அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தலத்தில் மலையாத்திரை பதிவு பார்த்து அதிக நாட்கள் ஆகிவிட்டது போன்ற உணர்வு மேலிடுகிறது. அப்படி எல்லாம் நீங்கள் நினைக்க வேண்டாம். வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் பாதியில் நிற்கின்றோம். இன்றைய பதிவிலும் மலை யாத்திரை தான். தற்போது நம் குழு அன்பர்களோடு கோடகநல்லூர் யாத்திரையிலும் மலை யாத்திரையாக நம்பிமலை தரிசனம் பெற்றோம். விரைவில் ஒவ்வொரு தரிசனமும் தனிப்பதிவில் தருகின்றோம். சரி..தோரணமலை யாத்திரைக்கு அனைவரும் தயாரா?
திருநெல்வேலி மாவட்டம் கடையத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் செக்போஸ்ட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தோரணமலை. ராமநதி, ஜம்புநதி ஆகிய இரு நதிகளுக்கடையே வானளாவ உயர்ந்து நிற்கிறது இந்த மலை. மலை உச்சியில் ஒரு சிறிய குகைக்குள் திருச்செந்தூர் முருகனை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறான் குகன்.
மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், தவம், தியானம் ஆகிய ஐம்பெரும் சிறப்புகளை உடையது இந்த ஆலயம்.
கந்த புராணம் கூறும் முருகப்பெருமானின் 16 வடிவங்களில் முதன்மையான ஞானசக்தி வடிவமாக கையில் வேலுடன் மயில் வாகனத்தில் தோரணமலையில் எழுந்தருளி உள்ளான் கந்தன்.
கடையதிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் பார்க்கும் போதே தோரண மலை தெரிகின்றது.
இதோ.தோரணமலை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். மலை எப்படி இருக்கும்? மலைப்பாதையில் படிகளா? இல்லை கற்கள் கொண்ட பாதையா என்று ஏகப்பட்ட கேள்விகள். குகைக்குள் முருகன் தரிசனம் எப்படி இருக்கும் என்ற கேள்வி வேறு.
இதோ. நுழைவு வாயிலை அடைந்து விட்டோம்.
தோரணமலை சிறப்பு :
வாரணமலை என்பது காலப்போக்கில் தோரணமலை என மருவி வழங்கப்படுகிறது. வாரணம் என்பதற்கு யானை என்று பொருள். யானை முன்னங்கால்களை மடக்கி படுத்திருப்பது போன்று அமைந்துள்ளது. 20 கிலோ மீட்டர் தொலையில் இருந்து காண்போருக்கும் தரிசனம் தரும் வகையில் அமைந்துள்ளது தோரணமலை.
வேறெங்கும் காண இயலாத சிறப்பாக 64 சுனைகள் இந்த மலையில் உள்ளன.
கடும் கோடைக்காலத்திலும் வற்றாத வெவ்வேறு சுவையும் மருத்துவ குணமும கொண்டவை இந்த சுனைகள். ஒரு ஸ்தலத்தில் இறைவன் விரும்பி உறைவதற்கு அங்குள்ள புனித தீர்த்தங்கள் காரணமாக அமைகின்றன என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த வகையில் முருகப்பெருமான் தோரணமலையில் விரும்பி உறைவதற்கு 64 சுனைகளும் காரணமாக அமைந்துள்ளன என்றால் மிகையல்ல. ஆகவே இந்த சுனைகள் அனைத்தும் புனித தீர்த்தங்களாக விளங்குகின்றன.
காலையில் தேநீர் கூட அருந்தாமல் இங்கு வந்துவிட்டோம். தேநீர் சாப்பிடலாம் என்று கடைக்கு சென்றோம். அப்போது மனதில் ஒரு குறை வேறு இருந்தது. நம் குருநாதர் தரிசனம் இன்று கிடைக்கவில்லையே என்று. நினைத்தது தான் தாமதம். நாம் சென்ற தேநீர் கடையில் நம் குருநாதர் தரிசனம். சோம்பிய மனம் துள்ளிக் குதித்தது. அடடா. நம் குருநாதர் உத்திரவு கொடுத்துவிட்டார். இனி மனதில் மகிழச்சியோடு அங்கிருந்து மலை ஏற முற்பட்டோம்.
தோரணைமலையில் தங்கிய அகத்தியர் :
அகத்தியரின் மருத்துவ திறனை பயன்படுத்தி தேரையரின் சமயோசித புத்தியை வெளிப்படுத்தி சித்த மருத்துவத்தின் சிறப்பை உலகறிய செய்ய முருகப்பெருமான் திருவிளையாடல் நடத்திய தலம் இது.
தோரணமலையில் ஒரு நாழிகை நேரம் தியானம் செய்து முருகப்பெருமானை வழிபட்டால் உலகையே வெல்லும் ஞானம் கிடைக்கிறது.
எப்படிப்பட்ட நோயும் தானாகவே குணமடைகிறது. அகத்தியர் திருக்குற்றாலம் வந்தபோது அங்கு வைணவத்தலத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளிய பெருமாளை இலஞ்சி குமாரசாமியின் அருளால் சிவபெருமானாக்கி வழிபட்டு பொதிகைமலை நோக்கி வந்தார். வரும் வழியில் வானளாவ கநுவாகன அமைப்பில் உயர்ந்து நிற்கும் தோரணமலையின் அழகில் மனம் லயித்தார்.
மூலிகை செடிகள் ஏராளமாக செழிப்புடன் வளர்ந்திருப்பதை கண்டு பூரிப்படைந்தார். சிறிது காலம் இம்மலையில் தங்கி தவம் புரியவும், சித்த மருத்துவம் ஆராய்ச்சி செய்யவும் விரும்பினார்.
அப்பொழுது தன் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை மலைமீது தவமிருந்து வணங்கி வந்தார்.
மருத்துவ ஆராய்ச்சியில் அவருக்கு உதவியாக அவ்வையாரின் பரிந்துரையின் பேரில் பிறவி ஊமையான ராமதேவன் எனும் அந்தணன் சீடனாக இருந்து வந்தார். மருத்துவ ஆராய்ச்சியில் தனக்கு உதவியாகவும், சிகிச்சையில் சமயோசிதமாகவும் செயல்பட்ட தன் சீடன் ராமதேவனை பாராட்டிய அகத்தியர் அவரை தேரையர் என்று அழைக்க தொடங்கினார்.
தேரையரின் ஊமைத்தன்மையை நீக்கி பேச்சுத்திறனை ஏற்படுத்தினார். தனக்கு தெரிந்த மருத்துவ நுணுக்கங்களையும் தேரையருக்கு கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு பொதிகைமலைக்கு சென்று விட்டார். அவரத ஆலோசனையின்பேரில் தோரணமலையில் முருகப்பெருமானை வழிபட்டு சித்த மருத்துவ ஆராய்ச்சி செய்து வந்தத தேரையர் சுமார் 700 ஆண்டு காலம் தோரணமலையில் தவமிருந்து இறுதியில் அங்கேயே ஜீவசமாதி ஆகிவிட்டார்.
மலை அடிவாரத்தில் விநாயகர் தரிசனம் பெற்றோம்.

அடுத்து பெருமாளிடமும் விண்ணப்பம் செய்து விட்டு யாத்திரையை தொடர்ந்தோம். மலை ஏற்றம் எப்படி இருந்தது. தரிசனம் எவ்வாறு இருந்தது போன்ற அனைத்தும் இனிவரும் பதிவுகளில் தொடர்வோம்.
மீள்பதிவாக:-
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
No comments:
Post a Comment