"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, January 14, 2020

பொங்கலோ பொங்கல்

அன்பின் நெஞ்சங்களே...

நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு சேவையில் தொடர்ந்து இணைந்துள்ள அருளாளர்களுக்கும் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின்  பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 





அண்மையில் நாம் "சமுதாய விழிப்புணர்வு சக்தி சுடர்" என்ற மாத இதழை படித்தோம். பத்தே ரூபாயில் பற்பல செய்திகள். பக்கத்திற்கு பக்கம் நம்மை உற்சாகமூட்டும் தகவல் என இந்த இதழ் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். விரைவில் தனிப்பதிவில் சமுதாய விழிப்புணர்வு சக்தி சுடர் பற்றி பேசுவோம்.


சரி. இன்றைய பொங்கல் திருநாளில் பண்டிகை பற்றி சிறிது சிந்திப்போம்.ஒவ்வோராண்டும் பல பண்டிகைகள் கொண்டாடி வருகின்றோம். தீபாவளி, பொங்கல் என ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு விதத்தில் நம்மை கொண்டாட்டம் கொள்ள வைக்கின்றது. தகவல் தொழில்நுட்பமும் நம்முடன் கை கோர்த்து விட்டது. இருப்பினும் இந்த கொண்டாட்ட நாட்களில் நம்மிடம் ஏதோ குறைந்துள்ளது  சரி..பொதுவாக பண்டிகை பற்றி ஆராய்வோம்.


பண்டிகையை நாம் வெறும் கொண்டாட்டமாக பார்க்கின்றோம். அதாவது வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டாட்டமாக பண்டிகை இன்று இருக்கின்றது. ஆனால் அன்று பண்டிகை என்பது வாழ்க்கையாக இருந்தது. வாழ்வில் ஒரு பகுதியாக பண்டிகை அன்று இல்லை. இன்றைய பண்டிகைகளை நாம் கொண்டாடுவது இனிவரும் தலைமுறைக்கு கொஞ்சம் வழிகாட்டும். சரி ஒவ்வொரு பண்டிகையின் தாத்பரியமாக இருப்பது உற்சாகம்,வித்தியாசம்,பகிர்தல்,ஒன்று  கூடுதல்,நினைத்துப் பார்த்தல், பண்பாடு,பதிவு செய்தல்,கசப்புகளை சரி செய்தல்,உறவுகளை புதுப்பித்தல்,செலவு செய்தல், அகந்தை விடல் என கூறலாம்.இவையெல்லாம் இன்றைய பண்டிகை கால கொண்டாட்டங்களில் குறைவாக உள்ளது.இதனை நிறைவாக்க வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம் ஆகும்.

பண்டிகை கால கொண்டாட்டங்களின் நோக்கம் உற்சாகம் தான். இன்று ஒவ்வொரு மனிதனும் பல துன்பங்கள்,துயரங்களோடு பிழைத்துக் கொண்டு வருகின்றார்கள். இந்த துன்ப,துயர நிலை நீங்கி வாழ்வில் மேன்மை பெற உற்சாகம் தேவை. அதுவும் பண்டிகை கால உற்சாகம் நம்மை உயிர்ப்பிக்கும்.உற்சாகத்தோடு பண்டிகைகளை கொண்டாடுங்கள். ஏன் பண்டிகைகள் கொண்டாட வேண்டும் என்று வேண்டா வெறுப்பை நீக்கி விட்டு, உற்சாகத்தோடு பண்டிகைகளை கொண்டாடி பாருங்கள். உங்களுக்கு புது தெம்பு கிடைக்கும்.


அடுத்து வித்தியாசம். அதென்ன வித்தியாசம்? 365 நாட்களும் ஒரே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? வாழ்க்கையில் ஒரு வித மந்த தன்மை ஏற்படும் அல்லவா? வாழ்க்கை என்றால் சுவாரஸ்யம் இருக்க வேண்டும். அதற்கு வித்தியாசம் வேண்டும். இந்த வித்தியாசம் பண்டிகைகளில் தொடர்கின்றது.ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு வித்தியாசம் கொண்டு உள்ளது. பொங்கல் என்றால் என்றால் சூரியனுக்கு பொங்கலிட்டு நன்றி சொல்வது,தீபாவளி என்றால் புத்தாடையுடன் பட்டாசு என. இந்த வித்தியாசம் மிக மிக தேவையுங் கூட. நாமும் நம் நாட்களை பண்டிகைகள் மூலமாக வித்தியாசமாக மாற்றுவோம்.

அடுத்து தான் மிக மிக ஆழமான செய்தி காண உள்ளோம்.அது தான் பகிர்தல். பண்டிகைகளின் ஆணிவேர் எது என்று ஆழமாக பார்த்தல் அது பகிர்தலே. பகிர்தலே நம் பண்பாடும் கூட.நித்தமும் நாம் பகிர்தலை கைக்கொள்ள வேண்டும். இதனை தான் வள்ளுவரும் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்று கூறியுள்ளார். தினமும் தான் நம்மால் இதனை செய்ய இயலாது. குறைந்தபட்சம் இது போன்ற பண்டிகை நாட்களிலாவது பகிரலாமே. எப்போது நம்மால் பகிர முடியும்? அன்பு இருந்தால் தான் பகிர முடியும். அன்பே கடவுள் அல்லவா? அன்பை வெளிப்படுத்த பகிர்தல் வேண்டும். பகிர்தலை வெளிப்படுத்த பண்டிகை வேண்டும். எனவே தான் நாம் முன்னே சொன்னோம், பகிர்தலே பண்டிகையின் அடி நாதம் என்று.


நாமும் நம் தளம் சார்பில் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடிவு செய்து, பகிர்தலே கொண்டாட்டம் என்ற நோக்கில் தென்காசியில் உள்ள சில சேவை அமைப்புகளுக்கு நம்மால் முடிந்த அளவில் பொருளுதவி செய்தோம்.




நமக்கு வாய்ப்பளித்த தென்காசி சீரடி வைத்திய சாயி திருக்கோயிலுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.






ஓம் பிரணவா ஆசிரமத்திற்கு  நம் நன்றியை இந்தப் பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பகிர்தலோடு நம் பண்டிகைக் கொண்டாட்டங்களை தொடர்வோம். மீண்டும் ஒரு முறை நம்மோடு இணைந்து பயணிக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.






இதோ. தை மாதம் பிறந்து விட்டது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி உள்ளார்கள். அனைவருக்கும் வழி பிறக்க பிரார்த்திக்கின்றோம். மேலும் தை மாதம் என்றாலே நமக்கு அமாவாசை சிறப்பு நாளாக அமையும். இத்துடன் தை பூசமும் வருகின்றது. தை அமாவசை மோட்ச தீப வழிபாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது, விரைவில் அறிவிப்பு செய்தியோடு அனைவரையும் சந்திக்கின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/tut_26.html

No comments:

Post a Comment