இந்த google படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பவும்.


மீண்டும் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_82.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம் - மகா சிவராத்திரி 10 ஆம் ஆண்டு அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/10-21022020.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_8.html

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு - 19.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/tut-19022020.html

அருள்மிகு கந்தழீஸ்வரர் திருக்கோயில் - மகா சிவராத்திரி அழைப்பிதழ் - 21.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/21022020.html

No comments:

Post a Comment