"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, January 1, 2020

ஒரே கல்லுல மூணு மாங்கா : குன்றத்தூர் கோவிந்தனுக்கு உழவாரப் பணி செய்ய வாங்க!

அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.

குன்றத்தூர் என்றாலே நமக்கு சேக்கிழார் தான் நினைவிற்கு வருகின்றார். சும்மாவா? பெரிய புராணம் இயற்றிய பெருந்தகை அல்லவா! சேக்கிழார் பிறந்த மண்ணில் நம் மனம் பதிவதற்கு நாம் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். அடுத்து குன்றத்தூர் முருகன் கோயில். இங்கே கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தனையும் தாண்டி இங்கே குன்றத்தூர் கோவிந்தன் அருள்பாலித்து வருகின்றார் என்பது வெகு சிறப்பு. நாம் எப்போது குன்றத்தூர் சென்றாலும் தெய்வ  சேக்கிழார் வழிபட்ட கந்தலீஸ்வரர், குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் மற்றும் குன்றத்தூர் முருகப் பெருமான் என தரிசனம் பெற்று வருவது வழக்கம்.

ஊர் ஊராக சுற்றாதே; குன்றத்தூரை சுற்று என்றும் கூறலாம். ஏனெனில் நமக்கு பிரபலமாக தெரிந்தது இந்த மூன்று கோயில்கள் தான் . இவற்றையும் தாண்டி சென்னையை சுற்றி உள்ள நவகிரக கோயிலான திருநாகேஸ்வரம் கோயில் உள்ளது. அடுத்து சேக்கிழார் மணி மண்டபம் உள்ளது. சைவம்,வைணவம், கௌமாரம் ,சாக்தம் என அனைத்தும் குன்றத்தூரில் ஒருங்கே ஒருமித்து காணப்படுகின்றது.



எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம், குன்றத்தூர் மண்ணை மிதிப்பது நாம் செய்த புண்ணியமே. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்று கேட்டிருப்போம். நம்  தளத்திலும் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... என்று பதிவு கண்டிருப்போம். ஆனால் இந்தப்பதிவில் மூலம் ஒரே கல்லுல மூணு மாங்கா என குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோயில் உளவரப்பணிக்கு வரும் அன்பர்கள் சேக்கிழார் வழிபட்ட கந்தலீஸ்வரர், குன்றத்தூர் திருஊரகப்பெருமாள் மற்றும் குன்றத்தூர் முருகப் பெருமான் என மூன்று தரிசனம் பெறலாம் என்பதையே தலைப்பின் மூலம் சொல்ல விரும்புகின்றோம்.

சரி..இனி சென்ற ஆண்டில் வைகுண்ட ஏகாதசிக்காக நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின் மூலம் நாம் திருஊரகப்பெருமாள் கோயிலில் செய்த உழவாரப்பணி துளிகளை இங்கே அள்ளித்தெளிக்க விரும்புகின்றோம்.




அனைவரும் சுமார் 10 மணி அளவில் வந்து சேர்ந்தார்கள். இருக்கும் அன்பர்களை வைத்து ஒவ்வொரு பணியாக செய்ய ஆரம்பித்தோம். முதலில் அங்கிருந்த மேடையை நன்கு நீர் ஊற்றி சுத்தம் செய்தோம்,





அடுத்து கோயிலின் உள்ளே உள்ள செடிகளை கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற ஆரம்பித்தோம். இந்த உழவாரப் பணியில் தான் நம் அன்பர் திரு.சத்யராஜ் அவர்கள் நம்மோடு முதன் முதலில் இணைந்தார். அன்றிலிருந்து இன்று வரை TUT சேவைகளில் அளப்பரிய தொண்டு அவர் ஆற்றுவது குறிப்பிடத்தக்கது.




மேலும் நம் அன்பர் திரு.முகுந்த் அவர்களை அன்று சந்தித்தோம். இது மிக மிக சந்தோசமாக இருந்தது.




அடுத்து கோயிலினுள் உள்ள பிரகாரங்களில் ஒட்டடை அடித்து தூய்மை செய்யும் பணி ஆரம்பமானது.பின்னர் தீப மேடைகளை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே கொண்டு வந்தோம். இனி தான் மகளிர் குழுவிற்கு அதிரடியான பணி ஆரம்பம். 






தீப மேடையை தூய்மை செய்யும் பணியில் மகளிரோடு நாங்களும் சேர்ந்து கொண்டோம்.





சுவாமிக்கு சாற்றிய மாலைகளை எடுத்து ஒரு ஓரமாக வைத்தோம். மீண்டும் ஒவ்வொரு சன்னிதியாக பெருக்கி, ஒட்டடை அடித்து சுத்தம் செய்தோம்.




தீப மேடை நன்கு சுத்தம் செய்த பிறகு...





ஆட்கள் குறைவு என்பதால் தீப மேடை சுத்தம் செய்யும் பணி  அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது.











அடுத்து வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் பகுதிக்கு சென்று வெளியே கூட்டி அள்ளினோம். அடுத்து அங்கே தற்காலிக பாதை அமைக்க ஏற்பாடு செய்தோம்.பின்னர் கோயிலினுள் சென்று சொர்க்க வாசல் அலங்கார மேடை தயார் செய்ய ஏற்பாடுகள் செய்தோம்.




இந்த நேரத்தில் மகளிர் குழு கோயிலினுள் வெளியே நீர் ஊற்றி கழுவ ஆரம்பித்து விட்டார்கள்.




கோயிலினுள் உள்ளே சொர்க்க வாசல் அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தது.















அற்புதமாக அலங்கார ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதற்குத் தானே ஆசைப்பட்டோம் எம் பெருமாளே என்று மனதுள் வேண்டினோம்.அடுத்த பதிவில் நாம் உழவாரப்பணி அனுபவத்தோடு, நாம் பெற்ற தரிசனமும் தருகின்றோம். பதிவின் நீளம் கருதி இங்கேயே நிற்போம். இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்  உழவாரப் பணி அறிவிப்பை தருகின்றோம்.

உழவாரப் பணி அறிவிப்பு:-

இறை அன்பர்களே.

நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி குன்றத்தூரில்  உள்ள திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் திருக்கோயிலில்  வருகின்ற 04.01.2020  சனிக்கிழமை  அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.



நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:04.01.2020  சனிக்கிழமை 
இடம் : திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் திருக்கோயில்         
            குன்றத்தூர் அடிவாரம் 
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 
7904612352

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.


முந்தைய பதிவுகளுக்கு :-


தேனியில் ஞானப் பெருந்திருவிழா அழைப்பிதழ் - 05.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/05012020.html

2020 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/12/2020.html

மருதேரி மன்னவன் அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா (08.01.2020 ) - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர்! - https://tut-temples.blogspot.com/2019/12/08012020.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....! - https://tut-temples.blogspot.com/2019/12/tut-2020.html


குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)  - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

No comments:

Post a Comment