"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, January 28, 2020

பெண்மையைப் போற்றுவோம் - 11 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 29.01.20 முதல் 03.02.2020 வரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.



இந்து சமய சேவை கண்காட்சி வருடந்தோறும் நடைபெற்று வருகின்றது. நாம் சென்ற ஆண்டு தான் இதைப் பற்றி கேள்வியுற்றோம். 2018 ஆண்டு மீனம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது. 2019 ஆம் ஆண்டில் வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த ஆண்டு கண்காட்சிக்காக காத்திருந்தோம். அப்போது தான் கீழ்க்கண்ட அழைப்பை கண்டோம். கண்காட்சி நாளுக்காக காத்திருந்தோம்.


 இந்து சமய உயர்நெறிகளையும் தொன்மையான கலாசார மதிப்பீடுகளையும் விளக்கும் வகையில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. அழைப்பிதழ் கண்டு அனைவரும் பயன்பெற வேண்டுகின்றோம்.  

இந்த ஆண்டு கண்காட்சி பெண்மையை போற்றுவோம் என்ற கருத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முத்தாய்ப்பாக அம்மா அவர்கள் 28.01.2020 அன்று கண்காட்சியை தொடங்கி வைக்கின்றார் என்பது கூடுதல் மகிழ்ச்சி.



சென்ற ஆண்டில் ரத ஊர்வலம் சிறப்பாக இருந்தது. இதோ நீங்களே பாருங்கள்.


நம்மை வரவேற்கும் நுழைவாயில் 





               இதோ..ஸ்ரீ ராமானுஜர் தரிசனம் பெற இருக்கின்றோம்.




ஸ்ரீ மதே ராமானுஜர் பாதம் சரணம்




கண்ணப்பர் காட்சி நம்மை ஒன்ற வைத்தது.



அடுத்து காணிப்பாக்கம் விநாயகர் தரிசனம் பெற்றோம்.




முகப்பு பகுதியிலே நாம் இந்த ரதங்களை கண்டோம். அடுத்து கண்காட்சி உள்ளே செல்ல உள்ளோம்.



வாருங்கள்..சேர்ந்து சென்று ரசித்து வருவோம்.


நம்மை முதன் முதலாக வரவேற்ற மூவர் தரிசனம் பெற்றோம்.



அப்பா....சிவமே..சிவமே..என்று வணங்க வைத்தார் நம் பெருமானார்.






அடுத்து ஒவ்வொரு அரங்கமாக சென்று அங்கிருந்த அருளை பெற்றுக்கொண்டே வந்தோம்.



பழந்திருக்கோயில்கள் சங்கம் அரங்கிற்கு சென்றோம். மிகவும் நேர்த்தியாக அரங்கை அமைத்து இருந்தார்கள். பழந்திருக்கோயில்களை பாதுகாப்பதே தலையாய கடமையாய் இவர்கள் தொண்டாற்றி வருகின்றார்கள். வரும் மார்ச்சு மாதம் மிகப் பெரிய அளவில் அன்னதானம் செய்ய உள்ளார்கள். அழைப்பிதழ் பார்த்து தொண்டுள்ளம் கொண்டோர் உதவி செய்தல் நன்று.



அடுத்து hinduupm அமைப்பின் அரங்கு சென்றோம். இவர்களின் தொண்டு பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். வாய்ப்பு கிடைக்கும் போது தொடர்வோம்.






அடுத்த அரங்கிற்கு செல்வோமா?







அடுத்து நம் சிவக்குமார் ஐயா அவர்களை சந்தித்தோம்.





திரு சிவக்குமார் ஐயா குழுவோடு இணைந்து ஒரு முறை உழவாரப்பணி செய்துள்ளோம்.




அட...அச்சிறுப்பாக்கம் வஜ்ரகிரி வடிவேலன் குழுவின் அரங்கம். இது போன்ற முயற்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

அடுத்து ஓம்காரம் இறைபணி மன்ற அரங்கிற்குள் சென்றோம். பல ஆண்டுகளாக அலைபேசியில் மட்டும் தொடர்பு நிலையில் இருந்தோம். அன்று நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.







அடுத்து நம் தளபதி விவேகானந்தர் தரிசனம் பெற்றோம்.




அடுத்து ஏழுமலையான் தரிசனம் பெற உள்ளோம். அதற்கு முன்பாக அவரை பாடல்களில் பஜனை செய்து கொண்டிருந்த மகளிர்.






தென்காசியில் உள்ள ஓம் பிரணவ ஆசிரம அரங்கம் சென்றோம்.


திரு. ஸ்ரீதர் ஐயாவின் சேவை பாராட்டுக்குரியது. APKT என்ற அமைப்பின் மூலம் இவர்கள் செய்யும் பணி பாராட்டுக்குரியது.





அடுத்த அரங்கம் செல்வோமா?







அடுத்து நாம் நால்வரின் பாதையில் அரங்கம் சென்றோம்.




அடுத்து ஐயா வைகுண்டபதி அரங்கம் சென்றோம்.









இது போல் எண்ணற்ற அரங்குகள். ஒவ்வொரு அமைப்பும் தத்தம் தொண்டினை சீராக செய்து வருகின்றது. 6 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தத்தம் கடைமையை இந்த அமைப்பின் தொண்டுள்ளம் படைத்த அன்பர்கள் செய்து வருவது சிறப்பானது. பார்ப்பதற்கு எளிதாக தோன்றும். ஆனால் பங்கு கொண்டு பார்த்தால் தான் அருமை புரியும். அங்கு சென்று ஒரு நோட்டீஸ் கொடுத்து பாருங்கள். சிலர் வாங்குவார்கள். சிலர் அப்படியே ஒரு மாதிரி பார்ப்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். கண்காட்சிக்கு வரும் அன்பர்கள் சிலருக்கு அவர்களின் தேவை பூர்த்தியாகும். வழக்கம் போல் இவ்வருட 11 ஆவது இந்து சமய சேவை கண்காட்சிக்கு தங்களின் பொருளாதாரமும், உடல் உழைப்பும் நல்கும் அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பதிவின் நிறைவாய், ஆன்மிகத்தின் சிறு துளியைத் தான் இங்கே நாம் தொட்டு காட்டியுள்ளோம். இது போல் நூற்றுக்கணக்கான அமைப்புகள், நால்வரின் பாதையில், பழந்திருக்கோயில்கள் சங்கம், ஜீவ அமிர்தம், வள்ளலார் என அனைத்தும் தன சேவைகளை சிறப்புற செய்தும், நமக்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகின்றார்கள். இந்த அமைப்பில் உள்ள சேவை மனப்பான்மை கொண்டவர்கள், தன்னார்வ தொண்டர்கள் என அனைவர்க்கும் மீண்டும் ஒருமுறை  நம் தளம் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மீள்பதிவு:

11 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 29.01.20 முதல் 03.02.2020 வரை - https://tut-temples.blogspot.com/2020/01/11-290120-03022020.html

அறிய வேண்டிய அரிய மனிதர்கள் - 10 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2019 - https://tut-temples.blogspot.com/2019/08/10-2019.html


No comments:

Post a Comment