"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 21, 2019

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

இன்று அகத்தியம் சிறிது உணர இருக்கின்றோம். அகத்தியரின் தேடலில் பல யுகங்களில் அகத்தியர் நாமம் கொண்டு பலர் இருந்துள்ளார்கள் என்பது கண்கூடு. நாம் இப்போது புறத்தே தான் அகத்தியரை கொண்டு வருகின்றோம்.இந்த புறத் தேடல் தான் அகத்தேடலுக்கு ஆதாரம். அகத்தியரின் சரித்திரம் என்று பல நூல்கள் காண கிடைக்கின்றன. இன்னும் அவற்றை யாம் படிக்கவில்லை. அகத்தில் உள்ள ஈசனை எந்த காலத்தில் பகுக்க முடியும்? காலம் தாண்டிய சித்தர் அவர். அகத்தியம் என்பது பேருணர்வு,பேரன்பு,பேராற்றல். இது தான் நாம் அகத்தில் உணரும் அகத்திய நிலை. இந்த நிலை வந்தால் நம் அகத்தில் உள்ள தீ - நம்மில் எழும் தீமை,நஞ்சு என அனைத்தும் அழிக்க வல்லது. பிறகென்ன நம் மனதுள் அகத்தியத்தால் பேராற்றல்,பேரன்பு கிடைக்கும். அப்போது பாரதி பாடிய தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா..நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று நாமும் அனுபவிப்போம்.

நாம் கொண்டாடிய அகத்தியர் ஆராதனை  துளிகளை இங்கே தொகுக்கின்றோம்.இடையிடையே மகாகுரு அகத்தியரை பற்றி திருமூலர் சுவடி மூலம் அருளிய  பாடலை சேர்க்க விரும்புகின்றோம். 


காலனையும் கைக்குள்ளே அடக்கிக்கொண்டு
கருணை என்ற கடல் தனிலே ஆட்சி செய்து
ஞாலமதில் ஞானத்தை காத்து நின்று
ஞானிகளை ஆக்கி நின்ற ஞானத்தேவே...

தேவே நின் திருவடிகள் மூலன் இப்போ
தெரிவிப்பேன் குருமுனியின் ஆசியோடு
கூறிடுவேன் தலைவா நின் அடியைப் போற்றி
குருமுனியே திருமுனியே அறிந்தவர்க்கு...

அடுத்து வழக்கம் போல் பூசைக்கு தயாரானோம்.














அறிந்தவர்க்கு அறக்கடலாய் விளங்குவாரே
அருள் என்றல் அகத்தியன் தான் வணங்குவோர்க்கு
குறிப்பறிந்து குறை நீக்கும் குருவே கும்பன்
குந்தகத்தை உடைத்தெறியும் அருளே கும்பன்...









கும்பனருள் நிகர் சொல்ல எவருமில்லை
குகனும் சிவன் தனக்கு நிகர் அருளைத் தந்தார்
எம்மறையும் அவர் உரைத்தால் பின்தான் சொல்வோம்
ஏழு என்றால் நாங்கள் எல்லாம் கரத்தைக் கட்டி...




கட்டி நின்று கால் பற்றி ஆசி கேட்போம்
கடாட்சமென்றல் அவர் ஈந்தால் உண்டு என்போம்
சட்டிசுட வேண்டுமென்றால் கும்பனைக்கேள்
சாகாவரம் வேண்டுமென்றால் கும்பனைக்கேள்...


அடுத்து அபிஷேகம் ஆரம்பம்.










கும்பன் தான் ஔடதமும் நவக்கோளும் தான்
கும்பன் தான் குவலயமே வேறு ஏது
கும்பன் என்றால் ஆயிரத்தெட்டு  அண்டமெல்லாம்
குறுகி நின்று நடு நடுங்கும் பராக்கிரமங்கள்...

அடுத்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அலங்கார தரிசனம். 




 ஓம் அகத்தீசாய நம என்று 108 முறை ஓதிய போது ..பிறவியின் நோக்கம் குருவை அடைவது. அதுவும் சித்தர்களை நாம் குருவாக அடைய எத்துனை பிறப்பெடுத்தோம். அகத்தியரின் நாமம் சொல்வது அவ்வளவு எளிதல்ல. மனிதனாக இருப்பதில் கொஞ்சம் புண்ணியம் செய்து இருந்தால் தான் அகத்தியரின் நாமம் சொல்ல முடியும்.


பராக்கிரமம் இகபரமும் சொல்வார் கும்பன்
பாடிட்டால் மாற்றம் சொல்ல எவனும் இல்லை
பராக்கிரமும் வாளையைப் போல் அளிப்பார் கும்பன்
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்...




கும்பன் சொன்னால் குளவிகூட குதிறையாகும்
குருமுனிக்கு கிரியாவும் கடுகாய் நிற்கும்
கும்பனையே வணங்கியோர்க்கு குறைகளண்டா
குறையில்லா காப்பாக இருப்பார் என்றும்!

நம் குழுவினர் அனைவருக்கும் சிறப்பாக சங்கல்பம் செய்தோம். 


 இதோ..அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தீப ஆராதனை 





 அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைக்க வேண்டினோம். அடுத்து வழக்கம் போல் பிரசாத விநியோகம் மற்றும் மரியாதை செய்யும் நிகழ்வில் இருந்தோம்.



ஐப்பசி  மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல்


மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் ஐப்பசி  மாதம் 6  ஆம் நாள் (23/10/2019)  புதன்கிழமை    ஆயில்ய நட்சத்திரமும், சித்த  யோகமும் கூடிய சுப தினத்தில்காலை  8:30 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆயில்ய ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம். மேலும் அன்று கந்த ஷஷ்டி விரதம் இருப்பவர்கள் காப்புக் கட்டி விரதம் இருக்க நம் தளம் சார்பில் அழைக்கின்றோம்.


தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.

- அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக :-

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

 குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

 மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment