அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்.
அகத்தியரின் அவதார திருநாளை நாம் கொண்டாட இருக்கின்றோம்.
இன்றைய பதிவிலும் அகத்தியம் தான்..அன்பு தான்..ஆனந்தம் தான். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் அவதார பெருவிழா என்று நமக்கு அழைப்பிதழ் கிடைத்தது. அழைப்பிதழ் பார்த்ததும் என்னே அகத்தியரின் அருள் என்று தான் உணர்ந்தோம். நாம் அளித்துள்ள அனைத்து அகத்தியர் சார்ந்த பதிவிலும் அகக்தியர் தனியாக இருப்பார், இல்லையென்றால் வேறு சிலரோடு இருப்பார். ஆனால் கூடுவாஞ்சேரி அகத்தியரும், அரும்பாக்கம் அகத்தியரும் நமக்கு ஒரே அருள்நிலையில் இருப்பதாக உணர்கின்றோம். இருவரும் இருப்பது விநாயகர் கோயிலில். அதாவது கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அகத்தியர் நமக்கு அருள் செய்து வருகின்றார். அதே போன்று இந்த அழைப்பிதழில் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பூசை நடைபெற உள்ளது. என்ன ஒரு ஒற்றுமை...
இந்த அழைப்பிதழ் கண்டதும் நமக்கு கூடுவாஞ்சேரி அகத்தியர் தான் நினைவுக்கு வருகின்றார். இப்போது தான் நமக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது. வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சென்று வழிபட்டு வந்து மீண்டும் இங்கே பேசுவோம்.8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அருள் பெறவும்.
மேலும் இதற்கு முன்னர் இங்கே நடைபெற்ற விழாக்களின் காட்சிகளை இங்கே பதிவிடுகின்றோம். பார்க்கும் போதே ஏக்கம் பிறக்கின்றது. தவமாய் தவமிருந்து குருவினைக் காண வேண்டி நிற்கின்றோம்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
No comments:
Post a Comment