"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, October 15, 2019

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க!

அனைவருக்கும்  அன்பு வணக்கங்கள்.

நம் குருநாதர் அகத்தியர் வழிபட்ட தலத்தை இன்று நாம் தரிசிக்க இருக்கின்றோம். குற்றாலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த இலஞ்சி குமாரர் கோயில்.





திருவிலஞ்சி என்னும் இத்திருத்தலத்தில் சித்ரா நதி தீர்த்தத்தில் கபிலர், காசிபர், துருவாசர் ஆகிய மும்முனிவர்களின் ஐயப்பாட்டை நீக்கி அன்னார்கள் வேண்டிக்கொண்டதிற்கிணங்க இத்தலத்தில் ‘இலஞ்சி குமாரராக’ முருகப் பெருமான் வள்ளி,தேசசேனா சமேதராக எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.அத்துடன் பார்வதி – பரமேஸ்வரரின் திருமணங்காண யாவரும் இமயம் சென்ற போது பாரப்பழுவினால் வடதிசை தாழ,தென்திசை உயர்ந்த பொழுது, இதனை சமப்படுத்த சிவபெருமானின் ஆணையை ஏற்றுக் கொண்டு தென்பகுதி வந்த குறுமுனியாகிய அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ‘வெண்மணலான சிவலிங்கம்’ இத்திருக்கோயிலில் உள்ளது.

இவர் அகத்திய முனிவருக்கு தகுந்த உபதேசம் அருளினார்.குற்றால வைணவ தலத்தை சிவஸ்தலமாக மாற்றிய பெருமையுடையவர் அகத்தியர். இமயமலையில் அம்மை அப்பனின் திருமணத்தைக் காண அனைத்துப் பகுதியில் உள்ளவர்களும் வடதிசையில் வந்து குவிந்ததால்.வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. அதைச் சரி செய்ய சிவபெருமான் அகத்திய மாமுனிவரை தென்திசை செல்ல பணிந்தார்.இறைவனின் கட்டளைச்சிர மேற்கொண்டு தென் திசை புறப்பட்ட. அகத்தியர் பொதிகைமலையின் குற்றாலத்திற்கு வந்தார். அப்போது குற்றாலத்தில் உள்ள திருக்கோயில் வைணவத்திருக்கோயிலாக இருந்ததால் வைணவர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.எனவே அவர் சித்ரா நதி தீர்த்திற்கு வந்து வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். தேவநாகரியில் வெண்மணல்”இருவாலுகம்” என்று அழைக்கப்படுவதால் இத்தலத்துச்சிவனுக்கு இருவாலுக ஈசர் என்ற பெயர் ஏற்பட்டது.வந்த வேலை முடிய வேண்டுமே என எண்ணிய அகத்தியர் முருகப்பெருமானை வேண்டினார், முருகப்பெருமானும் அகத்தியர் முன்னே தோன்றி “வைணவ வேடத்திலேயே குற்றாலம் செல்.அங்கு சென்று அங்குள்ள திருமாலைக் குறுக்கி குற்றாலநாதராக்கு எனப் பணித்தார்,அகத்தியரும் அவ்வாறே செய்து தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றினார்.

இது தான் இந்தக் கோயிலின் புராண சிறப்பு ஆகும்.


 மூலவர் திரு . இலஞ்சி குமாரர்
(வரதராசப் பெருமான்)

சிவன் - ஸ்ரீ இருவாலுக நாயகர்

அம்பாள் - ஸ்ரீ இருவாலுக  ஈசர்க்கினியாள்

ஸ்தல விருட்சம் - மகிழமரம்

விசேசமாய் சாற்றப்படும் பூ  செண்பகப்பூ

தீர்த்தம் - சித்திரா நதி.

அகத்திய முனிவரால் பிரதிட்டை செய்யப்பட்ட இருவாலுகநாயக்ரெனும் சிவலிங்கப் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கிறார். 

 அகத்திய முனிவர் பூஜை செய்ததும்  அருணகிரிநாதரால் பாடப்பெற்றுதுமான  வரலாற்று சிறப்பு வாய்ந்தது இத்திருக்கோவில் .

 இங்கு நடக்கும் கந்த சஷ்டி விழாவைப்பற்றி மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் தமது திருக்குற்றாலக் குறவஞ்சியில்  பாடி இருக்கிறார்.

திருக்குற்றாலத் தலபுராணத்தில்  வெற்றிவேற் குமரன் விரும்பி அமர்ந்த தலம் என்றும் , பிரம்மா, இந்திரன் குமரனை அர்ச்சித்து வாழ்ந்த இடம் என்று  குறிப்பிடுகிறது.

”திரு இலஞ்சி முருகனுலா”வில் இக்  கோவிலை சுற்றி இயற்கை அழகு சூழ்ந்து இருப்பதை  பாடுகிறது. இயற்கை எழில் சூழ்ந்து இருக்கும் அமைதியான இந்தத் தலத்திற்கு பலதுறையை சார்ந்தவர்களும் வந்து கண்டு களித்து செல்கிறார்கள்.

1951ல் இக்கோவிலில் ஓர் நூல்நிலையம் அமைக்கப்பட்டது. சமய நூல்கள், அறிவு நூல்கள் , புராண நூல்கள்  என்று பல உள்ளன.

சிந்தனை செய்வதற்கும், படிப்பதற்கும் ஏற்ற அமைதியான  இடமாய் இருப்பதால் இந்த கோவில் நூலகம் அமைக்கப்பட்டது.

சாண்டோ  திரு. M.M.A. சின்னப்பாத் தேவர் அவர்கள்  சுதை வேலைப்பாடு கொண்ட சண்முக பிரகாரம் கட்டி கொடுத்து இருக்கிறார்.

அருணகிரிநாதர் திருப்புகழ் நான்கு உள்ளது. 

”கரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு 
 துரந்தெரிகின்ற  விழிவேலால்”

என்ற பாடல்,

”கொந்தள ஓலை  குலுங்கிடவாளி”
என்று ஆரம்பிக்கும் பாடல்,

”கரங்கமலின் தரம்பவளம்வளை”
என்று ஆரம்பிக்கும் பாடல்

”மாலையில் வந்து மாலை வழங்கு”
என்று ஆரம்பிக்கும் பாடல்  ஆகியவற்றின் மூலம் 

இலஞ்சிக் குமரனின் பெருமைகளை அறியலாம்.





கோயில் வரலாற்றைப் பற்றி சரித்திர குறிப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் திருக்குற்றாலத் தல்புராணம், சுப்பிரமணிய பராக்கிரமம் , இலஞ்சி முருகன் உலா, இன்னுஞ் சில தனிப்பாடல்கள் மூலம் கோயிலைப் பற்றி செய்திகள் தெரிகிறது .

இத்திருக்கோயில் இருவாலுக ஈசர் என்றும் இருவாலுக ஈசர்க்கினியாள் என்றும் சிவத்தலமாக இருந்த போதிலும் திரு இலஞ்சி குமாரர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலிக்கிறார்.அம்மை அப்பருடன் எழுந்தருளி உள்ளதால இங்கு திருமணம் செய்வது விசேஷம்.ஆகவே இங்கு அதிக அளவில் திருமணம் நடப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு ஆகும்.இலஞ்சி என்ற சொல்லுக்கு மகிழம் என்ற பொருள் உண்டு.மேலும், முருகப்பெருமான் ரிஷிகளின் வேண்டுகோளின் படி வரத்தை இன்றும் கொடுத்தருள்கிறார்.இத்தலத்து திருவிலஞ்சிக்குமாரர் வரதராஜப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.திருக்குற்றாலத்தின் ஈசான திசையில் அமைந்துள்ள இலஞ்சியில் குடிகொண்டுள்ள குமரனிடம் கபிலர்,துர்வாசர்,காசிபர்,ஆகியோர் “உண்மையான பரம்பொருள் யார்?” என்று கேட்க “நானே பரம்பொருள்” என்று சொல்லித் தனக்குத் தானே வரதராஜப்பெருமான் எனும் தொல்பெயர் சூட்டிக் கொண்டார். வுரதன் என்றால் வரம் தரும் வள்ளல்வேண்டுவோர்க்கு வேண்டியது கொடுக்கும் வள்ளலாக இத்தலத்துக் குமரன் உள்ளார்.முருகப்பெருமான் கருவில் உதித்த அவதாரம் கிடையாது. சிவனுடைய அங்க அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.அருணாகிரிநாதரின் கந்தரனுபூதியில் வரும் ‘கருதாமறவா” எனத் தொடங்கும் பாடலின் கடைசி வரியில் ‘வரதா முருகா மயில் வாகனனே” என்று பாடுகிறார்.ஆகையினால் முருகனுக்கும் வரதராஜப் பெருமான் என்னும் பெயர்பொருந்தும். 

சரி..கோயில் தரிசனம் பெறலாமா?






அழகான சுற்றுச் சூழலோடு அமைதியும் கூடிய கோயில். மிகவும் ரசித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.வயல்கள் பச்சை பசேல் என்று பார்க்கவே அழகு, வாய்க்கால்களில் சல சல என தண்ணீர் போய் கொண்டு இருந்தது. நீரோடைகளில் நீர் பாய்ந்து சென்று கொண்டு இருந்தது பார்க்கவே அழகு. இந்த இயற்கை அழகின் மத்தியில் நம் முருகப்பெருமான் தரிசனம் தருகின்றார். அழகெல்லாம் முருகனே என்று சொல்வார்கள்,. இந்த கோயில் நமக்கு பேரழகாக இருக்கின்றது. தரிசனம் முடித்து வெளியே வரும் போது பேரின்பமாக இருக்கின்றது.

சரி..இனி தலத்தின் பெருமை காண்போம்.

சிவபெருமானின் திருமணம் காண யாவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்திட அதனைச்சமப்படுத்த அகத்தியர் தெற்கே வந்தார். சிவனின் திருமணத்தைக்காண அவர் விரும்பிடவே திருக்குற்றாலநகரில் இருக்கும் தம்மை பூஜிக்க திருமணமும், நடனக்காட்சியும் அவருக்கு கிட்டும் எனக்கூறி  அருள்புரிந்தார். அதன்படி, அகத்தியமுனிவர் திருக்குற்றாலம் வந்தார். அங்கோ சங்குவடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. சிவனடியாரான அவர் அக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இவர் இலஞ்சி வந்து சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருளும்படியாக குமாரரை வேண்டினார். குமரப் பெருமானும் அருள் வழங்க, அகத்தியர் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகிலேயே வெண்மணலை குவித்து பூஜை செய்தார். அவ்வாறு, மணலைக்குவித்து அகத்தியர் பூஜை செய்த லிங்கம், இருவாலுக நாயகர்  ( பெருமை பொருந்திய அகத்தியரால் வெண்மணல் கொண்டு செய்யப்பட்டவர்) எனும் திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். அதன்பின், அவர் திருக்குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு அரியை, அரனாக மாற்றி வணங்கினார். இவ்வாறு சிவபெருமானை வழிபட அகத்தியருக்கு அருளியவராக இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் திகழ்கிறார். இத்தலத்தில் இருக்கும் விநாயகர் செண்பகவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார். 

இலஞ்சியில் வீற்றிருக்கும் குமாரர்,  கட்டிளமைக் கோலத்தில் அருள்புரிகிறார். இவருக்கு தோசை, அப்பம், வடை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. பிரமதேவரும், இந்திரனின் குமாரரை வணங்கி அருள்பெற்றுச்சென்ற பெருமை பெற்ற தலம். இவரை அருணகிரியார் தனது திருப்புகழில் "வரதராஜப்பெருமாள்' என்ற சிறப்புப்பெயர் கொண்டு அழைத்து சிறப்பித்துள்ளார்.



சரி அப்படியே கோயிலினுள் சென்றோம் 


விநாயகரை தரிசித்தோம்.


புராண காலத்திலேயே இத்திருத்தலத்தை கி.பி 14 ம்நூற்றாண்டில் மாறவர்மன் குலசேகரபாண்டியன் புதுப்பித்துச் செப்பனிட்டுக் கட்டுவித்தான்.இத்திருக்கோயிலன் சுற்று மதில் சுவரை 15ம் நூற்றாண்டில சொக்கம்பட்டி ஜமீன்தாரரான காளத்திய பாண்டியன் கட்டுவித்துச் சிறப்புச் செய்துள்ளார்.






ஸ்ரீ இருவாலுக நாயகரை வணங்கி வந்தோம்.


அப்படியே குமார ஸ்தவம் ஓதினோம்.





மீண்டும் மீண்டும் கோயிலை வலம் வந்தோம். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரம்மபுத்திரரான காசிப முனிவர், திருமாலின் அம்சம் பொருந்திய கபிலமுனிவர் சீகண்ட பரமசிவத்தினின்று தோன்றிய துர்வாசமுனிவர் ஆகியோர் திரிகூடாசலமலையின் வடகீழ்திசையில் ஒன்று கூடி உலகின் பல்வேறு தத்துவப்பொருளையும், அதன் நுணுக்கங்களையும் பற்றி கூடிப்பேசி  ஆராய்ந்தனர். அப்போது, அவர்களுக்குள் இவ்வுலகம் உள் பொருளா? அல்லது இல்பொருளா? என்ற வினா எழுந்தது. கபிலர், உலகம் இல்பொருளே எனக்கூறி தனது கருத்தை வலியுறுத்தினார். ஆனால் காசிபரும், துர்வாசரும் உலகம் முத்தொழில் செய்யும் கடவுளர் இல்லாது இல்பொருள் தோன்றாது. ஆகவே, உலகம் உள்பொருளே என்றனர். அவர்களின் கருத்தை கபிலர் ஏற்றுக்கொண்டார். பின் அவர்கள் உள்பொருளான உலகின் உண்மைப்பொருள் யார் ? என ஆராய்ந்தனர். அப்போது, கபிலர் உண்மையான உள்பொருள் திருமால் என்றார். அதனை மறுத்த காசிபர் உள்பொருள் பிரம்மனே என்றும், உருத்திரனே என்று துர்வாசரும் வாதிட அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது. அப்போது, உண்மை விளங்கிட முடிவு கூறும்படி துர்வாசர் முருகக்கடவுளை வேண்டினார்.  

அவரது வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான், இளமைப்பருவமுடையோனாய் அவர்கள் முன் தோன்றினார் அவர் "யாமே விதியாக நின்று படைப்போம், அரியாக நின்று காப்போம், மற்றையோராக நின்று அழிப்போம் என மூவினையும் செய்யும் மும்மூர்த்தியாக அவர்களிடம் தன்னை அவதரித்துக் காட்டி தானே முக்காலமும் செய்பவன் என அவர்களுக்கு உணர்த்தினார். அதன்பின், அவரை வணங்கிய மும்முனிவர்கள் இவ்விடத்தில் எழுந்தருளி தமக்கு அருள் புரிந்தது போல, இவ்விடத்திலேயே இருந்து வழிபடுவோருக்கு ஞானம் கொடுத்து, விரும்பும் வரம் தருதல் வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த குமாரர், இவ்விடத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார்















நம் குருநாதரின் தரிசனம்.







திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் சிறக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக இங்கு வேண்டிக்கொள்ளப்படுகிறது.











கோயிலின் வெளிப்பிரகாரம் முழுதும் பசுமையாக இருந்தது.பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இங்கு தரிசனம் செய்த போது அகமும் குளிர்ந்து, புறமும் குளிர்ந்தது.



எப்படியோ பாடல் பெற்ற தலத்தில் நம் மனம் தரிசனம் செய்தது பேரின்பமாக இருந்தது. மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

 இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_12.html



சித்தர்களின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_0.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

  திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html


முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html

 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html


 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html


கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment