தளத்தின் பதிவுகளில் மிக நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஆம் ஒரு நாள் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு நாள் இடைவெளியே நமக்கு நீண்ட நாளாக தெரிகின்றது. மிக நீண்ட இடைவெளிவிட்டு தங்கள் அனைவரையும் இந்தப் பதிவு வாயிலாக சந்திப்பதில் மகிழ்கின்றோம். என்ன பதிவு அளிக்கலாம் என்று தேடிய பொழுது, நம் தேடல் பாவங்கள் போக்கும் 108 சிவ தலங்கள் என்று தொடங்கியது. இந்தப் பதிவில் என்னென்ன பாவங்கள்...எந்தெந்த சிவத்தலங்களில் நீங்கும் என்று குறிப்புகளை மட்டுமே தருகின்றோம். அங்குள்ள பிரசித்தி பெற்ற சிவ தலங்களை நீங்கள் தான் தேடிக் கண்டு தரிசிக்க வேண்டும்.
1. திருக்குடந்தை - ஊழ்வினை பாவம் அகல
2. திருச்சிராப்பள்ளி - வினை அகல
3. திருநள்ளாறு - கஷ்டங்கள் அகல
4. திருவிடைமருதூர் - மனநோய் விலக
5. திருவாவடுதுறை - ஞானம் பெற
6. திருவாஞ்சியம் - தீரா துயர் நீங்க
7. திருமறைக்காடு - கல்வி மேன்மை உண்டாக
8. திருத்தில்லை - முக்தி வேண்ட
9. திருநாவலூர் - மரண பயம் விலக
10. திருவாரூர் - குல சாபம் விலக
11. திருநாகை - சர்ப்ப தோஷம் விலக
12. திருக்காஞ்சி - முக்தி வேண்ட
13. திருஅண்ணாமலை - நினைத்த காரியம் நடக்க
14. திருநெல்லிக்கா - முன்வினை அகல
15. திருச்செங்கோடு - மணவாழ்க்கை சிறக்க
16. திருக்கருகாவூர் - கர்ப்ப சிதைவு தோஷம் விலக
17. திருவைத்தீஸ்வரன் கோயில் - நோய் விலக
18. திருக்கோடிக்கரை - பிரம்ம தோஷம் விலக
19. திருக்களம்பூர் - சுபிட்சம் ஏற்பட
20. திருக்குடவாயில் - இறந்தவர் ஆன்மா சாந்தி பெற
21. சிக்கல் - துணிவு கிடைக்க
22. திருச்செங்காட்டாங்குடி - வம்பு,வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக
23. திருகண்டீச்சுரம் - நோய் விலக, தீராத புண் ஆற
24. திருக்கருக்குடி - குடும்ப கவலை விலக
25. திருகருவேலி - குழந்தை பாக்கியம் பெற, வறுமை நீங்க
26. திருவழுந்தூர் - முன் ஜென்ம பாவம் விலக
27. திருச்சத்திமுற்றம் - மணவாழ்க்கை கிடைக்க
28. திருப்பராய்த்துறை - கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற
29. திருநெடுங்களம் - தீரா துயரம் தீர
30. திருவெறும்பூர் - அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற
31. திருப்பைஞ்சீலி - யம பயம் விலக
32. திருவையாறு - அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக
33. திருவைகாவூர் - வில்வ அர்ச்சனை செய்து பாவம் போக்க
34. திருக்கஞ்சனூர் - திருமண தோஷம் விலக
35. திருமங்கல குடி (சூரியனார்) - குழந்தை பாக்கியம் பெற
36. திருமணஞ்சேரி - திருமண தோஷம் விலக
37. திருமுல்லைவாயில் - சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக
38. திருவெண்காடு - ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் செல்ல
39 .திருநெல்வேலி - பிராமண குற்றம் விலக
40 .திருக்குற்றாலம் - முக்தி வேண்ட
41. திருஆலவாய் - தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் செல்ல
42. திருப்பரங்குன்றம் - வாழ வலி தெரியாது தவிப்பவர்கள் வழிபட
43. திருவாடானை - தீரா பாவம் விலக
44. திருமுருகன்பூண்டி - மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
45. திருப்பாதிரிப்புலியூர் - தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக
46. திருவக்கரை - செய்வினை தோஷம் விலக
47. திருவேற்காடு - வாணிப பாவம் விலக
48. திருமயிலாப்பூர் - மூன்று தலைமுறை தோஷம் விலக
49. திருஅரசிலி - காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக
50. திருவாலங்காடு - வீண் வம்பில் மாட்டிக்கொண்டவர்கள் தோஷம் விலக
51. திருவேட்டிபுரம் - ஞானம் பெற
52. திருப்பனங்காடு - பந்த பாசத்தில் இருந்து விலக
53. திருவூறால் - உயிர்வதை செய்த பாவம் விலக
54. திருப்பாச்சூர் - குடும்ப கவலைகள் நீங்க
அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம். இங்கு கொடுக்கப்பட்ட தலங்களை முடிந்த அளவில் சென்று வழிபடவும்.
அடுத்த பதிவில் மீண்டும் தொடர்வோம். இங்கு கொடுக்கப்பட்ட தலங்களை முடிந்த அளவில் சென்று வழிபடவும்.
- மீண்டும் இணைவோம்.
மீள்பதிவாக:-
பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_68.html
உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_70.html
இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html
விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html
செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
No comments:
Post a Comment