அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அடுத்து நாம் சென்ற வாரம் அருணை முனிவன் பிரார்த்தனை மையம் நடத்திய வேல் பூசையில் கலந்து கொண்டோம்.
வேல் பூசை முதன் முதலாக கண்டோம். கேட்டோம். கருத்தில் நிறைத்தோம். காலை 9 மணி அளவில் தொடங்கிய பூசை மதியம் 4 மணி அளவில் தான் முழுமை பெற்றது. இன்னும் அந்த அருள்நிலை நம்முள் அகத்தியமாக நிறைகின்றது. தனிப்பதிவில் இந்த அனுபவம் போற்றுவோம்.
நம் தளத்திற்கும் முருகனுக்கும் நெருங்கிய தொடர்பு என்று தான் சொல்ல வேண்டும். குருவாக நாம் பார்க்கும் போது அகத்தியரின் பதிவுகள் அள்ள அள்ள நிறைவாக கிடைக்கின்றது. அகத்தியரின் வழிபாட்டில் நாம் உச்சமாக கருதுவது பொதிகை யாத்திரை என்று சொல்வார்கள். கடந்த பல ஆண்டுகளாக நாம் விரும்பிய இந்த யாத்திரை நம் குருநாதர் அகத்தியரின் அருளால் 2019 ஆண்டில் நமக்கு கிடைத்தது. நம் குருவின் குருவாக முருகப் பெருமானை நம் தலத்தில் பல பதிவுகளில் கண்டு வருகின்றோம். ஓதிமலை முருகர், வள்ளிமலை முருகன், குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை முருகர் என நாம் அருள் பெற்று வருகின்றோம்.இன்றைய பதிவிலும் முருகனருள் முன்னின்று நம்மை வழி நடத்த முருகப்பெருமானிடம் வேண்டுகின்றோம்.
இன்றைய பதிவில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி செல்ல உள்ளோம். அகத்தியத்தை அன்பால் பரப்பி வருகின்றது சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில். நாம் முதன் முதலாக மாசி மக யாக நிகழ்விற்காக தொடர்பு கொண்டோம். அடுத்து நம்மை மோட்ச தீப வழிபாட்டிற்கு தயார் செய்தார்கள். மேலும் நம்மை அகத்தியம் நோக்கி நகர்த்தி வருகின்றார்கள். சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் மாதம் தோறும் அமாவாசை அன்று யாகம் செய்து, ஸ்ரீ அகத்தியர் தம்பதிக்கு பூசை செய்து வருகின்றார்கள். அப்படி ஒரு முறை நாம் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் சென்ற போது அங்கே உள்ள முருகப் பெருமான் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள். இதோ.. சங்கடங்கள் தீர்க்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகப் பெருமான் கோயிலுக்கு நாம் அனைவரும் செல்ல இருக்கின்றோம்.
பிரம்மரிஷி பட்டம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு கடும் தவம் செய்து கொண்டிருந்தார் விஸ்வாமித்திரர்.அவர் முன் தோன்றிய பரமேஸ்வரர், "தவமுனியே! பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கான வழிமுறைகளை உனக்குச் சொல்ல வல்லவள், பாலதிரிபுரசுந்தரிதான். எனவே அவளை எண்ணி தவம் செய்!' எனச் சொல்லி மறைந்தார்.
அழகெல்லாம் முருகனே... பூம்பறையின் மேவு ..பெருமாளே! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_23.html
குறிஞ்சி ஆண்டவரே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_19.html
தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. அடுத்து நாம் சென்ற வாரம் அருணை முனிவன் பிரார்த்தனை மையம் நடத்திய வேல் பூசையில் கலந்து கொண்டோம்.
வேல் பூசை முதன் முதலாக கண்டோம். கேட்டோம். கருத்தில் நிறைத்தோம். காலை 9 மணி அளவில் தொடங்கிய பூசை மதியம் 4 மணி அளவில் தான் முழுமை பெற்றது. இன்னும் அந்த அருள்நிலை நம்முள் அகத்தியமாக நிறைகின்றது. தனிப்பதிவில் இந்த அனுபவம் போற்றுவோம்.
நம் தளத்திற்கும் முருகனுக்கும் நெருங்கிய தொடர்பு என்று தான் சொல்ல வேண்டும். குருவாக நாம் பார்க்கும் போது அகத்தியரின் பதிவுகள் அள்ள அள்ள நிறைவாக கிடைக்கின்றது. அகத்தியரின் வழிபாட்டில் நாம் உச்சமாக கருதுவது பொதிகை யாத்திரை என்று சொல்வார்கள். கடந்த பல ஆண்டுகளாக நாம் விரும்பிய இந்த யாத்திரை நம் குருநாதர் அகத்தியரின் அருளால் 2019 ஆண்டில் நமக்கு கிடைத்தது. நம் குருவின் குருவாக முருகப் பெருமானை நம் தலத்தில் பல பதிவுகளில் கண்டு வருகின்றோம். ஓதிமலை முருகர், வள்ளிமலை முருகன், குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை முருகர் என நாம் அருள் பெற்று வருகின்றோம்.இன்றைய பதிவிலும் முருகனருள் முன்னின்று நம்மை வழி நடத்த முருகப்பெருமானிடம் வேண்டுகின்றோம்.
இன்றைய பதிவில் திண்டுக்கல் சின்னாளப்பட்டி செல்ல உள்ளோம். அகத்தியத்தை அன்பால் பரப்பி வருகின்றது சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில். நாம் முதன் முதலாக மாசி மக யாக நிகழ்விற்காக தொடர்பு கொண்டோம். அடுத்து நம்மை மோட்ச தீப வழிபாட்டிற்கு தயார் செய்தார்கள். மேலும் நம்மை அகத்தியம் நோக்கி நகர்த்தி வருகின்றார்கள். சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் மாதம் தோறும் அமாவாசை அன்று யாகம் செய்து, ஸ்ரீ அகத்தியர் தம்பதிக்கு பூசை செய்து வருகின்றார்கள். அப்படி ஒரு முறை நாம் சின்னாளப்பட்டி ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் சென்ற போது அங்கே உள்ள முருகப் பெருமான் கோயிலுக்கு அழைத்து சென்றார்கள். இதோ.. சங்கடங்கள் தீர்க்கும் சின்னாளப்பட்டி சதுர்முக முருகப் பெருமான் கோயிலுக்கு நாம் அனைவரும் செல்ல இருக்கின்றோம்.
அதன்படியே தவம் செய்த விஸ்வாமித்திரர் தன் முன் "ஜல் ஜல்' என சலங்கை ஒலி எழவே, விழித்துப் பார்த்தார். அழகே வடிவான சின்னஞ்சிறுமி ஒருத்தி அவர் எதிரே நின்றிருந்தாள். தெய்வீகம் கமழ்ந்த அவளது திருமுகத்தை பார்த்ததுமே முனிவருக்குப் புரிந்துவிட்டது. ஈசன் சொன்ன பாலதிரிபுரசுந்தரியே இப்படிச் சிறுமி வடிவில் தோன்றியிருக்கிறாள் என்பது! அந்த தெய்வீகக் குழந்தையைப் பணிந்தார்.
"விஸ்வாமித்திரா! பிரம்மரிஷி பட்டத்திற்காகவா இப்படி உடலை வருத்தி கொண்டாய்?.இதற்குச் சுலபமான வழி இருக்கிறது. நீ எனக்கு ஒரே ஒரு குங்குமப் பொட்டு வை. அதன் பலனாகவே உனக்கு அந்தப் பட்டம் கிடைத்துவிடும்!' என்கிறாள் தேவி.
மனம் நெகிழ்ந்து மகிழ்ந்த மகரிஷி, "தாயே உங்களுக்குப் பொட்டு வைத்து விட வேண்டும், அவ்வளவுதானே. இதோ இப்போதே திலம் இட்டுவிடுகிறேன்!' என்ற பணிந்தார்.
சிவனது வழிகாட்டலின்படி குங்குமம் தயாரித்து அதை தேவியின் திருமுகத்தில் திலகம் போல் இட்டதை சரிபார்ப்பதற்காக, அருகே இருந்த குளத்து நீரில் தன் பிம்பத்தைப் பார்த்தாள். சிறுமி வடிவில் இருந்த அம்பிகை, குளத்தை அவள் குனிந்து பார்த்த சமயத்தில் குங்குமப் பொட்டின் துகள்கள் நீரில் விழுந்தன. அடுத்த நொடி, அந்தக் குளத்தில் இருந்து தெய்வீக ஒளி பொருந்திய முகம் ஒன்று தோன்றியது.

விஸ்வாமித்திரர், அவ்வதனத்தைக் கைகூப்பி வணங்கினார். அடுத்தடுத்து அதே போன்று மேலும் மூன்று முகங்கள் தோன்றின. அனைத்தும் இணைந்து, நான்கு முகங்களுடன் கூடிய ஒளி வெள்ளம் நிறைந்த தெய்வத் திருஉருவம் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க, "நான்முக முருகா வருக வருக' என்று அழைத்து அணைத்துக் கொண்டாள் தேவி.
ஆறுமுகனை தன் பொருட்டு நான்முகத் தெய்வமாக தேவி படைத்ததைக் கண்டு மெய் சிலிர்த்த விஸ்வாமித்திரர், மனம் உருகினார். "முருகப் பெருமானே! கந்தா.. கதிர்வேலா!' என்று பாடி ஆடித் துதித்துப் பரவசமானார்.

உடனே திரிபுரசுந்தரி, "விஸ்வாமித்திரா! ஈஸ்வரன் அன்று என் அம்சம் இனறி ஆறுமுக வேலனை படைத்தார். நான் இன்று அவரது அம்சம் இன்றி நான்முக வேலனைப் படைத்தேன். இவனே நீ வேண்டும் வரத்தினை அருள்வான்' என்று கூறி மறைந்தாள்.நான்முக முருகனின் தாள் பணிந்த முனிவர் அடுத்த கணமே தனது உள்ளத்தில் இருந்த "தான்' என்ற அகந்தை அழிவதை உணர்ந்தார்.
அதே சமயத்தில் கொஞ்சம் தொலைவில் கல் மழை பெய்யத் தொடங்கியது. அந்தக் கல் மழையை அவருக்குக் காட்டிய நான்முக முருகன், "முனிவரே! அங்கே வந்தால், ஆவன செய்வோம்!' என்று சொல்லிவிட்டு மறைந்தார். அப்படியே கல் மழை பெய்த இடம் நோக்கி நடந்த முனிவருக்கு சிறுவன் ஒருவன் அடையாளம் காட்ட, அவர் வந்து சேர்ந்த இடத்தில் ஒரு முருகன் கோயில் இருந்தது.
அங்கே பாலதிரிபுர சுந்தரியும், நான்முக முருகனும், ஒன்றாக நின்று விஸ்வாமித்திரருக்குக் காட்சி தந்தார்கள்.

"இறையருளைப் பெற தவம் புரியாமல் எதை எதையோ வேண்டி தவம் செய்தேனே' என்று தன் தவறுகளை உணர்ந்து வருந்தினார்.
அப்போது, "பிரம்மரிஷி விஸ்வாமித்திரரே!' என்று குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினார். அங்கே கோயில் வாசலில் வசிஷ்டர் நின்று கொண்டு இருந்தார்.
"வசிஷ்ட முனியே! நான் திருந்தி விட்டேன். உங்கள் மேல் பொறாமை கொண்டு அல்லலுற்ற நான் ஈஸ்வரியின் அருளாலும், சதுர்முக முருகனின் அனுகிரகத்தாலும் அகந்தை நீங்கி, அவர்களின் அருள் பெற்றேன். இப்போது தங்கள் ஆசி வேண்டுகிறேன்' என்று கூறி பணிந்தார் விஸ்வாமித்திரர்.
அவருக்கு பிரம்மரிஷி பட்டம் தந்து ஆசி வழங்கினார் வசிஷ்டர்.

திண்டு திண்டாக கல்மழை பெய்த தலம், திண்டுக்கல்.
ஆடு மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து முருகன் வழகாட்டிய படியால் அவனது கோயில் இருக்கும் இடம் சின்னாள் பட்டி இன்று சின்னாளப்பட்டி.

நம்மை ராஜ கோபுரம் ஏற்கனவே வரவேற்று விட்டது அல்லவா?
திண்டுக்கல் சின்னாளப்பட்டி தவிர, அநேகமாக வேறு எங்கும் நான்கு முகம் கொண்டு முருகன் எழுந்தருளவில்லை என்பது இத்திருத்தலத்தின் தனிசிறப்பு என்கிறது தல வரலாறு. கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை உள்ளது. வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மூலவராகக் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சி. பிராகாரத்தில் விநாயகர், தண்டபாணி, பாலசுப்பிரமணியர், குக்குட சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார்.
தென் திசை பார்த்து அமைந்துள்ள சதுர்முக முருகனுக்காக எதிரே கோயிலின் முன்புற ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சதுர்முகனுக்கு பாலில் குங்குமம் கலந்து அபிஷேகம் செய்வது இத்தலத்தின் சிறப்பு.
இந்த வாயில் வழியே உள்ளே நுழைந்தால் முருகன் அருள் பெறலாம்.
நீங்கள் மேலே படித்த தல புராணம் மீண்டும் இங்கே தருகின்றோம்.
திண்டுக்கல் சின்னாளப்பட்டி தவிர, அநேகமாக வேறு எங்கும் நான்கு முகம் கொண்டு முருகன் எழுந்தருளவில்லை என்பது இத்திருத்தலத்தின் தனிசிறப்பு என்கிறது தல வரலாறு. கோயிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கி உள்ளது. முன் மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்து கருவறை உள்ளது. வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி மூலவராகக் காட்சியளிப்பது கண்கொள்ளாக் காட்சி. பிராகாரத்தில் விநாயகர், தண்டபாணி, பாலசுப்பிரமணியர், குக்குட சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர்.
மகா மண்டபத்தில் உலகம் உய்ய திருக்கோலம் கொண்டவனாக முருகக் கடவுள் நான்கு முகங்களுடன் சதுர்முக முருகனாக மயில் மீது அமர்ந்து தென் திசை நோக்கி காட்சியளிக்கிறார்.
தென் திசை பார்த்து அமைந்துள்ள சதுர்முக முருகனுக்காக எதிரே கோயிலின் முன்புற ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சதுர்முகனுக்கு பாலில் குங்குமம் கலந்து அபிஷேகம் செய்வது இத்தலத்தின் சிறப்பு.
இதோ..இங்கே தான் முருகப் பெருமான் அருள் பெற்றோம்.
செவ்வாய் கிழமை தோறும் நான்மக முருகனுக்கு இப்படி அபிஷேகம் நடக்கிறது. பிரதோஷம், கிருத்திகை, சஷ்டி, வளர்பிறை அஷ்டமி பைரவர் பூஜை யாவும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
இத்தலத்து முருகனை வழிபட்டால், செவ்வாய்தோஷம் தீரும் என்பது நம்பிக்கை.
இக்கோயிலின் தல விருட்சம், வேங்கை மரம். மண்டபத்தின் ஈசானிய மூலையில் நவகிரகங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்திலும் ஒரு விநாயகர் உள்ளார். இத்திருத்தலத்திற்கு வந்து சதுர்முக முருகனை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை இல்லாத குறை போன்ற சங்கடங்களை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மீண்டும் ஒருமுறை வலம் வந்து தரிசனம் செய்தோம்.
அடுத்து வெளி பிரகாரம் சுற்றி வந்தோம். கோயில் மிக மிக பெரிய சுற்று கொண்டதாக இருந்தது. இயற்கை கண்டு இன்புற்றோம். அப்போது தான் அங்கே வெளி மண்டபத்தில் சித்தர்கள் தரிசனம் பெற்றோம்
இத்தலத்து முருகனை வழிபட்டால், செவ்வாய்தோஷம் தீரும் என்பது நம்பிக்கை.
அருள்மிகு விஸ்வாமித்திரர் தரிசனம் இங்கே
அன்றைய தினம் பைரவர் வழிபாடு செய்தோம்.
இக்கோயிலின் தல விருட்சம், வேங்கை மரம். மண்டபத்தின் ஈசானிய மூலையில் நவகிரகங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்திலும் ஒரு விநாயகர் உள்ளார். இத்திருத்தலத்திற்கு வந்து சதுர்முக முருகனை வழிபட்டால் திருமணத்தடை, குழந்தை இல்லாத குறை போன்ற சங்கடங்களை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மீண்டும் ஒருமுறை வலம் வந்து தரிசனம் செய்தோம்.
அடடா..நான்முக முருகப் பெருமான். இது போன்ற அருள்நிலை நம் தமிழ்நாட்டில் இங்கே மட்டும் தான் என்று நினைக்கும் போது மனம் உருகுகின்றது.
இதோ மீண்டும். கோபுர தரிசனம் பெற உள்ளோம்.
எப்படி செல்வது?
கோபுர தரிசனத்தில் நம் முருகப்பெருமானை கண்டதும் மனம் ஒன்றி லயத்தில் ஆழ்ந்தது.கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது மேலே உள்ள படங்களை காணும் போது தெரிகின்றது.
எப்படி செல்வது?
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில், மதுரை செல்லும் வழியில் உள்ளது சின்னாளப்பட்டி. அங்கிருந்து சிறிய பயண ஊர்திகளில் கோயில் செல்லலாம்.
மீள்பதிவாக:-
குறிஞ்சி ஆண்டவரே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_19.html
வள்ளிமலை அற்புதங்கள் - (7) - https://tut-temples.blogspot.com/2019/12/7_26.html
வள்ளிமலை அற்புதங்கள் - (6) - https://tut-temples.blogspot.com/2019/12/6.html
வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html
சிறப்பு 🙏🙏🙏
ReplyDeleteஓம் நமகுமாராய! 🙏🙏🙏
Delete