"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, November 18, 2019

அன்பும் அருளும் ஓங்குக - அகத்தியர் பெருமானுக்கு ஆயில்யம் நட்சத்திர வழிபாடு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குரு என்ற வார்த்தைக்கு தான் எத்தனை சக்தி. மாயமின்றி நம்மை வாழ்க்கைக்கடலில் நீந்த குரு அவசியம். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர நம்மை ஆயத்தப்படுத்துபவர் குரு. இன்றைய சூழலில் குரு கிடைப்பது அரிது. கிடைத்த குருவை தொடர்வது அரிதினும் அரிது. குரு தொட்டுக்காட்டிய வித்தையை பழகுவது அரிதினும் அரிது. ஆம். குரு இல்லா வித்தை பாழ்! இன்று குருமார்கள் பலர் கேள்விக்குரிய செய்திகளாக வலம் வந்து விடுகின்றார்கள். அதனால் தான் சொன்னோம் குரு கிடைப்பது அரிது என்று. நமக்கெல்லாம் உலகிலேயே உன்னதமான குருவாக ஸ்ரீ அகத்தியர் பெருமான் கிடைத்துள்ளார். நம் குழுவின் மூலம் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்யம் நட்சத்திர வழிபாடு செய்து வருகின்றோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாம் மேலும் சில அகத்தியர் ஆலயங்களில் நம் சேவையை தொடர்ந்து வருகின்றோம்.

அந்த வகையில் பனப்பாக்கம் ஸ்ரீ அகத்தியர் பெருமான் கோயிலுக்கு நம் தளம் சார்பில் சென்ற ஐப்பசி மாத ஆயில்ய பூசைக்கு நம் தளம் சார்பில் நம்மால் இயன்ற உபயம் செய்தோம். இம்மாதம் மருதமலை ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு நம் தளம் சார்பில் லோக ஷேமத்திற்காக ஆயில்ய பூசை செய்ய குருவருள் நம்மைப் பணித்துள்ளது. தனிப்பதிவில் மருதமலை ஸ்ரீ அகத்தியர் பெருமான் தரிசனம் தர குருவிடம் விண்ணப்பம் வைத்துள்ளோம்.இங்கே அழைப்பிதழை பகிர்கின்றோம்.



அன்பும் அருளும் ஓங்குக 

உலகம் உய்ய, மன்பதை மேன்மையும்
மாண்பும் பெற்றுத்தமருத்துவர் திகழ 

அகத்தியர் பெருமானுக்கு ஆயில்யம் நட்சத்திர வழிபாடு 

தேடல் உள்ள தேனீக்களாய் பறந்து திரிந்து  'ஆன்மீக அமுதத் தேனை ' திரட்டி
ஆடியவர்களுக்கு வழங்கி வரும் 

ஒரு அற்புதமான ஆன்மீக வளைத்தளம் தான்
" தேடல் உள்ள தேனீக்களாய் குழு"

இக்குழுவைச் சார்ந்த அன்பர்கள் 
அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர வழிபாடு  நடத்துகிறார்கள். 
அவர்களின் வேண்டுதலும்,  சேவையும், தொண்டும் முழுமை பெற நாம் சித்தர் பெருமக்களை வேண்டிக்கொள்வோம். 

மெய்யன்பர்கள் அனைவருக்கும்  கலந்து கொண்டு சித்தர்களின் ஆசியும் அருளும் பெற்று வளமையுடன் வாழ்வோம்!!!

வாருங்கள்!!!

ஓம் திருச்சிற்றம்பலம்!!!

அகத்தியர் மெய்யன்பர்கள் குழு 
ஐஓபி காலனி 
பேசி: +91 86107 33409

Lion.கருத்தப்பாண்டியன் M K
சித்தமருத்துவர்

அடுத்து கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் இங்கே தருகின்றோம்.

கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை 

மெய் அன்பர்களே.
நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் கார்த்திகை மாதம் 3 ஆம் நாள் (19/11/2019)  செவ்வாய் கிழமை ஆயில்ய நட்சத்திரமும், சித்த யோகமும் கூடிய சுப தினத்தில்காலை  8:30 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.


தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in


- அடுத்த பதிவில் சந்திப்போம்.



மீள்பதிவாக :-


அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_15.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

 மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html


No comments:

Post a Comment