"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, December 8, 2019

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5)

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அன்பர்கள், தள வாசகர்கள் அனைவருக்கும் கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள் நம் TUT தளம்
மூலம் சொல்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்கெங்கு காணினும் சிவமாய் தெரிகிறதே.
அன்பே சிவமாய் கொள்ளும் போது, தற்போது நடைபெற்று வரும் திருக்கார்த்திகை விழாவும் நம்மோடு சேர்ந்து துள்ளலை கொடுத்துக் கொண்டு வருகின்றது. நாமும் இங்கே திருஅண்ணாமலை, கிரிவலம் என்ற பதிவுகளில் கண்டு வருகின்றோம்.

அந்த வகையில் இந்த பதிவிலும் அதிகமாக காட்சிகளைப் பதிய இருக்கின்றோம். மேலும் திருஅண்ணாமலை என்றாலே இந்தப் பாடல் தான் அதிகம்  நம் நினைவிற்கு வரும். அந்த பாடலையும் இங்கே பதிப்பிக்கின்றோம்.

ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே...
அனலான மலை காண ...மனம் குளிருதே...

சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...

புவனங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மனம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...

யுகம் நான்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
ஜெகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
யுகம் நான்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே...
ஜெகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா...
சத்தியம் நீதான்...சகலமும் நீதான்...
நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
அருணாச்சலா...உனை நாடினேன்...
சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...

முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உனை  காண்கிறேன்...
முடி மீது தீபமாய்...மடி மீது ஜோதியாய்...
அடிவாரம் வெம்மையாய்... உனை  காண்கிறேன்...
தீயெனும் லிங்கம்...ஜோதியில் தங்கும்...
பாய்ந்திடும் சுடராய்...வான்வெளி பொங்கும்...
அருணாச்சலா...உன் கோலமே...
அருணாச்சலா...உன் கோலமே...
மனம் காண வர வேண்டும்...தினந்தோறும் வரம் வேண்டும்...
மலையான நாதனே அருள்வாயப்பா...
மலையான நாதனே அருள்வாயப்பா...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே...
புவனங்கள் ஆளும் அண்ணாமலையே...
எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மனம் ஊறிடுதே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...
உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்தோனே...

பேரின்பக் களிப்பில் நம்மை சிவம் ஆட்படுத்துவதை இந்த பாடல் உணர்த்துகின்றது. ஊனினை உருக்கும் இந்த பாடல், உள்ளொளி பெருக்குவதையும் நம்மால் உணர முடிகின்றது. இனி நாம் திருஅண்ணாமலையாரின் விழாக்கோல கோலாகல காட்சிகளை இங்கே காண உள்ளோம்.

                                                      திருவண்ணாமலை திருக்கோலம் 

தீபம் 2017 முதல் நாள் இரவு விநாயகர் - மூஷிக வாகனம், முருகர்- மயில் வாகனம், அண்ணாமலையார்-அதிகாரநந்தி வாகனம்,உண்ணாமுலை அம்மன் - அன்ன வாகனம்.சண்டிகேஸ்வரர் - புலி வாகனம்.

 பஞ்சமூர்த்தி தரிசனம்  உங்களுக்காக !

இரண்டாம் நாள் காலை விநாயகர் மற்றும்  சந்திரசேகரர் சூரியபிரபை வாகனம் அன்று (24/11/2017)

மூன்றாம் நாள் அலங்காரம் அடுத்த பதிவில் காண்போம்.

படங்கள் உதவி: திரு.சரவணன்,ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் டிரஸ்ட், திரு அண்ணாமலை 

மீண்டும் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் (1) - https://tut-temples.blogspot.com/2019/12/1.html

No comments:

Post a Comment