"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, January 5, 2020

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு என்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி. மாயமின்றி நம்மை வாழ்க்கைக்கடலில் நீந்த குரு அவசியம். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர நம்மை ஆயத்தப்படுத்துபவர் குரு. இன்றைய சூழலில் குரு கிடைப்பது அரிது. கிடைத்த குருவை தொடர்வது அரிதினும் அரிது. குரு தொட்டுக்காட்டிய வித்தையை பழகுவது அரிதினும் அரிது. ஆம். குரு இல்லா வித்தை பாழ்! இன்று குருமார்கள் பலர் கேள்விக்குரிய செய்திகளாக வலம் வந்து விடுகின்றார்கள். அதனால் தான் சொன்னோம் குரு கிடைப்பது அரிது என்று. நமக்கெல்லாம் உலகிலேயே உன்னதமான குருவாக ஸ்ரீ அகத்தியர் பெருமான் கிடைத்துள்ளார். நம் குழுவின் மூலம் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்யம் நட்சத்திர வழிபாடு செய்து வருகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாம் மேலும் சில அகத்தியர் ஆலயங்களில் நம் சேவையை தொடர்ந்து வருகின்றோம். அகத்தியர் ஆயில்ய பூசை முதலில் புறத்தில் நடைபெறும். நாட்கள் செல்ல செல்ல நாம் அகப்பூசையில் கொண்டாடி மகிழ்வோம் என்பது நிதர்சனம்.

அகத்தியம் காட்டுவது அன்பே தான். அன்பின் ஆழம் தான் அகத்தியம். இன்று மேலும் ஒரு அகத்தியர் குரு பூசை விழா அழைப்பிதழை இங்கே பகிர உள்ளோம்.




நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
      நிங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!



அகத்தியம் பேசும் நிலை அல்ல. இது உணரும் நிலை. மெல்ல மெல்ல உள்வாங்கி நீங்கள் உணர்த்தப்படுவீர்கள்.

      ஐந்திலக்கணம் தந்த அகத்தியரே

சித்த வேட்கை கொண்ட சிவ யோகியே
கடலுண்ட காருண்யரே
கும்பமுனி குருவே சரணம் சரணம் 

என்று மனதுள் நம் ஐயனை துதிப்போம்.

ஓம்  வயதில் எல்லையில்லா  சித்தரே போற்றி 
ஓம் குருவுக்கெல்லாம்  மகா குருவே  போற்றி 
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே  போற்றி 
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 

ஓம் அகத்தியம்  தந்த  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்தியர்  காவியம்  தந்தவரே  போற்றி
ஓம்  அகத்தியர்  வெண்பா அருளியவரே  போற்றி 
ஓம் அகத்திய  நாடி அருளியவரே  போற்றி    


ஓம் அகத்திய சம்ஹிதை  அருளியவரே  போற்றி 
ஓம் ஐந்து சாஸ்திரம்  தந்தவரே  போற்றி 
ஓம் கிரியை யோகம்  படைத்தவரே போற்றி 
ஓம்  ஆறெழுத்து  அந்தாதி  அருளியவரே  போற்றி                       


ஓம்  வாகட  வெண்பா  அருளியவரே  போற்றி 
ஓம்  சிவா சாலம்  தந்தவரே போற்றி 
ஓம்  சக்தி  சாலம்  தந்தவரே  போற்றி 
ஓம்  சண்முக சாலம்  தந்தவரே  போற்றி        

ஓம் சமரசநிலை  ஞானம்  போதிதவரே  போற்றி 
ஓம்  சக்தி  சூத்திரம்  சமைத்தவரே  போற்றி 
ஓம்  இராமனுக்கு சிவகீதை  அருளியவரே  போற்றி 
ஓம்  ஆதித்ய ஹிருதயம் அருளியவரே  போற்றி                   

ஓம்  வாதாபியை  வதம்  செய்தவரே  போற்றி
ஓம்   சுவேதனின்   சாபம்  தீர்த்தவரே  போற்றி 
ஓம்  இடும்பனை  காவடி  எடுக்க  வைத்தவரே  போற்றி 
ஓம்  தொல் காப்பியரின்  குருவே  போற்றி

ஓம் கடல் நீரைக் குடித்து  வற்றச் செய்தவரே போற்றி 
ஓம் நீரின் மேலே  தவமிருந்தவரே  போற்றி 
ஓம் விந்திய மலையின்  அகந்தையடக்கியவரே போற்றி 
ஓம்  அசுராசுரர்களை  அழித்தவரே போற்றி                                        

ஓம்  காவிரியைப்  பெருக்கியவரே  போற்றி 
ஓம்  தாமிரபரணியை  உருவாக்கியவரே  போற்றி 
ஓம்  ராவணனை  இசையால்  வென்றவரே  போற்றி 
ஓம் அகஸ்தீஸ்வரம்  அமைத்தவரே  போற்றி 

ஓம்  தேவாதி தேவர்களை  காத்தவரே  போற்றி 
ஓம்  சிவசக்தி  திருமண  தரிசனம்  கண்டவரே போற்றி 
ஓம்  சித்த வைத்திய  சிகரமே  போற்றி 
ஓம் அகத்திய  பூஜாவிதி  தொகுத்தவரே போற்றி                     


ஓம்  நான்கு யுகங்களையும்  கடந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழால்  உலகை  ஆண்டவரே  போற்றி 
ஓம்  தமிழ்ச்  சங்கங்களின்   தலைவனே  போற்றி 
ஓம்  சிவசூரிய  வழிபாட்டைத்  துவக்கியவரே  போற்றி
                    

ஓம்  கும்பத்தி லுதித்த  குறுமுனியே  போற்றி 
ஓம்  வடதென் திசையை  சமப்படுத்தியவரே  போற்றி 
ஓம்  உலோபமுத்திரையின்  மணாளா  போற்றி 
ஓம்  அம்பையில்  கோயில்  கொண்டவரே  போற்றி               

ஓம்  அரும் மருந்துகள்  அறிந்தவரே  போற்றி 
ஓம் அனைத்தும் கற்றுத்  தெளிந்தவரே  போற்றி 
ஓம்  முக்காலமும்  உணர்ந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழும்  வளர்த்தவரே  போற்றி                                         

ஓம்  ஆஷா சுவாஸினி மைந்தரே  போற்றி 
ஓம்  நெல்மணிகளின்  தலைவனே  போற்றி 
ஓம்  சிவன்  அம்சமே  போற்றி 
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி       

ஓம்  சர்வ  சக்திகளும்  தருபவரே  போற்றி 
 ஓம் சகல கலைகளும்  சித்தியாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பிறவா வரம்  தரும்   பெருமானே  போற்றி 
ஓம்  தேவி  உபாசகரே  போற்றி                                                              

ஓம்  இசையிலும்  கவிதையிலும் மேன்மை தருபவரே  போற்றி 
ஓம்  கல்வித் தடை  நீக்குபவரே  போற்றி 
ஓம்  புத பகவானின்  தோஷம்  நீக்குபவரே  போற்றி 
ஓம்  முன் தீவினைப்  பாவங்கள்  தீர்ப்பவரே  போற்றி           

ஓம்  பேரும் புகழும் மதிப்பும் உண்டாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பூர்விக சொத்துக்கள் கிடைக்க  அருள்பவரே  போற்றி 
ஓம்  சகலவித  நோய்களையும்   தீர்ப்பவரே  போற்றி 
ஓம்  குடும்பத்தில்  ஒற்றுமை  நிலவச்  செய்பவரே  போற்றி 

ஓம்  பித்ரு சாபம்  நீக்கி    ஆசி பெற  அருள்பவரே  போற்றி 
ஓம்  சத்ருக்களின்  மனம்  மாற்றி  அன்புரச் செய்பவரே  போற்றி 
ஓம்  சித்திகள்  பெற்று  உயரச்  செய்பவரே  போற்றி 
ஓம்  நல் குருவாகி  மனதார  வாழ்த்து பவரே   போற்றி          

ஓம்  அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால்  போற்றி 
ஓம்  அகண்டம் பரி பூரணத்தின் அருளே   போற்றி 
ஓம்  மண்டலஞ் சூழ்  இரவிமதி  சுடரே  போற்றி 
ஓம்  மதுரத்   தமிழோதும்   அகத்தீசரே  போற்றி                        

 ஓம்  எண்திசையும்  புகழும்  என் குருவே  போற்றி
 ஓம் இடைகலையின்  சுழுமுனையின்  கமலம்  போற்றி 
ஓம்  குண்டலியில்  அமர்ந்தருளும்  குகனே  போற்றி 
ஓம்  மேன்மை கொள் சைவநீதி  விளங்க  செய்பவரே  போற்றி

ஓம்  கும்பேஸ்வரன் கோயில் முக்தி  அடைந்தவரே  போற்றி 
ஓம்  குருவாய்  நின்று  இன்றும்  ஆசிகள்  அளிப்பவரே  போற்றி 
ஓம்  குருமுனியின்  திருவடிகள்  எப்போதும்  போற்றி 
ஓம் இன்னல்கள்  நீக்கி இன்பம்  தரும்  அகத்தீசப்  பெருமானே 
உமது  திருவடிகள்  சரணம்  போற்றி.... போற்றியே .....            

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-


ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html


தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html


மருதேரி மன்னவன் அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா (08.01.2020 ) - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர்! - https://tut-temples.blogspot.com/2019/12/08012020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

No comments:

Post a Comment