"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 22, 2020

2019 ஆம் ஆண்டில் தை அமாவாசை தொண்டும் & வழிபாடும்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தை மாதம் சிறப்பாக பிறந்துள்ளது. நாமும் தை மாத முதல் வெள்ளிக்கிழமை தரிசனமாக தேனி வீரபாண்டி கௌமாரிஅம்மன் தரிசனம் குடும்பத்துடன் பெற்றோம். அடுத்து அங்கே உப்பார்பட்டி அருகே உள்ள சிவாலயம் சென்று தரிசித்தோம். அருள்மிகு  ஸ்ரீ அன்னபூரணி உடனுறை ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில் தரிசனம் உப்பார்பட்டியில் பெற்றோம். கும்பாபிஷேகத்திற்கு இந்த சிவாலயம் தயாராகி கொண்டிருப்பதால் அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்யும்படி வேண்டுகின்றோம்.

சரி..சென்ற 2019 ஆண்டில் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழு சார்பில் நடைபெற்ற மறைமதி நாள் வழிபாடு பற்றி இங்கே காண உள்ளோம்.






சென்ற ஆண்டு தை அமாவாசை நாளுக்கு முன்னர் மோட்ச தீபம் ஏற்ற அகல்கள் வாங்கி சுத்தம் செய்து வைத்தோம்.



அடுத்து அமாவாசை அன்னதானம் செய்ய நாம் ஏற்பாடு செய்தோம். குருவருளால் சிறப்பாக அன்னதானம் நடைபெற்றது. அப்படியே அன்று காலை நம் குருநாதரின் தரிசனமும் பெற்றோம்.




அன்பின் வழியை 
அகத்தியத்தில் காட்டி 
நித்தமும் நமக்கு வாழும் நிலை 
காட்டும் நம் குருவை தொழுதோம்.






குருவின் தரிசனம் பெற்ற பின்னர் மீண்டும் அன்னசேவையை தொடர்ந்தோம். அன்னசேவைக்கு பொருளுதவி அளித்து வரும் அன்பர்களுக்கு இங்கே நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டு உள்ளோம்.

அடுத்து அன்று மாலை மோட்ச தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.




இது மட்டுமா? அன்று அபிராமி பட்டர் விழா கொண்டாடுவார்கள். தை அமாவாசை மிக மிக சிறப்பான நாள். அன்றைய தினம் அபிராமி அந்தாதி படிப்பது/ கேட்பது நம்மை இன்னும் செம்மைப்படுத்தும் என்று கேள்விப்பட்டோம். மனம் ஏங்கியது. என்ன செய்வது? குருக்களிடம் இது பற்றி கேட்கலாமா என்று யோசித்து விட்டு மறந்து விட்டோம். ஆனால் நம் கோரிக்கை நிறைவேறியது. வள்ளலார் வழி அன்பர் ஒருவர் அன்று அபிராமி அந்தாதி பாடி நம்மை அசத்தி விட்டார்.






அன்னையின் அன்பை, அருளை, கருணையை, பாசத்தை இன்னும் என்னென்ன சொல்வது அடடா..அன்னையின் தரிசனம் கிடைத்தது. அபிராமி அந்தாதியும் கேட்டோம். அப்படியே மோட்ச தீப முன்னேற்பாடுகளும் நடை பெற்றது.









இதோ. 21 அகல்கள் வைக்கப்பட்டு தீபத்திரியும் தயார் செய்து மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரும் தயாராக இருந்தோம்.



முதல் விளக்காக குத்து விளக்கு ஏற்றி விட்டோம்.

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
       நல்லக விளக்கது நமச்சி வாயவே.     

என்று மனதுள் இறுத்தினோம். அடுத்த பதிவில் மீண்டும் இங்கிருந்து தொடர்வோம்.

மீள்பதிவாக:-


தை மாத அமாவாசை - அபிராமி பட்டர் விழா - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020_22.html



No comments:

Post a Comment