அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இதோ மார்கழி மாதம் நிறைவு பெற்று, இன்று தை மாதம் பிறந்து உள்ளது. ஆங்கில மாத பிறப்பை நாம் கவனிப்பதை விட தற்போது நாம் தமிழ் மாத பிறப்பை கவனிக்கும் போது நம்முள் ஒரு உற்சாகம் பிறக்கின்றது. அதனுடன் பண்டிகை காலமும் சேர்ந்து விட்டால் ..சொல்லவே வேண்டாம். ஆட்டம்..பாட்டம். கொண்டாட்டம் தான். நம் முன்னோர்களும் இப்படித் தான் தமிழ் மாத பிறப்பை கொண்டாடி இருப்பார்கள் என்று நமக்கு தோன்றுகின்றது.
தமிழர் திருநாள் தைத்திருநாள் இறைவனை வணங்கி தொழிலை சிறப்புடன் தொடங்கும் திருநாள். யுகம் யுகமாக மாசில்லா ஒளியுடன் கருணை மழை பொழியும் சூரிய பகவானையும் எதிர்பார்ப்பில்லாத கடமையாற்றும் நம் கோமாதாக்களையும் வணங்கி, இறைவன் எதிர்பார்க்கும் அதே தூய்மையான மன(தை) இறைக்கு அர்ப்பணம் செய்து தைத் திருநாளை வரவேற்போம். அனைவரும் நலமாக வாழ நம் தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.
மார்கழி மாதத்தை நாம் சிறப்பாக வரவேற்றோம். நம் தளம் சார்பில் அன்னதானம் பல முறை செய்தோம். எண்ணிக்கையில் என்ன இருக்கின்றது. எண்ணங்களே முக்கியம் என்பது தான் நமது தாரக மந்திரமாக உள்ளது. நம் குருமார்களின் குருபூசை சிறப்பாக கொண்டாடினோம். மருதேரி பிருகு அருள்குடிலில் பிருகு அகண்ட ஜோதி தரிசனம் கண்டு, பாசுபத யஃனத்தில் கலந்து கொண்டோம். மேலும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் திருநட்சத்திரமான மார்கழி ஆயில்யத்தில் சிறப்பான வழிபாடு, 108 தீபமேற்றி உலக மக்கள் அனைவருக்கும் பிரார்த்தனை செய்து சிறப்பு அன்னதானமும் செய்தோம். மேலும் பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞான இல்லத்தில் நடைபெற்ற யாகம், திருக்கல்யாண வைபவம், சித்தர்கள் ஜீவாலயம் தரிசனம் என்று நம் குழு அன்பர்களோடு கலந்து கொண்டோம்.
அகத்தியர் ஜெயந்தி - 12.01.2020 நிகழ்வின் துளிகள்
பாண்டிச்சேரி:
1. TUT ஒரு நாள் பாண்டிச்சேரி யாத்திரையாக அமைந்தது
2. அபிஷேகம், யாகம், திருக்கல்யாணம் என பாண்டிச்சேரி விழா சிறப்பு
3. கல்யாண விருந்து, காலை உணவும் அருமை
4. வழக்கம் போல் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கு ஆசிகள்
5. அகத்தியர் பொது நாடி நிகழ்வின் முடிவில் கிடைத்தது.
6. மூன்று சித்தர் ஜீவ ஆலயங்கள் தரிசனம்.
7. நம் தளம் சார்பில் அன்னதான உபாயம்.
கூடுவாஞ்சேரி:
1. அகத்தியர் அபிஷேகம்
2. சந்தன காப்பு அலங்காரம் , வெட்டிவேர் மாலை
3. சித்தர்கள் போற்றி தொகுப்பு, மூல மந்திரங்கள் பாடல்,
4. கோலம் வரைந்து 108 இலுப்பெண்ணை யில் தீப வழிபாடு
5. சிறப்பு பிரசாதம் - தேங்காய் சாதம், வடை, புளியோதரை, பாயாசம்
6. பொதிகை விபூதி பிரசாதம் , எலுமிச்சை கனி பிரசாதம்
7. குருக்கள் வேட்டி,துண்டு அணிவித்து மரியாதை
8. சுமார் 9:30 மணி அளவில் இரு அடியார் ( கணவன், மனைவி யாக) அன்னப்பிரசாதம் சாப்பிட்டு, இது போல் வருடம் ஒருமுறை வழிபாடு செய்யுங்கள் என ஆசி தந்தமை - (அவர்கள் எப்போதும் கூடுவாஞ்சேரி ரயில் நிலைய நுழைவுப்பாதை வழியே தான் எப்போதும் வழக்கமாக செல்வார்களாம். கோயிலின் அருகே உள்ள பாதை வழியே வந்தார்கள். சரியான பசி மயக்கத்தில் வேறு இருந்தார்கள். பிரசாதம் உண்ட பின்னர் வாழ்த்து கொடுத்தார்கள். சில நொடிகளில் இருந்து அந்த இடத்தை விட்டு மறைந்து விட்டார்கள் என்று நம் அன்பர் சத்யராஜ் கூறினார்.சிறப்பான ஆசி நம் அனைவருக்கும் கிடைத்துள்ளது)
இன்னும் எவ்வளவோ உண்டு.பூசைக்கு பொருளுதவி மற்றும் அருளுதவி செய்த அனைவருக்கும் இங்கே நன்றி சொல்ல கடமைப்பட்டுளோம்.
அடுத்து கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் குருபூஜை நிகழ்வு தருணங்களை தருகின்றோம்.
அடுத்து திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலத்தில் நம் குழு நண்பர்களோடு கலந்து கொள்ள குருவருள் நம்மை பணித்தார்கள். மார்கழி மாத உழவாரப்பணி குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. அங்கு முதன் முதலாக திருமுறை விநாயகர் தரிசனம் பெற்றோம். இந்த மார்கழி மாதம் நம்மை திருப்பாவை, திருவெம்பாவை நோக்கியும் ஈர்த்தது. இதுவும் நம் குருவின் வழிகாட்டல் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முதலில் நாம் சிவவாக்கியம் பற்றி அறிய விரும்பி, நித்தம் ஒரு சிவவாக்கியம் சொல்ல விரும்பினோம். ஆனால் மார்கழி மாதம் நம்மை திருப்பாவை, திருவெம்பாவை நோக்கி திருப்பியதால் நித்தம் ஒரு பாடல் என்று பகிர்ந்தோம். இதோ தினமும் பதிவு செய்த தொகுப்பை இங்கே ஒருங்கே தருகின்றோம்.

மூன்று நாட்கள் கடந்தும் இன்னும் உயிர்ப்பாக அருளை இங்கே பெற முடிந்தது.
அடுத்து திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலத்தில் நம் குழு நண்பர்களோடு கலந்து கொள்ள குருவருள் நம்மை பணித்தார்கள். மார்கழி மாத உழவாரப்பணி குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. அங்கு முதன் முதலாக திருமுறை விநாயகர் தரிசனம் பெற்றோம். இந்த மார்கழி மாதம் நம்மை திருப்பாவை, திருவெம்பாவை நோக்கியும் ஈர்த்தது. இதுவும் நம் குருவின் வழிகாட்டல் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் முதலில் நாம் சிவவாக்கியம் பற்றி அறிய விரும்பி, நித்தம் ஒரு சிவவாக்கியம் சொல்ல விரும்பினோம். ஆனால் மார்கழி மாதம் நம்மை திருப்பாவை, திருவெம்பாவை நோக்கி திருப்பியதால் நித்தம் ஒரு பாடல் என்று பகிர்ந்தோம். இதோ தினமும் பதிவு செய்த தொகுப்பை இங்கே ஒருங்கே தருகின்றோம்.
தினமும் இந்த பாடல்களை படித்து விருப்பம் தெரிவித்து பின்னூட்டம் கொடுத்து நம்மை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி கூறி தை மாதத்தை தை மோட்ச தீப வழிபாடு, தை பூசம், சதுரகிரி யாத்திரை என வரவேற்க தயாராக உள்ளோம்.
மேலே தொகுத்துள்ள படங்களை நாம் நாள் வரிசைப் படி தர முடியவில்லை. இனிவரும் பதிவுகளில் இன்னும் ஆழமாக உணர்ந்து தர குருவின் பாதம் பணிகின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment