"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, June 30, 2020

தீராத பிணி தீர்க்கும் தீர்த்தமலை அடிவாரக் கோயில் தரிசனம்

 அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சில பதிவுகளுக்கு முன்னர் தீர்த்தகிரி யாத்திரை சென்று கொண்டு இருக்கின்றோம். இன்றைய பதிவில் மீண்டும் தீர்த்தகிரி யாத்திரை செல்வோம். வீட்டிலிருந்தபடியே நீங்கள் தரிசனம் செய்யும் வண்ணம் தீர்த்தகிரி யாத்திரை செல்ல இருக்கின்றோம்.

தீர்த்தமலை  என்றாலே ஒரே மலையில் ஐந்து தீர்த்தங்கள். ஐந்து தீர்த்தங்கள் இங்கே இருப்பதால் தான் பேரே தீர்த்தமலை என்று உருவாகி உள்ளது.இந்த மலையில் இறைவன் சிவபெருமான் எழுந்தருளி இருக்கிறார். இங்கிருக்கும் சிவபெருமான் தீர்த்தகிரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ஓடி வரும் புனித நீரூற்றுகளில் குளித்தால் நமது பாவங்கள் எல்லாம் அழிந்துவிடும் என்று இந்த பகுதியில் இருக்கும் மக்கள் நம்புகின்றனர்.

 நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன என்பது வியப்புக்குரிய செய்தி அல்லவா?

தீர்த்தமலையின் சிறப்புகளே, இங்குள்ள தீர்த்தங்கள் தான். இங்குள்ள தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தின் தல தீர்த்தங்களாக ராம தீர்த்தம், குமார தீர்த்தம், கவுரி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகியவை விளங்குகின்றன. அற்புத மூலிகைகளின் சத்து கலந்து ஓடி வரும் இந்த தீர்த்தங்களால்தான், இங்கு வரும் பக்தர்களின் நோய்கள் நீங்குவதாகவும், பக்தர்கள் புத்துணர்வு பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது. இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்கள், நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள்.
தீர்த்தங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

 ராமபிரானின் பாணத்தால் தோன்றிய தீர்த்தம் ‘ராம தீர்த்தம்’. பாறைகளில் இருந்து வெளிப்படும் அரிய தீர்த்தம் இது. இந்த தீர்த்தத்தில் ‘ராம ஜெயம்’ என்று உச்சரித்தபடி மூழ்கி எழுந்தால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்கிறது தல புராணம்.

 சூரபத்மனை வதம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட முருகப்பெருமான், தேவர்களின் சேனாதிபதியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு அபிஷேகம் செய்யப்பட்ட தீர்த்தமே ‘குமார தீர்த்தம்’ என்று அழைக்கப்படுவதாக புராணம் கூறுகிறது. இந்தத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்வதாலும், பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.

 இத்தல இறைவியான வடிவாம்பிகை, ஈசனை மணந்து கொள்ளும் பொருட்டு ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, அந்த நீரைக் கொண்டு இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டார். இதுவே ‘கவுரி தீர்த்தம்’ ஆகும். இந்த தீர்த்த நீரைக்கொண்டு, இறைவனையும், இறைவியையும் அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமண வரம் கிடைக்கும். திருமணத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்கள் விலகும். கணவன்-மனைவிக்கு இல்லறம் நல்லறமாக அமையும்.

அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்ற தீர்த்தம் ‘அகத்திய தீர்த்தம்’ என்று வழங்கப்படுகிறது. இந்தத் தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்டது. இதனை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன் படுத்தி வந்தால் ஜீரண சக்தி கிடைக்கும். வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.

 அக்னி தேவனின், பெண்ணாசை காரணமாக அவனுக்கு சாபம் உண்டானது. அதனைப் போக்கிக் கொள்வதற்காக இத்தலம் வந்த அக்னி பகவான் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். அதுவே ‘அக்னி தீர்த்தம்’. இந்த தீர்த்தத்தில் நீராடினால், உடலின் தட்பவெப்ப நிலை சீராகும். ஆஸ்துமா, அடிக்கடி சளி பிடித்தல் போன்ற நோய்கள் குணமாகும் என் பது நம்பிக்கை.

தர்மபுரிக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தமலை மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஆன்மீக தலமாகும். இந்த தலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூருக்கு அருகில் அமைந்துள்ளது.

சரி. தீர்த்தகிரி அடிவாரக் கோயில் தரிசனம் தரிசனம் பெற வாருங்களேன்.





கோயிலின் உள்ளே செல்ல இருக்கின்றோம்.






                                                     கொடிமரம் கண்டு வணங்குகின்றோம்.







அப்படியே உள்ளே சென்று ஒவ்வொரு இறையைக் கண்டு மெய் சிலிர்த்து வணங்கினோம். இதோ. நால்வர் தரிசனம் பெற்ற தருணம் கீழே தருகின்றோம்.



கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மேலே கொடுத்துள்ளோம். இங்கு அதிகளவில் இறை தரிசனம் பெற்றோம். கீழே ஒவ்வொன்றாக கொடுத்துள்ளோம். பொறுமையாக தரிசித்து அருள் பெற்றுக் கொள்ளுங்கள்.































இந்த அடிவாரக்கோயிலில் கூட்டம் இல்லை. மேலே மலைமீதுள்ள கோயிலில் தான் மக்கள் கூட்டம் அதிகளவில் பார்க்க முடிந்தது. ஆனால் இங்கே கூட்டம் இல்லாததால் பொறுமையாக, அமைதியாக நாம் இறை தரிசனம் பெற்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் தீர்த்தமலை செல்லும் போது , அடிவாரக்கோயில் தரிசனமும் பெற்று வர வேண்டுகின்றோம்.


 இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

எப்படி இருந்தது தீர்த்தமலை யாத்திரை? உங்கள் கருத்துக்களை தெரிவியுங்களேன். நல்ல மலை யாத்திரை. மலை யாத்திரையோடு தீர்த்தக்குளியல். மலை மேலே சிவன் தரிசனம். ராமபிரான், இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று பெரும் சிறப்புக்குரிய ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. தீர்த்தகிரீஸ்வரர் தரிசனம் பெற்று மீண்டும் கீழே இறங்கி வந்து அடிவாரக்கோயில் தரிசனம் பெற்றுள்ளோம்.மீண்டும் மற்றொரு ஆலய தரிசனத்தில் சிந்திப்போம்.

அமைவிடம்:-

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. தர்மபுரி பஸ் நிலையத்தில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் இருக்கிறது.


மீள்பதிவாக:-

 வாழ்வில் திருப்பங்கள் தரும் தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_40.html


 ஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_23.html

 யாத்திரையாம் யாத்திரை ...தீர்த்தகிரி யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_18.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - 1 - https://tut-temples.blogspot.com/2020/02/1.html

மலை யாத்திரை : சதாசிவன் கோணா & கைலாச கோணா - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_5.html

சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_65.html

 மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_91.html

வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_16.html

இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_7.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_24.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_22.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_42.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_58.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_17.html

Sunday, June 28, 2020

அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்கு உதவி தேவை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

அகத்தியம் என்ற பயணத்தில் அனைவரும் இணைந்து இருக்கின்றோம். அகத்தியம் சொல்வது என்ன? அன்பைத் தான் அகத்தியம் பேசுகின்றது. அகத்தியம் பக்தியைக் காட்டி, அன்பை ஊட்டி, ஞானத்தை போதிக்கும் என்பதை நாம் தற்போது கண்டு வருகின்றோம். நம் குருநாதர் ஜீவ நாடி வாயிலாக நமக்கு வழிகாட்டி வருகின்றார். அகத்தியம் என்பது கடல் போன்றது. அதில் ஜீவ நாடி என்பதும் உள்ளது. நாமெல்லாம் ஜீவ நாடி வாயிலாக சில துளிகளை மட்டுமே பருகி வருகின்றோம். இந்த ஜீவ நாடி அற்புதங்களில் பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் பற்றி பார்த்தோம். அதே போல் நம் அன்பர் மூலமாக சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் பற்றியும், ஆலய திருப்பணிக்கு உதவி வேண்டியும் விண்ணப்பிக்கின்றோம்.
இத்துடன் இந்த வார கூட்டுப்பிரார்த்தனை அறிவிப்பு பதிவின் இறுதியில் தருகின்றோம்.  



முதலில் திருக்கோயில் திருப்பணி அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.



சென்னை ஒரு சித்த பூமி என்று சொல்லலாம். குன்றத்தூர் என்று எடுத்துக் கொண்டால் கந்தலீஸ்வரர் கோயில், திருஊரகப் பெருமாள், குன்றத்தூர் முருகன் கோயில் என சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல் திருஒற்றியூர் என்று எடுத்துக் கொண்டால் சுமார் 30க்கும் மேற்பட்ட உயிர்நிலைக்கோயில்கள் உள்ளது. குறிப்பாக வடிவுடையம்மன் கோயிலை கூறலாம். இதே போல் மயிலை என்று கூறினால் மயிலையே கயிலை. கயிலையே மயிலை என்றும் கூறுவதுண்டு. கொடுப்பதும் பெறுவதும் பிரசித்தி பெற்ற அறுபத்து மூவர் திருவிழா இங்கு சிறப்பாக இருக்கும். சென்னை காளிகாம்பாள் கோயில், அஷ்டலட்சுமி கோயில், வடபழனி முருகன் கோயில், பார்த்தசாரதி கோயில் என எண்ணிலடங்கா கோயில்கள் உண்டு. இது தவிர நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வழிபட்ட தலங்கள் எனவும் பல உண்டு. 

இது ஒரு புறமிருக்க , சென்னையில் உள்ள ஒவ்வொரு ஊரின் பெயரும் காரணம் பெற்றே உள்ளது.

அசோகரின் தூண் மாதிரி அமைத்த நகர்  - அசோக் நகர் 

அடையாரின் ஆற்றின் கரையோரம் உள்ள ஊர்- அடையாறு 

பிரம்மன் சிவனை வழிபட்டு தன் படைப்பு தொழில் தொடங்க ஆதாரமான ஊர் - அயனாவரம் 
ஆனை காத்த புது ஊர் - அனகாபுத்தூர் 

சூரியனின் கதிர்கள் முதலில் எழும் ஊர் - எழும்பூர் ( எழும்பூர் என்று ஆங்கிலத்தில் சொன்னால் யாருக்கும் தெரியாது. எஃக்மோர் என்று தமிழில்  சொன்னால் தான் தெரியும்..ஹி ..ஹி ...)

பிருங்கி மகரிஷி யாகம் செய்து தனது கிண்டியை வைத்த இடம் - கிண்டி 

குளங்கள் அதிகமாக இருந்த ஊர் - கொளத்தூர் 

கார்கோடகன்பாம்பு சிவனை வழிபட்ட இடம் - கோடம்பாக்கம் 

ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்த போது , அவரது மகன்கள் குதிரையை கட்டிய இடம் - கோயம்பேடு 

சின்ன தறி பேட்டை - சிந்தாதிரிப்பேட்டை 

செங்கல் சூளை அதிகம் இருந்த இடம் - சூளை மேடு 

தாம புரிஸ்வரம் - தாம்பரம் 

மஹா வில்வ வனம் - மாம்பழம் 

ஆடு மாடு மந்தை மேய்ந்த பகுதி - மந்தைவெளி 

ஸ்ரீ சந்தானப்பெருமாள் சந்நிதி மகப்பேறு - முகப்பேறு 

மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் - மயிலாப்பூர் 

இலங்கை செல்லும் முன்பு ராமன் பிருங்கி மகரிஷியை வணங்க, அவர் நந்தவனம் 
உருவாக்கிய இடம் -  நந்தம்பாக்கம் 

காஞ்சி மகான் திருமகள் வாழும் ஊர் என பெரியரிட்டர் - நங்கநல்லூர் 

திருநீலண்கண்டேஸ்வரர் கோயில் கொண்ட ஊர் - நீலாங்கரை 

பனை மரங்கள் அதிகமாக இருந்த ஊர்- நுங்கம்பாக்கம் 

பல நாயன்மார்கள் திருவல்லீஸ்வரர் பெருமானை பாடியதால் - பாடி 

பல்லவர்கள் வாழ்ந்த ஊர் - பல்லாவரம் 

பிருங்கி முனிவர் தவம் செய்த மலை  பிருங்கி மலை தற்போது  பரங்கி மலை 

புகழ் சோழ நல்லூர் - பொழிச்சலூர் 

புரசை மரங்கள் அதிகம் இருந்த பகுதி - புரசைவாக்கம் 

சிலைகள் அதிகமாக செதுக்கப்பட்ட ஊர் - சேலையூர் 

தென்னை மரம் பேட்டை - தேனாம்பேட்டை 

திரு வேர்காடு  -திருவேற்காடு 

திரு வால்மீகி ஊர்  -திருவான்மியூர் 

திரு ஒற்றிஸ்வரர் கோயில் இருக்கின்ற ஊர் - திருஒற்றியூர் 

திரு சூலநாதர் கோயில் உள்ள ஊர் - திரிசூலம் 

திரு அல்லி கேணி - திருவல்லிக்கேணி 

திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பாட பழநியில் முருகப்பெருமான் இரண்டு முறை அசைந்தார். இது தென் பழநி . வடக்காக அமைந்த இந்த பழநி  - வட பழநி - வடபழனி 

வண்டல் ஊர் - வண்டலூர் 

நான்கு வேதங்களும் முழங்கிய ஊர் - வேதேஸ்ரேணி - வேளச்சேரி 

வில்வ ஆரண்யம் - வில்லிவாக்கம் 

வியாசர் பாடிய தலம் - வியாசர்பாடி  

பல்லவர் கால நரசிம்மர் மற்றும் தண்டீஸ்வரர் கோயில் பணியாளர் வாழந்த பகுதி - மடி (தூய்மை) நிறைந்த பகுதி -  மடிப்பாக்கம் 

அப்பப்பா..பெயர்க்காரணம் பார்க்கும் போது தான் சென்னையின் பெருமை நன்கு விளங்குகின்றது.

இந்த வரிசையில் சித்தாலப்பாக்கத்தில் உள்ள ஈசனை நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வழிபட்டுள்ளார். அகத்தியர் பெருமானை ஏனைய சித்தர்களும், மகான்களும் வழிபட்டமையால் இந்த ஊர் சித்தர்கள்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. தற்போது இதுவும் மருவி சித்தாலப்பாக்கம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.

ஆலய வரலாறு கீழே உள்ள இணைப்பில் தந்துள்ளோம்.


ஸ்ரீ அகத்தியர் வழிபாடு செய்த தலம். ஒவ்வொரு பௌர்ணமியில் நிலவொளி ஈசனின் மேல் பட்டு பிரகாசிக்கும் என்பது இங்கே சிறப்பு. இவரை வழிபட,  வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது கண்கூடு. 


நாம் ஏற்கவே சொல்லியவாறு, இந்த திருக்கோயில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகின்றது. 

இதோ. சில திருப்பணி படங்களை தங்கள் அனைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். அதற்கு முன்பு, நாம் இந்த ஆண்டு சிவராத்திரியின் போது சென்று தரிசனம் செய்த அருள்நிலையைத் தருகின்றோம்.


அன்றைய தினம் சிவராத்திரி 4 ஆம் கால பூசை நம் தளம் சார்பில் நடைபெற்றது. அந்த சிவராத்திரி அனுபவம் தனிப்பதிவில் காண்போம்.




































கும்பாபிஷேகத்தை நோக்கி அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்

அனைவருக்கும் பணிவான  வேண்டுகோள்..!

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவாலயம்  அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்.

இத் திருத்தலதிற்கு என்று சிறப்பு அம்சங்கள் நிறைய உள்ளன:

அதில் மிக முக்கியமான அம்சங்களில் சில :

 மாமமுனி ஸ்ரீ அகத்தியர் வழிப்பட்ட ஸ்தலம்...!

 எம்பெருமான் சதுர ஆவுடையாராக காட்சி அளிக்கிறார்..!

 ஸ்ரீ அங்காரகனுக்கு உகந்த ஸ்தலமாக  சிறப்பு  பெற்றது..!

ஆலய திருப்பணி

இங்கு முலவருக்கு தனி சன்னதி, அம்பாளுக்கு தனி சன்னதி, மகா மண்டபம், ஸ்ரீ அகத்தியருக்கு, 
ஸ்ரீ கணபதிக்கு, ஸ்ரீ முருகர் வள்ளி  தெய்வயானைக்கு, ஸ்ரீ பைரவருக்கு தனி சன்னதி மற்றும் நவகிரகம் அமைக்கும்பணி நிறைவு பெற்றது.

மீதம் உள்ள திருப்பணிகள்:

1. முகப்பு கோபுரம். (அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.) 

2. மின் சார்ந்த வேலைகள்.
(தொடங்கி உள்ளது.)

3. பிளம்மிங்.  
(தொடங்கி உள்ளது.)
&
 4. வர்னம் அடிக்கும் பணிகள். 

குறிப்பு :

மின் சார்ந்த வேலைக்கு & பிளம்மிங் வேலைக்கு, பொருட்கள் வாங்கி தர விருப்பம் உள்ளவர்கள், வாங்கி தரலாம்.

 
திருப்பணியை முடிக்க தேவையாவை:

1. தரைக்கு பளிங்கு கற்கள் 
(மொத்தம் 1200 சதுர அடி)

Floor Granite on Maha Mandabham
(Total Sq Feet = 1200 Sq ft).

2. பேவர் ப்ளாக்
(மொத்தம் 6000 சதுர அடி)

Paver block
(Total Sq Feet = 6000 sq ft).

3. சிமென்ட்டில்  கடவுள் சிலை
(போட வேண்டிய சிலைகள் - 30 No
இதற்கு சுமார் 1.20 லட்சம் வரை ஆகலாம், சிலையின் உயரம் பொருத்து மதிப்பு கூறப்படும்). 

God statue in Cement
(Pending silai = 30 No, cost comes around 1.20 Lakhs).

Note: Rate varies depends on statue size.

4. இரும்பு கதவு
(இதை செய்ய ரூ16000 ஆகும்)

Grill Gate for arch
(Making cost ₹16000)

5. அம்பாள் சன்னதிக்கு மரக்கதவு 
(இதை செய்ய ரூபாய் 30000 ஆகும்)

Wooden door for ambal Sannadhi.
(Making cost ₹ 30000.)

கோயில் தேவைக்கு:

1. சோமாஸ்கந்தர் ஐம் பொன் சிலை

உயரம் - 2 1/2 அடி
கிலோ - 180 கிலோ
மதிப்பு - 2.50 லட்சம்

somaskandar ipon silai

Total height - 2 ½ ft
Weight - 180 kg
Amount - 2.50 Lakhs

2. மின்சார சாதனங்கள் 

# குளிர்சாதன பெட்டி
# காற்று குளிரூட்டும் கருவி
# துணி துவைக்கும் இயந்திரம்
# கண்காணிப்பு கருவி 

மின் சாதன பொருட்கள் :

# 1.5 ton AC : 1 No for moolavar sannadhi, 

# 190 L fridge : 1 No

# Automatic washing machine :  1 No

# CCTV Camera : 3 No.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று இதுவரை 70% பணிகள் முடிவடைந்துவிட்டது.

மீதம் உள்ள 30% பணிகளை முடிக்க சுமார் 7 லட்சம் ரூபாய் தேவைபடுகின்றது.

இத்தருணத்தில் தங்களின் உதவி மிக மிக அவசியமாக உள்ளது. மேலும் எங்கள் பணி முழுவீச்சில் நடைபெற தங்களால் இயன்ற பொருளோ பணமோ வழங்கி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..!

அனைவரும் ஓன்றினைத்து நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து எஞ்சியுள்ள  பணிகளை முடித்து அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடணுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக பணியை நிறைவு செய்வோம்.

ஒரு சிவன் கோயிலில் கட்டுமான பணி செய்தால் ஏழு ஜென்ம பிறவி பயனை அடையலாம்.

மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்கள்: 
98849 42159/ 9283294939/7904612352

சரி..அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூட்டுப்பிரார்த்தனை பற்றிய அறிவிப்பு தருகின்றோம்.

தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் பிரார்த்தனை இலகுவானது.

இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும்.

ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும்.



அதுபோல், குடும்பத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும் ஒட்டு மொத்தமாக கூடி பிரார்த்தனை செய்வோம்.

நம் கோரிக்கை இறைவனால் நிறைவேற்றப்படும்.


முதலில் கூட்டுப்பிரார்த்தனை தினமும் செய்து வரும் அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சென்ற கூட்டுப்பிரார்த்தனை பதிவில் அருப்புக்கோட்டை திரு.சிவபெருமாள் ஐயாவிற்கு பூரண உடல்நலம், பொருளாதார உதவி வேண்டி பிரார்த்தனை செய்தோம். நம்முடைய கூட்டுப்பிரார்த்தனையால் மருத்துவமனையில் இருந்த திரு.சிவபெருமாள் ஐயா உடல்நலம் தேறி தற்போது அவர் வீட்டில் உள்ளார். மருத்துவமனை செலவிற்கென பல வழிகளில் பொருளாதார உதவியும் கிடைத்தது.  எம்பெருமானின் கருணைக்கும் நாம் நன்றி சொல்வோம்.

பிரார்த்தனை 1:

அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்திருப்பணிக்கு உதவி தேவை 

இந்த பதிவை மீண்டும் படியுங்கள். ஆம். அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்திருப்பணிக்கு பொருளுதவி செய்ய வேண்டி தினமும் கூட்டுப் பிரார்த்தனை செய்து வாருங்கள்.

பிரார்த்தனை 2:

உலக நன்மை வேண்டியும், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் உள்ள கிருமி நோய் தொற்று விரைவில் நீங்கி, மக்கள் இயல்பான சூழ்நிலைக்கு திரும்பவும், தற்போது மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவி, உணவு போன்ற அறப்பணி அனைவருக்கும் கிடைக்கவும் பிரார்த்திக்க வேண்டுகின்றோம்.

இங்கே நாம் கொடுத்துள்ள பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் நீங்களே காலை, மாலை ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு , நெய் தீபமேற்றி தொடர்ந்து பிரார்த்தனை செய்து வரவும்.

இல்லையேல் இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள், பதிவை படித்த பிறகு, அப்படியே ஒரு 15 நிமிடம் அமைதியாக குரு  வழிபாடு செய்து, அப்படியே பிரார்த்தனை கோரிக்கையை படித்து மனதுள் உள்வாங்கி பிரார்த்தனை செய்யும் படி வேண்டுகின்றோம்.


வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன் முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்

மீண்டும் சிந்திப்போம் 


மீள்பதிவாக:-

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html