"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, December 16, 2019

ஆகாயத்தில் ஒரு ஆலயம் - ஸ்ரீ பர்வத மலை கிரிவலம் - முக்கிய அறிவிப்பு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

பருவத மலை யாத்திரை...நம்மை ஆன்ம லயம் செய்யும் யாத்திரை. பயணம் என்று சொல்லலாமே..அதென்ன யாத்திரை. பயணங்கள் திட்டமிடப்படுகிறது. ஆனால்  யாத்திரைகள் தீர்மானிக்கப்படுகிறது. ஆம் யாத்திரை நாம் திட்டமிட்டு செய்ய இயலாது. தீர்மானித்து செய்ய முடிகின்றது. பொதுவாக பருவத மலையை ஆகாயத்தில் ஒரு ஆலயம் என்றே சொல்லலாம். ஆகாயத்தில் நாம் இங்கே ஆன்ம லயம் பெற முடிகின்றது.

இன்றைய பதிவில் பருவத மலை யாத்திரை பற்றியும் பருவத மலை  கிரிவலம் பற்றி காண இருக்கின்றோம். அதற்கு முன்னர் கிரிவலம் பற்றி சில துளிகள்.




கிரிவலம். 

பார்ப்பதற்கும் எளிய சொல்லாக இருக்கும். ஆனால் பக்தியின் ஆழம் உணர்த்தும் சொல். நம்மை சற்று கிரிவலம் செம்மைப்படுத்தியது. பக்தியை நாம் கிரிவலம் மூலம் உணர்த்திருக்கின்றோம். பொதுவாக கிரிவலம் என்றாலே அது திருஅண்ணாமலை கிரிவலம் என்று கேட்டிருப்போம்.ஆனால் தற்போது திருப்பரங்குன்றம், பழநி, வள்ளிமலை என கிரிவலம் செய்து வருகின்றோம். கிரிவலத்தின் போது நாம் என்ன செய்ய வேண்டும். உடல் மட்டும் தான் வலம் வருவதாக நினையாதீர். இங்கே உடலோடு சேர்ந்த மனமும் மலை வலம் செய்ய வேண்டும். அப்போது தான் நம் மனா குப்பைகள் அந்த பரம்பொருளின் தீக்கிரையாகி மலை வலத்தில் மன வளம் பெற்று நாம் வாழ்வில் உயர முடியும். இல்லையேல் நாமும் வழக்கம் போல் கிரிவலம் மட்டுமே சென்று கொண்டிருப்போம். இதோ பகவான் ரமண மகரிஷி கூறும் கதை ஒன்றை தருகின்றோம்.

கிரிவலத்தைப் பற்றி ரமண மகரிஷி கூறிய கதை...

ராஜா ஒருவர் குதிரையில் அமர்ந்து காட்டுப் பூனையைத் துரத்தியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாகக் காட்டுப்பூனை, குதிரை, ராஜா ஆகியோர் இறந்து போனார்கள். மூவரும் ஒரே நேரத்தில் இறந்துபோனாலும் குதிரையும், காட்டுப் பூனையும் மோட்சம் அடைந்துவிட்டன. ஆனால், ராஜாவுக்கு மட்டும் மோட்சம் கிடைக்கவில்லை.

ராஜாவிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனைதான் காட்டுப் பூனைக்கு இருந்தது. ராஜாவின் ஆணையைக் கேட்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் குதிரைக்கு இருந்தது. ஒரே சிந்தனையுடன் ஓடியதால் குதிரைக்கும், பூனைக்கும் மோட்சம் கிடைத்துவிட்டது. ஆனால், பல சிந்தனைகளுடன் காட்டுப் பூனையைத் துரத்தியதால் ராஜாவுக்கு மட்டும் மோட்சம் கிடைக்க வில்லை.

இதேபோன்றதுதான் கிரிவலமும். மனதில் எந்தவிதச் சிந்தனையும் இல்லாமல் `அண்ணா மலையான்’ ஒருவனை மட்டுமே நினைத்துக்கொண்டு கிரிவலம் மேற்கொண்டால் இறைவனின் அருளைப் பரிபூரணமாகப் பெற முடியும்.





சரி..இனி பருவத மலை யாத்திரை யில் தரிசனம் பெற இருக்கின்றோம்.
2000 ஆண்டுகள் பழமை மிக்க ஆலயத்தில் நம் பாதம் பட வேண்டும் என்றால் இந்த யாத்திரை தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்று கண்கூடாக தெரிந்தது. 



அனைவரும் சேர்ந்து தீபமேற்றி வழிபட்டோம். பஞ்ச பூத வழிபாடு செய்தது மனதிற்கு இதமாக இருந்தது.


இங்கு ஒரு விசேஷம் என்ன என்றால் நம் கைகளால் பெருமானைத் தொட்டு நாமே அபிஷேகம்,அலங்காரம் செய்யலாம். எத்தனை நாட்கள் கழித்து நமக்கு இந்த வாய்ப்பு. பொதுவாக அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கூட்டம் இருக்கும். ஆனால் நாம் மற்ற நாட்களில் சென்றதால் நமக்கு வாய்ப்பு கிட்டியது. சிவனே..எம் உயிர்த்துணையே என்று கட்டிக்கொண்டோம். நமக்கு தெரிந்த வழியில் அபிஷேகம் செய்தோம்.


எப்போது மலையேற்றம் இருந்தாலும் நம் உடலில் ஒரு வலி தெரியும். இது புறத்தேடலால் கிடைப்பது. இந்த புறத்தேடல் கண்டிப்பாக அனைவருக்கும் தேவை. இதுவே நம்மை அகத்தேடலில் உயிர்க்க செய்யும். அகத்தேடல் ஆனந்தமாக ஆகாயத்தில் உள்ள இந்த ஆலயத்தில் நமக்கு உணர்த்தப்படும்.



பூசை முடித்து வெளியே வந்தோம். நல்ல வெயில் வேறு. மீண்டும் மீண்டும் திருக்கோயிலை சுற்றி சுற்றி வந்தோம்.



அங்கே இருக்கின்ற சுனை நீர். இந்த நீர் தான் இங்கே கிடைக்கும்.












மலையேற்றம் புறத் தேடலில் தொடங்கி அகத்தேடலில் முழுமை பெறுகின்றது.இதனை நாம் ஒவ்வொரு மலையேற்றத்திலும் உணர்ந்து வருகின்றோம். அவசர அவசரமாக பேசிக்கொண்டு,ஊர்க் கதை அடித்து மலையேறுவதில் உங்கள் உடல் வேண்டுமாயின் உறுதி பெறும். மன நிறைவு,மன மகிழ்ச்சி பெற அகத்தேடல் அவசியம்.



அப்படியே சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம். பின்னர் மலை இறங்க ஆரம்பித்தோம்.சுமார் 3 2 மணி அளவு இருக்கும். அருகில் உள்ள விட்டோபா ஆசிரமம் சென்று தரிசனம் செய்து விட்டு,உணவு அருந்தி விட்டு கீழே இறங்க ஆரம்பித்தோம். குடிக்க மட்டுமே தண்ணீர் இங்கே. நீரின் அருமை அங்கே புரிந்தது. நல்ல உணவும் கிடைத்து.இத்துணை உயரத்தில் எப்படி பொருட்களை கொண்டு வந்து உணவு தயார் செய்கின்றார்கள் என்பது நமக்கே ஆச்சர்யமாக இருந்து வருகின்றது.






இங்கு கிரிவலம் செய்வது மிக மிக விசேஷம். இந்த ஆண்டு கிரிவலம் முடிந்து விட்டது. மேலே உள்ள பலகையை பாருங்கள். இதெல்லாம் தேவை தானா? கொஞ்சமாவது சிந்தியுங்கள்.






                                                 இது தான் ஆசிரமம் செல்லும் வழி








மலை இறக்கம் ஆரம்பித்து விட்டோம். இதோ..நீங்களே பாருங்கள்.



                                                 மேலே ஒரு அடியார் ஏறி வருகின்றார்








முருகன் அருள் முன்னிற்க..யாத்திரை அருமையாக இருந்தது.






















இப்படியெல்லாம் சென்று தரிசனம் செய்ய வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. இப்போதாவது இவ்வளவு வசதி இங்கே உள்ளது. ஏதுமற்ற பழங்காலத்தில் நம் முன்னோர் எப்படி இங்கே வந்திருப்பார்கள். அதனை பார்க்கும் போது நாம் சிறு துளி அளவில் தான் முயற்சி செய்கின்றோம். உடலில் வலு இருக்கும் போதே இது போன்ற யாத்திரைகளை மேற்கொள்ளுவது சிறந்ததும் ஆகும்.




குருவின் பாதத்தில் சரணம் அடைந்தோம்.



                     மலையில் இருந்து படிக்கட்டுகளின் பாதையால்  இறங்க ஆரம்பித்தோம்.















முருகன் அருள் முன்னிற்க ! 




இனி கம்பிகளின் மூலம் பிடித்து இறங்க வேண்டும்.


இதோ கொஞ்சம் பாறைகள் கொண்ட பாதைக்கு வந்துவிட்டோம்.










அன்றைய தினம் நாம் நம் குழுவின் சார்பில் அன்னதான நண்கொடை செய்தோம். கீழே உள்ள அடிவாரக்கோயிலுக்கு இரவின் மடியில் வந்து சேர்ந்தோம். நேரம் அதிகமானதால் நிகழ்வுகளை நாம் சேகரிக்க முடியவில்லை. ஆனால் வித்தியாசமான உணர்வும், அனுபவமும் தந்தது பருவத மலை யாத்திரை. காலை சுமார் 8 மணி அளவில் மலை யாத்திரை தொடங்கி, அன்றிரவு சுமார் 7 மணி அளவில் மலை அடிவாரம் வந்தோம்.

மீண்டும் எப்போது எம் சிவத்தை தொட போகுகின்றோம் என்ற பேராவல் இன்னும் உள்ளத்தில் உள்ளது. நம்மை எப்போதும் வழி நடத்தும் பேராற்றலுக்கும், குருமார்களுக்கும், நம்மோடு இணைந்து பயணிக்கும் அன்பர்களுக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் பருவத மலை அழைப்பிதழை பகிர்கின்றோம்,





மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html

No comments:

Post a Comment