"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 13, 2020

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம:

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம்.


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 பதிவில் நாம் மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் பற்றி பார்த்தோம்.நம் தளத்தின் பதிவுகளைப் பார்த்து சுமார் 6 பேர் லிகித ஜெபம் எழுதி அனுப்பி உள்ளார்கள். ஒரு அன்பர் துபாய் நாட்டிலிருந்து எழுதி அனுப்பி உள்ளார். ஆஹா..குருநாதா. உன் பாதம் சரணம் அடைகின்றோம். இந்தப் பதிவும் ஒரு  ஜீவ நாடி அற்புதம் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம். ஏனென்றால் தற்போது நாம் ஒரு காணொளி காட்சி கண்டோம். அதில் அற்புதங்கள் என்றால் அடுக்கடுக்காய் நன்மை நடப்பதன்று. மாறாக நாம் நினைத்தால் கையை உயர்த்துவது, நடக்க முடிவது, இறையை வணங்குவது என்று நிகழ்வதும் அற்புதமே. தென்னாடுடைய சிவன் மண்ணில் நாம் பிறந்தது அற்புதம் தான். இதோ அன்பர்கள் எழுதி அனுப்பிய லிகித ஜெப பக்கங்கள் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.















மீண்டும் எப்போது இந்த லிகித ஜெபம் வாய்ப்பு கிடைக்கும் என்று நமக்கு தெரியவில்லை.

இணைய வெளியில் நாம் பொதுவாக தேடிய போது லிகித ஜெபம் என்ற ஒரு சேவை பற்றி கண்டோம். லிகித ஜெபம் என்பது இறையின் நாம ஜெபத்தை எழுதுவது ஆகும்.

 நமது கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைக்காதா என்று ஏங்குபவர்களுக்கு, மிகப் பெரும் அருமருந்தாக இருப்பது இறைவனின் நாம ஜெபம். இதே மாதிரி லிகித ஜெபம் என்று ஒன்றும் இருக்கிறது. பேப்பரில், பழைய டைரியில் , நோட்டுப் புத்தகங்களில் இறை நாமத்தை எழுதுவார்களே அதைத் தான் லிகித ஜெபம் என்று கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த சில பிராமண குடும்பங்களில் வயதான அனைவரும், ஒரு நாளின் குறிப்பிட்ட நேரத்தை இதற்கெனவே ஒதுக்கி இடைவிடாமல் எழுதுகிறார்கள். இதனால் கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. அப்படி எழுதும் குடும்பங்கள் அனைத்திலும், பரிபூரண குடும்ப அமைதி நிலவுகிறது. அந்த குடும்ப வாரிசுகள் அனைவரும், இன்று நல்ல வேலையில், மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். காலம் கெட்டுக் கிடக்கும் சூழலில், ஒரு மனிதன் தவறான பாதைக்கு செல்ல நிமிஷ நேரம் போதும். அவ்வாறு செல்ல விடாமல் , இறையருள் தடுத்தாட்கொள்ள - இந்த லிகித ஜெபம் நிச்சயம் உதவும். 

மேலும், மனம் ஒன்றி எழுத எழுத - இறை சிந்தனை மேலோங்கும். நம்மை அறியாமலே , நாம் அந்த இறைவனின் நேரடிப் பார்வைக்கு உட்படுகிறோம்.

இப்படிப்பட்ட லிகித ஜெபம் எப்போது நமக்கு கிடைக்கும் என்று நாம் ஏங்கிய நாட்கள் பல உண்டு. நம் ஏக்கம் நம் குருநாதர் கண்ணிற்கு தெரிந்து விட்டது போலும். சில நாட்களுக்கு முன்னர் நாம் சித்தன் அருள் வலைத்தளத்தில் பார்த்த போது லிகித ஜெபம் பற்றி குறிப்பிட்டு இருந்தார்கள். அட..இதற்குத் தானே ஆசைப்பட்டோம் குருநாதா என்று மனம் ஆனந்தக் கூத்தாடியது. உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு 

அந்த காலத்தில் ஆலயங்களுக்கு மூலவரை ஸ்தாபிக்கும்போது, எந்திரத் தகடுகளில் சில மந்திரங்களை எழுதி, அந்த மூலவருக்கு உரிய மூல மந்திரங்களை எழுதி ஸ்தாபனம் செய்வார்கள். விண்ணில் நிறைந்து இருக்கும் சக்தியை கும்பம் மூலம் ஆகர்ஷித்து , அதை உள் வாங்கி, தீப வழிபாட்டின்போது அதை வழிபடுபவர்களுக்கு கிடைக்க செய்வதில், இந்த மந்திரங்களுக்கு பெரும் பங்கு உண்டு.






அகஸ்தியரின் அருளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நாம் யார், நமது முந்தைய பிறவிகளின் பாவ புண்ணியங்கள் , நாம் இந்த பிறவியில் எந்த நிலையில் இருக்கிறோம் , என்ன செய்ய விருக்கிறோம், அடுத்த பிறவியில் நம் நிலை என்ன என்பதை , முற்றும் அறிந்த மகா ஞானி அகஸ்தியப் பெருமான். அகஸ்திய தரிசனம் ஒன்று போதும். ஒரு கணப் பொழுதில் நம் கர்மங்கள் அனைத்தும் தொலைந்து போகும். நம் வாழ்வில் சிகரம் தொடும் அளவுக்கு சாதனைகள் செய்ய இயலும். நம்பி இந்த காரியத்தில் ஈடுபடுங்கள்.


இத்துடன் லிகித ஜெப தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது. எனவே அன்பர்கள் இனிமேல் நமக்கு லிகித ஜெபம் அனுப்ப வேண்டாம் என்று தங்களிடம் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம். நீங்கள் அனைவரும் செய்த நற்காரியத்தின் பயனாக விரைவில் அருள்மிகு  அகத்தியர் முனீந்திரர் கோட்டத்தின் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் தயாராக உள்ளது. அடுத்த ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment