அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
துளஸீஸ்வரர் கோவிலானாது சிங்கப்பெருமாள் கோவில் ஊருக்கு அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் பல்லவ காலத்தில் கட்டப்பட்டது.இந்த தலம் 1200 ஆண்டுகள் பழமையை உடையது.ஸ்ரீ துளஸீஸ்வரர் பக்த சபா என்ற ஆன்மிக சபா மூலம் கோவில் புணரைப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இங்கே தினசரி பூஜை மற்றும் பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
இங்குள்ள சிவனார் கிழக்கு நோக்கியும்,சற்று ஈசான்ய மூலை நோக்கியும் பார்க்கின்றார்.இந்த கொளத்தூர் கிராமம் இவரின் அருளால் மேம்பட்டு வருகின்றது என்பது கண்கூடு.
தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானின் திருக்கல்யாணத்தைக் காண கயிலையங்கிரிக்குச் சென்றார்கள். அதனால் பூமியின் வடபாகம் தாழ்ந்து, தென்பாகம் உயர்ந்தது. அதை சமன் செய்ய ஈசன் குருமுனி அகத்தியரை தென் திசைக்கு அனுப்பினார். தென் திசைக்குக் சென்ற அகத்தியர் அங்கு 108 சிவ லிங்கங்களை நிறுவி பூஜித்தார். அந்த 108 சிவலிங்கங்களுள் ஸ்ரீ துளஷீஸ்வரர் லிங்கமும் ஒன்றாகும். கோவிலுக்குத் தெற்கே அகத்தியர் ஒரு தடாகத்தை உருவாக்கி கொன்றை மாலை சார்த்தி துளசியால் அர்ச்சித்து புரட்டாசி பவுர்ணமி நாளில் வழிபட்டார். இதனால் மகிழ்ந்த ஸ்ரீ துளஷீஸ்வரர்,

அகத்தியருக்கு அர்த்தனாரீஷ்வரராய் காட்சி கொடுத்தார். இவை அனைத்தும் இக் கோவில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
கணவன்-மனைவியிடையே
ஒற்றுமையும், அன்பும் ஓங்கவும், இரண்டு பேரும் சேர்ந்து வாழ
வேண்டுமென்றும், அன்னியோன்யமாக இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் ஏதோ ஒரு ஈகோவினாலும், வைராக்கியத்தாலும் விட்டுக் கொடுக்காமல்
இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஸ்ரீ துளஷீஸ்வரர் ஒரு
வாரத்தில் பலன் கொடுக்கிறார். (ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.)
ஜாதகத்தில் சந்திரன் நீசமாயிருப்போரும், சந்திர பலம் குறைந்திருப்போரும்,
திங்கட்கிழமைகளில், சந்திரஹோரையில் அர்ச்சனை செய்து ஆராதிப்பது மிகச்
சிறப்பாகும்.
ஸ்ரீ திருநாராயணன் பெருமாள் கோவிலும் அருகே உள்ளது.ஸ்ரீ துளஸீஸ்வரர் தரிசனத்தோடு இவரையும் தரிசனம் செய்யுங்களேன்.
ஸ்ரீ துளஸீஸ்வரர்
அன்னாபிஷேகத்தில் ஸ்ரீ துளஸீஸ்வரர்
ஸ்ரீ வில்வநாயகி
பிரதோஷம் மற்றும் சிவராத்திரி பூஜையின் போது ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ
துளஸீஸ்வரர் தரிசனம் மேலே கண்டீர்களா? கண்டிப்பாக ஒரு முறை சென்று
வாருங்கள். இந்த தலத்தில் உள்ள அகத்தியர் தரிசனம் பெறாமல் விட்டால் எப்படி?
இந்த தரிசனம் நிறைவு பெறும் ? அகத்தியர் தரிசனம் கீழே
மீள்பதிவாக:-
ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_23.html
மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html
No comments:
Post a Comment