"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, October 20, 2019

தாமிரபரணி புஷ்கரம் - சில செய்திகள்

 அனைவருக்கும் வணக்கம்.

அனைவரும் ஆயுத பூசை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என்று விரும்புகின்றோம்.
நவராத்திரி தரிசனம் கண்டு வந்தோம். நம் குழுவின் சார்பில் நவராத்திரி சேவையில் பங்கு பெற இயலவில்லையே என்று இருந்தோம். ஏனென்றால் கூடுவாஞ்சேரியில் உள்ள இரு கோயிலிலும் வழக்கமாக நவராத்திரி உபயதாரர்களே இந்த ஆண்டும் தொடர்வதாக கூறினார்கள். நாமும் அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். இந்த சூழலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நாம் நவராத்திரி தரிசனம் செய்து கோயிலுக்கு வெளியே வந்துவிட்டோம்.( குருக்கள் கோயிலில் இல்லை என்று உறுதி செய்த பின்னர் தான் )

வெளியே வந்த உடன், நம் பெயர் சொல்லி அழைக்கும் சப்தம் கேட்டது. யார் நம்மை அழைக்கப் போகிறார்கள் என்று திரும்பி பாரத்தால் கோயில் குருக்கள் என்று தெரிந்தது. உடனே அருகில் சென்று பேசினோம். அவர் விஜய தசமி சண்டி ஹோமத்திற்கு ஏதாவது கைங்கர்யம் செய்யலாமே என்று கேட்டார். மொத்தம் 13 அத்தியாயங்களாக நடைபெறும். முதல் அத்தியாயம் தேடல் உள்ள தேனீக்களாய் -TUT குழு மூலம் செய்யலாமே என்றார். எவ்வளவு தொகை என்று கேட்டோம். ரூ.5000 ஆகும் என்றார். அவரே நீங்களே செய்யுங்கள் என்று பணித்தார். நாமும் சரி என்று கூறிவிட்டு நகர்ந்தோம்.



இரண்டு நாள் கழித்து நம் நண்பரும் அகத்திய அடியாருமான திரு.பத்ம குமார் அவர்கள் நம்முடன் பேசினார். கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய விழைவதாக கூறினார்.உடனே நாம் இது போல் சண்டி ஹோமம் இருப்பதாக கூறி அவரை கோயிலுக்கு அழைத்து சென்றோம். பாதி தொகையினை அவரே கொடுத்தார். நாம் மீதம் உள்ள தொகையை நேற்று கொடுத்தோம்.இன்று காலை கோயிலுக்கு சென்றோம். அற்புதமான அலங்காரத்தில் அம்மன் தரிசனம் பெற்றோம். ஹோமத்தில் கலந்து கொண்டோம். நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவிற்கு சங்கல்பம் செய்தோம். நம் அன்பர்கள் சிலரும் வந்து ஹோமத்தில் கலந்து கொண்டனர்.இது சென்ற ஆண்டு அனுபவம் ஆகும். இந்த ஆண்டும் நம் தளம் சார்பில் சண்டி ஹோமத்தில் கைங்கர்யம் செய்தோம். நம் தளம் சார்பில் மூவர் கலந்து கொண்டனர். அதில் திரு.குமார் ஐயாவின் அனுபவம் சிறப்பாக இருந்தது.தனிப்பதிவில் தருகின்றோம்.

சரி..தாமிரபரணி புஷ்கரம் சென்ற ஆண்டில் சிறப்பாக நடைபெற்றது. நாம் தாமிரபரணி புஸ்கரத்தில் நம் குடும்பம் சகிதமாக கலந்து கொண்டோம். அன்றைய தினம் அகத்தியரின் அருள் நமக்கு முழுமையாக கிடைத்தது. அன்று கோடகநல்லூர் பெருமாள் கோயிலுள் உழவாரப்பணி செய்யும் பாக்கியம் கிடைத்தது. நம் குருநாதரின் கால் படுகின்ற மண்ணில் நம் மனம் பட்டது.

 இனி, தாமிரபரணி புஷ்கரத்தில் நம் ஐயன் அகத்தீசன் தரிசனக் காட்சிகள் இங்கே இணைக்கின்றோம்.






















புஷ்கரணி நாயகனை தரிசனம் செய்தீர்களா? எப்படி இருந்தது? இறை,சித்தம், தாமிரபரணி என் என்றால் அது அகத்தின் ஈசனாம் அகத்தியரின் அருளாலே அன்றி,வேறென்ன? 

நம்மால் முடிந்த வரை கோடகநல்லூரில்  உழவார செய்து முடித்து விட்டு, தாமிரபரணி புஸ்கரம் சென்று அன்னையை வணங்கினோம். கோடகநல்லூர் கோயிலின் அருகிலே உள்ள அன்னையை வழிபட்டு நமக்கு குருமுகமாக வழிகாட்டிய படி, அன்னைக்கு தீபமேற்றி ,மந்திரம் கூறி வழிபட்டோம்.





 அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment