அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய பதிவில் கூடுவாஞ்சேரி அருகில் உள்ள அருள் நகரில் அருள் தந்து வரும் ஸ்ரீ பெரியபாளையத்து அருள்பவானி அம்மன் ஆலய தரிசனம் பெறவும், 14 ம் ஆண்டு மஹா சண்டி யாகம் அழைப்பிதழ் காணவும் இறையருள் நம்மை கூட்டுவித்துள்ளது.
இந்த புண்ணிய பூமியில் வசிக்கும் அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பவர் யார் என்றால் அது அன்னை தான். அதனால் தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஒளவையார் பாடி வைத்துளார்கள். சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்று சொல்வதை விட சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்பது தான் சாலப் பொருந்தும். சிவனின் ஆற்றலை உணர. உணர்த்த சக்தி வேண்டும். இந்த சக்தியை 64 சக்தி பீடங்களாக நாம் காணலாம். அதென்ன சக்தி பீடங்கள் என்பது நம் காதில் விழுகின்றது.
சக்தி பீடங்கள் என்பவை ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் (தாட்சாயிணியின்) உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்களாகும். சக்தி பீடம் என்பதற்கு சக்தியின் அமர்விடம் என்று பொருளாகும். இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்றும், பதினெட்டு சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்றும் நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. அஸ்ஸாமின் கவுஹாத்தியிலுள்ள காமாக்யா கோவில், கல்கத்தாவின் காளிகாட் காளி கோவில், ஒடிசாவின் பெர்ஹாம்பூரிலுள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில் மற்றும் ஒடிசாவின் பூரி ஜகந்நாதர் கோவில் வளாகத்திலுள்ள விமலா தேவி சன்னதி ஆகியன நான்கும் ஆதி சக்தி பீடங்களாகும். எந்த சக்தி பீடத்திற்கு சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டுமென்பதும் ஒரு நியதியாகும்.
தேவி பாகவதம் என்ற நூல் அன்னைக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும் அதில் 64 சக்தி பீடங்கள் முக்கியமானது என்றும் கூறுகிறது. ஆனால் தந்திர சூடாமணியில்தான் 51 சக்தி பீடங்கள் தெளிவாக உள்ளது. அதனால் இந்நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
சரி..நாம் ஸ்ரீ பெரியபாளையத்து அருள்பவானி அம்மன் ஆலய தரிசனம் பெற செல்லலாம். சென்ற ஆயில்ய பூசை நிறைவில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் குருக்கள் நம்மிடம் அழைப்பிதழைக் கொடுத்து, கட்டாயம் யாகத்தில் கலந்து கொள்ள நம்மிடம் வேண்டினார். இடையில் ஒரு நாள் கோயிலுக்கு சென்று வரலாம் என்றும் கூறினார். நம்மால் இந்த கோயிலுக்கு இடையில் சென்று வர முடியவில்லை. நேற்றே கோயிலுக்கு வழங்க பசு நெய் வாங்கி வைத்து விட்டோம். இன்று காலை கோயிலுக்கு சென்றோம். செல்லும் இடம் அப்படியும், இப்படியும் இருந்தது. அதான் சாலை வசதி சரி இல்லை. ஆனால் கோயிலுக்கு சென்று அன்னையை தரிசித்த பின்பு அனைத்தும் அசௌகரியமும் போயே போச்சு என்று தான் சொல்ல வேண்டும். அன்னையை தரிசித்து கொண்டே இருக்கலாம் என்று நமக்கு தோன்றியது.
யாகத்திற்கு வந்த அன்பர்களின் ஒரு பகுதி
அப்படியே நேரே அன்னையை தரிசித்து விட்டு, கோயிலை சுற்றினோம்.
பெருமாளின் பாத தரிசனம் பெற்றோம். அதற்கு பக்கத்திலேயே கோமாதா இருந்தார்கள்.
கோயிலில் இது போல் பசு வளர்ப்பது சிறப்பு. அருகில் மூத்தோன் தரிசனம் பெற்றோம். பின்னர் பைரவரை தரிசிக்காது சென்று விட்டோம்.
அட..இங்கே பாருங்கள் அன்னையின் அருளை...
மீண்டும் மீண்டும் தரிசனம் செய்தோம். நீங்களும் தரிசனம் செய்து கொள்ளுங்கள்.
அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. நாம் கொஞ்சம் கேசரி சாப்பிட்டுவிட்டு, நம் தளம் சார்பில் ரூ.1000 கொடுத்துவிட்டு அங்கிருந்தது நன்றி கூறி கிளம்பினோம்.

சரி..கோயிலுக்கு செல்லலாமா?
கோயிலுக்கு வெளியே வைத்திருந்த அழைப்பிதழ்.இங்கேயே நாம் அன்னையின் அழகில்,அருளில் மெய் மறந்து போனோம். கீழே மீண்டும் தரிசனம் பெறவும்.
கோயிலுக்கு உள்ளே சென்றதும் யாக சாலை முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
யாகத்திற்கு வந்த அன்பர்களின் ஒரு பகுதி
அப்படியே நேரே அன்னையை தரிசித்து விட்டு, கோயிலை சுற்றினோம்.
பெருமாளின் பாத தரிசனம் பெற்றோம். அதற்கு பக்கத்திலேயே கோமாதா இருந்தார்கள்.
கோயிலில் இது போல் பசு வளர்ப்பது சிறப்பு. அருகில் மூத்தோன் தரிசனம் பெற்றோம். பின்னர் பைரவரை தரிசிக்காது சென்று விட்டோம்.
கோயிலை வலம் வந்தால் வள்ளி,தெய்வானையோடு வெற்றி விநாயகர் தரிசனம் பெறலாம்.
அடுத்து அன்னையின் தியான பீடம் கண்டோம்.
தியான பீடம் உள்ளே சென்றதும் நமக்கு பேராற்றல் தொட்டுக்காட்டப்பட்டது. அன்னையின் அருளில் திளைத்தோம்.
பின்னர் ஸ்ரீ செல்லப்பிள்ளையார் தரிசனம் பெற்றோம்.
அருகில் அன்னதானக் கூடம் இருந்தது. காலை உணவு பரிமாறிக்கொண்டிருந்தார்கள்.
அன்னதான கூடத்தில் குருக்களைக் கண்டோம். அவர்கள் நம்மை கோயில் முக்கியஸ்தரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள். மீண்டும் ஒரு முறை தரிசனம் செய்ய புறப்பட்டோம்.
அட..இங்கே பாருங்கள் அன்னையின் அருளை...
மீண்டும் மீண்டும் தரிசனம் செய்தோம். நீங்களும் தரிசனம் செய்து கொள்ளுங்கள்.
அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. நாம் கொஞ்சம் கேசரி சாப்பிட்டுவிட்டு, நம் தளம் சார்பில் ரூ.1000 கொடுத்துவிட்டு அங்கிருந்தது நன்றி கூறி கிளம்பினோம்.
இதோ மங்கல வாத்தியங்கள் தயாரான காட்சி.
வாய்ப்புள்ள அன்பர்கள் நேரில் கலந்து கொண்டு திருவருள் பெற வேண்டுகின்றோம். இன்றிலிருந்து தொடர்ந்து மூன்று நாட்கள் அருள் நகர் ஸ்ரீ பெரியபாளையத்து அருள்பவானி அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற உள்ளது. மூன்றாம் நாள் முடிவில் பல அருளாளர்கள் கலந்து கொண்டு ஆசி தர இருக்கின்றார்கள்.அழைப்பிதழ் கண்டு நேரில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.
இணைய வழித்தட முகவரி: https://www.google.com/maps/place/12%C2%B051'48.3%22N+80%C2%B003'41.6%22E/@12.8634205,80.0593653,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.8634205!4d80.061554?hl=en
மீண்டும் சந்திப்போம்
மீள்பதிவாக:-
ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html
வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html
நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html
No comments:
Post a Comment