"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 3, 2020

திருஊரகப் பெருமாளுக்கு செய்த உழவாரப் பணியும் ; அது அள்ளித் தந்த உற்சாகமும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தின் முக்கியமான சேவைகள் ஒன்று உழவாரப் பணி என்றால் அது மிகையாகா. 2017 ம் ஆண்டு ஜூன் மாதம் பெருங்களத்தூரில் உள்ள சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில் ஆரம்பித்த இந்த சேவை எந்த ஒரு தடையுமின்றி மாதந்தோறும் தொடர்ந்து வருகின்றது என்றால் அது அவர்  அருள் தான்.

இன்று கந்தலீஸ்வரர் கோயிலில் செய்ய உழவாரப்பணியின் அனுபவத்தைக் கொடுக்க விரும்பினோம். ஆனால்அலைபேசியில் ஏற்பட்ட சில தொந்திரவால் காட்சிப் படங்கள் அனைத்தும் இல்லாமல் போய் விட்டது.அடுத்த முறை இது போன்று நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம். இப்போது தானே இங்கே அடியெடுத்து வைத்துள்ளோம். ஒவ்வொன்றும் நமக்கு ஒவ்வொரு அனுபவமே. இருப்பினும் அந்த உழவாரப் பணியின் நினைவுகள் நம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளது. வாய்ப்பு இருப்பின் காட்சிப் படங்கள் ஏதுமின்றி அந்த அனுபவத்தை தங்களுக்கு தர இறை அருள் புரியட்டும்.

21 தலைமுறைகளுக்கு தாங்களும், தங்கள் வம்சாவளியினரும் பேரின்பம் பெற்று மீண்டும் பிறவா நிலை எய்தி, சிவபுண்ணியம் ஈட்டி, சிவானந்தப் பெருவாழ்வில் திளைத்து இன்புற வேண்டின் உழவாரப்பணி செய்ய வாருங்கள். 21 தலைமுறைகளுக்கு என்றால், இந்த தலைமுறையும் சேர்த்துத் தான். ஆனால் என்ன? உடனே பேரின்பம் பெற இயலாது. ஒரு வீடு கட்ட வேண்டும் என்றால் நாம் எத்துனை திட்டம் தீட்டுகின்றோம், அஸ்திவாரம் முதல் அடுக்கு மாடி வரை, சமையல் அறை முதல் பற்பல அறைகள் வரை, சித்தாள் முதல் தொழில்நுட்ப வல்லுநர் வரை ( தற்போது வீடு புக் பண்ணுவது தான் நம் வேலை ) என்று பார்த்து பார்த்து கட்டுகின்றோம் என்றால், பேரின்பம் பெறுவதென்றால் சும்மாவா? ஒரே உழவாரப் பணியில் கிடைத்து விடுமா? என்ன..உழவாரப் பணி செய்து கொண்டே இருக்க வேண்டும்.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உழவாரப் பணியினை பொறுத்த வரையில் பலரும் உடல் உழைப்பை தருவது என்று நினைக்கின்றார்கள்.இது மிக மிக தவறான அணுகுமுறை. உழவாரப் பணியில் ஈடுபடும் அடியார்களுக்கு உடலாலும், உடலால் முடியவில்லை என்றால் பொருளாலும், பொருளால் முடியவில்லை என்றால் தம் நேரத்தை எப்படியாவது அவர்களுக்கு உபயோகமாகும் படி செலவழிக்க வேண்டும். உதாரணத்திற்கு உழவார செய்யும் போது, அவர்களுக்கு அருந்த நீர் கொடுப்பது, பொருட்களை பாதுகாப்பது, உழவார செய்த பின், பொருட்களை துடைத்து தருவது என்று சொல்லலாம்.

உழவாரப் பணிக்கும் வயதிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் துளி கூட இல்லை, ஒவ்வொருவரின் வயது, உடல் தெம்பு,தகுதிக்கு ஏற்ப நிச்சயம் உழவாரத்தில் பணிகள் உண்டு. எனவே வயதைப் பற்றி யோசிக்காது, பணியில் ஈடுபடுங்கள்.



அற்புதமாக அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்குத் தானே ஆசைப்பட்டோம் எம் பெருமாளே என்று மனதுள் வேண்டினோம்.


நேரம் ஆகிக்கொண்டே இருந்தது.  குன்றத்தூர் முருகப்பெருமான் தரிசனம் பெற சென்றோம்.



நமக்கு கிடைத்த முருகனின் அருள் பிரசாதம்.




ஸ்ரீ கந்தலீஸ்வரர் கோயில் நிர்வாகி திரு.விஜயகுமார்  ஐயா அவர்கள் நம்மை முருகன் கோவிலுக்கு அழைத்து சென்று தரிசனம் பெற ஏற்பாடு செய்தார்கள். அன்று அனைவருக்கும் பிரசாத பை வழங்கப்பட்டது.



அனைவரும் சேர்ந்து ஒரு காட்சிப்படம் எடுத்துக் கொண்டோம்.





அடுத்து அங்கேயே மதிய உணவு முடித்து மீண்டும் குன்றத்தூர் கோவிந்தனை காண வந்தோம்.



உண்ட  மயக்கத்தில் என்ன பணி நடைபெறும் என்று கேள்விக்குறியோடு யோசித்த போது, அன்பர்கள் ஒவ்வொரு பணியாக எடுத்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ செய்தார்கள். உழவாரப் பணி மதியம் 1 மணி தாண்டி நடைபெற்றது.






கோவிந்தனின் அருளைப் பெற ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு அலங்கார ஏற்பாடு செய்தார்கள். நீங்களே ஒவ்வொரு படமாக பாருங்களேன்.











மகளிரும் உள்ளே வந்து அங்கே சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள். மனதிற்கு நிறைவாக இருந்தது.


















நேரம் மதியம் 2 தாண்டி சென்றது. முழு மனதோடு பணியை முழுமை செய்தோம்.


அடுத்து விரைவாக கோவிந்தன் தரிசனம் பெற்றோம்.






















ஒவ்வொருவராக தரிசனம் பெற்றோம்.



உழவாரப்பணியில் இணைந்த அன்பர்களுக்கு சிறிய அன்பளிப்பாக உலக பக்தர்கள் தினம் புத்தகம் வழங்கப்பட்டது.







மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

என்று பாடி பரவசப்பட்டோம்.



திருஊரகப்பெருமாள் கோயிலில் 2001 ஆண்டு மழை வேண்டி மங்களா சாசனப் பாடல் கல்வெட்டில் 
பதித்து இருந்தார்கள். இது பற்றி குருக்களிடம் கேட்டு அடுத்த பதிவில் அறிய தருகின்றோம்.



உழவாரப் பணி அறிவிப்பு:-

இறை அன்பர்களே.

நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி குன்றத்தூரில்  உள்ள திருவிருந்தவல்லி சமேத திருஊரகப்பெருமாள் திருக்கோயிலில்  வருகின்ற 04.01.2020  சனிக்கிழமை  அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.



நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:04.01.2020  சனிக்கிழமை 
இடம் : திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் திருக்கோயில்         
            குன்றத்தூர் அடிவாரம் 
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 
7904612352


மீண்டும் சிந்திப்போம்.

முந்தைய பதிவுகளுக்கு :-



ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post.html


தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html


2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

மருதேரி மன்னவன் அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா (08.01.2020 ) - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர்! - https://tut-temples.blogspot.com/2019/12/08012020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

No comments:

Post a Comment