"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, July 26, 2019

தமிழ்த் தேன் பருக வாருங்கள் - கூடுவாஞ்சேரி திருவள்ளுவர் இலக்கிய பேரவையின் அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

சில பதிவுகளுக்கு முன்னர்,  நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் என்ற பதிவை அளித்து இருந்தோம். நாம் பல கோயில்களில் உழவாரப் பணி செய்து இருந்தாலும், முதன் முதலாக நூலகத்தில் உழவாரப் பணி செய்தது நம்மை மற்றொரு மனநிலைக்கு இட்டு சென்றது. வேதாத்திரி மகரிஷி அறிவுத்திருக்கோயில்களை உருவாக்கினார். நூலகங்களும் அறிவுத்திருக்கோயில் தானே. நாம் செய்த அந்த பணிக்கு அவர்கள் நூலக வார விழா கொண்டாடிய போது நம் குழுவை மரியாதை செய்தார்கள். உழவாரப்பணி அனுபவம் அடுத்த பதிவில் தொடர்வோம். இந்த பதிவில் ஒரு அழைப்பிதழை பகிர விரும்புகின்றோம்.

சரி.எப்படி இந்த உழவாரப்பணி நமக்கு கிடைத்தது.கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் நாம் அன்னசேவை செய்வது உண்டு. அப்படி செய்யும் போது நமக்கு சில அன்பர்கள்  அறிமுகமாக கிடைத்தார்கள். அவர்கள் திருக்குறள் பேரவை வைத்துள்ளதாக கூறினார்கள். அதில் நாம் உழவாரப் பணி செய்வது பற்றி சொன்ன போது, கூடுவாஞ்சேரி நூலகத்தில் , நூலக விழா கொண்டாட இருக்கின்றார்கள்.தங்களால் முடிந்தால் நூலகத்தை சுத்தம் செய்து தர முடியுமா என்றார்கள்.

அறிவுக்கு திருக்கோயில் கட்டிய எம் குரு வேதாத்ரி மகரிஷி பிறந்த மண்ணில் முதல் உழவாரப் பணி செய்ய நமக்கு குருவருள் கிடைத்துள்ளது. அதுவும் அறிவின் திருக்கோயில் என கருதப்படும் நூலகத்தில் என்று நினைத்த போது மனம் மகிழ்வுற்றது.உடனே ஆயத்தப்பணிகள் தயாரானது. நம் அன்பர்களிடம் இதனை தெரிவித்து விட்டோம். பொதுவாக உழவாரப் பணி என்றால் கோயிலில் மட்டும் தான் செய்வார்கள் என்று நினைத்தால், உங்கள் எண்ணமே தவறு. உழவாரம் பக்தியில் மட்டுமல்ல; நம் புத்தியில் இருக்க வேண்டும். இது போன்ற சமூகப் பணிகளிலும் ஈடுபட்டால் தான் பூமிப் பந்தில் பூக்கள் முளைக்கும். இல்லையேல் களைகள் தான் முளைக்கும்.

அட..தள்ளாத வயதில் திருவள்ளுவர் இலக்கிய பேரவை என்ற அமைப்பை நிறுவி சமூகத்தில் தமிழ் பாய்ச்சுபவர் தான் திரு திருநாவுக்கரசு ஐயா.கீழே உள்ள படத்தில் நீங்கள் அவரை பார்க்கலாம்.


சுமார் 50 வயதில் 20 வயது காளை போன்று சிந்தனையில் மாற்றம் கொண்டவர். இவர் மட்டுமல்ல..கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில் அன்பர்கள் அனைவரும் இப்படி தான். வயதில் முதுமை இருந்தும் மனதில் இளமையோடு சமூகத்தில் விதை விதைத்து கொண்டு வருகின்றார்கள்.இவர்களின் நட்பூவினால் மீண்டும் நமக்கு அழைப்பு வந்தது. நேரில் சென்று பேசிய போது தான் திருவள்ளுவர் இலக்கிய பேரவையின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்ட அழைப்பிதழ் வழங்கினார்கள். இதோ ...தங்களின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.



விழாவில் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பேத்தி செல்வி.பிரம்முக்குட்டி அவர்கள் வாழ்த்துரை வழங்க இருக்கின்றார்கள். பண்பில் சிறந்த பெரியோர்கள் புடை சூழ நடைபெற இருக்கும் இந்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.



ஏதோ..எப்படியோ சுற்றிக் கொண்டிருந்த நம்மை புடம் போட்டு வருவது கூடுவாஞ்சேரி தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவத்தை தருகின்றார்கள். திருவள்ளுவர் இலக்கிய பேரவை ஆரம்பித்த போது பொதுவெளியில் இருந்த பதாகை கண்டு ஏங்கியது உண்டு. ஆனால் இன்று நம்மை அழைத்து "தேடல் உள்ள தேனீக்களாய் " குழுவிற்கு அழைப்பிதழ் தருகின்றார்கள் என்றால் இது குருவின் கருணை தானே ! 

- மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

 நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

  வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

1 comment: