"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, December 20, 2019

இருமுடி இறைவா சரணம் சரணம் (ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா) - 7 ஆம் ஆண்டு இருமுடி கட்டும் வழிபாடு

 ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா



இறை வழிபாடு எப்படியோ ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடங்கிவிட்டது. இது சூட்சுமமான கருத்தாக நமக்கு தோன்றுகின்றது. ஐயப்பன் பேரில் எங்கு பார்த்தாலும் பல பிரச்சனைகள். சரி..அனைத்தும் அவரே பார்த்துக் கொள்வார். நாம் ஏற்கனவே வாழ்வாங்கு வாழ தொகுப்பில் இது சம்பந்தமாக கருத்தக்களை பதிவிட்டு உள்ளோம். நாம் நம் விசயத்திற்கு வருவோம்.

முதலிலே உங்கள் அனைவரையும் வழிபாட்டிற்கு அழைக்கின்றோம்.


ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

7 ம் ஆண்டு இருமுடி கட்டும் வழிபாடு 

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விகாரி  வருடம் மார்கழி  மாதம் 6 ஆம் நாள் (22.12.2019)  ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரமும், சித்த  யோகமும் கூடிய சுப தினத்தில் காலை  8:30 மணி முதல் தேனியில் உள்ள எங்களது இல்லத்தில் (128, பாரஸ்ட் ரோடு 6 ஆவது தெரு, ANRV இல்லம்) 7 ஆம் ஆண்டு இருமுடி கட்டும் வழிபாடு படி பூசையுடன் நடைபெற உள்ளது. வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருளும் குருவருளும் பெறும் படி  வேண்டுகின்றோம்.

ரா.ராகேஷ் - 7904612352
ரா. மனோ 
tut-temples.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/


ஐயன் ஐயப்பன் தரிசனம் கடந்த 5 ஆண்டுகளாக கிடைத்து வருகின்றது. இது எப்படி? எங்கிருந்து ஆரம்பித்தது ..அதற்குள் 5 ஆண்டுகளாக தரிசித்து விட்டோமோ? என்று நாம் நினைத்தது உண்டு.கடந்த நான்கு ஆண்டுகளாக பம்பை (சின்ன பாதை ) முதல் சந்நிதி சென்று வந்தோம். ஆனால் கடந்த ஆண்டு எருமேலியில் இருந்து பெரிய பாதை வழியாக செல்ல வேண்டும் என்று ஆணை கிடைத்தது. வழக்கம் போல் விரதம்,வழிபாடு என தொடர்ந்தோம். நம்மைப் பொறுத்த வரை நாம் பெரிய அளவில் கூட்டமாக செல்வதில்லை. வீட்டில் தந்தை,தாத்தா என சேர்த்தால் மொத்தம் 4 பேர் அளவில் தான் செல்வோம். கடந்த இரண்டு முறை நாமும், என் சகோதரர் மட்டுமே சபரி மலை யாத்திரை சென்று வருகின்றோம். மூன்றாம் ஆண்டு முதலே குருசாமி என்று நம் ஐயப்பன் தான். வேறு யாரும் இல்லை.

ஆனால் நடைமுறையில் பார்க்கும் போது, பல செய்திகள் கண்டு வருகின்றோம். அந்த காலத்தில் இருமுடி வீட்டில் கட்டுவார்கள். வீட்டில் இருமுடி கட்டி, பூசை இட்டு, ஐயன் அருள் பெறுவார்கள். ஆனால் இன்று கோயில்களில் மட்டும் தான் இருமுடி கட்டப்படுகிறது. அதே போல் வீட்டில் இருமுடி கட்டி, பேருந்து நிலையம் செல்லும் வரை  ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா  என்று பாடிக் கொண்டே செல்வார்கள். ஆனால் இன்று வாகன வசதி..கோயிலில் இருமுடி கட்டி, அப்படியே வாகனத்தில் ஏறி,எளிதாக பம்பை வரை சென்று விடுகின்றோம். ஆனால் நாம் வீட்டில் கட்டி, அப்படியே சென்று பேருந்து நிலையம் செல்லும் வரை இயல்பாகவே சென்று வருகின்றோம்.

அப்புறம் இருமுடி கட்டி விட்டு சிலர் வேறு சில கோயில்களுக்கு சென்று,அப்புறமாக சபரி மலை செல்கின்றனர்.இது மிகப் பெரும் தவறு. அதே போல் தரிசனம் முடித்து சில பல கோயில்களுக்கு சென்று பின் வீடு திரும்புவதும், பம்பை வந்த உடனே மாலை கழட்டுவதும் போன்ற மாபெரும் தவறான செயல்கள் செய்வதை பார்க்கும்போது கண்ணீர் வருகின்றது. இந்த முறை நம் தம்பி ஐயப்பனுக்கு மாலை போட்டு பூசையை ஆரம்பித்து விட்டார்,. அது சமயம் நாம் ஆழியாறில் ஆசிரியர் பயிற்சிக்கு சென்றிருந்தோம். உள்ளம் உருக வேண்டிவிட்டு, நம் கடமையில் இருந்தோம். அன்று மதியம் குரங்கு அருவி செல்ல ஆழியார் அறிவுத்திருக்கோயில் சார்பில் வேன் ஏற்பாடு செய்து இருந்தார்கள். நாமும் சென்று வர தீர்மானம் செய்து, அறைக்கு சென்று துண்டு எடுக்க சென்றோம்.




எடுத்துவிட்டு வரும் போது பார்த்தால், வேன் சென்று விட்டது என்று சொல்லி விட்டார்கள். நாம் அப்படியே அறைக்கு திரும்பி இருக்கலாம். ஆனால் நாம் வெளியே சென்று தனியாக ஆட்டோ பிடித்து குரங்கு அருவி சென்றோம். அங்கு மேலே ஏறும் போது ஒரு சிறிய கோயில் இருந்தது. வழக்கமாக இருக்கும் நம் பிள்ளையார் தான் என்று முடிவு செய்துவிட்டு, அருவிக்கு குளிக்க சென்றோம். குளித்து விட்டு திரும்பி, கோயில் வந்து பார்த்தால், அட..நாம் காலையில் மனமுருகி வேண்டினோம் அல்லவா?அந்த ஐயப்பன் நமக்கு தரிசனம் கொடுத்தார். பொதுவாக இது போன்ற சாலைகளில், ஓரங்களில் விதிகளுக்கு அப்பாற்பட்டு வினை தீர்க்கும் விநாயகர் இருப்பார். நாமும் அப்படித் தான் நினைத்தோம். ஆனால் இன்று நமக்கு ஐயப்பன்  தரிசனம் தருகின்றார் என்றால் வேண்டுவது சரியாக இருந்தால் கிடைத்தே தீரும் என்பது உண்மைதானே..






















இந்த அனுபவத்தோடு, நமக்கு கிடைத்த ஐயப்பன் பூசை நிகழ்வின் துளிகளை தருகின்றோம்.


 இந்த நன்னாளில் சபரிமலை ஏறிச்செல்லும் பாதை பற்றி அறிவோம். பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு – எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.
பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரியாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.
ஸாக்ஷாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் கூட மஹத்துவம் உண்டு. பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்த்ரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது.
ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)
1. எருமேலி
2. பேரூர் தோடு
3. காளைகட்டி
4. அழுதை
5. அழுதை நதி
6.கல்லிடுங்குன்று
7.இஞ்சிப்பாறை – உடும்பாறை
8.முக்குழி
9.கரிவலம் தோடு
10. கரிமலை
11. பெரியானை வட்டம்
12.சிறியானை வட்டம்
13. பம்பா நதி














 “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்ற முதுமொழிக்கேற்ப கிடைத்தற்கரிய மனிதப் பிறவி எடுத்த நாம் இப்பூவுலகில் வாழ்க்கையின் பல்வேறுபட்ட கோணங்களில் ஆட்பட்டு இயங்கி வருகிறோம். உலகின் பல சூழல்களில் மாட்டிக்கொண்டு பிறவிப் பெருங்கடலில் எதிர் நீச்சல் போட்டுக் கடந்து கரையேற முயன்று வருகிறோம்
 வாழ்வின் பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டு தினமும் அல்லல்பட்டு உழன்றுவரும் நாம் வருடத்திற்கு ஒரு முறையாவது சில நாட்களாவது தூய மனத்துடனும் மெய்யான பக்தியுடனும் நல்ல சிந்தையுடனும் மனதைக் கட்டுப்படுத்தி நோன்பிருந்து இருந்து, பூஜைகள், அன்னதானங்களை இயன்றவரை சக்திக்கேற்ப செய்ய நாமாக மேற்கொள்ளும் இந்த சபரிமலை யாத்திரை நோன்பு நமக்கு ஒரு நல்ல வாய்ப்பினைத் தருகிறது
 தள்ளாடி தள்ளாடி நடை நடந்து நாங்க சபரிமலை நோக்கி வர்றோமையா


கார்த்திகை நல்ல‌ நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையிலும் மாலையிலும் சரண‌ங்கள் சொல்லிகிட்டு


சரண‌ங்கள் சொல்லிக்கொண்டு வந்தோமய்யா
நாங்க‌ சபரிமலை நோக்கி வந்தோமய்யா


இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு
சாமி.. இருமுடிய‌ கட்டிக்கிட்டு இன்பமாகப் பாடிக்கிட்டு
ஈசன் மகனே உந்தன் இருப்பிடத்த‌ நோக்கிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)


பேட்டைகளும் துள்ளிவிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
வேடிக்கையாய் நாங்களும் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு


சாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்
சாமி திம்தக்க‌ தோம் தோம் ஐயப்ப‌ திம்தக்க‌ தோம் தோம்


காணாத‌ காட்சியெல்லாம் கண்ணார‌ கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையா தாண்டிகிட்டு


பக்தரெல்லாம் கூடி நின்று
பஜனைகளெல்லாம் பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)


நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நீலிமல‌ ஏத்தத்துல‌ நின்னு நின்னு ஏறிக்கிட்டு
நெஞ்ச‌ம் முழுதுமே உந்தன் நினைப்பதுமே மாத்திக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)


படியேறி போகும்போது பாங்காகக் காயுடைத்து
பகவான‌ உன்னையே பாத்துப் பாத்து சொக்கிக்கிட்டு


நெய்யிலே குளிப்பதையும் நேரிலே பாத்துவிட்டு
ஐயா சரணம் என்று ஆனந்தமா பாடிக்கிட்டு (தள்ளாடி தள்ளாடி)


சாமி சரணம் ஐயப்ப‌ சரணம்


சாமியே,.... சரணம் ஐயப்போ...........


சாமியே,.... சரணம் ஐயப்போ...........


சாமியே,.... சரணம் ஐயப்போ...........



சாமியே,.... சரணம் ஐயப்போ...........


சாமியே,.... சரணம் ஐயப்போ...........
சாமியே,.... சரணம் ஐயப்போ...........
சாமியே,.... சரணம் ஐயப்போ...........







சாமியே,.... சரணம் ஐயப்போ...........
சாமியே,.... சரணம் ஐயப்போ...........
சாமியே,.... சரணம் ஐயப்போ...........



மலைக்குச் செல்ல மாலை போடுவது என்பது சாதாரணமானது அல்ல. மன்னருக்கு கிரீடம் எப்படியோ, முத்திரைக் கணையாழி எப்படி தனி அடையாளமோ, சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களின் அடையாளம்... நாம் அணியும் மாலைதான். நாம் மாலையை எப்போது போட்டுக்கொள்கிறோமோ, அப்போதே மாலையுடன் சேர்ந்து ஐயப்பனும் நம்மோடு இருக்கத் துவங்கிவிடுகிறார்.

ஆக, மாலை வடிவில் சாட்ஷாத் ஐயப்பனே நம்முடன் இருக்கிறார் என்பதை, பக்தர்கள் உணரவேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தான் ஐயப்பனும் சாப்பிடுகிறார். இதையெல்லாம் சரியாகப் புரிந்து, உணர்ந்து நடந்தால், கெட்ட எண்ணங்கள் நமக்குள் வராது. துர்குணங்கள் அடியோடு ஒழிந்துவிடும்.









                     அய்யன் அருள் உண்டு என்றும் பயமில்லை போவோம் சபரிமலை

மேலே இணைத்துள்ள பூசை காட்சிகள் தேனியில் உள்ள நம் வீட்டில் நடைபெற்ற காட்சிகள். இன்று காலை கூடுவாஞ்சேரி கோயிலுக்கு சென்றோம். அந்த ஐயப்பன் அலங்காரம் , ஆராதனை கண்டு இன்புற்றோம். நீங்களும் கண்டு ரசியுங்கள்.












                                        ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா  

- அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம் .

மீள்பதிவாக:-

ஓம் சுவாமியே ......சரணம் ஐயப்பா - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_17.html

No comments:

Post a Comment