"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, October 31, 2019

திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னின்று நம்மை வழிநடத்தி வருகின்றது. இந்த ஆண்டின் சஷ்டி விரதமும் சிறப்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிரகாசித்து வருகின்றது. நம் குருநாதர் அகத்திய பெருமானும், குருவின் குருவாம் கந்த பெருமானும் நம் தலத்தில் தினமும் பவனி வருகின்றார்கள்.  சென்ற ஆண்டு போகிற போக்கில் விரதம் இருந்தோம். இதற்கே கருணைக்கடவுள் நமக்கு அள்ளிக்கொடுத்துள்ளார். ஓராண்டு விரத நிறைவிற்குள் சிக்கல் தரிசனம், திருச்செந்தூரில் மணவாழ்வும் எமக்கு கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் இன்னும் சிரத்தையாக விரதம் இருந்து வருகின்றோம்.

தினமும் முருகன் தரிசனம் நமக்கு தித்திப்பாக இருக்கின்றது. கூடுவாஞ்சேரி முருகன், திருப்போரூர் கந்தன், வல்லக்கோட்டை முருகன், வயலூர் முருகன் என்று தரிசனம் பெற்று வருகின்றோம். விரைவில் தனிப்பதிவில் அனைத்து தரிசனம் தருகின்றோம். சஷ்டி என்றால் சூரசம்காரம் என்று நினைவில் வருகின்றது.சூரசம்காரம் என்றால் திருச்செந்தூர் தானே. சஷ்டி பதிவுகள் திருச்செந்தூர் திருவிழா 2019 அழைப்பிதழ் இன்றி இனிக்குமா? சென்ற ஆண்டில் திருச்செந்தூர் திருவிழாஅழைப்பிதழ் பச்சை வண்ணத்தில் கண்களை கவர்ந்தது. இந்த ஆண்டும் காத்துக் கொண்டு இருந்தோம். கொக்கானது ஒற்றைக் காலை உயர்த்தி, மீனுக்காக காத்திருப்பது போன்று, நாம் திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்  காண காத்திருந்தோம்.கிடைத்ததும் கண்களில் ஒற்றினோம். இதோ..இன்றைய பதிவில் தருகின்றோம்.










 திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2018 அழைப்பிதழ் மீண்டும் இங்கே பகிர்கின்றோம்.











இந்த ஆண்டு கந்த சஷ்டித் திருவிழா கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் கொண்டாட குருவருள் கூடியுள்ளது. மோட்ச தீபத்திற்கு வரும் அன்பர்கள் அன்றைய தினம் காப்புக் கட்டிக்கொண்டு, 6 நாள் விரதம் இருந்து சஷ்டி திருவிழாவில் கலந்து கொள்ள குருக்கள் நம்மிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். நம் அன்பர்கள் சிலர் விரதம் இருந்து வருகின்றார்கள்.முருகன் அருள் முன்னின்று நடத்த நாம் காத்துகொண்டு இருக்கின்றோம்.

மீள்பதிவாக:-

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_73.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

No comments:

Post a Comment