"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, July 1, 2019

ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆண்டு  ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த ஆனி  மாதம்  மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள்  ஓராண்டு நிறைவை நோக்கி செல்கின்றோம். எண்ணிக்கையில் ஒன்றுமே இல்லை.எண்ணங்களில் தான் அனைத்தும் உள்ளது.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.
 வைகாசி மாத அமாவாசை வழிபாடு மிக மிக சிறப்பாக நடைபெற்றது. வைகாசி மாத நிகழ்வின் துளிகளை பார்க்கலாமா?

வைகாசி மாத மோட்ச தீபம் முன்பு, சூரத் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு சில அன்பர்கள் மோட்ச தீபமேற்றிய செய்தி நமக்கு கிடைத்தது. நாமும் வைகாசி மோட்ச தீபத்தில் விண்ணப்பம் வைக்க எண்ணத்தில் நின்றோம்.அடுத்து வழக்கமான பணிகளில் ஈடுபட்டோம்.


மோட்ச தீபமேற்ற நாம் சாணத்தில் தரையை சுத்தம் செய்ய வேண்டும். பூசையானது மாலை தான் செய்து வருகின்றோம். வீடுகளில் சென்று கேட்டால் மாலை 6 மணிக்கு மேல் சாணம் தர மாட்டார்கள். இதுவே நமக்கு முதல் தேவை. எனவே அதற்கேற்றாற் போல் நாம் தயார் செய்ய வேண்டும்.


இதோ..தீபத்திரி தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.


பொதுவாக தர்ப்பணம், சிரார்த்தம் போன்றவற்றில் பெண்கள் ஈடுபடக்கூடாது என்பார்கள். ஆனால் இந்த மோட்ச தீப வழிபாடு முழுக்க முழுக்க பெண்களுக்கே. இதோ அதே போல் தான் இருவரும் பணியில் ஈடுபடுகின்றார்கள்.



அன்றைய தினம் கிருத்திகை தரிசனம் மாலையில் பெற்றோம்.


முருகா !



தமிழே !!!


                                                                   ஸ்கந்த பெருமாளே




அடுத்து வாழையிலை போட்டு அடுத்தடுத்த பணிகள் ஆரம்பம்.





அன்னசேவைக்காக தட்டுகள் தயார்.



இதோ..நெய்யை உருக்கும் பணியில் நம் அன்பர் சத்யராஜ் அவர்கள்.








நெய் ஊற்றி, சங்கல்பம் செய்த எள் சேர்த்து தீபங்கள் தயார். அடுத்து வழிபாடு ஆரம்பம்.






இதோ.கோயில் குருக்கள் முதல் தீபம் ஏற்றிவிட்டார். அடுத்தடுத்து ஒவ்வொருவராக தீபங்கள் ஏற்றினார்கள்.













இரண்டு மந்திரங்கள் 108 முறை சொல்ல வேண்டும். திருமதி  விஜயசுந்தரி அவர்களும் ஆளுக்கொரு மந்திரமாக பிரித்துக் கொண்டு அழகாய் சொன்னார்கள்.






அடுத்து ஒவ்வொருவராக வந்து, அவர்களின் முன்னோர்களை நினைத்து வேண்டி, அங்கே பூக்கள் தூவி வழிபாடு செய்ய பணித்தார்கள். 21 தலைமுறை முன்னோர்களின் ஆசி வேண்டி நின்ற ஒவ்வொருவரையும் பார்க்கும் போது, இந்த பூமியில் நாம் பிறந்த நோக்கத்தை இவர்கள் அனைவரும் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.


மேலே உள்ள படத்தை பாருங்கள். இது நாள் வரை வழிபாட்டில் வட இந்திய அன்பர்களை நாம் பார்த்ததில்லை. அன்று நாம் சூரத் சம்பவ அன்பர்களுக்கு வேண்டியதை உணர்த்த தான் இவர்கள் வந்தார்களா என்று நமக்கு தோன்றியது. அன்று அன்னசேவையில் நமக்கு உதவியாகவும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





 அடுத்து உணவு பரிமாறப்பட்டது. உணவு பரிமாற்ற இருந்த வரிசையைப் பார்த்த போது தான் நமக்கே ஆச்சர்யமாக இருந்தது, பூசையை ஆரம்பிக்கும் போது இன்று யார் வருவார்கள் என்று தேடினோம், பூசையின் முழுமையில் நாம் இருக்கின்றோம் என்று சுமார் 90க்கும் மேற்பட்ட அடியார்கள் வந்து கலந்து கொண்டார்கள். அன்று புளி சாதம், தயிர் சாதம், கேசரி என பரிமாறினோம். அன்னதானத்திற்கென ரூ.3000 ஒதுக்கி வருகின்றோம். 

அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.மீண்டும் ஒரு முறை நீங்களே பாருங்கள்.
 இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

ஆனி  மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமானவிகாரி  வருடம் ஆனி   மாதம் 17 ஆம் நாள் (02/07/2019) செவ்வாய்க்கிழமை  மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352
tut-temples.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

SRI MAMARA SUYAMBU SITHI VINAYAGAR ALAYAM
Mamara Vinayagar Kovil St, Guduvanchery, Tamil Nadu 603202
094441 03284

https://goo.gl/maps/K5Gu274Fg43LAHnd7

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.


மீள்பதிவாக:-

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_29.html

 21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2019/06/21.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

No comments:

Post a Comment