"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, July 16, 2019

"ஜீவ அமிர்தம்" பருகலாமே!


இந்த பதிவு ஒரு ஆன்மிக மாத இதழ்  பற்றிய பதிவு. ஜீவ அமிர்தம் என்ற பெயரைக் கேட்டவுடன்,
பெயரே வித்தியாசமாக உள்ளது. வாங்கி படித்து விட வேண்டியது தான் என்று  தோன்றியது.இந்த நிகழ்வு இரண்டு வருடங்களுக்கு முன்பு. திருவான்மியூரில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் ஆலயத்தில் இருந்த இதழ் ஒன்றை  வாங்கினேன்.


முதலில் இதழின்  வண்ணப்படம் இருக்கின்றதே. கொள்ளை கொள்ளும் அழகு. காண இரு கண்கள்  போதாது. பூஜை அறையில் வைத்து அழகு பார்க்கலாம்.ஒவ்வொரு மாத இதழின் வண்ணப்படம் ஒவ்வொரு குருவினால்/மகான்/சித்தரினால்  அலங்கரிக்க பட்டு இருக்கும்.வார்த்தைகளால் விவரிக்க இயலாது.நீங்களே பார்த்து அனுபவியுங்கள்.



பஞ்செட்டி மஹாலக்ஷ்மி கோவில் 


சதானந்த ஸ்வாமிகள் 


ஸ்ரீ ராமானுஜர் 


ஸ்ரீ அகத்தியர்  


முருகப் பெருமான் 


அருணகிரிநாதர் - பின்னட்டை 


ஓம் ஸ்ரீம் அகத்தியர் 


மூட்டை ஸ்வாமிகள் - பின்னட்டை 








பாம்பன் ஸ்வாமிகள் - பின்னட்டை 












மகான் திருவள்ளுவர் 




ஸ்ரீ காகபுசுண்டர் 






(உம்மாச்சி தாத்தா - மகா பெரியவா )


சேஷாத்திரி ஸ்வாமிகள் 


சக்கரை அம்மா 


கணக்கன் பட்டி மூட்டை ஸ்வாமிகள் 


பாம்பன் ஸ்வாமிகள் 


பட்டினத்தார் 


ஸ்ரீ ராகவேந்திரர் 




பார்த்து விட்டீர்களா ? இனி நாம் ஜீவ அமிர்தம் பருகலாமா ? அமிர்தம் என்ற சொல்லுக்கு இன்பம் தருகின்ற உணவு என்று பொருள் கொள்ளலாம். ஏனெனில் தற்போது உணவு இன்பம் தருகிறதா என்று தெரியவில்லை.  உடல் நலம் சார்ந்தது.அதை பற்றி பின்னொரு நாளில் பார்க்கலாம். அமிர்தம்,அமுது,அமிழ்தம்,தேவாமிர்தம் என்று சென்றால் அனைத்தும் இன்பம் தருகின்ற உணவு என்று பொருள் படும்.

தேவர்கள் மட்டும் சாப்பிட்டு இருப்பார்களோ ? என்று நினைக்க வேண்டாம். நாமும் நம் வாழ் நாளில் கண்டிப்பாக அமிர்தம் சாப்பிட்டு இருப்போம். நல்ல எடுத்த சூழலில், ஒரு வாய் சோறு சாப்பிட்டு பாருங்கள்.நீங்களே சொல்லி இருப்பீர்கள். அமிர்தமாய் உள்ளது என்று. இந்த நகர வாழ்க்கையில் காலை உணவாக எப்போதாவது கூழும்,மோரும் அதுவும் வெயில் காலத்தில் சாப்பிட்டு பார்த்தால்,அதை நாம் அமிர்தம் என்றே சொல்வோம்.

இந்த இதழினை படித்தாலும் அமிர்தம் உண்ட உணர்வு ஏற்படும் என்பது உறுதி.அதனால் தான் ஜீவ அமிர்தம் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த பூவுலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனும் பருக வேண்டிய அமிர்தம் இந்த ஜீவ அமிர்தம்.ஒவ்வொரு இதழிலும் ஏகப்பட்ட ஜீவனுள்ள செய்திகள்,சித்தர்களின் சிறப்புகள்,அவர்களின் ஜீவ வரலாறு,அதிலே குறிப்பிட வேண்டியது ஒவ்வொரு மாத மகான்களின் வரலாறும் குரு பூஜைகளும்.
அப்பப்பா! எப்படி தான் இவ்வளவு தகவல்களை திரட்டி தருகிறார்களோ? நினைக்கும் போதே மலைப்பாக இருக்கின்றது. நூலின் விலையோ வெறும் ரூ.30 (முப்பது). முப்பது ரூபாய் அளவில் 3000 விசயங்கள்/செய்திகள் என்றால் வாங்க உகந்ததே என்பது நம் கருத்து. ஏனெனில் குரு மகானின் ஜீவனுள்ள படத்திற்கே தாராளமாய் கொடுக்கலாம்.
புதியவர்களையும் ஆன்மிகக் கருத்தை ஆர்வமாக வாசிக்க வைக்கிறது இந்த நூல். குறிப்பாக, அன்றாட வாழ்வியல் நடைமுறைகளை எப்படி வைத்துக் கொண்டால் நல்லது என்பதை, மகான்கள் மற்றும் சித்தர்களின் சித்தாந்த பாடல்கள் மூலம் எழுத்தாளர் விவரிக்கிறார். சிவவாக்கியர், திருமூலர், பட்டினத்தார், திருவள்ளுவர், வள்ளலாரின் பாடல்களை ஆங்காங்கே, தடித்த எழுத்துகளில் தந்துள்ளது, இந்நூலை வாசிக்கச் சொல்கிறது. பல சித்தர்களின் படங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
சற்று இதழின் உள்ளே செல்வோம். இதழின் முதல் பக்கத்திலே முருகப் பெருமான் மற்றும் ஜீவ அமிர்தம் இதழின் உள்ளடக்கம் இருக்கின்றது.அதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் கீழே.
எத்துணை உண்மை ! படித்து பாருங்கள். பக்தி,யோகம்,ஞானம் என்று அனைத்தையும் உள்ளடக்கி உள்ளது.அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் உபதேசித்த சொல் அற ! சும்மா இரு என்ற தத்துவத்தை அல்லவா இது காட்டுகின்றது.
இதழின் உள்ளடக்கம் உள்ளதே? ஒவ்வொன்றும் தேன் போன்ற தலைப்புகள்.தலைப்புக்குள் மட்டுமா? இல்லை இல்லை கட்டுரையின் உண்மையும் தான்.படித்து முடித்தால் தேனில் ஊற வைத்த பலாச் சுளைகள் சாப்பிட்டது போன்ற இன்பம்.பேரின்பம். அதுவும் சித்தர்கள் பற்றிய செய்தி என்றால் சொல்லவே வேண்டாம். முருகப் பெருமான் உரைப்பதை போன்றே அழகு தமிழில்,கொஞ்சு தமிழில்,கெஞ்சு தமிழில் ..சித்தர் தரிசனம் பெற்றதைப் போலவே இருக்கும்.கட்டுரையொட்டி இருக்கும் மகானின் படங்கள் இன்னமும் நம்மை மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டும்.
கீழே இரு இதழ்களின் உள்ளடக்கம் தங்கள் பார்வைக்காக....




இதழின் ஆரம்பமே அட்டகாசம். ஆசிரியர் உரை யில் நம்முடன் பற்பல விஷயங்களை பேசுகின்றார்.இறைமை.சித்தரியல் என சொல்லிக் கொண்டே போகலாம்.இத்தோடு விநாயகர் துதி,முருகன் துதி மற்றும் அகத்தியர் மூல மந்திரம் அடங்கிய குறிப்பை இணைத்துள்ளோம். அனைவரும் தங்களது தினசரி பிரார்த்தனையில் கட்டாயம் இணைத்துக் கொள்ளவும்.
ஆசிரியர் உரையை தாண்டி உள்ளே சென்றால், சிறப்பான வண்ணப் படங்களோடு இணைந்த மகான்கள்/சித்தர்கள் பற்றிய வரலாறு என்று கண்கள் விரிகின்றது. இந்த இதழ் கண்களுக்கு மட்டும் விருந்தல்ல. ஐம்புலனுக்கும் விருந்து என்றால் அது மிகையாக. உதாரணத்திற்கு சில இங்கே இணைத்துள்ளோம். யாம் சொல்வதைக் காட்டிலும்,நீங்கள் படித்துப் பார்த்தல் தான் அதன் அருமை புரியும். 
தேனை எடுத்துக் கொள்வோம்.தேனின் சுவை இனிப்பு. அதனை வாயில் வைத்து சுவைத்தால் இனிப்பு சுவை சூப்பராக இருக்கும் எண்டு என்ன தான் சொன்னாலும், அதனை சுவைத்து உணர்ந்தால் தான் தங்களுக்கு இனிப்பு சுவை பற்றித் தெரியும்.அது போல் தான் இந்த ஜீவ அமிர்தமும்.












சித்தர்களை பற்றி அறிய வேண்டுமா? கண்டிப்பாக ஜீவ அமிர்தம் உங்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.மேலே தாங்கள் காண்பது சிதம்பர ஸ்வாமிகள்,ஜட்ஜ் சுவாமிகள்,சதானந்த ஸ்வாமிகள்,சக்கரை அம்மா,மாயம்மா, மகான் படேசாயபு பற்றிய வரலாறு,ஜீவ சமாதி சிறப்பு மற்றும் இருப்பிடம் சார்ந்த செய்திகள்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி போல், நாம் கொடுத்த பொருளிற்கான மதிப்பு புரட்ட,புரட்ட வந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சித்தரா ? இரண்டு மகான்களா? எண்ணிக்கை இங்கே பொருட்டன்று. இடையில் ஒரு விளம்பரம் கண்டோம்.
விளம்பரம் என்று சொல்வதா? இல்லை இது வாழ்க்கையின் புரிதலை அல்லவா தருகின்றது.ஜீவ அமிர்தத்தை எடுத்து விட்டால் நம்மால் படிக்காமல் கீழே வைக்க முடியாது.இது சித்த வேதம்.ரிக்,யஜுர்,சாம,அதர்வண என நால் வேதங்கள் பற்றி சொல்ல கேட்டிருப்போம்,இது அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்ட சித்த வேதம். நம்மால் அந்த நான்கு வேதங்களை படிக்க முடியுமா ? என்று தெரியவில்லை.ஆனால் இந்த சித்த வேதத்தைப் படிக்க முடியும். இதழின் இடையில் ஜீவ அமிர்த பொன்மொழிகள்,ஆங்காங்கே உடல்நல குறிப்புகள்..சாம்பிளுக்கு சில...


மூச்சைக் கவனி ..பேச்சைக் குறை என்ற கட்டுரை சொல்லும் செய்திகள் சொல்லி மாளாது.அனைத்தும் உண்மை.இது உண்மையின் உரைகல்.ஜீவ அமிர்தம் நம் உடலுக்கு மட்டுமல்ல..உள்ளம்,உயிர்,மனம்,சிந்தனை என அனைத்துக்கும் ஒரு சேர அமிர்தம் தருகின்றது.இந்த ஜீவ அமிர்தம் எங்கு கிடைக்கும்? எப்படி வாங்குவது? என யோசிக்கின்றீர்களா? இந்த இதழ் மாத இதழ். ஆனால் இதனை விட ஜீவ அமிர்தம் பெரிய புத்தகமாக நமக்கு கிடைக்கும்.அதனுடன் நமக்கு 300 மகான்கள் அடங்கிய வண்ணப்படம் கிடைக்கும்.இந்த பெரிய புத்தகம் தமிழக அரசின் விருது பெற்றது. மேலும் விபரங்களுக்கு கீழே இணைப்பைப் பார்க்கவும்.
(ஜீவ அமிர்தம் மாத இதழுக்கான சந்தா தொகை மற்றும் ஏனைய விபரங்கள் )
அப்படியே இதழின் கடைசிப் பகுதியில் பார்த்தால்...என்ன சொல்ல..எப்படி தான் இவ்வளவு மகான்களின் குரு பூஜை பற்றிய செய்தியை திரட்டி தருகின்றார்கள் என்பது நமக்கு பிரமிப்பாய் உள்ளது.நீங்களே பாருங்கள். என்னடா ? ஒரே புகழ்ச்சியாய் உள்ளது என்று நினைக்க வேண்டாம்.நாம் கொடுக்கும் பொருளுக்கான மதிப்பை விட அதிகமாவே பெறுகின்றோம் என்பதே என் உள்ளம் சொல்லும் செய்தி.


(ஜூன் மாத நிகழ்வுகள் )


இதழின் அறிமுகம் இத்துடன் முடிகின்றது. நாள் உள்ளங்கள் ஜீவ அமிர்தம் இதழை வாங்கிப் படியுங்கள்.தங்களுக்கு அறிமுகமான அன்பர்களிடத்து இந்த இதழ் பற்றித் தெரிவியுங்கள்.இதழில் விளம்பரம் செய்வதற்காக உதவுங்கள். அனைவருக்கும் சித்தர்களின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம்.இந்த இதழோடு இவர்கள் நின்று விட வில்லை. இவர்கள் சொல்வதைத் தான் செய்வார்கள்.இதோ ஜீவ அமிர்த தொண்டுகள் தங்களின் பார்வைக்கு.
ஜீவ அமிர்த தொண்டுகள்:
1. வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்திய பெருமானின் பூஜை நடைபெறும்.


2. பூஜையின் முடிவில் அன்ன தர்மம் செய்கிறார்கள். உணவு பொட்டலங்களோடு,தண்ணீர் பாக்கெட் சேர்த்து தேடிப் போய் பசியால் வாடும் உறவுகளுக்கு அன்னதர்மம் செய்கின்றார்கள்.














மேற்கண்ட சேவையும், அகத்தியர் வழிபாடும் ஏற்கனவே சொல்லியது போல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும்.ஏதேனும் ஒரு நாள் சென்று அந்த இன்பத்தை பெற்றுப் பாருங்கள்.
ஆயிரமாயிரம் ஆன்மிக செய்திகளை சொல்லலாம்,எழுதலாம்.ஆனால் அதனை நடைமுறைப்படுத்தி அனுபவத்தில் நிலை பெறுவதே உண்மை ஆன்மிகம்.ஜீவ அமிர்தம் சித்தர் நெறி வளர்க்கும் தொண்டுகள் ஒவ்வொன்றும்  அகத்திய மாமுனிவரின் பேரருளால் இல்லாமை இருள் போக்கி வல்லானை நினைந்து உண்மை தொண்டை உளமாற செய்து வருகின்றது கண் கூடு.
நம் TUT குழுமத்தின் வாயிலாக அன்ன தானம் செய்வது இங்கே ஜீவ அமிர்த சித்தர் நெறி வளர்க்கும் மன்றம் மூலமாக நமக்கு அறிமுகமானது.அந்த அனுபவமே ..TUT யின் பயணத்தை துளிர்க்க செய்தது. Rightmantra.com மற்றும் ஜீவ அமிர்தம் இரண்டும் TUT குழுமத்தின் திறவுகோல் எனபதில் ஐயம் ஏதுமில்லை. இருவருக்கும் நாம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம்.
நன்றி -


No comments:

Post a Comment