"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 31, 2019

தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT - 2020 வருட வாழ்த்துக்களுடன் .....!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தல அன்பர்கள் அனைவருக்கும் 2020 ம் ஆண்டின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 2019 ஆம் ஆண்டில் நாம் பலவிதமான சூழல்களை குருவருளால் கடந்து வந்திருக்கின்றோம். எத்தனையோ மகிழ்வுகள், துக்கங்கள் என ஒவ்வொரு சூழலும் நமக்கு பல படிப்பினைகளை தந்துள்ளது. இந்த அனுபவத்தோடு 2020 ஆம் ஆண்டை வரவேற்போம்.


தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT மூலம் புத்தாண்டு பரிசாக 2020 ம் ஆண்டு நாட்காட்டியை தருகின்றோம். 2020 ஆம் ஆண்டு ஒவ்வொருவருக்கும், நல்வாழ்வை தந்து, நல்விஷயங்களை செய்கிற வாய்ப்பை தந்து, அமைதியையும், ஆனந்தத்தையும், நம் குருநாதர் அருளால் வழங்க வேண்டும்  என வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.










2019 ஆண்டை பொறுத்தவரை தேடல் உள்ள தேனீக்களாய் குழு TUT பலவிதமான பயணங்களை செய்துள்ளது. இதோ. நம் சிந்தனைக்கு செய்தியை கீழே தருகின்றோம்.

1. 2019 ஆண்டு வள்ளிமலை கிரிவலம் மற்றும் தரிசனம் 
2. மாதம் தோறும் கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய வழிபாடு 
3. மாதம்தோறும் அமாவாசை அன்னதானம் 
4. மாதம்தோறும் மோட்ச தீப வழிபாடு 
5. மகாளய பட்ச சேவை 
6. தீபாவளி சேவை 
7. மதுரை இறையருள் மன்ற சேவையுடன் ஒரு நாள் இணைப்பு 
8. ஆப்பூர் உழவாரப்பணி மற்றும் யாத்திரை 
9. கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் உழவாரப்பணி 
10. நம்பிமலை யாத்திரை & கோடகநல்லூர் தரிசனம் 
11. குன்றத்தூரில் ஸ்ரீ கந்தலீஸ்வரர் ஆலயத்தில் மாணிக்கவாசகர் குரு பூசை 
12. திருஅண்ணாமலையில் மலேசியா அகத்தியர் அடியார்களின் மகேஸ்வர பூசை 

இந்தப் பட்டியல் இன்னும் நீளும். இவை அனைத்தும் குருநாதர்களின் அருளாலே அன்றி நம்மால் யாதொன்றும் இல்லை. இதே உத்வேகத்துடன் 2020 ம் ஆண்டில் நாம் சேவைகளை தொடர்வோம்.








2019ஆம் ஆண்டில் முதல் நாளில் நாம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பெற்ற தரிசன காட்சிகளை இங்கே பதிவு செய்கின்றோம்.









































இந்த 2020 ஆண்டில் முதல் உழவாரப் பணிக்காக நம்மை குன்றத்தூர் கோவிந்தன் அழைக்கின்றார். மிக விரைவில் தனிப்பதிவில் உழவாரப்பணி அறிவிப்பில் அனைவரையும் சந்திக்கின்றோம்.

மீண்டும் சிந்திப்போம்.

No comments:

Post a Comment