"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 24, 2019

முருகன் குமரன் குகனென்று தோரண மலை முருகனை அழைப்போம்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்,

இன்றைய பதிவில் மீண்டும் தோரண மலை ஏற இருக்கின்றோம். பதிவின் தலைப்பை நாம் தேர்வு செய்வதற்கு நம் குருமார்களின் அருள் வேண்டும் என்றே தோன்றுகின்றது.  இதனை நாம் தீர்மானம் செய்வதும் கிடையாது.இயல்பாகவே நடக்கின்றது. முதல் பதிவில் குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! என்று முருகனை அழைத்தோம். அடுத்த பதிவிற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தே நாட்களை கடத்தினோம். அப்போது நம் தளத்தின் ஆர்வலர் திரு.செல்லப்பன் அண்ணனிடம் பேசும் போது கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே என்று கிடைக்க அடுத்த பதிவிற்கும் கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி என்று வைத்தோம். அடுத்த பதிவிலும் கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே என்று வைத்து இம்முறை கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி என்று மூன்றாம் பதிவில் அழைத்தோம். அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். அப்போது தான்
திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியில் 15 ம் பாடலில் முருகன் குமரன் என்று கிடைத்தது. அதனையே இந்தப் பதிவின் தலைப்பாக வைத்துள்ளோம். ஆம் ! தோரணமலை தோழனை, முருகனை - முருகன் குமரன் குகனென்று என்று இந்தப் பதிவில் அழைக்கலாம்.

என்னப்பா ? இது? தலைப்பிற்கே முன்னுரையா என்று நீங்கள் கேட்கும் கேள்வி நம் காதில் விழுகின்றது. காரணமின்றி காரியமில்லை என்பதை அனுபவபூர்வாமாக கூறவே நாம் இதனை தெரிவிக்கின்றோம்.

அதற்கு முன்பாக, திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியில் 15 ம் பாடலில் முருகன் குமரன் என்ற பாடலை தினமும் படித்தோமானால் நம் மனதின் ஓர்மை சக்தி பலப்படும். இதே போல் மற்றொரு பாடலும் உண்டு. அது என்ன என்று அடுத்து வரும் பதிவில் காண்போம்.

மலையேற்றத்தில் நம் தளம் மூலம் சதுரகிரி,வெள்ளியங்கிரி, அத்திரி மலை, பருவத மலை என சென்று வந்திருக்கின்றோம். இது தவிர ஏராளமான மலைகள் நம் தமிழ் நாட்டில் இருக்கின்றன.தேனி சண்முகநாத மலை, மிருகண்ட மகரிஷி மலை என தற்போது தான் நாம் அறிந்தோம். இது போல் ஒவ்வொரு ஊரிலும் மலைகள் ஏராளம். அவை தரும் நன்மைகளோ தாராளம். தற்போது நம் குழுவோடு நம்பிமலை யாத்திரை சென்று வந்தோம். தற்போது நம் தளத்தில் தோரண மலை, வள்ளிமலை, பருவத மலை என மலை யாத்திரை பதிவுகள் கண்டு வருகின்றோம். ஒவ்வொரு மலையாத்திரையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தது. பருவத மலை எடுத்துக் கொண்டால் மலையின் மேலே கம்பி பிடித்து ஏறி, ஆகாயத்தில் உள்ள சிவனை நம் கைகளால் அபிஷேகம் செய்து தரிசிக்கலாம். நம்பி மலை என்று எடுத்துக்கொண்டால் நம் பெருமாளின் முழு ஆற்றல் நிறைந்த மலை. இங்கே தீர்த்த குளியல் செய்வது சிறப்பு. இது போன்ற சிறப்பு வேறு மலையில் கிடைக்காது. தோரண மலை எடுத்துக்கொண்டால் மலை ஏறுவதற்கு படிகள் கொண்ட வசதி உண்டு. மலை உச்சியில் குகைக்குள் முருகப் பெருமான் தரிசனம். செல்லும் வழியில் தீர்த்தக் குளியல் கொள்ளலாம். இதே போன்று திரு அண்ணாமலை பற்றி நாம் சொல்ல வேண்டியது இல்லை. முதலில் மலை தரிசனம் என்றாலே அனைத்திலும் பசுமை நம்மை சூழும். இது தான் மலை யாத்திரையின் சிறப்பு. அடுத்து மலைகளில் கிடைக்கும் மூலிகை வாசம், நம்மை வசப்படுத்தும். மூச்சு விட இயல்பாக நாம் மலை யாத்திரையில் பழகலாம். 



குகைக்குள் குகன் என்று தோரணமலை முருகனை அழைப்பது சிறப்பு என்பது நீங்கள் மேலே காணும் போது புரியும்.

அங்கே உள்ள சக்தி பீடத்திற்கு சென்று வணங்கினோம்.




பின்னர் குகனை தரிசிக்க சென்றோம். அங்கிருந்து சக்தி பீடத்தின் அழகை ரசித்தோம்.


அடுத்து கோயிலினுள் சென்றோம். குகைக்குள் வாழும் குகனே என்று வேண்டினோம்.




நமக்குத் தெரிந்த முருகனின் பாடல்களை படித்தோம். வள்ளலாரின் தரிசனம் பெற்றோம்.





நமக்கு கிடைத்த தோரணமலை முருகன் அருட்பிரசாதம்.






ஐயப்பனின் தரிசனமும் பெற்றோம்.



அட..என்ன பொருத்தம். இந்த பதிவினை அவன் அருளாலே நாம் இங்கே தரும்போது நாம் பொதிகை யாத்திரை செல்ல ஏற்பாடு ஆகிக்கொண்டு இருக்கின்றது.







தோரண மலை உச்சியை, முருக பெருமான் நடத்தும் சித்தர்கள் சாம்ராஜ்ஜியத்தை இங்கே காண இரு கண்கள் போதவில்லை. ஐம்புலன் மூலம் இங்கே ஒன்றினோம். மனம் பறந்து விரித்து. ஓர் புள்ளியில் ஒடுங்கவும் செய்தது. ஆஹா..இது தான் முருகன் திருவிளையாடல் என்று கண்டோம்,கேட்டோம். கருத்தில் ஒன்றினோம்,





திருமணம், மகப்பேறு ஆகியவற்றுக்காகவும் நோய் குணமாகவும் சொத்து தகராறு, குடும்பத்தகராறு நீங்கவும் தோரணமலை முருகனை வழிபட்டு வருகின்றனர். மருத்துவ படிப்பு, விரும்பிய வேலை, தொழில் அமையவும் உயர்பதவி கிடைக்கவும் அருள்பாலிக்கிறான் முருகன்.

செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் கார்த்திகை, விசாகம் ஆகிய நட்சத்திரங்களும் முருகனை வழிபட உகந்ததாகும்.

மலை அடிவாரத்தில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். வல்லவ விநாயகர், குருபகவான், நவகிரகங்கள், சிவன், கிருஷ்ணர், பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி, சப்தகன்னியர் ஆகியோரையும் அடிவாரத்தில் தரிசிக்கலாம்.

இதோ..மீண்டும் மலையிலிருந்து அடிவாரம் நோக்கி பயணம் செய்ய உள்ளோம்.










ஏற்றமும் தேவை, இறக்கமும் தேவை. மலை ஏற்றத்திற்கு மட்டும் இது பொருந்தா. நம் வாழ்வியலுக்கும் பொருந்தும். இந்த இறக்கத்தை இன்றைய தலைமுறை காண விரும்புவதில்லை என்றே சொல்லலாம். எல்லாம் எளிதாக கிடைக்கும் போது வாழ்வில் இறக்கத்தை சந்திப்பதால் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாது என்னென்னமோ செய்து விடுகின்றார்கள். இதனையெல்லாம் கடந்தால் தான் நாம் விரும்பும் வானம் வசப்படும் என்பதை மலை யாத்திரை நமக்கு உணர்த்துகின்றது.








இதோ. மலை அடிவாரத்தில் முருகப் பெருமான் தரிசனம் மீண்டும் பெற்றோம்.






முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே!

என்ற இந்த கந்தர் அநுபூதியில் 15 ம் பாடலினை தினமும் படிப்போம்.





அடுத்து அங்கே மலை அடிவாரத்தில் மீண்டும் ஐயன் ஐயப்பனை கண்டோம். என்ன ஒரு ஆச்சரியம்.


இந்த பதிவின் மூலம் நீங்கள் பெரும் ஐயப்பனின் தரிசனத்தில் மீண்டும் ஒரு நிகழ்வை சொல்ல விரும்புகின்றோம். 7 ஆம் ஆண்டில் ஐயப்பன் வழிபாட்டில் இரு முடி காட்டும் வழிபாடு பற்றி சில பதிவுகளுக்கு முன்னர் சொல்லி இருந்தோம். இதோ எம் தம்பி சபரிமலையில்  அருமையான தரிசனம் பெற்று, வீட்டிற்க்கு வந்து விட்டார். 




ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா....

இந்த ஒரே பதிவில் சபரிமலை யாத்திரை பற்றியும், பொதிகை மலை யாத்திரை பற்றியும் சொல்வதற்கு இந்தப் பதிவு குருவருளால் முழுமை பெறுகின்றது.

தோரணமலை யாத்திரை எப்படி இருந்தது? அடுத்து நம் தளம் சார்பில் தோரண மலை யாத்திரை ஏற்பாடு செய்து அனைவரும் முருகனை செந்தில் முதல்வனை மாயோன் மருகனை தரிசிக்க குருவருள் வழிகாட்ட வேண்டுகின்றோம்.

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக;-

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_15.html

கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html

குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html

பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html


No comments:

Post a Comment