"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, October 26, 2019

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு சேவையில் தொடர்ந்து இணைந்துள்ள அருளாளர்களுக்கும் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின்  தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 




திருவிழாக்கள் என்றாலே அன்பின் பரிமாற்றம் தானே. ஒவ்வோராண்டும் தீபாவளி திருநாள் சிறுவயது முதல் பெறுவதாக இருந்தது. ஆனால் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு மலர்ந்த பின்னர், நம்மால் முயன்ற அளவில் கொடுக்க ஆரம்பித்தோம். அன்பின் வெளிப்பாடு தான் கொடுப்பது, பெறுவது இன்பம் என்றால் கொடுப்பது பேரின்பம் ஆகும்.

எம்மொழியிலும் இல்லா சிறப்பு நம் தமிழ் மொழியில் உள்ளது. திருவிழா என்று பிரித்து பாருங்கள். திரு விழா..நம்மிடம் உள்ள திரு விழாது இருத்தல் என்று கொள்ளலாம். திரு என்றால் உயர்ந்த, மேன்மை பொருந்திய,ஒப்பற்ற என்று பொருள் கொள்ளலாம். நம்மிடம் உள்ள திரு என்றால் அந்த இறையே ஆகும். இறை நம்மிடம் இருந்து விழாது இருக்க நாம் கொண்டாடுவதே திருவிழா ஆகும். இறை என்றால் என்ன? அன்பே சிவம் ஆகும். அந்த உயர்ந்த, மேன்மை பொருந்திய,ஒப்பற்ற இறைக்கு அன்பு என்றும் சொல்லலாம். நம்மிடம் உள்ள அன்பு விழாது இருக்கவே திருவிழா ஆகும்.இது தான் தமிழின் சிறப்பு. இந்த வகையில் தான் நம் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு திருவிழாவை கொண்டாடி வருகின்றது.

2017 ஆண்டு தீபாவளி திருநாளில் சிறிய துணிப்பை கொடுத்து நம் சேவையை ஆரம்பித்தோம். 2018 ஆண்டில் கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய பூசையோடு TUT தீபாவளி கோயில் குருக்களுக்கு இனிப்பு காரத்துடன் வழங்கினோம். 








நாம் ஏற்கனவே நம் தலத்தில் அறிவிப்பு செய்திருந்தோம்.நம் தளம் சார்பில் மாடம்பாக்கம் முதியோர் இல்லம்,மதுரை இறையருள் மன்றம்,திருஅண்ணாமலை தயவு ஆஸ்ரமம்,தேனி ராம்ஜி டிரஸ்ட் மளிகை சாமான்கள் என தீபாவளி சேவை செய்ய உள்ளோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் நம்மை தொடர்பு கொள்ளவும். இந்த அறிவிப்பை ஒட்டி நம் சேவைகள் ஆரம்பமானது.

2019 ஆண்டில் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி சேவை குருவருளால்   சிறப்பாக தொடங்கியது. 5 கிலோ அரிசி, 2 புது நைட்டி, தீபாவளி புதுத்துணி வகையில் நம் தளம் சார்பில் ரூ.3000 கொடுத்து, புதுத்துணிகளை மாடம்பாக்கம் முதியோர் இல்லத்தில் கொடுத்தோம்.




அடுத்து  ஐப்பசி 6 ஆம் நாள் அகத்தியர் ஆயில்ய பூசை சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் கொண்டாடினோம். மலர் குவியலில், தாமரை பூ மாலை சமர்ப்பித்து நம் ஐயன் தரிசனம் கண்டோம். TUT தீபாவளி சேவையாக கோயில் குருக்களுக்கு இனிப்பு,காரம் கொடுத்து மரியாதை செய்தோம். பூக்கடை வைத்து கோயிலில் சேவை செய்துவரும் அம்மையாருக்கு நம் தளம் சார்பில் புத்தாடை வழங்கினோம்.













அடுத்து கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் உள்ள நந்தீஸ்வரர் அறக்கட்டளைக்கு 25 கிலோ அளவில் அரிசி வாங்கி கொடுத்துள்ளோம்.


இன்னும் நம் சேவைகள் தேனியில் உள்ள ராம்ஜி டிரஸ்ட் மற்றும் மதுரை இறையருள் பணி மன்றத்தில் உள்ளது.அடுத்து வரும் பதிவுகளில் மீண்டும் தொடர்வோம்.

கொடுப்பதும் பெறுவதும் என்றும் இன்பமே
வழிகாட்டும் குருமார்களின் பாதம் பணிகின்றோம்
நம்முடன் இணைந்த நல்லுளங்களுக்கு என்றும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

மீண்டும் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.


மீள்பதிவாக:-


அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்...

No comments:

Post a Comment