"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, December 31, 2020

2021 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் மூலம் அனைவருக்கும் 2021 ஆம் ஆண்டின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைவரும் உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம்,உயர்புகழ், மெய்ஞானம் பெற்று வாழ்ந்திட எல்லாம் வல்ல குருவிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.

2020 ஆண்டு அனைவருக்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்து விட்டது. இது நம் ஒருவருக்கு மட்டும் தான் என்றால் எளிதாக கடந்து விடலாம். இது அனைவருக்கும் பொதுவாகவே அமைந்ததை பார்க்கும் போது இறையின் விளையாடல் ஆரம்பித்து விட்டது என்றே சொல்லலாம். புது புது கிருமியால் உடல்நலம் பாதிப்பு, இதனால் ஊரடங்கு உத்தரவு, இதனால் பொருளாதார நெருக்கடி. இவையனைத்தும் பார்க்கும் போது அந்த இறை நமக்கு ஏதோ சொல்ல நினைக்கின்றது. ஆம்..வாழ்தலின் நோக்கமே அன்பு தானே..ஆனால் நாம் வேறு எதையோ அல்லவா தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம். இதனை தான் அகத்தியமும் போதிக்கின்றது. இந்த மாற்றம் உடனே நிகழாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் நிகழும். அன்பை விதைக்க கற்றுக் கொள்வோம்.





2021 ஆம்  ஆண்டு - முதல் பதிவு. வாழ்வியல் நீதி சொல்லும் ஒரு கதையோடு ஆரம்பிக்கலாமே.





படிப்பதற்கு மிக மிக சாதாரணக் கதையாகக் கூட தோன்றலாம். ஆனால் கதை சொல்லும் நீதி மிகவும் பெரியது. நமக்கும் சேர்த்துத் தான். தலைமை பண்பிற்கு மிக மிக தேவையான ஒன்று நேர்மை. ஆனால் இன்று நேர்மை என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் சூழலில் வாழ்ந்து வருகின்றோம். நேர்மையாக இருந்து என்ன சாதிக்கப் போகின்றோம்? இது அலுவலகத்திலும் சரி! இன்ன பிறவற்றிலும் சரி ! ஏமாற்றமே மிஞ்சும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவே உங்களுக்குத் தான்.

ஒரு மிகப் பெரும் நிறுவனத்தின் முதலாளி ஓய்வு பெறும் காலம் வந்தது. அந்த நிறுவனம் பல சோதனைகளைத் தாண்டி ,சாதனைகளை சத்தியத்தின் பாதையில் நிலைநிறுத்தி வந்தது.எனவே தமக்குப் பின் யாரை நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் நியமிப்பது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.


நேரே நிறுவனத்திற்கு சென்று, அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றும் சுமார் 10 நபர்களை அழைத்தார். பின்னர் அவர்களிடம், நான் பொறுப்பில் இருந்து ஓய்வு பெரும் காலம் வந்து விட்டது, உங்களில் ஒருவரை நிர்வாகத்தின் பொறுப்பில் தேர்தெடுக்க உள்ளேன். அனைவரும் ஒவ்வொரு விதத்தில்,ஒவ்வொரு துறையில் சிறப்பாக தலைமை ஏற்று வருகின்றீர்கள். மொத்தமாக நம் நிறுவனத்திற்கு ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்காக உங்களுக்கு தனித்தன்மை வாய்ந்த விதைகளை ஒவ்வொன்றாக தர இருக்கின்றேன்,

ஒவ்வொருவரும் அந்த விதையை நட்டு, நீர் பாய்ச்சி, உரமிட்டு, ஓராண்டு வளர்க்க வேண்டும்.ஓராண்டு முடிவில் அந்த செடியை இங்கு கொண்டு வந்து காட்ட வேண்டும். நாம் அதனை நன்கு, ஊன்றி கவனித்து யார் சிறப்பாக வளர்த்துளார்கள் என்று பார்த்து,அவருக்கு நம் நிறுவனத்தின் பொறுப்பை கொடுக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறி, அனைவருக்கும் ஒரு விதையைக் கொடுத்தார்.

அந்த நிறுவனத்தில் ஒரு நேர்மையான பணியாளர் இருந்தார். அவர் வீட்டுக்கு வந்து, நன்கு அகலமான மண் தொட்டி வாங்கி, இயற்கை உரமிட்டு, உகந்த மண் இட்டு, நிரப்பி, விதையை நட்டு, நீர் ஊற்றினார். தினமும் காலை அல்லது மாலை நீர் ஊற்றி,சூரிய ஒளி படும்படி வெளிச்சத்தில் வைத்து, செடி தொட்டியை பராமரித்தும் வந்தார். ஒரு மாதம் கழிந்தது, விதையில் இருந்து முளை விடவே இல்லை, விருட்சம் தோன்றும் என்று காத்து, மாதங்கள் போனது தான் மிச்சம், 

செடி வளரவும் இல்லை, விதை அப்படியே தான் இருந்தது. கவலை தோய்ந்து காணப்பட்டார். நாம் நன்றாகத் தானே நீர்,சூரிய ஒளி, காற்று என ஒருங்கே அமைத்து பாதுகாத்து வருகின்றோம், பின்னர் ஏன் செடி வளர வில்லை என்று யோசித்தார். நிறுவனத்தில் ஒவ்வொருவரும், அவரவர் விதைகளின் வளர்ச்சியைப் பற்றி பேசுவதே வழக்காமாகக் கொண்டனர். இவரோ, மிகவும் அமைதியாக காணப்பட்டார்.

எவ்ளோ முயற்சிகள் செய்தும் பலன் இன்றிப் போனது. ஓராண்டும் கழிந்தது. அந்த நாளும் வந்தது.பலரும் செழிப்பாக வளர்ந்திருந்த செடிகளோடு வந்தார்கள்.ஆனால் நம் கதையின் நாயகனோ, வெறும் மண் தொட்டியைக் கொண்டு வந்தார். இவரைத் தவிர்த்து மற்ற 9 பேரும் செடிகளோடு நின்று கொண்டிருந்தார்கள். ஆனால் இவர் மட்டும் கூனிக் குறுகி, மண் தொட்டியுடன். பார்ப்பதற்கே பாவமாக இருந்ததது. அந்த 9 பேரும் பெருங்களிப்பில் வேறு இருந்தனர்.

முதலாளி ஒவ்வொரு செடியாக பார்வை இட்டு, வாவ்..சூப்பர் என பாராட்டிக் கொண்டே வந்தார்.மண் தொட்டியின் முறை வந்தது.என்னப்பா? வெறும் மண் தொட்டியைக் கொண்டு வந்து இருக்கின்றாய்? செடி எங்கே? என்று வினவ, அதற்கு, ஐயா ! நான் எவ்வளோ முயற்சி செய்தும் மண் தொட்டியில் உள்ள விதை முளைக்கவே இல்லை, நானும் என்னால் முடிந்த முயற்சிகளை செய்து விட்டேன். முயற்சிகள் தோற்றது என்று சலித்து பேசினார்.

உடனே அவர், அனைவரும் இங்கே கவனியுங்கள். நம் நிறுவனத்தின் பொறுப்பை இந்த மண் தொட்டியைக் கொண்டு வந்த பணியாளருக்கே கொடுக்கின்றேன். அனைவர் முகத்திலும் ஈ ஆட வில்லை. நான் உங்களுக்கு கொடுத்த விதைகளில் இருந்து செடிகள் வளர வாய்ப்பே இல்லை, ஏனென்றால் நான் உங்கள் அனைவருக்கும் தந்தது நன்றாக வேக வைத்துப் பின் உலர வைத்த விதைகள்
அனைவரும் அதில் செடி வளரவில்லை என்பதற்காக வேறு விதைகளைப் போட்டு வளர்த்து இங்கே கொண்டு வந்து உள்ளீர்கள்.இவர் ஒருவர் மட்டும் தான் அப்படி ஏமாற்றப் போகாமல் நேர்மையாக இருந்திருக்கிறார்.




இங்கே உள்ள நீங்கள் 9 பேரும் மிகவும் திறமையானவர்கள். அதில் சிறிதும் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு நிறுவனத்தில் தலைவராக இருப்பதற்கு வெறும் திறமை மட்டும் போதாது, நேர்மையும் வேண்டும். தலைவன் எதற்கு தலைவராக இருக்கின்றாரோ, அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நிறுவனம் வளர்ச்சி பெறும். அப்படிப்பட்ட ஒரு நேர்மையான பணியாளரை நம் நிறுவனத்தில் கண்டு மகிழ்ச்சி, அவரது தலைமையில் இந்த நிறுவனத்தின் பொறுப்பை தருவதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது என்று கூறி சென்றார்.

இந்த நேர்மை எனும் பண்பு நிறுவனத்திற்கு மட்டும் அல்ல, கட்சி, அமைப்பு, குடும்பம் என அனைத்திற்கும் பொருந்தும், இந்த நேர்மை இல்லாததால் தான் ..என்னத்த சொல்ல, நம் அனுபவிக்கும் அனைத்திற்கும் இது தானே காரணம். பார்க்க சின்ன கதை போல் தான் உள்ளது, ஆனால் கதையின் நீதி..பல நீதிகளை இந்த ஒரே கதை தருகின்றது. 

எனவே சோதனைக் காலங்களில் வெறுப்படையாது, அமைதியாக சூழலுக்கேற்ப பணியாற்றுங்கள். நடப்பதெல்லாம் நன்மைக்கே. ஒரு நிறுவனத்தின் பதவிக்கு ஒருவரை நியமிக்கவே பரீட்சை வைத்து நேர்மை சோதிக்கப் படுகின்றது என்றால் ..இந்த அண்ட சராசரங்களை கட்டி, நம்மை ஆளும் இறைவன் நேர்மையின் காவலன் தானே. தவறை நாம் செய்து விட்டு, அவரை குறை கூறாதீர்கள்.இந்த நாள் முதல் நேர்மையைக் கடைபிடிக்க முயற்சி செய்வோம்.







மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் புதிய ஆண்டின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.






 - மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

Wednesday, December 30, 2020

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணமும், கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குரு பூஜையும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்த 2020 ஆம் ஆண்டில் நாம் நமது மகா குரு ஸ்ரீ அகஸ்திய மஹரிஷியின் இரண்டாவது முறையாக மார்கழி ஆயில்ய வழிபாடு குருபூஜையாக கொண்டாட இருக்கின்றோம். மதியேது விதியேது கதி உந்தன் பொற்பாதமே என்று குருநாதரின் தாளைப் பற்றி வருகின்றோம். மேலும் மதியேது விதியேது கதி உந்தன் பொற்பதமே என்று குருநாதரின் வாக்கினையும் பற்றி வருகின்றோம். 2.01.2021 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற  ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு செல்ல இருக்கின்றோம்.

                                            

வழக்கம் போல் நம் குழு அன்பர்களுடன் இணைந்து காலை சுமார் 7 மணி அளவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் சென்றோம். அங்கே அருள்பாலிக்கும் அனைத்து இறை மூர்த்தங்களுக்கும் அபிஷேகம் நடந்து முடிந்து விட்டது. அப்படியே நாங்கள் காலை உணவை அங்கே உண்டோம். அடுத்து பிரசாத பை தயார் செய்யும் பணியில் இறங்கினோம்.



அடுத்து மேலே மாடியில் ஹோமம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.



நாம் நம் நண்பர்களோடு சேர்ந்து சித்தர் தரிசனம் பெற சென்றோம். எப்போது பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் சென்றாலும் இதனை வழக்கமாக்கி வருகின்றோம்.


முதலில் ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.










இத்தனை முறை சென்றாலும் இம்முறை எம் குருநாதர் தரிசனம் கிடைக்கும் என்று நாம் நினைக்கவில்லை. ஆம்.அங்கே இருந்த தியான மைய அறையை திறந்தோம்.





அறையைத் திறந்ததும் எம் ஆதி குருவாம் வேதாத்திரி மகரிஷி தரிசனம் பெற்றோம். குருவருள் நம்மை எப்படியெல்லாம் பயணிக்க வைக்கின்றது என்று மனதில் நினைத்தோம்.



அடுத்து அப்படியே ஸ்ரீ தேங்காய் சுவாமிகள் சித்தர் தரிசனம் பெற்றோம்.














அடுத்து மகான் ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள் தரிசனம் பெற்றோம்.









அடுத்து நேரம் ஆகிக்கொண்டிருந்தமையால் மீண்டும் திருக்கல்யாணம் பார்க்க ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் வந்து சேர்ந்தோம். ஓரளவில் யாகம் ஆரம்பம் ஆகும் நேரமாக இருந்தது.








மீண்டும் பஞ்சாமிர்தம் தயார் செய்யும் சேவையில் ஈடுபட்டோம்.


இதோ யாகம் ஆரம்பம்....















நம் குருநாதர் ஸ்ரீ லோபாமுத்திரா அவர்களோடு தரிசனம் தரும் காட்சி 


யகத்திற்காக சங்கல்பம் வாங்கிய போது 


இறை மூர்த்தங்கள் அபிஷேகம் ஏற்கனவே நிறைவு பெற்று, அலங்காரம் செய்யும் காட்சி இங்கே 








யாகம் முழுமை பெற்ற காட்சிகளை நீங்கள் காண முடிகின்றது. அடுத்து திருக்கல்யாண தரிசனம் தான்.அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம்.

மீண்டும் அகத்தியம் பேசுவோம்.

மீள்பதிவாக:-

அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_9.html

அருள்மிகு அகத்தியர் சன்மார்க்க ஞான சபை மார்கழி ஆயில்ய வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_30.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 2.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/2012021.html

அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய ஆருத்ரா & மார்கழி ஆயில்ய வழிபாடு  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_28.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021_28.html

அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் - ஸ்ரீ முருகப்பெருமான் அருள் வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_12.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html