"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 31, 2020

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே

அனைவருக்கும் வணக்கம்.

பதினெண் சித்தர்கள் வரிசை பற்றி நாம் அறிவோம். இது பதினெட்டு சித்தர்கள் என்று இல்லை. சித்தர்கள் வரிசையில் ஒவ்வொருவரும் ஒருவித நிலையில் அடங்குவர். சிலர் பக்தி பற்றி பேசுவார்கள். சிலர் யோகம் பற்றி பேசுவார்கள். சிலர் ஞானம் பற்றி பேசுவார்கள். இந்த வரிசை பற்றி பேசும்போது அருட்பெருஞ்சோதி பற்றி பேசிய வள்ளலார் பற்றி தான் நாம் இன்றைய பதிவில் அறிய உள்ளோம். வள்ளலார் என்றதும் நமக்கு அன்னதானம் என்று தான் நினைவிற்கு வரும். ஏன்? இந்த உயிர் வாழ உடம்பு வேண்டும். உடல் இயங்க பசி போக்க வேண்டும். வள்ளலார் வாழ்ந்த காலகட்டத்தில் நாம் பார்க்கும் போது, பசியோடு பலர் இருந்திருக்க, ஆன்மிகம் பற்றி சொல்ல முடியுமா என்ன? உண்மையான ஆன்மிகம் மற்றவர் துயர் போக்குதலே. அதனால் தான் வள்ளலார் என்றதும் அன்னசேவை நமக்கு தெரிகின்றது. அன்னசேவை மூலம் இறைவனை காணலாம். ஆன்மிகத்தில் முன்னேற விரும்புபவர்கள் அன்னதானத்தை கையில் எடுத்து பாருங்கள். அன்னதானத்தின் மூலம்  எத்துணை எத்துனை விஷயங்களை சொல்லி, செய்து காட்டி இருக்கின்றார் நம் பெருமானார்.

அன்பு,கருணை ,இரக்கம், தயவு என்று அனைத்திற்கும் இலக்கணம் நம் வள்ளலார் தான் என்று சொல்லத் தோன்றுகின்றது.









பொதுவாக, நாம் பிறப்பு,இறப்பு என்ற எல்லைக்குள் அடங்கிவிடுகின்றோம். ஆனால் மகான்கள் இந்த எல்லையைத் தாண்டி விடுவார்கள். மகான்கள் பொதுவாக அவதாரம் என்று சொல்லுவார்கள். ஆனால் வள்ளலார் அவதாரம் என்ற நிலையையும் தாண்டி, "வருவிக்க உற்றேன்" என்று கூறுகின்றார்.

இது மட்டுமா? நாம் ஏன் பிறந்தோம்? வெறும் கேள்விக்குறி தான். ஆனால் இரண்டே இரண்டு பேர் மட்டுமே தம் பூவுலக வருகையை இங்கே சொல்லி இருக்கின்றார்கள்.அதில் ஒருவர் நம் வள்ளலார்.அவர் கூறுவதை இங்கே அப்படியே சொல்கின்றோம்.

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.                                         

என்று கூறுகின்றார். இது ஆறாம் திருமுறையில் சொல்லப்படுகின்றது. சரி..இனி வள்ளலாரின் கருத்துக்களை நாம் காண்போம்.


வள்ளலார் கூறும் கருத்துக்கள் வெறும் போதனை அல்ல. நாம் அதனை பின்பற்றி வாழ்வதுவே சால சிறந்தது. எப்படி தியானம் செய்ய வேண்டும் என்பர் பின்வருமாறு கூறுகின்றார்.






சன்மார்க்கத்தில் உள்ள அனைவரும் அடைய வேண்டிய நிலைகளாக அன்பு.அருள்,இன்பம் என்ற மூன்றையும் கூறுகின்றார்.




சன்மார்க்கம்..சன்மார்க்கம் என்று சொல்கின்றோமே..சன்மார்க்கம் என்றால் என்ன என்று எளிதாக கூறுகின்றார்.



சைவமா? அசைவமா என்றால் சைவம் தான் தேவை. இதனை வள்ளலார் கூறுவதில் நாம் கேட்க விரும்புகின்றோம். திருவள்ளுவர் போன்ற பெரியோர்கள் கூறுவதை நாம் கேட்க வேண்டும். இவர்கள் எல்லாம் ஏற்கனவே தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். நாம் மீண்டும் சைவமா? அசைவமா? என்று பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.


வள்ளலாரின் வாக்கு ஒவ்வொன்றும் அன்பின் உயிர்நிலை ஒத்தது. அருளின் ஆழம் பொருந்தியது.







வள்ளலார் அருளிய திருவருட்பா பற்றி பேசும் போது அது ஒரு இறை நூலாகும். இதில் பற்பல சாதனை ரகசியங்களும், சிவ ரகசியங்களும் உள்ளடங்கி உள்ளன. நாம் வெறும் பாடலாக பார்த்தல் அதுவும் வெறும் பாடலாய் தெரியும். ஆழ்ந்து நோக்க, ஆச்சர்யங்கள் வெளிப்படும்.



வள்ளலார் ஒரு பன்முக சிந்தனையாளர் என்பது மேலே உள்ள கருத்துக்களில் இருந்து கண்கூடு.
யாராவது வள்ளலார் பற்றி பேசும் போது, நீங்கள் சொல்லுங்கள்..எங்கள் வள்ளலார் தத்துவ யோகி மட்டுமல்ல. தமிழகத்தில் திருக்குறள் வகுப்பு,முதியோர் கல்வி என சீர்திருத்தம் செய்தவர் என்று.


உலகத்தில் எந்த இடத்திலாவது இப்படி ஒரு மகான் பற்றி கண்டிருப்போமா? கேட்டிருப்போமா? இந்தியாவில் ..அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம். நான் உள்ளே 10, 15 தினமிருக்க போகின்றேன். பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தல் யாருக்கும் தோன்றாது வெறும் வீடாகத் தான் இருக்கும் படி ஆண்டவர் செய்வார். என்னை காட்டிகொடார் என்று வள்ளலார் கூறி உள்ளார். ஒரு வீட்டின் அறைக்குள் சென்று 10,15 நாள் இருந்து பின்பு தன் உடல்கூட்டை இந்த பரவெளியில் கலக்க விட்டு, இன்றும் அருள் கொடுக்க, யாரால் முடியும்? நம் வள்ளலார் ஒருவரால் மட்டுமே முடியும்.

அவர் வழியிலே பதிவினை முழுமை செய்கின்றோம்.


அருட்பெருஞ்சோதி...அருட்பெருஞ்சோதி...
தனிப்பெருங்கருணை...அருட்பெருஞ்சோதி...

- மீண்டும் சாதனை செய்வோம்.

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

No comments:

Post a Comment