"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, October 30, 2019

பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா மற்றும் சந்தனக்காப்பில் ஐப்பசி ஆயில்ய தரிசனம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக !

என்ற பதிவில் பனப்பாக்கம் திருக்கோயில் பற்றி சிறிது அறிந்தோம். அந்தப் பதிவில் 24/11/2017 அன்று அருள்மிகு ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு 108 கலச பூஜை விழா நடைபெறுகின்றது என்று குறிப்பிட்டு அழைப்பிதழ் இணைத்திருந்தோம். அன்றைய தினம் அகத்தியர் அருளிய அருள் நிலைகளை இங்கே அனைவரும் அறியத் தருகின்றோம்.


பனப்பாக்கம் பற்றியும் அந்த திருத்தலத்தின் மகிமையைப் பற்றியும் அறிந்த பிறகு நம்மால் இருப்பு கொள்ள முடியவில்லை. பின்னே சும்மாவா? உமாதேவி,நந்திதேவர்,இந்திரன்,பிரம்மன், திருமால், தக்கன், இராகவன், மன்மதன்,இயமன், வீரபத்திரர்,அகத்தியர் , வேதியர் என அனைவரும் இங்குள்ள  மாயூரநாதரை  தரிசித்துள்ளனர் என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களின் திருப்பாதம் பட்ட இடத்தில் நாம் சென்று தரிசனம் செய்தால் நிச்சயமாக நம்மிடம் உள்ள துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெறலாம்.சரி. இனிபனப்பாக்கம் செல்வோமா ? இத்தலத்தில் புலியும்,மயிலும் வந்து வழிபட்டுள்ளார்கள் என்பதை திருப்பனசை புராணம் மூலம் அறியலாம்.





முழுமுதற் கடவுளை வழிபடுவோம்.



இன்னும் சிறப்பாக ! புலியும் ,மயிலும் வழிபட்ட தலம் என்று உரைக்கும் காட்சி மேலே 

தல விருட்சம் 

தல விருட்சம் என்றால் ஏதோ ..சாதாரண மரம் என்று நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு தளத்திற்கென்று ஒரு விருட்சம் உண்டு. அந்த காலத்தில் ஏதேனும் நோய்,நொடி இருந்தால் அப்படியே தீர்த்த யாத்திரை செல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொருதிருக்கோயிலுக்கு சென்று, குளத்தில் நீராடி. அப்படி நீராடும் போது, அந்த திருத்தலத்தின் விருட்சங்களில் உள்ள இலை,பூ உதிர்ந்து அவை குளத்து நீரிலே அதன் ஊட்டத்தை பரப்பி இருக்கும். எனவே நீராடிய பின்னர், நோயாவாது,நொடியாவது பறந்து விடும். அப்படி சரியாக வில்லை என்றால், அடுத்த திருக்கோயில். இப்படி தீர்த்த யாத்திரை மூலம் ஆரோக்கியம் காத்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் நாம் வெறும் கேள்விக்குறியே மிஞ்சுகிறது ?




ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தியர் திருவடி சரணம் !



போற்றினால் எமது வினை அகலுமப்பா !
உன் பதம் போற்ற இப்பிறவி ஒன்று போதுமோ?
அறிந்திலேன் யான்... மீண்டும் ஒரு பிறவி வாய்க்கின் 
நின் பாதம் போற்ற அருள் தாருமய்யா !!









108 கலச பூஜை செய்கின்ற அருட் காட்சி. அடுத்து அலங்காரம், தீபாராதனை.












நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகின்றது அல்லவா?








சித்தர் அடியார்களுக்கு மேலும் சிறப்பான தரிசனமாக, உத்திராட்ச மண்டபத்தில், சந்தன காப்பு அலங்காரத்தில் பணப்பாக்கம் அகத்திய முனிவ தம்பதி தரிசனம் தர இருக்கின்றோம். ஐப்பசி ஆயில்ய தரிசனம் இங்கே பகிர்கின்றோம். பதிவின் ஆக்கத்தில் நமக்கு இந்த எண்ணம் தோன்றவில்லை.ஆனால் பதிவை முழுமை செய்யும் போது  குருநாதர்  நம்மை வழிநடத்துகின்றார் என்பது உணர்வில் பதிக்கின்றோம். 










நந்திதேவர் அருளிய அகத்தியர் துதியை இனிவரும் பதிவுகளில் அளிக்க குருவிடம் வேண்டுகின்றோம்.

மீள்பதிவாக:-

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

No comments:

Post a Comment