சித்தர்கள்
ஆத்ம தரிசனம் பெற்றவர்கள். ஆத்ம தரிசனம் நாமும் பெற விரும்புபவர்கள். ஆத்ம ஞானம் போதிப்பவர்கள். மதம் மறுப்பவர்கள், குலம் மறுப்பவர்கள், தன்னை மறந்தவர்கள். அனைத்தும் நாம் என்று பரத்தை வசப்படுத்துபவர்கள். ஜீவனில் சிவத்தை உணர்ந்தவர்கள் என்று சித்தர்கள் பற்றி பறைசாற்றலாம். என்ன தான் நாம் சொன்னாலும் இது பெருங்கடலில் பெருங்காயத்தை கரைப்பதை போன்றதே ஆகும். ஒவ்வொரு சித்தர்களும் ஒவ்வொரு மார்க்கத்தை கடைபிடித்துள்ளனர். மார்க்கம் வேறுவேறாக இருந்தாலும் அவர்கள் கடைசியில் கண்ட தரிசனம் ஒன்றே ஆகும். சிலர் பக்தி, சிலர் மந்திரங்கள், சிலர் யோகம், சிலர் ஞானம் என்று வேறு வேறு பாதையாக இருந்துள்ளது. இன்றைய பதிவில் ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் 60 ஆவது குரு பூஜை அழைப்பிதழ் தர குருவருள் நம்மை கூட்டுவித்துள்ளது.
பட்டதாரிச் சித்தரே சரணம் என்று பதிவின் தலைப்பில் கூறியுள்ளது போன்று, ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஐயாவினை பற்றிய செய்திகள் இனி தருகின்றோம்.
திருநெல்வேலி மாவட்டம் கடையனோடை என்று ஊரை சார்ந்தவர்.
முத்து - நாராயண வடிவு தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்தார்கள். ஆண் குழந்தை வேண்டு திருசெந்தூர் சென்று வழிபட்டார்கள். நாராயண வடிவு அம்மா கைகளை பின்னாடி கட்டிக் கொண்டு மண் சோறு சாப்பிட்டு, 48 நாள் விரதம் இருந்தார்கள். 23.11.1908 கார்த்திகை மாதம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர் ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள். முருகன் அழகன் மட்டுமா? அறிவும் ஆவார். எனவே அறிவு சுடர் கொண்டு இவருக்கு சுப்பைய சுவாமிகள் என்று பெயர் வைத்தார்கள்.
ஏற்கனவே கூறியபடி இளங்கலை பட்டம் முடித்த பிறகு சித்த மருத்துவம், ஓலைச்சுவடி என்று திசை திரும்பலானார். பின்னர் தான் சுவாமிகளின் தேடல் விரிந்தது. வள்ளலார், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மஹான்களின் பாதம் பட்ட இடங்களுக்கு சென்று வருகின்றார். பின்னர் மீண்டும் கடையனோடை வந்து அன்னதான சேவையில் முழுதும் ஈடுபட்டார். வள்ளலார் வழியே சுப்பைய சுவாமிகளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
'எனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் எனது உடலை குழியில் இட்டு ஒரு கல்லை போட்டு மூடி வையுங்கள். 40 நாள் கழித்து அந்த உடலைத் திறந்து பாருங்கள். எனது உடல் சாய்ந்தாலோ, சரிந்தாலோ, பிணவாடை அடித்தாலோ மண்ணையிட்டு நிரப்புங்கள். வைத்த நிலையிலேயே எனது உடல் இருந்தால் 10 மாதம் கழித்து ஒரு முறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால் மேலே ஒரு கல்லை எடுத்து மூடிவிடுங்கள்' என்று சமாதி ஆவதற்குச் சில தினங்களுக்கு முன்பே சொல்லி வைத்தார்.
1960 ஜனவரி முதல் தேதி இரவு ஸித்தியடைந்தார். அவர் சொன்னது போலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் முன்னிலையில் அவரின் உடல் திறந்து பார்க்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்!? அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். இதனை காயஸித்தி என்கிறார்கள். இந்த நிகழ்வினை உச்சி பார்த்தல் என்பார்கள். The body was impact என்று சப்கலெக்டர் தனது கெசட்டிலேயே பதிவு செய்டிருக்கிறார்.
சுப்பையா சுவாமிகள் நினைவாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகிலேயே சிறிய அளவில் ஒரு கோயில் கட்டினார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரின் திருஉருவச் சிலையை வணங்கிச் செல்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக தினமும் காலையில் 100 பேருக்கு உணவு, மதியம் 150 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.
மார்கழி சதய நட்சத்திரத்தில் வருடந்தோறும் குருபூஜை நடந்து வருகின்றது. இந்த வருட 60 ஆவது குரு பூஜை 31.12.2019 செவ்வாய்கிழமை அன்று நடை பெற உள்ளது.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம். அழைப்பிதழை கீழே இணைத்துள்ளோம்.
- அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
மார்கழி சிறப்பு பதிவு - அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_31.html
மாதங்களில் நான் மார்கழி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_21.html
ஆகாயத்தில் ஒரு ஆலயம் - ஸ்ரீ பர்வத மலை கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_16.html
யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html
பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html
பாடல் பெற்ற தலங்கள் (7) - அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - https://tut-temples.blogspot.com/2019/11/7_29.html
பாடல் பெற்ற தலங்கள் (6) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/11/6_13.html
பாடல் பெற்ற தலங்கள் (5) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/10/5.html
தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html
பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html
பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html
ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html
பாடல் பெற்ற தலங்கள் (4) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/09/4.html
தரிசிப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் & பாடல் பெற்ற தலங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3.html
பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - https://tut-temples.blogspot.com/2019/08/2.html
பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - https://tut-temples.blogspot.com/2019/07/1.html
ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html
No comments:
Post a Comment