அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். வள்ளிமலை அடிவாரக்கோயில் தரிசனம் கண்டு, அதற்கும் முன்பாக வள்ளிமலை கிரிவலம் முடித்து, அடிவாரத்தில் இருந்து மலை ஏறி, இரண்டு முறை மலை மேல் உள்ள முருகப்பெருமானை தரிசித்து உள்ளோம். அடுத்து மீண்டும் வள்ளிமலை அடிவாரம் செல்ல வேண்டும். ஆனால் மேலே திருப்புகழ் ஆஸ்ரமம் உள்ளதாக கேள்விப்பட்டோம்.
அதற்காக கீழே இறங்கும் போது தனியே இடப்பக்க பாதை வழியே சென்றோம். அடடா..நம்மை பசுமை போர்த்தியது, பக்தி ஊட்டியது என்றே சொல்லலாம், மீண்டும் அந்த பாதை வழியாய் நம் பதிவை தொடர்கின்றோம்.
வள்ளிமலை வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வேலூர் என்றாலே வெயில் தான் என்று நினைத்தோம். ஆனால் வள்ளிமலை மேலே திருப்புகழ் ஆஸ்ரமம் சென்ற போது இருந்த பசுமை நம் எண்ணத்தை அப்படியே மாற்றி விட்டது. நீங்களும் கண்டு களியுங்களேன்.
இங்கு அம்புக்குறியிட்ட பாதை வழியே நாம் நடந்து சென்று கொண்டிருந்தோம். நமக்கு என்ன தரிசனம் இங்கே இருக்க போகின்றது என்று பல கற்பனைகள் நம் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. இங்குள்ள மரங்களை பார்க்கும் போது சில மெல்லிய உணர்வும் நம்மை ஆட்கொண்டது.
இதோ..நெருங்கி விட்டோம். அங்கே ஒரு அறிவிப்பு பலகை கண்டோம்.இங்கே ஆஸ்ரமம் சுற்றி சுமார் 7 இடங்களை தரிசிக்கலாம் என்று கண்டதும் மனம் களிப்புற்றது.
இதோ பொங்கி அம்மன் சந்நிதியும்,பொங்கிப் பாறை தரிசனமும் முதலில் பெற்றோம்.
உண்மையிலே இது குகை தான். சற்று தலை குனிந்து தான் உள்ளே செல்ல வேண்டும்.
இதோ..இது தான் வள்ளிமலை சுவாமிகள் சமாதி இடம். இங்கே ஒரே ஒரு விளக்கு தன் அதிர்வை பரப்பிக் கொண்டிருந்தது.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்று மனதுள் தியானித்தோம்.
எத்தனையோ அன்பர்கள் வள்ளிமலை வருகின்றார்கள். அவர்களில் வெகு சிலரே இங்கே திருப்புகழ் ஆஸ்ரமம் வருகின்றார்கள். அதிலும் சிலரே உள்ளே வள்ளிமலை சுவாமிகள் தரிசனம் இங்கே பெறுகின்றார்கள். அந்த வெகு சிலரில் நாம் ஒருவராக இருக்கின்றோம். அதிலும் சிலருக்குத் தான் இங்கே தீபம் ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு நமக்கும் கிடைத்தது. நெஞ்சுருகி நின்றோம்.
மீண்டும் மீண்டும் அங்கே சுற்றிக் கொண்டே இருந்தோம். சில நிமிடம் மௌனத்தில் மௌனித்தோம். பேரமைதி கிட்டியது. குரங்கு மனம் இங்கே குதிக்கவில்லை. பேரமைதியின் கட்டுப்பாட்டில் மனம் ஒடுங்கியது. இறை சக்தியின் பேரின்ப நிலை சில நொடிகளில் தொட்டுக்காட்டப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அடுத்து இடம் நோக்கி நகர்ந்தோம். இதோ சுவாமிகள் அருள்பாலிக்கும் நடுமண்டபம் வந்தோம்.
குருமார்களின் தரிசனம் ஒருங்கே பெற்றோம். அள்ள அள்ள குறைவிலா தரிசனம்.
மொத்தம் சொல்லப்பட்ட 7 இடங்களில் 3 இடங்கள் தரிசனம் தற்போது பெற்றுள்ளோம். பொங்கிப் பாறையும், பொங்கி அம்மன் தரிசனம், வள்ளிமலை சுவாமிகள் தரிசனம் தரும் நடுமண்டபம், வள்ளிமலை சுவாமிகளின் சமாதி. மீண்டும் அடுத்த பதிவில் இங்கிருந்து தொடர்வோம்.
வள்ளிமலை அற்புதங்கள் தொடரும்.
மீள்பதிவாக:-
வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html

பொங்கி அம்மன் தரிசனம் மனதிற்கு அமைதி கொடுத்தது. இயற்கை சூழலை ரசித்துக்கொண்டே பசுமை போர்த்தி பொங்கி அம்மன் தரிசனம் என்றால் சும்மா கிடைத்து விடுமா என்ன?
அடுத்து நாம் காண இருப்பது திருப்புகழ் ஆஸ்ரமம். இதோ நீங்களும் தரிசனம் செய்யுங்கள்.
வள்ளிமலை சுவாமிகள் ஆசனம் இட்ட நாற்காலி
அங்கே இருந்த திருப்புகழ் பாடிக் கொண்டே இருந்தோம். இங்கே நடுமண்டபம் கண்டோம். அடுத்து நாம் வள்ளிமலை சுவாமிகளின் சமாதி குகைக்குள் செல்ல இருக்கின்றோம்.
உண்மையிலே இது குகை தான். சற்று தலை குனிந்து தான் உள்ளே செல்ல வேண்டும்.
அங்கே அருணகிரிநாதர் தரிசனமும் பெற்றோம்.
இதோ..இது தான் வள்ளிமலை சுவாமிகள் சமாதி இடம். இங்கே ஒரே ஒரு விளக்கு தன் அதிர்வை பரப்பிக் கொண்டிருந்தது.
நாம் கொஞ்சம் நெய் கொண்டு சென்று இருந்தோம். அங்கே இருந்த விளக்கில் நெய் ஊற்றி, தீபமேற்றினோம்.
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
என்று மனதுள் தியானித்தோம்.
எத்தனையோ அன்பர்கள் வள்ளிமலை வருகின்றார்கள். அவர்களில் வெகு சிலரே இங்கே திருப்புகழ் ஆஸ்ரமம் வருகின்றார்கள். அதிலும் சிலரே உள்ளே வள்ளிமலை சுவாமிகள் தரிசனம் இங்கே பெறுகின்றார்கள். அந்த வெகு சிலரில் நாம் ஒருவராக இருக்கின்றோம். அதிலும் சிலருக்குத் தான் இங்கே தீபம் ஏற்ற வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பு நமக்கும் கிடைத்தது. நெஞ்சுருகி நின்றோம்.
மீண்டும் மீண்டும் அங்கே சுற்றிக் கொண்டே இருந்தோம். சில நிமிடம் மௌனத்தில் மௌனித்தோம். பேரமைதி கிட்டியது. குரங்கு மனம் இங்கே குதிக்கவில்லை. பேரமைதியின் கட்டுப்பாட்டில் மனம் ஒடுங்கியது. இறை சக்தியின் பேரின்ப நிலை சில நொடிகளில் தொட்டுக்காட்டப்பட்டது.
பின்னர் அங்கிருந்து அடுத்து இடம் நோக்கி நகர்ந்தோம். இதோ சுவாமிகள் அருள்பாலிக்கும் நடுமண்டபம் வந்தோம்.
குருமார்களின் தரிசனம் ஒருங்கே பெற்றோம். அள்ள அள்ள குறைவிலா தரிசனம்.
வள்ளிமலை சுவாமிகள் பாதம் சரணம். வேறென்னே வேண்டும் இறைவா!
அடுத்து அங்கிருந்து அடுத்த இடம் நோக்கி சென்றோம்.
மொத்தம் சொல்லப்பட்ட 7 இடங்களில் 3 இடங்கள் தரிசனம் தற்போது பெற்றுள்ளோம். பொங்கிப் பாறையும், பொங்கி அம்மன் தரிசனம், வள்ளிமலை சுவாமிகள் தரிசனம் தரும் நடுமண்டபம், வள்ளிமலை சுவாமிகளின் சமாதி. மீண்டும் அடுத்த பதிவில் இங்கிருந்து தொடர்வோம்.
வள்ளிமலை அற்புதங்கள் தொடரும்.
மீள்பதிவாக:-
வள்ளிமலை அற்புதங்கள் (5) - https://tut-temples.blogspot.com/2019/12/5_3.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
திருப்பரங்குன்றம் மலையேற்றம் தொடர்ச்சி - மச்சமுனி சித்தர் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_25.html
முருகன் அருள் முன்னிற்க திருப்பரங்குன்றம் மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_96.html
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்... - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_3.html
No comments:
Post a Comment