"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, July 25, 2019

நூறு திருப்பதி, ஆயிரம் அத்தி வரதர் தரிசனம் பெறலாமே!


அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆயிரம் அத்தி வரதர் க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதி க்கு சமமான ஒரு கோவில் ரெண்டும்  எங்க இருக்கு தெரியுமா?  அதைத்தான் இன்று நாம் பார்க்க போகிறோம். நம் தளத்தில் உள்ள பதிவுகளைப் பார்க்கும் போது, என்னடா! ஒரே சிவப் பதிவுகளாகவே உள்ளது என்று சிலர் சொன்னதை யாம் அறிந்தோம். நம்மைப் பொறுத்தவரையில் அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயிலே மண்ணு; இதுவும் பார்க்க சாதாரணமாய் தோன்றும். ஆனால் இதனைப் புரிந்து கொண்டால் எல்லையில்லா பரம்பொருள் நம் வசமாகும் என்பதே உண்மை. அந்த வகையில் இன்றைய பதிவில் தொன்மை வாய்ந்த ஆலயமான வேதநாராயணப் பெருமாள் தரிசனம் பெற இன்று காத்திருக்கின்றோம்.

நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவில். இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம் நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது. உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில். இரண்டாவது தான் திருப்பதி இந்த நாராயணவனம் க்ஷேத்ரத்தை ஒருமுறை பார்த்தால் திருப்பதிக்கு 100 முறை சென்று வந்த புண்ணியம் கிடைக்கும். கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர்.


வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமம் கேட்ட உடனே வேதத்திற்கும் இத்தலத்திற்கு சம்பந்தம் உண்டு என்று தெரிகின்றது.நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே! நான் மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை. காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே! ‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது.










முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர்.






16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் வேதநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவியுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம்.

இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான் ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது.









பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன்
சேவடி செவ்வித்திருக்காப்பு

என்று பல்லாண்டு பாடத் தோன்றியது ஆலயத்தின் கோபுரம் பார்த்த உடனே. நமக்கு இங்கே யாரும் அதிகம் அறிமுகம் இல்லை யாதலின், நாம் எடுத்த காட்சிப் படங்களை இங்கே இணைந்துள்ளோம்.




வேதநாராயணப் பெருமாள் கோவிலின் அறிவிப்பு பதாகை நம்மை வரவேற்கின்றது, நாம் சென்ற சமயம் உற்சவர் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. என்னே ! நாம் செய்த புண்ணியம்.




 பெருமாள் மச்சாவதார கோலத்தில் அதுவும் சுயம்பு மூர்த்தமாக இவர் இருக்கும் அந்த அழகு இங்கே கிடைக்கும் தெய்வீக அதிர்வலையை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. பெருமாள் கோவிலில் சுற்று பிரகாரத்தில் சிவன் சந்நிதியை பார்ப்பது என்பது மிக, மிக அபூர்வம் இங்கே சுற்று பிரகாரத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியை பார்க்கலாம். இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும். இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும்.

அப்படியே அருகில் இருக்கின்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலுக்கு சென்றோம். ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல, வேதநாராயணப் பெருமாள் மற்றும்  ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் இந்த ஒரே பதிவில்.

 திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார். பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம் இது. இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். திருப்பதி கோவிலை காட்டிலும் இந்த கோவில் மிக பழமையானது. இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது. சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும்.









ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது. மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகின்றார்கள். பெயர் பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது. கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. நாம் உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வந்தோம். கோவிலின் சுற்றில் அருமையான தரிசனம் பெற்றோம். இரவின் மடியில் இருந்ததால், காட்சிப் படங்கள் அதிகம் எடுக்க முடியவில்லை.





மேலே நீங்கள் காண்பது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம். இதெல்லாம் இப்போது எங்கே? என்று தேடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.



தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அருமையான கோயில் பிரசாதம் கிடைத்தது. புளியோதரை ..ருசியோ ருசி. அதை அவர்கள் தொன்னையில் அள்ளிக் கொடுத்த விதமே தனி அழகு தான். சிந்தாமல் சிதறாமல்..நம் கவனமும் சிந்தாமல் சிதறாமல் உண்டோம்.சற்று இருட்டி விட்டது. அப்படியே வெளியே வந்து ஒரு கோபுரத்தை படம் பிடித்து கிளம்பினோம்.





அடுத்த பதிவில் சுரைக்காய் சித்தர் தரிசனம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

 ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html


 கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5

2 comments:

  1. Replies

    1. தங்களின் வருகைக்கு நன்றி ஐயா

      Delete