"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 8, 2020

மகான்கள் அறிவோம்: ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தலத்தில் அவ்வப்போது சித்தர்கள் பற்றி பேசி வருகின்றோம். சித்தர்களின் தரிசனம் கிடைக்காதா என்று யாரும் ஏக்கம் கொள்ள வேண்டாம். இல்லறமாகிய நல்லறத்தை நீங்கள் சிறப்பாக நடத்தி வந்து, தங்களின் விருப்பத்தை தங்களின் அருகில் உள்ள உயிர்நிலை கோயிலில்களில் அல்லது தினசரி வழிபாட்டில் வைத்தால் போதும். அனைத்தும் குருமார்களின் ஆசியோடு சிறப்பாக நடைபெற துவங்கும். சித்தர் மார்க்கம் பார்க்க எளிமையாக தோன்றும்.வெகு எளிதில் யாருக்கும் எட்டாது . புலப்படாது. சித்தன் அருள் பெறுவதும் எளிதன்று. யாரும் பயப்பட வேண்டாம். உங்களை பயமுறுத்துவதும் நம் நோக்கம் அல்ல. சித்தர்கள் விரும்புவது அமைதியைத் தான்.

அந்த வரிசையில் இன்று ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் குரு பூசை கொண்டாடப்படுகின்றது. இன்றைய நன்னாளில் அவரைப் பற்றி இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.

ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர்,  திருவண்ணாமலையை நாடி வந்த முதல் ஞானி என்ற பெருமையையுடையவர். இவர் 1750 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் தோன்றியவர். இயற்பெயர் கந்தப்பன். சிறு பருவத்திலேயே சகல சாஸ்திரங்களையும், புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்த இம்மகான் பருவ வயதை அடைந்ததும் பெற்றோரின் உத்தரவு பெற்று துறவறம் பூண்டார். பிரம்ம யோகி ஸ்ரீ மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார், தன் குருவின் ஜீவ சமாதிக்குப் பின் மீண்டும் தனது தல யாத்திரையைத் துவக்கினார். திருவாரூரில் வாழ்ந்த ‘உகண்ட லிங்க ஞான தேசிகர்’ என்ற மகானின் ஆசியைப் பெற்றார். பின் பல தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டவர் இறுதியில் அண்ணாமலை தலத்தை அடைந்தார். அங்கே அண்ணாமலையின் ஈசானஒ பகுதியில் தங்கி தவம் செய்து வரலானார். அதனால் ஈசான்ய ஞான தேசிகர் என்று இம்மகான் போற்றப்பட்டார்.




விஷமிகளாலும், போலி பக்தர்களாலும் இவரது தவத்திற்கு ஊறு நேராமல் காப்பதற்காக ஸ்ரீ அண்ணாமலையாரும் ஸ்ரீ உண்ணா முலையம்மனும் புலி உருவில் வந்து காவல் காத்தனர். அந்த அளவிற்கு அளவற்ற பெருமையை உடையவர் இம்மகான்


பாண்டிச்சேரியைச் சேர்ந்த அருணாசல சுவாமி என்பவர் தேசிகருக்குச் சீடராய் வந்து சேர்ந்தார். அவர் சந்யாசியாக இருந்தாலும் புதுச்சேரியில் அவருக்கு நிறைய சொத்துக்கள் இருந்தன. அவருக்கு குடும்பமோ, குழந்தைகளோ, வாரிசுகளோ இல்லாததால், அந்தச் சொத்துக்களை விற்று, ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகரிடம் ஒப்படைக்கலாம் என எண்ணினார். ஆனால் தேசிகர் அதற்கு மறுத்து விட்டார். ‘நமக்கு அருணாசலர் ஒருவர் தான் சொத்து, உறவு எல்லாம். அதனால் பணம், நகை என்று எதுவும் வேண்டாம்’ என்று மறுத்து விட்டார்.

ஆனால் அருணாசல சுவாமிகள் தன் முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார். தேசிகர், “சந்யாசிகளுக்கு எதுவும் தேவையில்லை. எந்த ஆசையும் இருக்கக் கூடாது. சந்யாச வாழ்க்கை மேற்கொள்வது என்ற முடிவிற்கு வந்தவன், மீண்டும் அந்தப் பாதையில் இருந்து மாறக் கூடாது. நோக்கத்தை விட்டு விலகிச் செல்லக் கூடாது”  என்று பலமுறை வற்புறுத்தினார். ஆனால் அருணாசல சுவாமி கேட்கவில்லை

தேசிகர் ஒருநாள் அருணாசல சுவாமிகளிடம், ” நீங்கள் இது விஷயமாக உங்கள் சொந்த ஊருக்குச் செல்வதாக இருந்தால், பிறகு இங்கே திரும்பி வர இயலாது. அது நிச்சயம் ” என்று சொன்னார். ஆனால் அருணாசல சுவாமி அதை லட்சியம் செய்யவில்லை. பாண்டிச்சேரிக்குப் புறப்பட்டு விட்டார்.

அங்கே சென்று தன்னுடைய உரிமையை அரசுக்கு நிரூபித்து, தனது சொத்துக்கள் அனைத்தையும் விற்று, தங்கமாக மாற்றிக் கொண்டு அண்ணாமலையை நோக்கிப் புறப்பட்டார்.

ஆனால் வழியில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த மாட்டு வண்டி குடை சாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். மகானின் வாக்கு பலித்தது. அருணாசல சுவாமி எந்த தங்கத்திற்காகவும், பணத்திற்காகவும் குருவாக்கை மீறிச் சென்றாரோ கடைசியில் அது யாருக்கும் கிடைக்காமலேயே போய் விட்டது.

மகான்கள் எதைச் சொன்னாலும் அது நமது நல்லதிற்கே என்ற மனப்பக்குவம் வர வேண்டும். குரு வாக்கை மதித்து உண்மையாகப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் மகான்களின் அருகில் இருந்தும் பயனில்லாமல் போகும். அதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்று.

காணொளி பதிவு கீழே 


                                         

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-



பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் 60 ஆவது குரு பூஜை அழைப்பிதழ் - 31.12.2019 - https://tut-temples.blogspot.com/2019/12/60-31122019.html

மார்கழி சிறப்பு பதிவு - அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_31.html

மாதங்களில் நான் மார்கழி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_21.html

ஆகாயத்தில் ஒரு ஆலயம் - ஸ்ரீ பர்வத மலை கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_16.html

யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html

No comments:

Post a Comment